Thuli Maiyal Konden-12

NishaLakshmi

Super Moderator
Tamil Novel Writer
#1
ஹாய் பிரண்ட்ஸ்.ud போட லேட்டாகிடுச்சு.கொஞ்சமென்ன,நிறையவே வேலை.யாருக்கும் ரிப்ளை போட முடியலை.வெரி சாரி.கொஞ்ச நாளைக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.கருத்துக்கள் பகிர்ந்து கொண்ட அனைவருக்குமே ஸ்பெஷல் தேங்க்ஸ்.

அரவிந்தின் கை தன் கை மேல் இருப்பது,மயூவிற்கு பெரும் சௌகரியத்தை கொடுக்க,முடிந்த மட்டும் தன்னைக் கட்டுக்குள் வைத்திருந்தாள்.ஒருகட்டத்தில் அவளால்,அவனின் தொடுகையை தாங்கவே முடியவில்லை.“கைய விடுங்க ப்ளீஸ்.உங்கள எனக்கு மூணு நாளா தான் தெரியும்..அதுக்குள்ள..அதுக்குள்ள.......எப்படி இப்படியெல்லாம்...”சொல்லி முடிக்காமல் அவள் தடுமாறி நிறுத்தவும்,உணர்ச்சிப் போராட்டத்தில்,அவளின் வலது கண்ணின் ஓரம் வழிந்த நீர் அவனை என்னவோ செய்ய,கையை எடுத்துக்கொண்டான்.கண்ணீரை அவள் துடைப்பது தெரிந்தும்,ஏனோ கோபப்பட்டு பேச முடியவில்லை.அனுசரணையாகவும் பேச தெரியவில்லை.அந்த கண்ணீர் திடீரென்று அவன் மனதில் பெரும் மாயம் செய்திருக்க,தெளிவில்லாத மனதுடன் அலுவலகத்திற்குள் காரை நிறுத்தியவன்,அங்கு நின்றிருந்த தன் ஊழியர்களை பார்த்ததும் முகத்தை சரிப்படுத்திக் கொண்டான்.காரை பார்க் செய்ய சொல்லிவிட்டு,மனைவியுடன் இறங்க,மலர்செண்டுகள் கொடுத்து வரவேற்றவர்களிடம் நன்றி சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தான்.இது அவனின் மெயின் பிரான்ச் என்றும் சொல்லலாம்.அரவிந்தின் தொழிலே கட்டிடக்கலை தான்.ஆரம்பத்தில் கட்டிடங்கள் கட்டுவது மட்டுமே வேலையாக வைத்திருந்தவன்,சில கசப்பான சம்பவங்களுக்கு பிறகு பின் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் தன்னிடமிருந்தே கிடைக்கும்படியாக தன் தொழிலை பெருக்கினான்.ஏவி க்ரூப் ஆப் கம்பெனிஸ் கடந்த எட்டு வருடங்களில் நல்ல முன்னேற்றம் அடைந்திருந்தது.அதில் உழைப்பு அரவிந்தினுடையது என்றாலும்,எந்த தடையும் இல்லாமல் முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு அடித்தளமாக இருந்தது அவனுடைய அப்பா வேங்கட பெருமாளின் செல்வாக்கு தான்.அவரின் மகன் என்பதற்காகவே அவனுக்கு உதவி செய்ய பலரும் முன்வந்திருந்தனர்.வேதாவும் அவரால் ஆன உதவியை அவ்வப்போது செய்துகொண்டேயிருந்தார்.அரவிந்தின் தொழிலுக்கு முட்டுக்கட்டையாகவும் பலர் இருந்தனர்.