Today's Special - GOLD

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
*தங்கம் பற்றி மக்களுக்கு
போதுமான விழிப்புணர்வு
இல்லை...!
சில விளம்பரங்கள் சேதாரம்
இத்தனை % என்றும் செய்கூலி
இல்லை என்றும் கூறுகின்றது
உண்மை என்ன ?*

ஒரு பவுன் தங்கச் செயினுக்கு
1.5 கிராம் செம்பு சேர்த்தால்
மட்டுமே நகை செய்ய முடியும்...!

இது அனைவருக்கும் தெரிந்தது
ஆனால் 8 கிராம் தங்கத்தில்
1.5 கிராம் கழித்தது போக
6.5 கிராம்தான் நகை
செய்யப்படுகின்றது...!

ஆனால் சாமானியன் நகை வாங்கும்
பொழுது 6.5 தங்கம் + 1.5 செம்பு
இரண்டுக்கும் சேர்ந்து 8 கிராம்
தங்கமாக பில்லில் போடுகின்றார்கள்
அது மட்டுமின்றி அதற்கு மேலாக
சேதாரம் என்று கூறி மேலும் 1.5 கிராம்
செம்பை தங்கம் சேர்க்கப்பட்டதாகக்
கூறி செம்பையும் தங்கத்தின் விலைக்கு
விற்கின்றார்கள்...!

இதில் நான் சொல்லுவது
என்னவென்றால் 6.5 தங்கம் + 1.5 செம்பு
(தங்கமாக) + சேதாரம் செம்பு 1.5 = 9.5 கிராம்
ஆக 1 பவுன் நகை வாங்குபவர்கள்
வெறும் 6.5 கிராம் தங்கத்தை மட்டும்
இல்லாமல் 3 கிராம் செம்பை சேர்த்து
விட்டு தங்கத்தின் விலையை போட்டு
விடுகின்றார்கள்...!

ஆக 1 பவுன் 8 கிராம் நகைக்கு
9.5 கிராமுக்கு நாம் பணம்
கட்டுகின்றோம்
யாரை ஏமாற்றுகின்றார்கள்
நகைக்கடைகாரர்கள்?
ஏழைகளை ஏமாற்றி ஏழைகளின்
இரத்தத்தை ஒட்டுண்ணிகளாக
உறிஞ்சி எடுத்துக் கொண்டு
இருக்கின்றார்கள்...!

ஒருவர் ஒரு புதிய நகைக்கடை
திறக்கின்றார் என்றால் ஒரு
சில வருடத்தில் பல மாடிகளும்
பல ப்ளாட்டுகளையும் வாங்கி
குவிக்கின்றார்கள் என்றால்
பணம் எப்படி வந்தது?
நான் மேலே சொன்ன
கணக்குத்தான் உண்மை...!

இன்று ஒரு கிராம் தங்கத்தின்
விலை என்ன?
பவுனுக்கு 3 கிராம் என்று
வசூல் செய்யும்போது ஒரு
கிராம் செம்பின் விலை
என்ன?
கணக்குப் போட்டு பாருங்கள்...!
1 கிராம் தங்கம் ரூ. 2922/-
8 கிராம் தங்கம் ரூ. 23,376/-
1 கிராம் செம்பு - 452/-
1.5 கிராம் செம்பு - 678/-
6.5 கிராம் தங்கம் - 18,993/-

6.5 கிராம் தங்கம் + 1.5 கிராம் செம்பு
அடக்க விலை -18993+678=19671
1 பவுனுக்கு தங்கத்தில்
லாபம் - 23376-19671= 3615/-
சேதாரம் 1.5 கிராம் = 4383/-
1 பவுனுக்கு மொத்த லாபம் 3615+4383=7998.00
என்ன தலை சுத்துதா?
எனக்குள் ஒரு ஆதங்கம்
ஆனால் இந்த விழிப்புணர்வை
மக்கள் எப்போது உணர்கின்றார்களோ,
அன்று தங்கத்தின் விலை கண்டிப்பாக
குறையும்...!

தங்கம் வாங்க ஆசையுள்ள நல்ல
உள்ளங்களே !
நீங்கள் விழிப்புணர்வுடன் இருங்கள்
மக்களால் எதுவும் முடியும்...!
 
