Thuli Maiyal Konden-12

Advertisement

Saroja

Well-Known Member
எண்ணங்கள் அவளுக்கு துணை
அவ மனசுல இருப்பத வெளியே சொல்ல ஏன் தயக்கம்
 

eanandhi

Well-Known Member
அரவிந்த் கவனிக்காமலா இருப்பான்!! பயங்கர கோபத்தில் உணவை அளைந்தான்.கோபம் அவள் மேல் அல்ல!! அவளைப் பெற்றவர்கள் மேல்!!



‘பொண்ணு லவ் பண்ணா,என்ன தப்பு.அவன்கிட்ட பேசி,நல்ல முறையா வாழறதுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து,அவனுக்கே கல்யாணம் பண்ணி வச்சிருக்க வேண்டியது தானே! தேவையில்லாம என்னை இதுல இழுத்து விட்டு..ப்ச்ச்..இப்போ விட்டு விலகவும் முடியாம,சேர்ந்து வாழவும் முடியாம அவ தவிக்கறத பார்க்கவே...எவ்ளோ கஷ்டமாயிருக்கு’தனக்குள்ளே பேசிக்கொண்டவன்,அலைபேசி அலற,எடுத்து பார்த்தான்.



பிரபாகரன் தான் அழைத்திருந்தார்.



“உன்னோட அப்பா தான்”எதிரே அமர்ந்தவளிடம் கொடுக்க,வாடிப்போயிருந்தவளின் முகம் சட்டென்று மலர்ந்த வித்தை தெரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.



‘வைப் டாட்’காலிங் என்று திரையில் தெரியவும்,அதையே அவள் பார்த்துக் கொண்டிருக்க,



“அட்டென்ட் பண்ணு”என்ற போதும் அவளின் நிலையில் மாறுதல் இல்லை.



அவள் திரையையே பார்ப்பதும்,புரிந்தவனாய்,”உன்னோட அப்பா முதல் தடவை கால் பண்ணும் போதே அப்படி சேவ் பண்ணி வச்சேன்”சொன்னவுடன் அழைப்பை ஏற்றாள்.



“மயூ,என்னடி பண்ற”வசந்தி தான் பேசினார்.



“அவங்க கூட ஆபிஸ்ல சாப்டுட்டு இருக்கேன்மா”அவர் மனம் குளிர ஒற்றை வரியில் பதில் சொல்ல,அதிலே அவருக்கு மனம் குளிர்ந்து போனது.



“ஏங்க,மாப்ள கூட ஆபிஸ் போயிருக்காளாம்’அப்பாவிடம் சொல்வது நன்றாகவே கேட்டது.



“மயூ,வேறெதுவும் பிரச்சனை இல்லையே”பல விஷயத்தை மனதில் போட்டுக்கொண்டு கலக்கத்துடன் ஒற்றை வரியில் கேட்க,



“இல்லம்மா”என்றதும் தான் அவருக்கு நிம்மதியே வந்தது.



“இங்க நம்ம சொந்தபந்தத்துக்கு எல்லாம் விருந்து கொடுக்கறோம் மயூஇப்போ வர முடியாது.இன்னும் ரெண்டொரு நாள்ல வர்றேன்.எதுனாலும் போன் போடு.சரியா”



“ம்ம்”எனவும் போனை அணைத்தவர்,கணவனையும்,மகனையும் மாறி மாறி முறைத்துவிட்டு விருந்து நடக்கும் இடத்துக்கு சென்றுவிட்டார்.



பெண்பிள்ளையை அறிமுகம் இல்லாத வீட்டில் விட்டுவிட்டு வந்த கவலை தாயாய் அவரை மிகவும் கவலைப்பட செய்ய,சற்று முன் தான் கணவனையும்,மகனையும் என்றுமில்லாமல் இன்று எண்ணெயில்லாமல் வறுத்தெடுத்திருந்தார்.பிரபாகரன் கூட அமைதியாகத்தான் இருந்தார்.



தாலி கட்டிவிட்ட ஒரே காரணத்திற்காக தனியாய்,அதுவும் ஆடவனோடு விட்டுவிட்டு வந்திருக்கும் அவர்களுக்கும் குத்தாதா என்ன?



அதே எண்ணம் தான் மயூராவிற்கும்!!



மஞ்சள் கயிறு கழுத்தில் ஏறியவுடன்,இத்தனை நாள் தான் மட்டுமே என்றிருந்த உலகில்,எப்படி இவனை இணைக்க முடியும்-என்ற யோசனையிலையே அந்த நாளைக் கடத்தினாள்.



