Thiruselvam-Part-2

Advertisement

srihari

Member
2
குருவே சரணம்

முதல்வர் கேள்வி கேட்டவுடன், செல்வத்திற்க்கு வந்தனாவின் நினைவு வந்தது.
அவனது கிராமத்தில் பள்ளிக்கு நேர்காணலுக்கு செல்லும் பொழுது, அவன் அருகில், ஒரு பெண் உட்கார்ந்து கொண்டு தனது சக ஆசிரியையிடம், அவள் அந்த பள்ளி முதல்வரின் வேலைகளை விமர்சனம் செய்ததால், தான் எடுக்கும் கணக்கு ஆசிரியை இடத்தில், ஆசிரியரையோ, ஆசிரியையோ அந்த முதல்வர் நிரப்ப போகிரார் என்பதை கூறி புலம்பிகொண்டு இருந்தாள். அந்த பெண்ணின் அழகில் திக்குமுக்காடிய செல்வம், அந்த பெண் உரையாடியதை கேட்டு, கணக்கு ஆசிரியர் பணிக்கு வந்த செல்வம், தனது முடிவை மாற்றி, வேதியியல் ஆசிரியர் பணியில் சேர்ந்தான். அந்த அழகான நங்கையின் பெயர் வந்தனா என்று அறிந்தான்

“செல்வம், செல்வம்...."

செல்வம் நினைவு திரும்பியது.

"ம்ம்ம் … ஓகே அப்புறம் உங்க சேலரி Rs. 800/-”

முதல்வர் போன் எடுத்து –“உடனே கேபினுக்கு வா ”

