Suthanthiram : Sooriyan than manjal porvaiyai neekkatha neram, kadal pola virinthu kidantha antha

Advertisement

sivasuganesh

New Member
சுதந்திரம் -2

விஷாலின் அம்மா ப்ரியா பார்த்து பார்த்து விம்மி வெடித்தாள் .பாரிஸ் குண்டு வெடிப்பில் நீங்க இறந்துடதாகவும் உடல் கிடைக்கலனும் எம்பஸிஸில இருந்து மெசேஜ் வந்தது .அதான் நீங்க போய்ட்டிங்கனு என்று மீண்டும் அழத்துடங்கினாள்.
விஷால் அம்மாவை அடக்கினான் . இது பொது இடம் வாங்க நம்ம ரூமுக்கு போகலாம். அங்க போய் எல்லாம் பேசிக்கலாம். ரமடா பிளாசாவில் ரூம் எடுத்திருந்தா ன் விஷால் .
சுந்தரம் பிரியா கல்யாணத்திற்கு பிறகு ஆஸ்திரேலியா குடிபெயர்ந்து அங்கேய் பிறந்து
, படித்து வளர்ந்தவன் விஷால். ஆண்டு விடுமுறைக்கு அப்பா அம்மாவோடு இந்தியா வருவான், குலதெய்வம் கோயில் ஊட்டி சிம்லா,என்று சுற்றிட்டு போய்விடுவான் . இந்தியா அவ்வளவு பழக்கம் இல்லை அவனுக்கு . இங்க வந்து ஒரு 5 ஸ்டார் ஹோட்டல் புக் பண்ணி இந்த காசியில் கங்கைக்கரையில் திதி செய்யும் அளவுக்கு இந்திய கலாச்சாரத்தில் நமபிக்கை வைத்திருந்தான் .அவன் மனைவியும் அந்த கலாச்சாரத்தை பின்பற்றுகிறாள் என்று பார்க்க மனதில் நிறைவு கொண்டார். இவர்கள் ப்ரியாவை நன்றாக தான் நடத்துகிறார்கள் . ஹ்ம்ம்ம் அவளுக்கென்ன அவள் எப்போதும் ராணிதான் என்று மனதுக்குள் நினைத்து கொன்டே சென்றார் .
நினைவுகள் பல வருடங்கள் பின் நோக்கி சென்றது
 

sivasuganesh

New Member
சுதந்திரம் :
சூரியன் தன மஞ்சள் போர்வையை நீக்காத நேரம்
,கடல் போல் விரிந்து கிடந்த அந்த கங்கை கரையின் அழகை ,சிலு சிலு என்ற காற்று வருட ரசித்து பார்த்துக்கொண்டிருந்தார் சுந்தரம்.கங்கையின் ஒவ்வொரு ghaatilum மக்கள் அவர்கள் சம்பிரதாய முறையில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதிலும் , துறவியர்களும் வைதீகர்களும் தங்கள் ஆசார பூஜைகளை செய்வதிலும் மிக பரபரப்புடன் இருந்தனர். இவர்களையும் அந்த கங்கையையும் ரசித்த படி வேடிக்கை பார்த்துக்கொண்டு சென்றார் சுந்தரம். இவர்களை போல சம்பிரதாய சடங்குக்கோ அல்லது புண்ணியம் தேடவோ அவர் அங்கு வரவில்லையே .ஒரு யாத்ரீகனாய் தான் அங்கு வந்தார்.அதனால் எந்த ஒரு நிருபந்தம் இல்லாமல் தன்னிச்சையாக நிதானமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு நடந்தார் .
சூரிய வெளிச்சம் ஏற ஏற பாவத்தை கழுவும் கங்கையின் பாவப்பட்ட நிலைமை பளிச்சிட்டது .
மனதில் எந்த சலனமும் . கவலையும் இல்லாமல் நடந்துகொண்டிருந்த சுந்தரத்தின் நடையில் திடீரென்று ஒரு தளர்வு
, அங்கே இருப்பதா வேண்டாமா என்ற குழப்பம் ,போய் விடலாமா என்று மனது நினைக்கும் போது ,பிடித்து நிறுத்தியது உள் மனது .

