Thookanangkoodu - Chapter 1 - Part 1

Advertisement

P.Vijayalakshmi

Well-Known Member
Hi friends,

Enoda adutha kadhai - Thookanangkoodu - start panren. Epovum pola unga comments sollavum.

தூக்கணாங்கூடு……..

அத்தியாயம்----1​
தான் தங்கியிருந்த விடுதியறையின் ஜன்னல் பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்த நம் கதையின் நாயகி மஞ்சுளாவின் பார்வை ஒரு இடத்திலேயே நிலைப் பெற்று இருந்ததால் அந்த விடுதியில் வேலை செய்யும் செங்கமலம் அழைத்த “பாப்பா” என்ற அழைப்பு காதில் விழாது இருக்க.
“அந்த ஜன்னல் கிட்ட அப்படி என்ன இருக்குன்னு தெரியலையே எப்போ பாரு அது கிட்டயே நின்னுட்டு இருக்கு இந்த மஞ்சு பொண்ணு” என்று மனதில் முணு முணுத்த வாறே மஞ்சுவின் அருகில் சென்ற செங்கமலம் மஞ்சுவின் தோள் தொட.
அந்த தொடு உணர்வில் தன்நிலைக்கு வந்த மஞ்சுளாவின் முகத்தில் ஆராய்ச்சி பார்வை இருக்க.
“எப்போ பாரு அந்த ஜன்னல் கிட்ட அப்படி என்னத்த பாக்குற பாப்பா சொன்னா நானும் பாப்பேன்ல.” தான் வந்த வேலை மறந்து தன் நெடு நாள் சந்தேகத்தை கேட்க.
எப்போதும் ஒரு வித சோகம் மட்டுமே காட்ட கூடிய மஞ்சுவின் கண் செங்கமலம் கேள்வியில் மின்னலடிக்க தன் விரல் நீட்டி ஒரு மரத்தை காட்டி….
“அதோ அங்கு இருக்கு பாருங்க அத தான் பார்த்துட்டு இருக்கேன் செங்கமலம் அம்மா.” அந்த பள்ளி விடுதியை கூட்டி பெருக்கும் வேலை பார்க்கும் செங்கமலத்தை அவ்விடுதியில் தங்கி இருக்கும் பிள்ளைகள் அனைவரும் செங்கமலம் ஆயா என்று அழைக்க. நம் மஞ்சுவின் செங்கமலம் அம்மா என்ற அழைப்புக்கு எப்போதும் போல உருகி போனவராய்….
“ அது நான் வேலயில சேந்த அப்போத்தில இருந்து தான் இருக்கு. அதையா இப்படி அதிசயமா பாக்குற….?” தன் விரலை மோக்கட்டையில் கை வைத்த வாரே கேட்க.
“அய்யோ செங்கமலம் அம்மா நான் அத காட்டல. அதோ அதுல தொங்கிட்டு இருக்கே கூடு அத தான் காட்டினேன். நான் முதல்ல பாக்குறப்ப ஒரு கயிறு மாதிரி மட்டும் தான் தொங்கிட்டு இருந்ததா அப்போ ஒரு லைட் எல்லோ குருவி அதன் வாயில நாரு, வைக்கோல் எடுத்துட்டு வந்து அதுல வெச்சி வெச்சி இப்படி கட்டி முடிச்சிடுச்சி பாக்கவே எவ்வளவு அழகா இருக்குல!!!!!!.” தன் கண்கள் மின்ன சொன்னவளின் கன்னத்தை பற்றி….
“உன்னோடவா…..?” என்று சொல்லி நெட்டி முறித்தவர் சொல்லுக்கு ஏற்ப தான் மஞ்சுளா இருந்தாள்.
அந்த குருவியின் கலரை போலவே மஞ்சள் நிறத்தில் திகழ்ந்தவளை அவளின் தோழிகள் அனைவரும்…. “உன்னுடைய கலரை பார்த்து தான் உன் அம்மா உனக்கு மஞ்சுளான்னு பேரு வெச்சாங்களா…..?” என்ற கேள்விக்கு பதில் அளிக்காது ஒரு மெளன புன்னகை மட்டுமே சிந்துவாள்.
அவள் அவளின் அம்மாவோடு இருந்தால் தானே இந்த பெயரின் அர்த்தம் அவளுக்கு தெரியும். தனக்கே தெரியாததை எப்படி தன் தோழிகளுக்கு சொல்ல முடியும். இது போல் அவள் அன்னை பற்றிய பேச்சு வந்தாலே இது போலவே மெளனமாக புன்னகை சிந்தி அமைதி காத்து விடுவாள்.