அதில் முதலில் இருப்பவர் எம்பி சங்கரலிங்கம் தான்.சமீபத்தில் தாம் எம்பி ஆகியிருந்தவரின் அட்டகாசம் இப்போது கொஞ்சம் அதிகம் தான் என்றாலும்,தன்னுடைய நேர்மையான தொழில்முறையாலும்,அதர்மமான சில செயல்களாலும் அவரை கட்டுக்குள் வைத்திருந்தான்..அவரை மேற்கொண்டு எதுவும் செய்ய இயலாது..அவர் அவனின் மாமாவாக போய்விட்டார்.அத்தையின் கணவர் என்பதால் பொறுத்துப் போகிறான்.இன்னொரு காரணமும் உண்டு.அது அவருடைய மருமகன் மதன்.இங்கு தான் வேலைபார்க்கிறான்.அதுவும் அரவிந்தின் பிஏவாக!!பளபளக்கும் அந்த கிரனைட் தரையில் வேகவேகமாக வந்து கொண்டிருந்தான் மதன்.அவன் வெளியே வருவதற்கு முன்னவே அரவிந்த் மனைவியுடன் வந்திருக்க,எதிர்ப்பட்டவனை பார்த்தும்,பார்க்காதது போல் முன்னே செல்ல,மயூவும் அவன் காலடியை பின் தொடர்ந்தாள்.மதன் சிரித்துக்கொண்டே அவர்களிருவரின் பின் வந்தவன்,அரவிந்த் அறைக்குள் நுழைந்ததும்,

“வாழ்த்துக்கள் மச்சான்”என்றான்.அரவிந்தின் முறைப்பில் நாக்கை கடித்துக்கொண்டவன்,”வாழ்த்துக்கள் சகல”எனவும் இன்னும் அதிகமாய் முறைத்தவன்,மயூவை ஒரு சேரில் அமர் வைத்துவிட்டு,தன்னுடைய இடத்தில் போய் அமர்ந்தவனை பார்த்தவன்,அதே புன்முறுவலுடன் மயூவின் அருகிலிருந்த சேரில் அமர்ந்துகொண்டான்.மயூ தான் மௌனமாய்,எப்போதும் போல் கண்டுகொள்ளாமல் இருப்பாளே!!“சாரி மாப்ள.கல்யாணத்துக்கு வர முடியலை.என் வைப்க்கு உடம்பு முடியாம போச்சு”எனவும்,அரவிந்த் தன் பார்வையை விலக்கிக்கொள்ளாமல் இன்னும் கூர்மையாக பார்க்க,மதன் உண்மையை சொல்லி விட்டான்.“உன்னால தான்டா நான் கல்யாணத்துக்கு வர முடியாம போச்சு.நீ எனக்கு முறையா வீட்டுக்கு வந்து பத்திரிக்கை வைக்கலையாம்.ரேஷ்மிக்கு ஒரு போன் பண்ணி கூட மேரேஜ்னு சொல்லலையாம்.அவ அப்பன மதிக்கலையாம்.அவ அக்காளை மதிக்கலையாம்.அத்தானை மதிக்கலையாம்..அதனால என்னையும் போகக் கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டா.மனைவி சொல்லே மந்திரம் இல்லையா..அதான் நானும் வரலை”விளையாட்டாக சொல்லிக்கொண்டே வந்தவன்,“ரேஷ்மியோட பிடிவாதம் உனக்கு தெரியுமில்லையா!! ஒருக்கட்டத்துக்கு மேல சமாளிக்கவே முடியாது.அதான் வீட்டுலையே இருந்துட்டேன்.சாரிடா”என்றதும்,அரவிந்தும் பிடிவாதத்தை கைவிட்டு,மனைவியிடம் நண்பனை அறிமுகப்படுத்தி வைக்க அவளை பார்த்தவன்,அவள் பார்வை தனக்கு மேலே இருப்பதைப் பார்த்து தானும் திரும்பி பார்த்தான்.