"கருப்பு" முதல்வர் கேபினுக்குள் வந்தான். “இவர் புதுசா ஜோய்ண்ட் ஆகி இருக்கிறார் , இவரை ஸ்டாப் ரூமுக்கு கூட்டிகிட்டு போ , அப்படியே இவருக்கு வீடு ஏற்பாடு செஞ்சு குடுத்திறு , இவர் ஊருக்கு புதுசு ”. பிறகு செல்வத்தை நோக்கி “ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் , ரெண்டு மாசத்துக்கு நீங்க வொகேஷனல் டீச்சரா தான் இருப்பீங்க , அப்புறம் எந்த கிளாஸ் எல்லாம் முடிவு பண்ணிக்கலாம் ”
கருப்பு தன்னை செல்வத்திடம் அறிமுகம் செய்து கொண்டான் , “நான் இந்த ஸ்கூலில் பியூன் என்றும் , நான் தான் எல்லா ஆசிரியருக்கும் அ முதல் ஃ வரை எல்லா வெளி வேலை செய்து கொடுப்பதாக கூறினான் , எவ்வளவு ரூபாய்க்கு வீடு பார்க்கணும் என்ற விவரமும் கேட்டுக்கொண்டான் . ஸ்டாப் ரூமை காண்பித்து விட்டு ஈபி ஆபீஸ் சென்றான் .
உணவு வேலை வந்தது , எல்லா ஆசிரியரும் அறையில் கூடினர் . ஒருவரை ஒருவர் அறிமுக படுத்தி கொண்டனர் , இதற்க்கு இடையில் கருப்பு ஈபி ஆஃபீசில் இருந்து வந்தான் , அவன் வரும் வழியிலேயே , அவனுக்கு தெரிந்த நண்பர்கள் மூலமும் , புரோக்கர் மூலமாகவும் பேசிய விவரத்தை செல்வத்திடம் கூறினான் . இரண்டு நாளில் தாம்பரத்தில் வீடு கிடைத்துவிடும் என்று கூறினான் , அவனுக்கு வேறு வழி இல்லை , அவனுடைய சம்பளத்தில் அங்கே தான் வீடு கிடைக்கும் , ஒரு மணி நேரம் பஸ்சில் பயணம் செய்ய வேண்டும்
அடுத்த நாள் நல்ல நாள் என்பதால் , அன்றே வீடு குடி புகுந்துவிட்டான் . கையில் இருந்த ரூபாய் அட்வான்ஸ் மட்டும் புரோக்கர் கமிஷன் கொடுப்பதற்கே சரியாக இருந்தது . செல்வம், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கையில் இருந்த சில்லறையை பார்த்து கொண்டு, ஒரு ஓரமாக உட்கார்ந்தான் , அவன் கண் முன்னே ஒரு கை தெரிந்தது , அந்த கை நிறைய தங்க நகைகள் இருந்தது , அது திருமணத்திற்காக அவள் தந்தை போட்ட நகைகள் ஆகும் , மலர்விழி அவனை நோக்கி ”என் அப்பா சொத்து எல்லாம் போனதுக்கு அப்புறம், கஷ்டம்ன்னு வரும் போதேல்லாம் இதை வெச்சு தான் சமாளிப்பாரு , அப்புறம் மீட்டு எடுத்திருவாரு ”. அவன் அந்த நகையை வாங்குவதற்கு முதலில் தயங்கினான் , மலர்விழி அவன் கையை பிடித்து அவனிடம் நகையை கொடுத்தாள் , அவன் சிறு புன்முறுவலுடன் அவள் சொன்னபடியே நகையை வெச்சு ரூபாய் வாங்க சென்றான் . செல்வம் வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வரும் வரையில் எந்த ஒரு சந்தோஷத்திற்க்கும் இடம் கொடுக்க கூடாது என நினைத்த்தான், அதை எப்படி மல்ர்விழியிடம் வெளிபடுத்துவது என திணறினான். அவளும் குறிப்பறிந்து கேட்டதில்லை.
ரெண்டு மாதங்கள் ஓடின , முதல்வர் செல்வத்தை அழைத்து “அவனுக்கான டைம் டேபிள் , வகுப்பு புத்தகம் மற்றும் ஒரு லெட்டர் கிடைத்தது , அதில் , செல்வம் கணக்கு ஆசிரியராக 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை எடுக்க வேண்டும் என்று இருந்தது . காலங்கள் உருண்டோடின , ஸ்கூலில் கணக்கு என்றால் வீட்டில் , தான் சிறு வயதில் படித்த ஹிந்தி ட்யூஷனும் நடத்தினான் . வருவாய் பெருகியது . அடகு வைத்த நகையை மீட்டு எடுத்தான் , முதல் முறையாய் அவனுள் வாழ்க்கை மேல் ஒரு தன்நம்பிக்கை உருவானது ,
ஏறக்குறைய ஒரு வருட காலம் ஆனது , செல்வம் பாதி சென்னைவாசியாகவே மாறி இருந்தான். சீட்டு கட்டி மனைவிக்கு ஒரு டைலரிங் மெஷின் வாங்கி போட்டான். மலர்விழியும் அருகில் இருந்த மற்ற பெண்களோடு பழக்கம் செய்து கொண்டு படிக்காவிட்டாலும் கொஞ்சம் சாமர்த்யசாலியாக மாறி இருந்தாள் . அன்று இரவு, இருவரும் தங்களை மெய்மறந்தனர், ஒன்றாய் இனைந்தனர்.
மலர்விழி நிறை மாத கர்ப்பினி ஆனாள். தள்ளாடி தள்ளாடி வீட்டில் வேலை செய்து கொண்டு இருந்தாள் , செல்வம் பார்த்து விட்டால் அவ்வளவுதான் , மற்ற எல்லா வேலைகளையும் அப்படியே நிருத்திவிட்டு , அவளை அப்படியே தூக்கி ஊஞ்சலில் உட்கார வைப்பான் , அவள் விழி முழுவதும் நீரினால் நிறைந்துவிடும் , நடந்த சம்பவங்களும் நிகழ்வதும் மாறி மாறி நினைவு வரும்.
வகுப்பு அறையில் மாணவர்களுடன் கணக்கு நுணுக்கங்களை வைத்து க்விஸ் நடத்தி கொண்டு இருந்தான் . அன்றைய தினம் செகிரேட்டரி லீவு என்பதால் , ஆபீஸ் ரூமில் ரொம்ப நேரமாக டெலிபோன் மணி ஒலித்து கொண்டு இருந்தது . பொறுமை இழந்த கருப்பு அதை எடுத்து பேசினான் , அது செல்வத்திற்காக வந்த போன் , செல்வத்திற்கு ஒன்றும் புரியவில்லை . யார் கூப்பிடுவது என்று தெரியாமல் போன் எடுத்து காதில் வைத்தான் , அந்த கால் “ஹாஸ்ப்பிட்டலில்” இருந்து வந்தது ....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top