தன் தோழிகள் சொல்வது போல் செங்கமலமும் “உன் பேருக்கு ஏத்தப்பல தான் நீயும் இருக்க கண்ணு.” என்று சொன்னவர்.
பின் அந்த கூட்டை பார்த்து “ அது பேரு தூக்கணாங்கூடுடா.” என்று சொன்னதும்.
‘ஓ...”என்ற மஞ்சுளாவின் குரலில் அதை பற்றி தெரிந்துக் கொள்ள ஆர்வம் மிகுந்து இருப்பதை பார்த்த செங்கமலம் தூக்கணாங்கூடு பற்றி தனக்கு தெரிந்ததை சொல்ல ஆராம்பித்தார்.
“நீ என்னவோ எல்லோ கலருன்னு சொன்னியே பாப்பா. அந்த குருவி பேரே தூக்கணா குருவி தான். இந்த கூடு அது தன் ஜோடிக்கு கட்டுறது.” இது வரை அந்த கூடு பற்றி தெரிந்துக் கொள்ள ஆர்வத்தில் கேட்டுக் கொண்டு இருந்த மஞ்சுளா செங்கமலத்தின் இந்த பேச்சில் பதினெழுவயதில் இருக்கும் மொட்டு மெல்ல வெக்கத்தின் சாயல் பூச.
“என்னது தன் ஜோடிக்கா….” சந்தேகமும், ஆர்வமும், கலந்து கேட்க.
“அய்யே நீ நம்பலையா கண்ணு ….? நா ஏ பொய் சொல்ல போரேன் இது தன் ஜோடிக்கு தான் கட்டுது. இது கட்டி முடிச்சதும் களிமண்ண அந்த கூட்டுல கொண்டாந்து வெச்சி அதுல இந்த மின் மினி பூச்சி எடுத்துட்டு வந்து ஒட்ட வைக்கும்.” என்று செங்கமலம் சொன்னதும்.
“ஏன்…..?” செங்கமலம் அந்த கூண்டை பற்றி சொல்ல சொல்ல அதை தெரிந்துக் கொள்வதில் மஞ்சுளாவுக்கு இன்னும் ஆர்வம் மிகுந்து கேள்வி கேட்க.
“ அதுவா கண்ணு நமக்கு கரண்டு இருக்கு. சுச்சி தட்டுனா லைட்டு எரியுது. அதுக்கு மின் மினி பூச்சு தான் லைட்டு.” என்று சொன்னவளின் பேச்சை அதிசயத்து கேட்க.
“இதுக்கே இப்படி அதிசயத்துக்குனா எப்படி….? அழகா கட்டின தன் கூட்டை தன் இணைய கூட்டி வந்து காட்டுமா.அதுக்கு எதுனா பிடிக்கலேன்னா இந்த கூழாங் கல்லு எல்லாம் எடுத்துட்டு வந்து வெச்சி அழகு படுத்தி தன் இணைக்கு பிடிச்சா மாதிரி செஞ்சுடுமா…..” அந்த இளம் மனதில் தான் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் பசும்மறுத்தாணி போல் பதிந்து போனதை அறியாது செங்கமலம் பேசி முடிக்க.
அப்போது அந்த விடுதியின் காப்பாளர் சாய் தேவியின் குரல் ……
“செங்கமலம் செங்கமலம்.” என்று ஓங்கி ஒலிக்க.
அப்போது தான் எதற்க்கு அங்கு வந்தோம் என்பதே நியாபகம் வந்தவளாய் தன் தலையை தட்டிக் கொண்டு… “நான் பாரேன் வந்த செய்திய சொல்லாம ஏதேதோ பேசிட்டு இருக்க. இன்னும் கொஞ்ச நேரத்துல உன்ன கூப்பிட ஆளு வராங்கலாம் உன் பொட்டில எல்லாம் எடுத்து வைக்க அந்த அழகு சுந்தரி சொல்லி அனுப்புச்சி.’ செங்கமலம் சாய் தேவிக்கு வைத்த செல்ல பெயர் தான் அழகு சுந்தரி.
மஞ்சுவுக்கோ செங்கமலம் பேசிய செல்ல அழைப்பு எல்லாம் காதில் விழாது உன்னை அழைக்க ஆளு வர்றாங்க என்ற பேச்சிலேயே நிலைக்க.
‘என்னையா அழைக்க வர்றதா சொன்னாங்க.’ என்று மஞ்சுளா சந்தேகத்துடன் கேட்க.
‘ என்னம்மா பரிட்ச்சை முடிஞ்சா எல்லோரும் வீட்டுக்கு போறது தானே...இதுல என்ன உனக்கு சந்தேகம்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய இந்த
"தூக்காணாங்கூடு"-ங்கிற
அழகான, அருமையான
புதிய, லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
விஜி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top