அங்கு கணவன் மனைவி இருவரும் ஒன்றாக இருப்பது போல போட்டோ பெரிதாக,ஆனால் பார்க்க அழகாய் இருக்க,“இது தான் உன் சர்ப்ரைஸா”சிரிப்புடன் கேட்க,“எஸ்”என்றான்.“ரேஷ்மியோட பழக்கம் உனக்கும் வந்துடுச்சுன்னு,தெரிஞ்சுக்க இதைவிட பெரிய ப்ரூப் எதுவும் தேவையில்ல”எனவும்,மதனும் சிரித்துக்கொண்டான்.இதுபோன்று சின்ன சின்ன விஷயங்களில், ரேஷ்மி சர்ப்ரைஸ் கொடுத்தால் மிகவும் மகிழ்ந்து போவாள்.இன்னும் அந்த போட்டோவிலிருந்து மயூ பார்வையை அகற்றாமல் இருந்தாள்.மாமி வீட்டுக்கல்யாணத்தில் எடுத்திருக்கக் கூடும் என்று புரிந்தாலும்,போட்டோ எடுத்தது கூட தெரியாமல் இருந்தோமா என்று யோசித்துக்கொண்டேயிருக்க,மதனும் பார்த்தவன்,“நான் மதன்.அர்வியோட பிரண்ட்.இந்த கம்பெனியோட பிஏ.ஆல்இன்ஆல்

னும் சொல்லலாம்”என்றதும் உதடுகளை லேசாக விரித்து அழகாய்,மென்னகை புரிந்தாள்.“ப்ரேக்பாஸ்ட் எங்களோட ஜாயின் பண்ணிக்கறிங்களா? இல்ல இங்கேயே கொண்டு வர சொல்லட்டுமா?”“இங்க ரூம்ல வைச்சிட்டு போகட்டும்.நான் அங்க இருந்தா,ஸ்டாப் ப்ரீயா இருக்க மாட்டாங்க”“சரிதான்.நீ அங்கேயும் வந்து பிசினெஸ் பேச ஆரம்பிச்சிடுவேன்னு அவங்களுக்கு பயம் இருக்கும்ல?”சொல்லிவிட்டு,உணவு எடுத்து வர தானே சென்றான்.அரவிந்திற்கு பிடித்த பதார்த்தங்களோடு எல்லா உணவு வகைகளிலும் கொஞ்சம் கொஞ்சம் என்று எடுத்து,உணவு பரிமாறுபவனிடம் கொடுத்து,உள்ளே வைத்துவிடுமாறு பணித்தவன்,தன் சகபணியாளர்களுடன் இணைந்துகொண்டான்.டைனிங் ஹாலுக்கு அரவிந்த்,மனைவியையும் கூட்டி சென்றவன்,”உனக்கு பிடிச்சதை எடுத்துக்கோ”என்றவன்,தானே பரிமாறி உண்ணவும் ஆரம்பித்துவிட்டான்.அது அவளுக்கு ஆச்சர்யமே!! அவளது வீட்டில் ஆண்களுக்கு எல்லாமே வீட்டுப்பெண்கள் தான் பரிமாறுவார்கள்.அவன் இயல்பாய் உண்ண ஆரம்பிக்கவும்,தனக்கு முன்னிருந்த உணவுப் பாத்திரத்தில்,தயிர் சாதமிருக்க,வேறு எதையும் திறந்து பார்த்து,தன் தட்டில் வைக்கவே அவளுக்கு சங்கடமாயிருக்கவே,தயிர் சாதத்தை கொஞ்சமாக வைத்து உண்ண ஆரம்பித்தாள்.அந்த கொஞ்சமும் உண்ண முடியவில்லை.வீட்டினரின் ஞாபகம் வந்துவிட்டது.‘இன்னும் ஒரு போன் கூட பண்ணலை.தொல்லை ஒழிஞ்சுதுன்னு விட்டுட்டாங்களா’கண்ணை கரித்துக்கொண்டு வர,அரவிந்த் கருத்தைக் கவரா வண்ணம்,கண்ணை துடைத்துக் கொண்டவள்,எழுந்து சென்று கையை கழுவிக்கொண்டு வந்தாள்.
