Thendral Vandhu Ennai Thodum-2

Advertisement

Kalpasubramanya

Writers Team
Tamil Novel Writer
நான் மறுபடியும் எழுத ஊக்கமளித்த வாசகர்களுக்கு என் நன்றி.



'என்ன நடக்குது இங்க?இது யாரு அக்கா கழுத்துல தாலி கட்டினது?நரேன் அத்தான் எங்க? அவரோட தானே அக்கா கல்யாணம் பண்ணியிருக்கனும்?!அத்தானுக்கு என்ன ஆயிடுச்சு?'என ஓராயிரம் கேள்விகள் நிவியின் தலையை குடைந்தன. ஆனால் அவள் கேள்விகளுக்கு பதில் சொல்வார் தான் யாரும் அங்கே இல்லை.

அதிர்ச்சியில் சுயநிலை மறந்து நின்றிருந்த நிவி சிறிது நேரத்தில் தெளிந்து பார்த்த போது சடங்குகள் முடிந்து மணமக்கள் மட்டுமல்லாது மற்றவரும் சாப்பிட சென்றிருந்தனர்.யாரிடமாவது கேட்டு இந்த குழப்பத்தை சரி செய்ய நினைத்த நிவிக்கு யாருடனும் பேச முடியவில்லை.எல்லோரும் பரபரப்பாக அவரவர் வேலையில் ஆழ்ந்திருந்தனர்.

கடைசியில் ரூமில் ஏதோ எடுக்க வந்த சகுந்தலா அவளிடம் வசமாக சிக்கிக் கொண்டார்.நிவியின் கோப பார்வையைப் பார்த்த போதே மகளிடம் சரியாக மாட்டிக் கொண்டோம் எனப் புரிந்துக் கொண்டார் அவர்.

"அம்மா! இதெல்லாம் என்ன? நரேன் அத்தான் எங்க?மாப்பிள்ளைய ஏன் சேன்ச் பண்ணீங்க?"

அதற்கு எதுவும் சொல்லாமல் மவுனம் காத்தார் அவர்.

"அம்மா!ப்ளீஸ் சொல்லுங்க...அக்கா கல்யாணம் நரேன் அத்தானோட ஏன் நடக்கல?"

"அத நான் சொல்றேன்"என்ற குரலில் திரும்பிப் பார்த்தாள் நிவி...ஆம் அங்கே நின்றிருந்தது சுஜிதா தான்.முதலில் ரூமின் வாயிலை சாத்தி தாழ்ப் போட்டவள் தங்கையின் அருகில் வந்து நின்றாள்.

"அக்கா! இதெல்லாம் என்ன?நீ நரேன் அத்தான ஏன் கல்யாணம் பண்ணிக்கல?"

"நிவி முதல்ல ஒண்ண நல்லா புரிஞ்சுக்கோ நரேன் உன் அத்தான் கிடையாது...மனோஜ் தான் உன் அத்தான்... அப்புறம் நரேன் ஏன் கல்யாணம் பண்ணிக்கலேன்னா அவர் எனக்கு சரியான ஜோடி கிடையாதுன்னு எனக்கு புரிஞ்சிடுச்சு... எனக்கும் அவருக்கும் எந்த விதத்திலும் மேச் ஆகாது... வாழ்க்கையைப் பத்தி என்னோட வ்யூஸ் வேற...அவரோடது வேற.... வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியமானது பணம்ன்னு நா சொன்னா...இல்ல உறவு நட்பு இதுதான் பெரிசுன்னு சொல்றாரு....பிரமோஷனோட அமெரிக்கா போறதுக்கு அவருக்கு எவ்வளவு பெரிய சான்ஸ் கிடைச்சது தெரியுமா?அத அம்மா ஆட்டுக்குட்டி பிரண்ட்ஸுன்னு சொல்லிட்டு வேண்டாம்டார்.....இப்படி தன்னோட ஃப்யூசரோட அவரு விரும்பின என் ஃப்யூசரையும் நாசம் பண்ண பாத்தார்....சொல்லி சொல்லி பாத்தேன்...கேக்கல....இது சரி வராது பிரிஞ்சிடலாம்ன்னு நானே சொல்லிட்டேன்... அப்பத்தான் ப்ரோக்கர் மனோஜ் அலையன்ஸ்யோட வந்தாரு...லண்டன்ல கம்பெனி ஹெட்டா லட்சக்கணக்கான வருமானம் சொந்த வீடு கார் எல்லாம் இருக்கு அவருக்கு...படிப்பு வேலை சொத்துன்னு அவர் தான் எனக்கு கரெட்டான மேட்ச்....ஸோ இனிமே நரேனுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...இது தான் கடைசி... இனிமே அவரைப் பத்தி யாரும் பேச கூடா...
அவள் வாக்கியத்தை முடிக்கும் முன்னே 'பளார்ர்ர்......'என அவளின் கன்னத்தை பதம் பார்த்திருந்தாள் அவளின் தங்கை.

