Today's Special-6

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சிதம்பர ரகசியம்...

பல கோடி டாலர்கள் செலவு செய்து
எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி
செய்து சிதம்பரம் நடராஜர் கால்
பெருவிரலில்தான் மொத்த பூமியின்
காந்த மையப்புள்ளி இருப்பதாக
உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன...
Centre Point of World’s Magnetic Equator.

அதை உணர்ந்து அணுத்துகள்
அசைந்துகொண்டே இருக்கும்
என்ற உண்மையை ஆடும்
நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி
சிலை அமைத்து பூமியின்
மையப்புள்ளியில் மறைமுகமாக
அமர்த்திய அவன் சாதனை
எப்பேற்ப்பட்டது..?

இதனை 5000 வருடங்களுக்கு
முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில்
குறிப்பிட்ட திருமூலரின் சக்தி
எப்படிப்பட்டது..?

திருமூலரின் திருமந்திரம் மிகப்
பெரிய உலகிற்கே வழிகாட்டும்
அறிவியல் நூலாகும்.

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம்
என்று பலரும் பல விசயங்களைக்
கூறி வரும் வேளையில், அந்தக்
கோயிலில் இருக்கும் அறிவியல்,
பொறியியல், புவியியல்,
கணிதவியல், மருத்துவவியல்
குறித்த ஆச்சர்யங்களின் சில
அற்புதமான ரகசியங்கள்
இவைகள்தான்.

இந்தக் கோயில் அமைந்திருக்கும்
இடமானது உலகின் பூமத்திய
ரேகையின் சரியான மையப்
பகுதி என்று கூறப்படுகின்றது.
(Center Point of World's Magnetic
Equator).

பஞ்ச பூதக் கோயில்களில்
ஆகாயத்தைக் குறிக்கும்
தில்லை நடராஜர் ஆலயம்.

மனித உடலை அடிப்படையாகக்
கொண்டு அமைக்கப்பட்டிருக்கும்
சிதம்பரம் கோயிலின் 9 நுழைவு
வாயில்களும், மனித உடலில்
இருக்கும் 9 வாயில்களைக்
குறிக்கின்றது.

விமானத்தின் மேல் இருக்கும்
பொற்கூரை 21,600 தங்கத்
தகடுகளைக் கொண்டு
வேயப்பட்டுள்ளது
இது மனிதன் ஒரு நாளைக்கு
சராசரியாக 21,600 தடவைகள்
சுவாசிக்கிறான் என்பதைக்
குறிக்கின்றது (15*60*24 = 21,600)
இந்த 21,600 தகடுகளை வேய
72,000 தங்க ஆணிகள்
பயன்படுத்தப்பட்டுள்ளது

இந்த 72,000 என்ற எண்ணிக்கை
மனித உடலில் இருக்கும்
ஒட்டுமொத்த நாடிகளை
குறிக்கின்றது.
இதில் கண்ணுக்குத் தெரியாத
உடலின் பல பாகங்களுக்கு
சக்தியைக் கொண்டு சேர்ப்பவையும்
அடங்கும்.

திருமந்திரத்தில் "திருமூலர்"
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார்

அதாவது "மனிதன் வடிவில்
சிவலிங்கம், அதுவே சிதம்பரம்,
அதுவே சதாசிவம், அதுவே
அவரின் நடனம்" என்ற
பொருளைக் குறிக்கின்றது.

"பொன்னம்பலம்" சற்று இடது
புறமாக அமைக்கப்பட்டுள்ளது
இது நம் உடலில் இதயத்தைக்
குறிப்பதாகும்.
இந்த இடத்தை அடைய ஐந்து
படிகளை ஏற வேண்டும்
இந்த படிகள் "பஞ்சாட்சரப் படி"
என்று அழைக்கப்படுகின்றது.

அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற
ஐந்து எழுத்தே அது.
"கனக சபை" பிற கோயில்களில்
இருப்பதைப் போன்று நேரான
வழியாக இல்லாமல் பக்கவாட்டில்
வருகின்றது.
இந்தக் கனக சபையைத் தாங்க
4 தூண்கள் உள்ளன
இது 4 வேதங்களைக்
குறிக்கின்றது

பொன்னம்பலத்தில் 28 தூண்கள்
உள்ளன.
இவை 28 ஆகமங்களையும்,
சிவனை வழிபடும் 28 வழிகளையும்
குறிக்கின்றன
இந்த 28 தூண்களும் 64 + 64
மேற்பலகைகளைக் கொண்டுள்ளது
BEAM இது 64 கலைகளைக்
குறிக்கின்றது.
இதன் குறுக்கில் செல்லும்
பல பலகைகள் CROSS BEAMS,
மனித உடலில் ஓடும் பல ரத்த
நாளங்களைக் குறிக்கின்றது.

பொற்கூரையின் மேல் இருக்கும்
9 கலசங்கள், 9 வகையான
சக்தியைக் குறிக்கின்றது.
அர்த்த மண்டபத்தில் உள்ள
6 தூண்கள் 6 சாஸ்திரங்களையும்
அர்த்த மண்டபத்தின் பக்கத்தில்
உள்ள மண்டபத்தில் உள்ள
18 தூண்கள் 18 புராணங்களையும்
குறிக்கின்றது

சிதம்பரம் நடராஜர் ஆடிக்
கொண்டிருக்கும் ஆனந்தத்
தாண்டவம் என்ற கோலம்
"cosmic dance" என்று பல
வெளிநாட்டு அறிஞர்களால்
அழைக்கப்படுகின்றது.

விஞ்ஞானம் இன்று சொல்வதை
இந்து மதம் அன்றே
சாட்சியாக்கியுள்ளது.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சிதம்பர ரகசியம்னு கேள்விப்பட்டிருக்கிறோம்... ஆனா அங்கிருக்கும் சிலைக்குள் இவ்வளவு ரகசியங்கள் ஒளிந்துள்ளது... அருமையான தகவல் டியர்
ஆமாம்ப்பா
Thank you so much, மகேஷ் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top