 
NishaLakshmi

Super Moderator
Tamil Novel Writer
#2
அரவிந்த் கவனிக்காமலா இருப்பான்!! பயங்கர கோபத்தில் உணவை அளைந்தான்.கோபம் அவள் மேல் அல்ல!! அவளைப் பெற்றவர்கள் மேல்!!‘பொண்ணு லவ் பண்ணா,என்ன தப்பு.அவன்கிட்ட பேசி,நல்ல முறையா வாழறதுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து,அவனுக்கே கல்யாணம் பண்ணி வச்சிருக்க வேண்டியது தானே! தேவையில்லாம என்னை இதுல இழுத்து விட்டு..ப்ச்ச்..இப்போ விட்டு விலகவும் முடியாம,சேர்ந்து வாழவும் முடியாம அவ தவிக்கறத பார்க்கவே...எவ்ளோ கஷ்டமாயிருக்கு’தனக்குள்ளே பேசிக்கொண்டவன்,அலைபேசி அலற,எடுத்து பார்த்தான்.பிரபாகரன் தான் அழைத்திருந்தார்.“உன்னோட அப்பா தான்”எதிரே அமர்ந்தவளிடம் கொடுக்க,வாடிப்போயிருந்தவளின் முகம் சட்டென்று மலர்ந்த வித்தை தெரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.‘வைப் டாட்’காலிங் என்று திரையில் தெரியவும்,அதையே அவள் பார்த்துக் கொண்டிருக்க,“அட்டென்ட் பண்ணு”என்ற போதும் அவளின் நிலையில் மாறுதல் இல்லை.அவள் திரையையே பார்ப்பதும்,புரிந்தவனாய்,”உன்னோட அப்பா முதல் தடவை கால் பண்ணும் போதே அப்படி சேவ் பண்ணி வச்சேன்”சொன்னவுடன் அழைப்பை ஏற்றாள்.“மயூ,என்னடி பண்ற”வசந்தி தான் பேசினார்.“அவங்க கூட ஆபிஸ்ல சாப்டுட்டு இருக்கேன்மா”அவர் மனம் குளிர ஒற்றை வரியில் பதில் சொல்ல,அதிலே அவருக்கு மனம் குளிர்ந்து போனது.“ஏங்க,மாப்ள கூட ஆபிஸ் போயிருக்காளாம்’அப்பாவிடம் சொல்வது நன்றாகவே கேட்டது.“மயூ,வேறெதுவும் பிரச்சனை இல்லையே”பல விஷயத்தை மனதில் போட்டுக்கொண்டு கலக்கத்துடன் ஒற்றை வரியில் கேட்க,“இல்லம்மா”என்றதும் தான் அவருக்கு நிம்மதியே வந்தது.“இங்க நம்ம சொந்தபந்தத்துக்கு எல்லாம் விருந்து கொடுக்கறோம் மயூஇப்போ வர முடியாது.இன்னும் ரெண்டொரு நாள்ல வர்றேன்.எதுனாலும் போன் போடு.சரியா”“ம்ம்”எனவும் போனை அணைத்தவர்,கணவனையும்,மகனையும் மாறி மாறி முறைத்துவிட்டு விருந்து நடக்கும் இடத்துக்கு சென்றுவிட்டார்.பெண்பிள்ளையை அறிமுகம் இல்லாத வீட்டில் விட்டுவிட்டு வந்த கவலை தாயாய் அவரை மிகவும் கவலைப்பட செய்ய,சற்று முன் தான் கணவனையும்,மகனையும் என்றுமில்லாமல் இன்று எண்ணெயில்லாமல் வறுத்தெடுத்திருந்தார்.பிரபாகரன் கூட அமைதியாகத்தான் இருந்தார்.தாலி கட்டிவிட்ட ஒரே காரணத்திற்காக தனியாய்,அதுவும் ஆடவனோடு விட்டுவிட்டு வந்திருக்கும் அவர்களுக்கும் குத்தாதா என்ன?அதே எண்ணம் தான் மயூராவிற்கும்!!மஞ்சள் கயிறு கழுத்தில் ஏறியவுடன்,இத்தனை நாள் தான் மட்டுமே என்றிருந்த உலகில்,எப்படி இவனை இணைக்க முடியும்-என்ற யோசனையிலையே அந்த நாளைக் கடத்தினாள்.அரவிந்தும் அவளை தொந்தரவு செய்யாமல்,தன் குழுவோடு ஐக்கியமாகிவிட்டான்.