"சீ... நீயெல்லாம் ஒரு பொண்ணா?பணத்தை விட உறவு நட்புகள பெரிசா நெனைக்குற அந்த உயர்ந்த மனசு இருக்கிறவர விட்டு பணத்துக்கும் பகட்டுக்கும் ஆசைப்பட்டு அவரை கைவிட்ட நீ பெண் இனத்துக்கே களங்கம்....உன்னை என் அக்கான்னு சொல்கிறதுகே எனக்கு கேவலமா இருக்கு..."

தன்னை விட சிறிய தங்கை தன்னை அடித்ததும் வாய்க்கு வந்தபடி பேசியதிலும் கோபம் அடைந்த சுஜிதா வேகமாக அந்த இடத்தை விட்டு சென்று விட்டாள்.அவள் சென்ற பின் தன் தாயின் புறம் திரும்பிய நிவேதிதா,

"அம்மா நீங்க கூடவா இந்த அந்நியாயத்தை ஆதரிச்சீங்க?!"

கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்ட அவர்,

"நிவி உங்கப்பா எப்படி பணம் அந்தஸ்துக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பாரோ சுஜியையும் அப்படியே வளர்த்துவிட்டார்...நா எத்தனை எடுத்து சொல்லியும் அவ கேக்கவேயில்லை.அந்த புள்ள எவ்வளவு நல்லவன்....அவ மனசு நொந்தா அந்த பாவம் நம்மள சும்மா விடாது.."

"இல்ல...அக்கா பண்ண இந்த பாவத்துக்கு நா பிராயச்சித்தம் பண்ணுவேன்.... நரேன் அத்தான் வாழ்க்கை நல்லா ஆகற வரைக்கும் நா விட மாட்டேன்"

என்றவள் அந்த அறையில் இருந்த தன் சூட்கேஸை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டாள்.

"நிவி!நிவி!என்னடா எங்க கிளம்பிட்டே?"

"சாரிம்மா நா இனிமே அந்த வீட்டுல இருக்க முடியாது....நா எங்கயாவது போயி இருந்துக்கறேன்... வரேன்"என்றவள் அவர் எவ்வளவு தடுத்தும் கேளாமல் டாக்ஸி ஒன்றை அழைத்து அங்கிருந்து சென்றே விட்டாள்.

அவள் சென்ற இடம் நரேந்திரனால் அதரவளிக்கப்பட்ட லலிதா அக்கா.அவர் கணவர் ஒரு விபத்தில் இறந்த பின் காதல் திருமணம் செய்திருந்த அவருக்கு உதவ யாருமில்லாமல் நிராதரவாக இருந்தார்.

அவர் கணவர் விபத்தில் மாட்டியிருந்த போது நரேந்திரன் தான் அவரை பக்கத்தில் இருந்த ஆஸ்பத்திரியில் சேர்த்தான்.ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்த பிறகு தன் பத்து வயது மகளோடு அனாதையாக நின்ற அவரை அழைத்து வந்து அவரின் திறமையான சமையலை அறிந்துக் கொண்டு சிறு அளவில் கேன்டீன் ஒன்றை அவருக்கு செய்து கொடுத்தான்.அந்த கேண்டீனால் தான் அவரும் அவர் மகளும் கவலையின்றி வாழ முடிந்தது.மகளையும் அருகில் இருக்கும் நல்ல பள்ளியில் சேர்த்திருந்தான்.

அந்த ஞாலத்தின் மாணப் பெரிதான உதவியால் லலிதாக்கா நரேந்திரன் என்றால் உயிரையும் விடுவார்.

நிவேதிதா இப்போது அங்கேதான் சென்றுக் கொண்டிருந்தாள்.வாகன நெரிசலை தாண்டி டாக்ஸி அரைமணி நேரத்தில் அவரின் வீட்டோடு சேர்ந்த கேண்டீனை சேர்ந்தடைந்தது.

அன்று ஞாயிற்றுக்கிழமை ஆதலால் கேண்டீனிற்கு விடுமுறை.ஆதலால் மகளோடு டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றை பார்த்துக் கொண்டிருந்த லலிதா காலிங் பெல் சத்தம் கேட்டதும் வந்து கதவைத் திறந்தவர் அந்த நேரத்தில் கையில் பெட்டியோடு நிவேதிதாவை எதிர்ப்பார்க்காதலால் திகைத்து நின்று விட்டார்.

"அக்கா நா கொஞ்ச நாளைக்கு இங்க தங்கிக்கலாமா?"என்று அவள் கேட்டதும் தன்னிலை மீண்ட அவர்,

"நிவிம்மா!எப்படா வந்தே...முதல்ல வா உள்ளே...நீ எத்தன நாள் வேண்ணாலும் இங்கேயே இருக்கலாம் என்று இரு கைநீட்டி அவளை வரவேற்றார்.

