Thookanangkoodu - Chapter 1 Part 2

Advertisement

P.Vijayalakshmi

Well-Known Member
Chapter 1 Continuation

அதுவும் இது பன்னெண்டாம் கடைசி பரிச்சை வேற மத்த பசங்க எல்லாம் இரண்டு நாளு முந்தியே போயிடுச்சிங்க நீ தான் கடைசியா போற’ அவளின் நிலை புரியாது வெள்ளந்தியாக சொல்லும் அவர்களிடம் அதற்க்கு மேல் எதுவும் பேசாது இருந்தாலும் செங்கமலம் சொன்னது போல் தன் பொட்டியை கட்டாது அமைதியாக இருக்க.
தன் தடித்த சரீரத்தை தூக்க முடியாது மாடி ஏறி வந்த சாய் தேவி….. “அங்கு இரவு உடையில் இருக்கும் மஞ்சுளாவை பார்த்து” கோபம் எழ.
அந்த கோபத்தை மஞ்சுளாவிடம் காட்டாது….. “என்ன செங்கமலம் நான் மஞ்சுவை ரெடியா இருன்னு சொல்ல சொல்லி தானே உன்ன அனுப்பிச்ச. நான் சொன்னதை செய்யாம நீ இங்க வந்து கத அளந்துட்டு இருக்கியா….?
வேல செய்யாம எப்படி எப்படி ஏமாத்துறதுன்னு உன் கிட்ட தான் கத்துக்கனும் போல. கீழே சாப்பிட்ட இடம் எல்லாம் அப்படியே இருக்கு. “ என்று திட்டியவர்.
மஞ்சுவிடம்… “சீக்கிரம் கிளம்புமா உன்னை அழைச்சிட்டு போறவரு கீழே வெயிட் பண்ணிட்டு இருக்காரு….” என்று சத்தமாக சொல்லியவர்.
மெல்லிய குரலில்…. “இவ்வளவு நாளா இந்த பொண்ணு இவ்வளவு பெரிய இடமுன்னு தெரியாம போச்சே…..” என்று முனகியவராய் தன் முட்டி கால் வலியில் மெல்ல படி இறங்கியவரின் முதுகை பார்த்த வாரே செங்கமலம்…
“ஆ விரசா பொட்டிய கட்டு பாப்பா நான் போரேன் இல்லேன்னா திரும்பவும் அந்த அழகு சுந்தரி கூவும்.” அப்போதும் மஞ்சுளா நின்ற இடத்திலேயே அசையாமல் நின்று இருந்தவளை…. “என்ன பாப்பா நீ போறதுக்குள்ள என்னை வீட்டுக்கு அனுப்பிச்சிடுவ போலவே…..” அவளின் தோளை தொட.
செங்கமலத்துக்கு எந்த பதிலும் அளிக்காது ஓடி போய் மாடியின் விளிம்பில் இருந்து கீழே அங்கு தங்கி இருப்போரை வந்து பார்ப்பவர்களை அமர வைக்கும் வரவேற்ப்பு பகுதியைய் பார்க்கும் பொருட்டு தலையை எட்டி கீழே பார்த்தவள் உடனே தலையை நிமிர்த்திக் கொண்டவளுக்கு நம்பவே முடியவில்லை.
இவருடனா செல்கிறேன்…..? நம்மை அழைக்க இவரா வந்து இருக்கிறார். ….?கடைசியாக அவரை பார்த்த நாளும் நியாபகத்துக்கு வர கண்ணில் தன்னால் கண்ணீர் வர.
அய்யோ இந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு அனுப்பாம விடாது போலவே என்று நினைத்துக் கொண்டே அங்கு வந்த செங்கமலம் மஞ்சுளாவின் கண்ணீர் முகத்தை பார்த்து விட்டு தன் கவலை மறந்தவளாய்….
“ என்ன பாப்பா எதுக்கு அழற…” என்று கேட்டுக் கொண்டே அவளின் கண்ணீரை துடைத்து விட்ட வாரே என்ன பாக்க இப்படி அவசரமா ஓடி வந்துச்சி என்று நினைத்துக் கொண்டு மஞ்சுளா எட்டி பார்த்தது போலவே பார்த்த செங்கமலம் அங்கு ஐம்பது மதிக்கதக்க ஒரு ஆண் பார்க்க மரியாதையான தோற்றத்தோடு கோட் சூட்டில் கம்பீரத்தோடு கால் மேல் கால் போட்டு அமர்ந்த வாரே தன் செல்லை நோண்டிக் கொண்டு இருப்பவரை கூர்மையுடன் பார்த்த வாரே…
மஞ்சுளாவிடம் … “யாரு பாப்பா அவரு…..?” என்ற கேள்வி கீழே அமர்ந்து இருப்பவருக்கு கேட்டதோ என்னவோ தன் செல்லை விட்டு மேலே நிமிர்ந்து பார்க்க.
“ அய்யோ…” என்று கை உதறிய மஞ்சுளா செங்கமலத்தை அந்த பெரிய மனிதர் பார்க்காதவாறு இழுத்துக் கொண்டு நிறுத்தியவளுக்கோ பார்த்து இருப்பாரோ….என்ற பயமே மேலோங்கி இருந்தது.
மஞ்சுளாவின் இந்த அத்தனை செயல்களையும் பார்த்த செங்கமலத்துக்கோ வேறு என்ன என்னவோ நினைக்க தோன்றியது. எட்டாவது வரை படித்த செங்கமலம் காலையில் எழுந்தால் செய்திதாளை பார்க்காது அந்த நாள் போகாது. பெருக்குகிறேன் என்ற பெயரில் வரவேற்ப்பு அறையில் இருக்கும் செய்தி தாளை இந்த பக்கம் துடப்ப கட்டையால் ஒரு வீசு வீசி விட்டு ஒரு பக்கம் படித்தாள் என்றால் அடுத்த இரண்டு வீசு வீசுவதற்க்குள் செய்தி தாளின் அனைத்து செய்தியையும் வாசித்து விடுவாள்.