அந்த இரண்டு வயது சிறுவனின் குறும்பு பார்வையும் துறு துறுப்பும்.மழலை மொழியும் கால்களை கட்டி போட்டது. அவன் பெற்றோர்கள் திதி கொடுத்துவிட்டு பாட்டியோடு கரையேறி இவர் இருக்கும் திசையில் பயணித்தனர். அவர்களை பார்த்தவுடன் ஒரு கணம் நெஞ்சே வெடித்து விடும் போல இருந்தது . சுதாரித்து கொண்டார்.அவர்கள் அனைவரும் அருகில் வர, விஷால் இது உன் பையன்னா என்று வாய் அவரை மீறி வார்த்தைகளை விட்டது.
அப்பா என்று அலறினான் விஷால் .நெஞ்சம் வெடிக்க குமுறினாள் விஷாலின் அம்மா பிரியா . ஐயோ உயிரோட இருக்குற உங்களுக்கு திதி கொடுத்துவிட்டு வரோம். என்ன கொடுமை இது என்று அரற்றினாள்.
சுந்தரம் அந்த இரண்டு வயது வாண்டைஇழுத்து அணைத்து உச்சி முகர்ந்து ஒரு இச்ச்சு வைத்தார். தன கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை எடுத்து அவன் கழுத்தில் போட்டார்
.

விஷாலின் அம்மா ப்ரியா பார்த்து பார்த்து விம்மி வெடித்தாள் .பாரிஸ் குண்டு வெடிப்பில் நீங்க இறந்துடதாகவும் உடல் கிடைக்கலனும் எம்பஸிஸில இருந்து மெசேஜ் வந்தது .அதான் நீங்க போய்ட்டிங்கனு என்று மீண்டும் அழத்துடங்கினாள்.
விஷால் அம்மாவை அடக்கினான் . இது பொது இடம் வாங்க நம்ம ரூமுக்கு போகலாம். அங்க போய் எல்லாம் பேசிக்கலாம். ரமடா பிளாசாவில் ரூம் எடுத்திருந்தா ன் விஷால் .
சுந்தரம் பிரியா கல்யாணத்திற்கு பிறகு ஆஸ்திரேலியா குடிபெயர்ந்து அங்கேய் பிறந்து
, படித்து வளர்ந்தவன் விஷால். ஆண்டு விடுமுறைக்கு அப்பா அம்மாவோடு இந்தியா வருவான், குலதெய்வம் கோயில் ஊட்டி சிம்லா,என்று சுற்றிட்டு போய்விடுவான் . இந்தியா அவ்வளவு பழக்கம் இல்லை அவனுக்கு . இங்க வந்து ஒரு 5 ஸ்டார் ஹோட்டல் புக் பண்ணி இந்த காசியில் கங்கைக்கரையில் திதி செய்யும் அளவுக்கு இந்திய கலாச்சாரத்தில் நமபிக்கை வைத்திருந்தான் .அவன் மனைவியும் அந்த கலாச்சாரத்தை பின்பற்றுகிறாள் என்று பார்க்க மனதில் நிறைவு கொண்டார். இவர்கள் ப்ரியாவை நன்றாக தான் நடத்துகிறார்கள் . ஹ்ம்ம்ம் அவளுக்கென்ன அவள் எப்போதும் ராணிதான் என்று மனதுக்குள் நினைத்து கொன்டே சென்றார் .
நினைவுகள் பல வருடங்கள் பின் நோக்கி சென்றது
சுந்தரம் ஒரே மகனானதால் மிக செல்லமாக வளர்க்கபட்டார் . சிறு வயதிலேயே தந்தை மறைந்ததனால் தாயால் மிக அன்பாக வளர்க்கப்பட்டு தாய்க்கு அடங்கிய பிள்ளையாக வளர்ந்தார் . திருமண வயது கடக்கும் முன்னே நல்ல இடமாக அமைய பிரியா சுந்தரம் திருமணம் இனிதே நடந்தது. பிரியா வை பற்றி சொல்லனும்னா புதுப்புது அர்த்தங்கள் கீதாவில் 25%
, முதல்மரியாதை வடிவுக்கரசியில் 25%,மெட்டி ஒலி காயத்ரியின் 50% சேர்ந்து செய்த கலவை .தன்னுடைய கணவன் தனக்கு தான் என்ற எண்ணம் மேல் தூக்கி நின்றதால் சுந்தரத்தின் அம்மா தனித்து விடப்பட்டார். கோபம் வந்தால் வாயில் என்ன வார்த்தை வரும் என்று தெரியாது. கோபமும் எப்போ எதுக்கு வரும்னு தெரியாது. மற்றபடி வீட்டுக்கு அடங்கி மதிச்சு வாழற பெண்ணாகத்தான் பிரியா இருந்தாள் . அவள் கோபமும் கடும் வார்த்தைகளும் எப்போவும் சுந்தரத்தின் மேல் தான் தவிர வேறு யாரிடமும் கோபத்தை காண்பிக்கமாட்டாள்.
நாட்கள் இப்படி ஓட சுந்தரமும் ப்ரியாவும் ஆஸ்திரேலியாவுக்கு குடி பெயர்ந்தார்கள்