முகம் கழுவி உடை மாற்றிக் கொண்டு வந்த மேல் சுடாக உணவைப் பரிமாறினார் லலிதா.ஆனால் மனதை அழுத்திய பாரத்தால் தட்டை அளித்தாள் நிவி.அதைக் கண்ட அவர் வற்புறுத்தி பூராவையும் அவளை தின்ன வைத்தார்.

பின் இருவரும் மாடியிலிருந்த பால்கனிக்கு சென்று அமர்ந்தனர்.அங்கே வான்வெளியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் நிவி.

"நிவி! இப்ப சொல்லு அக்கா கல்யாணத்தை விட்டுட்டு ஏன் வந்திட்டே?"

அவர் கேட்டது தான் தாமதம் ஓடி வந்து அவரை இறுக கட்டிக் கொண்டு அழுது தீர்த்துவிட்டாள்.அடைத்துக் கொண்டிருப்பது வெளியே வந்தால் தான் சரியாகும் என்று தோளை தடவியபடி அழவிட்டார் அவர்.சிறிது அழுகை நின்ற மேல் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.

அவள் சிறிது சாமாதனம் அடைந்த பின்,

"அக்கா என்ன நடந்தது விவரமா சொல்லுங்க"என அவரை கேட்டாள்.

"நிவிம்மா நீ அமெரிக்கா போன பின்னால கொஞ்ச நாளைக்கு எல்லாம் நல்லாத்தான் நடந்துக்கிட்டு இருந்தது... ரெண்டு பேரும் சந்தோஷமா தான் சினிமா பீச் பார்க்குன்னு சுத்திக்கிட்டு இருந்தாங்க... இரண்டு மூணு வாட்டி அவங்க தம்பி பைக்குல போறத பாத்தேன்...சிவா தினேஷ் புஷ்பா எல்லாத்தோடையும் அது என்ன...ஆ.... ஏற்காடு அங்கே போயிட்டு வந்தாங்களாம்...அதுக்கு அப்புறம் ஏதோ வேலைல பிரமோஷன் குடுத்து அமெரிக்கா போக சொன்னாங்களாம்...தம்பி ஒரு நிமிஷம் கூட யோசிக்காமயே என் அம்மா பிரண்ட்ஸ் இந்தியா இத எதையும் விட்டு எங்கேயும் போக மாட்டேன்னு சொல்லிடுச்சாம்...சிவா தம்பி தான் சொல்லிச்சு.... அதுக்கு அப்புறம் தான் சுஜி பொண்ணு தம்பிக்கிட்ட வித்தியாசமா நடந்துக்க ஆரம்பிச்சது.போன் பண்ணா எடுக்கறது இல்ல...அப்படியே பேசினாலும் வேலையிருக்குன்னு வச்சிடுமாம்..மீறி ஒரு நேரேயே போயி தம்பி கேட்டா... எனக்கு நிறைய சம்பாதிச்சு பெரிய லெவல்ல இருக்குற புருஷன் தான் வேணும்..வந்த வளமான வாழ்க்கையை வேண்டாம்னு சொன்ன முமுட்டாளோடு வாழ முடியாதுன்னு மூஞ்சில அடிச்சா போல சொல்லிடுச்சாம்....இல்ல வேண்டாம்ன்னு சொன்ன புள்ளய தொரத்தி தொரத்தி லவ் பண்ணி வைச்சிட்டு இப்ப பணம் தான் பெரிசுன்னு சொன்னா... எத்தனையோ கனவு கண்ட தம்பி மனசு அத எப்படி தாங்கும்?!கலகலப்பா சந்தோஷமா எப்படி இருந்த புள்ள...இப்ப பேச்சில்ல சிரிப்பில்ல...எதுலையும் பிடிப்பில்லாம சுத்திக்கிட்டு இருக்கு"என்றார் வருத்தமான குரலில்.

"அக்கா! அத்தான் இப்ப எங்க இருக்காரு?"

"கல்யாண சமையத்துல இங்க இருக்க பிடிக்காம பத்து நாளைக்கு வேலை விஷயமா டெல்லி போயிருக்கு... இன்னும் நால் நாள்ல வந்திடுமாம்"

"அக்கா எனக்கு அத்தையை பாக்கனும்... நீங்களும் என்னோட வரீங்களா?"

"அதுகென்னடா சாய்ங்காலமா போலாம்"

"அப்பிடியே சிவா தினேஷ் புஷ்பா எல்லாத்தையும் அதே நேரத்துக்கு அங்கே வர சொல்லிடுங்க"

"அவங்கள்லாம் எதுக்கு?"

"எல்லாரும் அங்கே வந்தப்புறம் சொல்றேன்"

அவள் குரலில் இருந்த அழுத்தத்தை கண்டு அவள் ஏதோ பெரிய வேலையை செய்யப் போகிறாள் என்று உணர்ந்தார் லலிதா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top