இடையிடையே தனது அறைக்கு வந்து பார்த்தபோது,அவள் செல்லில் கவனத்தை வைத்திருக்கவும்,கண்டுகொள்ளாமல் போனவன்,ஒருமுறை என்னதான் செய்கிறாள் என்று எட்டிப்பார்க்க,போகோ (pogo) சேனல் பார்த்துக் கொண்டிருந்தாள்.சிரிப்பு தான் வந்தது.அடக்கிகொண்டவன் அதே புன்னகையோடு வெளியே போக,மதன்,’நல்ல கவனிப்போ’கிண்டல் செய்ததையும்,ஏற்றுக்கொண்டவன் மதிய உணவிற்கு தான் வந்தான்.“சாப்ட்டு வீட்டுக்கு கிளம்பு.எனக்கு இங்க கொஞ்சம் வேலையிருக்கு.முடிச்சிட்டு வர்றேன்.என் ஸ்டாப் ஒரு லேடி தான் டிரைவ் பண்ண வருவாங்க.பயப்பட வேண்டாம்”எனவும்,அவன் சொல்பேச்சை கேட்டு நடந்தவள்,வீட்டுக்கும் வந்துவிட்டாள்.நேற்று இரவை விட,இன்று பகலில் பார்க்கும்போது,வீடு அவளை பயங்கரமாய் மிரட்டியது.அதோடு அரவிந்தின் எதிர்பார்ப்புகள் அவளை மிகவும் பயங்கரமாய் மிரட்டிக் கொண்டிருக்க,தயங்கியே உள்ளே போனாள்.எதிர்ப்பட்ட மாமியாரை கண்டு நிற்க,”அவன் வரலையா.இன்னைக்கும் அவனுக்கு வேலை வந்துடுச்சா! திருந்தவே மாட்டான்”மகனை செல்லமாய் வைதுவிட்டு,“சரி.நீ போய் ரெஸ்ட் எடு”எனவும் அறைக்குள் புகுந்து கொண்டாள்.எண்ணங்கள் யாவும் இன்றைய இரவை சுற்றியே இருக்க,அவளால் ஒருநிலையில் இருக்கவே முடியவில்லை.கணவனின் தொடுகையில் வெறுப்பையோ,அருவருப்பையோ,பயத்தையோ காட்டிவிட்டால் என்ன நடக்கும்?-என்னால் இயல்பாய் ஏற்க முடியமா?-என்றெல்லாம் பயங்கரமாய் யோசித்தாள்.வாய்விட்டு பேசத்தான் யோசிப்பாள்.ஆனால் சிந்தனை படுவேகத்தில் இருக்கும்.இப்போது இவளுக்கு ஏற்பட்டிருக்கும் பயமும் இயல்பானது தான்.பெண்ணுக்கே உரித்தான சிந்தனைகள்!!யாராவது அவளது பயத்தை போக்க உடனிருந்தாலும் பரவாயில்லை.அனுவிற்கு கிடைத்த சொந்தபந்தங்கள் போல் யாரும் உடனிருந்தாலும் தெளிந்திருப்பாள்.எல்லாவற்றுக்கும் மேலாக வினோதன் அவள் மனதில் வந்து வந்து போனான்.அவனது பார்வைகள் கூட ஞாபகம் வந்து அவளை இம்சை செய்து கொண்டிருந்தது.அரவிந்தின் பார்வையும் கூட அவனைப்போலவே இருக்குமா?பலதையும் யோசித்து தலைவலி வரவைத்துக் கொண்டவள்,இரவு வரை அறைக்குள் தான் இருந்தாள்.வேதா தொந்தரவு செய்யவேயில்லை.அவருக்குமே குற்றவுணர்ச்சி.விருப்பமில்லாத பொண்ணை,தன் மகனின் விருப்பத்திற்காக கட்டி வைத்துவிட்டோமே என்று பொறுமையாக போனார்.இரவு எட்டரை மணிக்கு அரவிந்த் வீட்டுக்கு வர,அம்மாவை ஒருதரம் பார்த்துவிட்டு அவர்,பிசினெஸ் மேகசின் படித்துக் கொண்டிருக்கவும்,தொந்தரவு செய்யாமல் மேலிருக்கும் தனதறைக்கு சென்று, பரேஷ்-ஆகிவிட்டு ,இறங்கி வந்த பின் தான் மயூவை பார்க்கவே போனான்.அவள் சோபாவில் குத்தவைத்து முழங்காலில் முகத்தை வைத்து,சுவற்றையே பார்த்துக் கொண்டிருக்க,”சாப்பிட போலாம் வா”என்றழைக்கவும் தான் அவனையே பார்த்தாள்.