சுந்தரத்தின் வாழ்க்கை அங்கு இயந்திரமயமானது . அந்த எந்திர கதிக்கு நடுவே விஷால் பிறந்தான்.விஷாலை ஸ்கூல்ல விடுவது எல்லா கிளாசுக்கு அனுப்புவதும் கொண்டுவருவதுமாய் காலம் ஓடியது. தன் சக்திக்கு மீறி சம்பாத்தித்து இன்னும் ரெண்டு தலைமுறை உக்காந்து சாப்பிடும் அளவுக்கு சம்பாத்தித்தார் சுந்தரம்.
விஷாலும் வளர்ந்து தன சொந்த காலில் நிற்கும் அளவுக்கு சுந்தரம்.
எல்லாம் செய்தாலும் அவருக்கு அடி மனதில் தான் அடுத்தவர்களுக்கு என்று வாழவதில் ஒரு பங்கு தனக்கென வாழ தவறிவிட்டோமோ என்ற எண்ணம் அரித்துகொண்டே இருந்தது.


பிசினெஸ் விஷயமாக அடிக்கடி பல ஊர்கள் போகவேண்டி இருப்பதை சொல்லி பல நாடுகளுக்கு சுற்றுலா செல்ல தொடங்கினார் சுந்தரம். ஆரமபத்தில் ப்ரியாவும் கூட வந்தாலும் பின்னர் தன்னால் ஊர் சுற்ற முடியாது என்று வீட்டிலேயே தங்கிவிட்டாள் .
இப்படி சில வருடங்கள் ஓட ஒரு நாள் சுந்தரம் தன மனதில்
IRUNTHATHAI போட்டு உடைத்தார்.

