Thangammai - Precap 11

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
“அதெல்லாம் எனக்குத் தெரியாது...” என்று அவள் முகம் தூக்க, ‘இதற்குமேல் முடியாதடா சாமி..’ என்று தீனா வெளியே வந்து அங்கிருந்த ஒரு சோபாவில் அமர்ந்துகொண்டான்.

தீனா வெளியே அமரும் சத்தம் கேட்டு, தங்கம்மை வந்து எட்டிப் பார்த்துவிட்டு போனாள் தான். ஆனால் ஒருவார்த்தை என்னவென்றோ இல்லை உள்ளே வா என்றோ சொல்லவில்லை.

அவனும் ‘போ டி..’ என்று சொல்லிக்கொள்ள,

சிறிது நேரத்தில் ரோஜா வெளியே வந்தவள் அவன் அங்கிருப்பதை பார்த்து “இங்க என்ன பண்ற??!!” என்றாள் குழப்பமாய்..

“ம்ம் வேண்டுதல்..” என்று தீனா சொல்ல,

“ம்ம்ச் என்னடா??!!” என,

“உன்னை சாப்பிட வைக்காம நான் உள்ள வரக்கூடாதுன்னு என் பொண்டாட்டி சொல்லிட்டா...” என்று தீனா சொல்லவும்,

‘என்னது??!!!’ என்று பார்த்தா ரோஜாவிற்கு சட்டென்று சிரிப்பு வந்துவிட்டது.

-----------------------------------

“ஆமா முதல்ல அதுக்கு ஒரு வழி செய்யணும்.. தீனா மெலிஞ்சது போல இருக்கான்.. நீ போனாதான் சரியாவான்..” என்றவருக்கு இப்போது மகனின் வாழ்வை எண்ணி பெரும் நிம்மதி..

தங்கம்மைக்கு அது தான் தோன்றியது. தீனாவின் மெலிவு..

நிறைய மனதில் போட்டு உருட்டுகிரானோ என்று தோன்ற, அன்றைய இரவில் பேசும்போது கேட்டாள்

“மனசுல எதுவும் போட்டு குழப்பிக்கிறீங்களா ??!!” என்று.

ஆனால் தீனாவிற்கு அவள் எதைக் கேட்கிறாள் என்று விளங்காது “நான் என்ன குழப்பிக்கிறேன்..??” என்று கேட்க,

“அதான்.. அது.. வந்து..” என்று இழுத்தவள் “இல்லை பழசை தான் இன்னும் ஏதாவது போட்டு..” என்று சொல்லும்போதே,

“போதும் தங்கம்மை..” என்று சத்தம் போட்டுவிட்டான் தீனா..

-----------------------------------

இரு வீட்டினரும் எல்லாருமே இருக்க, வீடும் நல்ல விஸ்தாரமாய் இருக்க, அனைவர்க்கும் தங்கம்மை தான் பார்த்து பார்த்து எல்லாம் செய்து கொண்டு இருந்தாள்.

நல்ல நேர்ம் பார்த்து பால்காய்ச்சி, விளக்கேற்றி சாமி கும்பிட, தீனாவோ இன்னமும் கோபம் குறையாமல் தான் இருந்தான்..

இத்தனை பேர் இருக்கையில் அவனிடம் நின்று பேசவும் முடியாது. சண்டையோ சமாதானமோ எல்லாமே தனியேதான் என்று எண்ணிய தங்கம்மையும் அமைதியாகவே இருக்க,

ஆண்கள் அனைவரும் ஹாலில் படுத்துக்கொள்ள, ரோஜா பிள்ளையோடும் செவ்வந்தியோடும் ஒரு அறையிலும், தங்கம்மை சுப்ரஜா பாரிஜாதம் மூவரும் ஒரு அறையில் இருந்துகொள்ள, தீனாவிற்கும் சரி தங்கம்மைக்கும் சரி உறக்கம் என்பதே இல்லை..

‘நானும் தான் கொஞ்சம் பொறுமையா பேசியிருக்கனும்..’ என்று தங்கம்மை நினைக்காத நேரமில்லை..

தீனாவோ ‘என்னை பார்த்து இப்படி கேட்டுட்டா..’ என்று வருந்தாத நொடிகள் இல்லை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top