அரவிந்தும் அவளை தொந்தரவு செய்யாமல்,தன் குழுவோடு ஐக்கியமாகிவிட்டான்.இடையிடையே தனது அறைக்கு வந்து பார்த்தபோது,அவள் செல்லில் கவனத்தை வைத்திருக்கவும்,கண்டுகொள்ளாமல் போனவன்,ஒருமுறை என்னதான் செய்கிறாள் என்று எட்டிப்பார்க்க,போகோ (pogo) சேனல் பார்த்துக் கொண்டிருந்தாள்.



சிரிப்பு தான் வந்தது.அடக்கிகொண்டவன் அதே புன்னகையோடு வெளியே போக,மதன்,’நல்ல கவனிப்போ’கிண்டல் செய்ததையும்,ஏற்றுக்கொண்டவன் மதிய உணவிற்கு தான் வந்தான்.



“சாப்ட்டு வீட்டுக்கு கிளம்பு.எனக்கு இங்க கொஞ்சம் வேலையிருக்கு.முடிச்சிட்டு வர்றேன்.என் ஸ்டாப் ஒரு லேடி தான் டிரைவ் பண்ண வருவாங்க.பயப்பட வேண்டாம்”எனவும்,அவன் சொல்பேச்சை கேட்டு நடந்தவள்,வீட்டுக்கும் வந்துவிட்டாள்.



நேற்று இரவை விட,இன்று பகலில் பார்க்கும்போது,வீடு அவளை பயங்கரமாய் மிரட்டியது.அதோடு அரவிந்தின் எதிர்பார்ப்புகள் அவளை மிகவும் பயங்கரமாய் மிரட்டிக் கொண்டிருக்க,தயங்கியே உள்ளே போனாள்.



எதிர்ப்பட்ட மாமியாரை கண்டு நிற்க,”அவன் வரலையா.இன்னைக்கும் அவனுக்கு வேலை வந்துடுச்சா! திருந்தவே மாட்டான்”மகனை செல்லமாய் வைதுவிட்டு,



“சரி.நீ போய் ரெஸ்ட் எடு”எனவும் அறைக்குள் புகுந்து கொண்டாள்.



எண்ணங்கள் யாவும் இன்றைய இரவை சுற்றியே இருக்க,அவளால் ஒருநிலையில் இருக்கவே முடியவில்லை.



கணவனின் தொடுகையில் வெறுப்பையோ,அருவருப்பையோ,பயத்தையோ காட்டிவிட்டால் என்ன நடக்கும்?-என்னால் இயல்பாய் ஏற்க முடியமா?-என்றெல்லாம் பயங்கரமாய் யோசித்தாள்.



வாய்விட்டு பேசத்தான் யோசிப்பாள்.ஆனால் சிந்தனை படுவேகத்தில் இருக்கும்.இப்போது இவளுக்கு ஏற்பட்டிருக்கும் பயமும் இயல்பானது தான்.பெண்ணுக்கே உரித்தான சிந்தனைகள்!!



யாராவது அவளது பயத்தை போக்க உடனிருந்தாலும் பரவாயில்லை.அனுவிற்கு கிடைத்த சொந்தபந்தங்கள் போல் யாரும் உடனிருந்தாலும் தெளிந்திருப்பாள்.



எல்லாவற்றுக்கும் மேலாக வினோதன் அவள் மனதில் வந்து வந்து போனான்.அவனது பார்வைகள் கூட ஞாபகம் வந்து அவளை இம்சை செய்து கொண்டிருந்தது.அரவிந்தின் பார்வையும் கூட அவனைப்போலவே இருக்குமா?பலதையும் யோசித்து தலைவலி வரவைத்துக் கொண்டவள்,இரவு வரை அறைக்குள் தான் இருந்தாள்.



வேதா தொந்தரவு செய்யவேயில்லை.அவருக்குமே குற்றவுணர்ச்சி.விருப்பமில்லாத பொண்ணை,தன் மகனின் விருப்பத்திற்காக கட்டி வைத்துவிட்டோமே என்று பொறுமையாக போனார்.



இரவு எட்டரை மணிக்கு அரவிந்த் வீட்டுக்கு வர,அம்மாவை ஒருதரம் பார்த்துவிட்டு அவர்,பிசினெஸ் மேகசின் படித்துக் கொண்டிருக்கவும்,தொந்தரவு செய்யாமல் மேலிருக்கும் தனதறைக்கு சென்று, பரேஷ்-ஆகிவிட்டு ,இறங்கி வந்த பின் தான் மயூவை பார்க்கவே போனான்.



அவள் சோபாவில் குத்தவைத்து முழங்காலில் முகத்தை வைத்து,சுவற்றையே பார்த்துக் கொண்டிருக்க,”சாப்பிட போலாம் வா”என்றழைக்கவும் தான் அவனையே பார்த்தாள்.



