Thevai oru thalaippu

Advertisement

S

semao

Guest
கவிமழையாம் இங்கே

கவிகளுக்கோர் போட்டியாம்

ஏட்டிக்கு போட்டியாய்

என்னுளே வந்த ஆர்வம்

என்னையும் எழுத தூண்ட

என்ன எழுதவென என்

எண்ணத்தில் வரவில்லை

ஏதும் தோணவில்லை



ஏதேனும் தலைப்பு கேட்டு

என்னவரை நாடி சென்றேன்

எழுதுவது தமிழில் என்றால்

எழுதுவதும் தமிழையே

எடுத்திடலாம் என்றவரை முதலில்

எழுதுகிறேன் பிழையின்றி தமிழை

நான் எழுத வேறு சொல்லென்றேன்



அம்மா என அருமை மகள் அழைத்து

அடுத்து ஒரு தலைப்பு எதற்கு

அழகு மகள் என்னை பற்றி

அருமை கவிதை தாராய் கவியே எனக் கூற

அடடா பிள்ளாய் அன்றுனக்கு தந்ததுவே

பேசும் தெய்வம் என உன்னையே

எழுதினேனே

நான் எழுத வேறு சொல்லென்றேன்



பிள்ளை என் குரல் கேட்டு

பெற்றவளோ தந்திட்டாள்

பெற்ற சுமை நீ அறிவாய்

கற்ற மொழியில் அதை

கவியாய் புனைவாய்

என்று அன்னை கூறிவிட

அன்னையர் தினம் அன்று

அன்னையே உன்னை பிரிந்த கதை

பாசக் கதை எழுதிவிட்டேன் கவியிலே

நான் எழுத வேறு சொல்லென்றேன்



தலைப்புக்கா பஞ்சமிங்கே

அருகினிலே அண்ணன் இருக்கையிலே என்றாரே

அருவியாய் தலைப்பு தருவாரோ என எண்ண

அருவியே தலைப்பு என சொல்ல

அட அண்ணா அருவியில்

குளிக்கையில் இக்காலம்

குளிருமே அதை சொல்லி

நான் எழுத வேறு சொல்லென்றேன்



உடன் பிறந்த அண்ணன் உண்டெனக்கு

உடன் பிறப்பென அக்கா இல்லை

அதை தீர்க்க உடன்பிறவா அக்காவாய்

இணையத்தில் வந்தவளோ

இணையத்தை தலைப்பாக்க

இதைத்தானே கதையின் கருத்து

சொல்கையில் எழுதி விட்டேன்

நான் எழுத வேறு சொல்லென்றேன்



உயிர்த்தோழி உண்டெனக்கு

தொல்லை கொடுத்தேனே

தலைப்புதனை தான் கேட்டு

தோழியோ கொடுத்தாளே

பசும்தோல் போர்த்திய புலிகளின்

பாலின வெறிகளை பற்றியே பகிர்ந்திடுவாயென

அதை தானே கொடுத்தேனே அந்த

நிஷாகந்தி கதைப்புத்தகத்தின் முடிவினிலே

நான் எழுத வேறு சொல்லென்றேன்



தப்பித்து விட்டனரே அனைவரும்

படிக்கும் நண்பர் நீங்களாகினும்

பங்கேற்க ஒரு தலைப்பை

பகிருங்கள் என்னிடம்

பாங்காய் அதையேற்று

பக்குவமாய் எழுதிடுவேன்

பங்கேற்று களித்திடுவேன்

படித்து விட்டு செல்லாதீர்

தலைப்பொன்றை சொல்வீரோ

தேவை ஒரு தலைப்பிங்கே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top