Last edited:

Punitha M

Well-Known Member
பயனுள்ள தகவல் பானுமா(y)
நான் ஜுவல் அப்ரைசல் கோர்ஸ் பண்ணேன்..
எனக்கும் அப்போதான் இதெல்லாம் தெரிஞ்சது..
ஆனாலும் தங்கம் வாங்காம இருக்கறதெல்லாம் ஆகறதா..
பெண்ணை பெத்தவங்க வாங்கித்தானே ஆகனும்:rolleyes:
நம்ம சமுதாயம் அந்த அளவுலதான இருக்கு
 

Joher

Well-Known Member
பானு நீங்க சொல்றது 18 carat....... 75 % தான் gold.....

916 KDM ன்றாலே 91.6 % gold மீதி செம்பு.....
KDM is cadmium, which is used for soldering.....

Cadmium is a toxic metal that affects kidney bone lung liver etc.
Because of it's toxicity, KDM jewellery is banned......

Now what we are buying is 916 hallmark which is 22 carat......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Stone jwellery வாங்கினால் 50 100 ரூபாய் stone க்கும் அதே gold rate......
என்ன ஒரு கொள்ளை.......
அடப்பாவிகளா?
குறைந்த விலை கல்லுக்கும்
தங்கத்தின் விலையா?
நல்லவேளை, என்னிடம் கல்
வைத்த நகைகள் ஏதுமில்லை

ஒருமுறை பவழத்தில் விநாயகர்
பொம்மை இருந்ததைப் பார்த்து
அந்த பவழப் பிள்ளையார் வைத்த
மோதிரத்தை ஆசையாக வாங்கினேன்

அந்த மூன்று நாட்கள் தொல்லைக்காக
கழட்டி பீரோவில் வைத்தது எங்கோ
காணாமல் போயிடுச்சு
அப்புறம் எதுவும் வாங்கலை, Joher டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
பானு நீங்க சொல்றது 18 carat....... 75 % தான் gold.....

916 KDM ன்றாலே 91.6 % gold மீதி செம்பு.....
KDM is cadmium, which is used for soldering.....

Cadmium is a toxic metal that affects kidney bone lung liver etc.
Because of it's toxicity, KDM jewellery is banned......

Now what we are buying is 916 hallmark which is 22 carat......
அப்போ 916 24 காரட் தங்கத்தில்
பிரச்சினை ஏதும் இல்லையா?
ஏன்னா 916 Hallmark தங்கத்தில்தான்
நான் ஒரு செயின் போட்டிருக்கேன்,
Joher டியர்
 

Joher

Well-Known Member
அடப்பாவிகளா?
குறைந்த விலை கல்லுக்கும்
தங்கத்தின் விலையா?
நல்லவேளை, என்னிடம் கல்
வைத்த நகைகள் ஏதுமில்லை

ஒருமுறை பவழத்தில் விநாயகர்
பொம்மை இருந்ததைப் பார்த்து
அந்த பவழப் பிள்ளையார் வைத்த
மோதிரத்தை ஆசையாக வாங்கினேன்

அந்த மூன்று நாட்கள் தொல்லைக்காக
கழட்டி பீரோவில் வைத்தது எங்கோ
காணாமல் போயிடுச்சு
அப்புறம் எதுவும் வாங்கலை, Joher டியர்
SS......
சென்னையில் இப்படி தான்......

மற்ற ஊரில் தெரியல.......

என்னோடது எதுவுமே readymade gold கிடையாது......
எல்லாமே family ஆசாரி செய்து கொடுத்தது......
இப்பெல்லாம் அதுவுமில்லை......
 

Joher

Well-Known Member
அப்போ 916 24 காரட் தங்கத்தில்
பிரச்சினை ஏதும் இல்லையா?
ஏன்னா 916 Hallmark தங்கத்தில்தான்
நான் ஒரு செயின் போட்டிருக்கேன்,
Joher டியர்

KDM இப்போ கிடையாது.......
கிடைத்தாலும் வாங்காதீங்க......

916 22 carat......
தப்பா 24 போட்டுட்டேன்....
இப்போ corrected........

24 strength கிடையாது......
நகை செய்தால் சீக்கிரமே உடைந்துவிடும்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top