இங்க பார் விஷால் நீ சொந்தமாக நிற்க தொடங்கியாச்சு . இனிமே என் நிழல்ல நீ இருக்குறது நல்லதில்லை.நீ விரும்புற அந்த ஆஸ்திரேலியா பொன்ண யே கட்டிக்கோ . உன் வாழ் க்கைய நீ அமைச்ச்சுக்கோ. உன்னால் முடியுமானா உங்க அம்மாவை பாத்துக்கோ. இல்லையுன நா அவளுக்கு ஏதாவது வழி பண்றேன். நான் இத்தனை வ்ருஷம் உழைச்சு களைச்சு போய்ட்டேன், ஒரு நாள் கூட நான் எனக்குன்னு வாழல . அதுனால மீதம் இருக்குற காலத்த நான் எனக்குன்னு வாழப்போறேன்.எனக்கு சுதந்திரம் வேணும்.
எப்போ உங்கள பாக்கணும்னு தோணுதோ அப்ப நானே வருவேன்.
நான் எங்க போனாலும் அங்க இருந்து போன் பண்ணி பேசுறேன்.
இப்போ என்னை போகவிடுங்கள் என்று ப்ரியாவிடமும் ஆணித்தரமாய் சொல்லி சஞ்சாரத்தை தொடங்கினார்.
இப்படி யே பாரிஸ் போன போது ஒரு குண்டு வெடிப்பில் இருந்தது தப்பிக்கும் போது
passport and போனை தவறவிட்டார் . இந்த பாழப்போன ஸ்மார்ட் போன் வந்தது முதல் எல்லார் நம்பரும் அதில் ஸ்டோர் செய்து சிறியின் உதவியுடன் பேசி வந்ததால் யார் நும்பெறும் நினைவிலும் இல்லை. எப்படியோ நினைவில் வைத்திருந்த விஷாலின் மெயில் ஐ டிக்கு மெயில் அனுப்பினார். அனால் அவன் அந்த மெயில் ஐ டிய மா த்திய விஷயம் தெரியாம போச்சு. பிரியா விஷால் உடன் ஆன தொடர்பும் இல்லாமல் ஆயிற்று.எப்படியாவது பாஸ்போர்ட் கிடைத்தால் ஆஸ்திரேலிய சென்று அவர்களை பாக்கலாம் என்றால் பாஸ்போர்ட் வரவும் தாமதமானது .

. அந்த ஹோட்டல் அறைக்கு போன பின் தீர்க்கமாக பேசினார் சுந்தரம்
இங்க பாரு விஷால் நான் எனக்கு விவரம் தெரிஞ்ச நாள் முதல் என் அப்பா அம்மாவுக்குகாக உழைத்தேன்
, அவர்கள் சொல்லும் வேலை செய்வதிலும், அவர்கள் சொன்னபடி படிக்கவும், நடக்கவும் வாழவும் செய்தேன்,பின்னர் கல்யாணத்திற்கு அப்புறம் உங்க அம்மா வுக்காக உழைத்தேன், அவள் ஆசா பாசங்களுக்கு ஏற்றவாறு வாழ்க்கையை வாழ்ந்தேன், நீ பிறந்த அப்புறம் உனக்காக , உன் எதிர்காலம் சிறக்க வழி செய்ய என்று வாழ்ந்தேன் .

இந்த 60 வருடங்களில் நான் எனக்காக என்று ஒரு நாளும் வாழவில்லை. இப்போ நான் என் கடமைகளை முடித்து விட்டேன். என் தாய் தந்தையரை கரை ஏற்றி விட்டேன் . உங்க அம்மாவுக்கும் உனக்கும் பல நூற்றாண்டுகள் சுகமாய் வாழ வழி செய்து விட்டேன் . இப்போது தான் நான் எனக்கு என்று என்ற வாழ்க்கையை வாழ துவங்கியுள்ளேன் . இந்த சுதந்திரம் எனக்கான சுதந்திரம். என் தனி மனித சுதந்திரம்.. இதை நான் விட்டு கொடுக்க விரும்பவில்லை .
தயவுசெய்த்து என்னை இந்த வாழ்க்கையை வாழ விடுங்கள். நான் என்று தளர்ந்து போகிறேனோ அன்று திரும்பி வருவேன் .
பேசி முடித்துவிட்டு பதிலுக்கு எதிர்பார்த்திராமல் நடந்து சென்றார். அவர் செல்வதை கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தனர் அனைவரையும் . அவர் ஒரு சிறு புள்ளியாய் மறையும் வரை..

தனி மனித சுதந்திரம் குடும்ப வாழிவினும் மேலானது..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top