sithara vaiththa sempaavaiyaal - 06

Advertisement

shamla

Writers Team
Tamil Novel Writer
06

ஆறு வருடங்கள் கடந்த நிலையில்...

நள்ளிரவு நேரம்... வானை பிளந்துகொண்டு பேய் மழை கொட்டிக் கொண்டிருக்க அதற்கு இணையாய் இடியோசையும் மின்னலொளியும் காதை கிழித்துக்கொண்டு கொண்டும் இருள் போர்வையை விலக்கி கண்களை தாக்கிக் கொண்டும் சென்றது.

இருள் போர்வையில் மின்விளக்கின் ஒளியில் அந்த இடம் பரபரப்பாய் காணப்பட்டது.

“ஹா... ஹல்... ஹலோ போலீஸ் ஸ்டேஷன்...” பதற்றத்துடன் அலைப்பேசியில் அழைப்பு போய் கொண்டிருந்தது.

அடுத்த சில நிமிடங்களில் கடமையே கண்ணியமாய் சைரன் ஒலியுடன் அந்த இடத்தை சூழ்ந்து கொண்டது போலீஸ் ஜீப்கள். அதனுடன் அவசரமாய் வரவழைக்கப்பட்ட ஆம்புலன்ஸ்.

ஜீப்பில் இருந்து இறங்கி கொட்டும் மழையில் குடையின் கீழ் நின்று கொண்டிருந்த மேலதிகாரியின் அருகில் பதட்டத்துடன் சென்றான் காளிதாஸ்.

“ரொம்ப கொடூரமா கொன்னிருக்கான் சார்... பத்து நிமிசத்துக்கு முன்னாடி தான் கொன்னுட்டு வெளிய போயிருக்காங்க...”

“கேஷவ் பத்தி தகவல் கிடைச்சதா?... CM ஓட பிரெண்டு... CM லைன்ல வந்திட்டு இருக்காரு... மேலிடத்தில இருந்து ப்ரெஷர் வந்துக்கிட்டே இருக்கு....”

“இல்ல சார் காம்பவுண்ட் முழுக்க தேடிப்பார்த்திட்டோம்... டியூட்டி ஸ்டாப்ஸ்கிட்டயும் விசாரிசிட்டோம்... எந்த தகவலும் கிடைக்கல... எல்லாரையும் ஹால்ல உக்காரவச்சிருக்கேன்... கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சிடலாம் சார்...”

“சார்....” மழை நீரில் சறுக்கிக்கொண்டு சென்ற கால்களை தரையில் ஊன்றி கதறிக் கொண்டு ஓடி வந்தான் அவன்.

“சார்... கொன்னுட்டாங்க சார்... நல்ல.... நல்லவன்... நல்லவன் சார்... கொன்னுட்டாங்க... நல்லவனை... கொன்னுட்டாங்க...” ACP ரத்னவேலின் அருகில் சென்று ஒப்பாரி வைத்தான் அவன்.

அதற்குள் இரண்டு ஆண் செவிலியர்கள் ஸ்ட்ரச்சரில் இறந்தவனின் உடலை தள்ளிக்கொண்டு வந்தனர்.

சோவென பெய்ந்து கொண்டிருந்த மழையில் மூடியிருந்த வெள்ளை துணியின் மேலாய் ரத்தம் வடிந்து வெள்ளை நிற துணி சிகப்பாய் மாறிக் கொண்டிருந்தது.

துணியை அகற்றி அந்த உடலை பார்த்த ரத்னவேலின் கண்கள் ஒரு கணம் மூடித்திறந்தது. கொடூரமான மரணம். வெறி கிளம்பியது அவனுள். போலீஸ் வர்க்கத்திற்கே உரிய மூர்க்கத்தனமான வெறி.

அதற்கு மேல் உடலை வைத்திருக்காமல் ஆம்புலன்ஸில் ஏற்றி ஜிஹெச்சிற்கு கொண்டு செல்லப்பட்டது. அதை பார்த்திருந்த ரத்னவேலின் கண்கள் இதற்கு காரணமானார்களை கண்டுபிடிக்க வேண்டும் எனும் அதீத வெறியுடன் மின்னியது...