அப்படி வாசித்ததில் குழந்தைய கூட விட்டு வைக்காத இந்த கிழவன்களின் அட்டகாசம் ஒன்று ஒன்றாய் அவள் நியாபகத்தில் வர பின் என்ன…..
“பாப்பா அந்த ஆளு யாரு…..?” செங்கமலத்தின் கேள்விக்கு என்ன பதில் சொல்லுவது என்று தயங்கிய அந்த நேரத்திலும் அவரை ஆளு என்ற செங்கமலத்தின் பேச்சு பிடிக்காது.
“ ஆளுனுலா சொல்லாதிங்க செங்கமலம் அம்மா அவரு ரொம்ப நல்லவரு.” நல்லவரு என்று சொன்னாளே ஒழிய அவர்களின் உறவு முறை சொல்லாது …..
“அய்யோ அவரு எவ்வளவு பிஸியானவரு அவர காக்க வெச்சிட்டு நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன்னே….” என்று ஓடும் மஞ்சுளாவின் செயலில் “அடப்புள்ள நானும் இத தானே இவ்வளவு நேரமும் சொல்லிட்டு இருந்தேன்.” என்று சொன்னவள்.
கடைசி வரை மஞ்சு பாப்பா அவரு யாருன்னு சொல்லவே இல்லையே…..என்று நினைத்தவள். பின் முதலில் தான் நினைத்தது போல் இருக்காது. நாம அவர ஆளுன்னு சொன்னப்ப பாப்பாக்கு எவ்வளவு கோபம் வந்தது. என்று நினைத்துக் கொண்டே கீழே இறங்கி போனாள்.
செங்கல்பட்டில் இருந்த அந்த விடுதியில் இருந்து புறப்பட்ட அந்த விலை உயர்ந்த கார் ஊராப்பாக்கம் வரும் போது தான் முன் இருக்கையில் ஓட்டுனர் பக்கத்தில் அமர்ந்து இருந்த அவர் பின் பக்கத்தில் அமர்ந்து இருந்த மஞ்சுவை திரும்பி பார்த்து “காலையில ஏதாவது சாப்பிட்டியாமா…..?” முதன் முதல் முகத்துக்கு நேராய் கேட்கும் அவர் கேள்விக்கு “ஆ” என்று தலை ஆட்டியவள் அடுத்து பேச்சு பேசாது தன் விரலின் நகக்கண் பார்த்து தலை குனிந்தவளின் தலையயே யோசனையுடன் பார்த்திருந்தவரோ…
இந்த சிறு பெண்ணின் மனது நோகாது நம் வீட்டில் வைத்திருக்க முடியுமா…..? என்ற சந்தேகம் தன்னுள் எழுந்தாலும் எந்த நிலையிலும் இப்பெண்ணை விடக்கூடாது என்பதில் மட்டும் தெளிவாய் இருந்தார்.
“மஞ்சு பரிட்சை எல்லாம் எப்படி எழுதி இருக்கேம்மா…..?” அவர் கேள்வியில் கலங்கிய கண்ணீர் துளிகளை கண்ணை விட்டு சிந்தாது தன் இமை சிமிட்டி அதை உள்ளே அடக்கியவாரே…. “நல்லா எழுதி இருக்கேன்.” எந்த உறவு முறையும் வைத்து அழைக்காது பேசினாள்.
தன் அம்மாவின் இரண்டாம் கணவரை எந்த முறை வைத்து அழைப்பது என்று திண்டாடி போனாள் அச்சிறு பெண். இது வரை நேரடியாக பேசிக் கொள்ளும் வாய்ப்பு அவளுக்கு வந்து இராததால் இது வரை இந்த பிரச்சனை அவளுக்கு எழுந்தது இல்லை.இனி….
அதே எண்ணம் தான் தயாநிதிக்கும். இது வரை அவளை ஆதாரிக்க அவள் தாத்தா இருந்தார். இப்போது அனைத்தும் நான் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் தன் அன்னை எதிர்த்தாலுமே…..
மைலாப்பூரில் அமைந்த அந்த பெரிய பங்களா கோல்டையே உருக்கி ஊத்தியது போல் மின்ன. கேட்டுக்கும் பங்களாவின் நுழைவாயிலுக்குமே செல்ல காரிலேயே இரண்டு நிமிடம் பிடித்த அந்த நுழைவாயில் அருகில் கார் நின்றதும் தயாநிதி ஓட்டுனரிடம் ஏதோ சொல்ல அவரோ….”எஸ் சர்.எஸ் சர்” என்று அவர் சொன்ன அனைத்துக்கும் தலையாட்டியதை பார்த்துக் கொண்டு இருந்த மஞ்சுளாவிடம் “வாம்மா….” என்று அன்போடு அழைக்க காரை விட்டு இறங்கும் போது தன் அன்னை மகேஸ்வரி ஓடோடி வருவதை பார்த்துக் கொண்டே கீழே நின்றவள் தன் அன்னையைய் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டு நின்றாள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top