“என்ன சொன்னிங்க?”மீண்டுமொருமுறை கேட்டாள்.



“சாப்பிட போகலாம்னு சொன்னேன்”எனவும் இறங்கி அவனோடு வந்தாள்.



வேதாவும் வந்திருக்க,அம்மா மகன் இருவரும் தொழில் பற்றி விவாதித்துகொண்டே உணவை உள்ளே தள்ளிக்கொண்டிருந்தார்கள்.அதிலெல்லாம் அவள் கவனம் செல்லவில்லை.அமைதியாக உண்டுவிட்டு எழுந்துகொண்டாள்.



அங்கேயே சோபாவில் அமர்ந்துகொள்ள,வேதா உணவை முடித்துக்கொண்டு அன்று விரைவாகவே உறங்க சென்றுவிட்டார்.



அரவிந்தும் ஒன்பது மணிக்கெல்லாம் அறைக்குள் புகுந்துகொல்லவே அவளுக்கு திகில் பிடித்துக்கொண்டது.



ஆனாலும் உள்ளே செல்ல தயங்கவில்லை.



‘என்ன நடந்தாலும் எதிர்கொள்வோம்’போருக்கு போகும் மனநிலையிலையே உள்ளே போனாள்.



அவளுக்கென்று கணவன் ஒதுக்கியிருந்த இடத்தில்,அவனே அமர்ந்து லேப்பில் எதுவோ செய்துகொண்டிருக்க,படபடவென்று துடித்த இதயத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியாமல் உள்ளே வந்து நிற்க,



“இனி நீ அங்கேயே தூங்கலாம்”சொல்லிவிட்டு வேலையை பார்த்துக் கொண்டிருந்தான்.



அவனது படுக்கையை உபயோகிக்கவே மனமில்லை. வேறு வழியுமில்லை. ஆர்ப்பாட்டம் செய்து எதையும் கெடுத்துக்கொள்ளவும் மனமில்லை என்பதால்,கட்டிலின் வலப்புறமாய் படுத்துக்கொண்டாள்.



அதற்கே அவளுக்கு கஷ்டமாயிருந்தது..ரஜாய் எடுத்து நன்றாக போர்த்திக்கொண்ட பின்னும் சங்கடமாயிருக்க,தூக்கம் வருவதாயில்லை.



நாற்பது நிமிடங்கள் கடந்த பின்னே,அரவிந்த் வேலையை முடித்துவிட்டு படுக்க வந்தான்.



தன்னருகே அமர்வதை தெளிவாக உணர முடிய,பயத்தில் நெஞ்சுக்கூடு வேகமாய் துடிக்கவும்,அவள் உடல் வெளிப்படையாகவே நடுங்க தொடங்கியது.



அதை உணராத அரவிந்த்,அவள் முகமட்டும் போர்வையை விலக்க,இதயதுடிப்பு அதிகமாய் ஆக,இப்படியே இறந்தே போய்விடுவோமே என்று இன்னும் அதிகமாய் பயந்துவிட்டாள்.



அவன் அதை கவனியாமல்,”எனக்கு உன்னோட பர்மிஷன் வேணும்னு இல்லை.ஆனால் உன்னோட முகம் வெறுப்பையோ,பயத்தையோ காமிச்சா,நிஜமா என்னால தாங்கிக்க முடியாது.ஆயுள் வரைக்கும் என்னையே,என்னால் மன்னிக்க முடியாது. நீ என்னோட வாழ சம்மதிச்சிருக்க! அப்போ எல்லாம் நமக்குள்ள இயல்பா நடக்கட்டும். கட்டாயத்தினால வேண்டாம். உன்னோட உணர்வுகளும் எனக்கு ரொம்ப முக்கியம். ஐ ரெஸ்பெக்ட் யூ மிசஸ் அரவிந்த். கண்ணை இறுக்கி வைக்காம,ரிலாக்ஸா இரு”எனவும் பட்டென்று கண்ணை திறந்தாள்.



புன்முறுவலுடன் அவளது முகத்தை நெருங்கவும்,அவள் கண்ணை மூடாமலே பார்த்திருக்க,நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதித்து,”குட் நைட்”சொன்னவன்,மறுபுறம் திரும்பி படுத்துக்கொண்டான்.



‘ஐ ரெஸ்பெக்ட் ஹெர்’- மனதில் திரும்ப திரும்ப சொல்லியவன், தூங்கிப்போனான்.அவளுக்கோ தூக்கம் தூரப்போனது.
.SEMA character aravindh
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top