“என்ன சொன்னிங்க?”மீண்டுமொருமுறை கேட்டாள்.“சாப்பிட போகலாம்னு சொன்னேன்”எனவும் இறங்கி அவனோடு வந்தாள்.வேதாவும் வந்திருக்க,அம்மா மகன் இருவரும் தொழில் பற்றி விவாதித்துகொண்டே உணவை உள்ளே தள்ளிக்கொண்டிருந்தார்கள்.அதிலெல்லாம் அவள் கவனம் செல்லவில்லை.அமைதியாக உண்டுவிட்டு எழுந்துகொண்டாள்.அங்கேயே சோபாவில் அமர்ந்துகொள்ள,வேதா உணவை முடித்துக்கொண்டு அன்று விரைவாகவே உறங்க சென்றுவிட்டார்.அரவிந்தும் ஒன்பது மணிக்கெல்லாம் அறைக்குள் புகுந்துகொல்லவே அவளுக்கு திகில் பிடித்துக்கொண்டது.ஆனாலும் உள்ளே செல்ல தயங்கவில்லை.‘என்ன நடந்தாலும் எதிர்கொள்வோம்’போருக்கு போகும் மனநிலையிலையே உள்ளே போனாள்.அவளுக்கென்று கணவன் ஒதுக்கியிருந்த இடத்தில்,அவனே அமர்ந்து லேப்பில் எதுவோ செய்துகொண்டிருக்க,படபடவென்று துடித்த இதயத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியாமல் உள்ளே வந்து நிற்க,“இனி நீ அங்கேயே தூங்கலாம்”சொல்லிவிட்டு வேலையை பார்த்துக் கொண்டிருந்தான்.அவனது படுக்கையை உபயோகிக்கவே மனமில்லை. வேறு வழியுமில்லை. ஆர்ப்பாட்டம் செய்து எதையும் கெடுத்துக்கொள்ளவும் மனமில்லை என்பதால்,கட்டிலின் வலப்புறமாய் படுத்துக்கொண்டாள்.அதற்கே அவளுக்கு கஷ்டமாயிருந்தது..ரஜாய் எடுத்து நன்றாக போர்த்திக்கொண்ட பின்னும் சங்கடமாயிருக்க,தூக்கம் வருவதாயில்லை.நாற்பது நிமிடங்கள் கடந்த பின்னே,அரவிந்த் வேலையை முடித்துவிட்டு படுக்க வந்தான்.தன்னருகே அமர்வதை தெளிவாக உணர முடிய,பயத்தில் நெஞ்சுக்கூடு வேகமாய் துடிக்கவும்,அவள் உடல் வெளிப்படையாகவே நடுங்க தொடங்கியது.அதை உணராத அரவிந்த்,அவள் முகமட்டும் போர்வையை விலக்க,இதயதுடிப்பு அதிகமாய் ஆக,இப்படியே இறந்தே போய்விடுவோமே என்று இன்னும் அதிகமாய் பயந்துவிட்டாள்.அவன் அதை கவனியாமல்,”எனக்கு உன்னோட பர்மிஷன் வேணும்னு இல்லை.ஆனால் உன்னோட முகம் வெறுப்பையோ,பயத்தையோ காமிச்சா,நிஜமா என்னால தாங்கிக்க முடியாது.ஆயுள் வரைக்கும் என்னையே,என்னால் மன்னிக்க முடியாது. நீ என்னோட வாழ சம்மதிச்சிருக்க! அப்போ எல்லாம் நமக்குள்ள இயல்பா நடக்கட்டும். கட்டாயத்தினால வேண்டாம். உன்னோட உணர்வுகளும் எனக்கு ரொம்ப முக்கியம். ஐ ரெஸ்பெக்ட் யூ மிசஸ் அரவிந்த். கண்ணை இறுக்கி வைக்காம,ரிலாக்ஸா இரு”எனவும் பட்டென்று கண்ணை திறந்தாள்.புன்முறுவலுடன் அவளது முகத்தை நெருங்கவும்,அவள் கண்ணை மூடாமலே பார்த்திருக்க,நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதித்து,”குட் நைட்”சொன்னவன்,மறுபுறம் திரும்பி படுத்துக்கொண்டான்.‘ஐ ரெஸ்பெக்ட் ஹெர்’- மனதில் திரும்ப திரும்ப சொல்லியவன், தூங்கிப்போனான்.அவளுக்கோ தூக்கம் தூரப்போனது.
 
Advertisement

New Episodes