******


சில்லென்ற குளிர் உடலை ஊடுருவிச் செல்ல வழமைக்கு மாறான குளிர் உடலை துளைத்து நடுங்க செய்த போதிலும் ஈரப்பசையுடன் கூடிய அந்த இயற்கை காற்று உள்ளத்தினுள் புது வர்ணஜாலத்தை நிகழ்த்த அணிந்திருந்த சுடிதாரின் துப்பட்டாவை இன்னும் இறுக்கமாய் தன் உடலோடு பிணைத்துக்கொண்டு சூடு பறக்க தேய்த்த கைகளை மார்புக்கு குறுக்காய் கட்டிக் கொண்டு ஜன்னல் கம்பியில் தலை சாய்த்திருந்தாள் மதுபாலா.

இருபத்து நான்கு வயது இளம்பாவை. ஒய்லியான உடல்வாகு. முன்பைவிட அழகாய் மின்னிய செந்நிறத்து மேனி. படிப்பு கொடுத்த களை. முன்னை காட்டிலும் நேர் கொண்ட பார்வையும் தலைநிமிர்ந்த நடையும் அவள் அழகுக்கு மிகையாய் அழகு சேர்த்தது...

அதற்குள் பஸ் நின்றிருக்க தன் பையுடன் கீழிறங்கியவள் ஊட்டியின் குளுமையை ஆழ்ந்து அனுபவித்தாள். இத்தனை நாட்களாய் வேலை வேலையென ஓடிக் கொண்டிருந்தவளுக்கு இப்போது கிடைத்த ஓய்வு சற்று ஆறுதல் அளிப்பது போல் தான் தோன்றியது.

லோ காலேஜில் அவளுடன் ஒன்றாய் படித்த தோழி ஒருத்தியின் திருமணம். வருந்தி அழைத்திருந்தாள். மறுக்க முடியவில்லை. தந்தையிடம் ஒருவழியாய் சம்மதம் வாங்கியவளுக்கு தாயிடம் சம்மதம் வாங்குவது தான் பெரும்பாடாய் இருந்தது.

வக்கீல் தொழில்.. அவளுக்கு ஜூனியராய் ஐவர் அவளுடன் இருக்கின்றனர். குறுகிய காலத்திலே பெயர் சொல்லும்படியாக உயர்ந்திருந்தாள். அவள் பேச்சு அதில் இருக்கும் கடினம் நேர்ப்பார்வை என பாரதி கண்ட புதுமை பெண்ணாய் இருப்பவளை பார்த்தாலே அனைவருக்கும் சற்று நடுக்கம் தான்.

முன்பிருந்த கலகலப்பு சற்று குறைந்திருந்தது. பேச்சும் கூட. தேவைக்கேற்ப மட்டுமே இப்போதெல்லாம் பேசப் பழகி இருந்தாள். ஒருவனை தவிர.

அவள் அண்ணன் மகன் ஹர்ஷித். ஹர்ஷு கண்ணா... செல்லக்குட்டி.. பட்டுக்குட்டி... ஹரி... வித விதமாய் அவனை அழைத்து கொண்டாடுவாள். அவள் உலகமே அவன் தான். அவனை பார்த்தாலே தன்னை மறந்து விடுவாள். அத்தனை பாசம் அவன் மீது. அவனின் மழலை மொழியில் தன் ஜீவனையே இழந்து விடுவாள்.

பிறந்த அன்று அவனை கைகளில் தூக்கிய போது அவள் மனப்பாரம் அத்தனையும் கரைந்து போவது போல் தான் இருந்தது. அவன் சிரிப்பில் அவள் தூக்கம் தூரம் போய்விடுவது போலவே இருந்தது. அவன் ஒவ்வொரு செய்கையிலும் பெண்ணவள் புதிதாய் பிறந்தாள்.

இப்போது அவனுக்கு ஐந்து வயது. அனைவரையும் சமாதானப்படுதியவளால் அவனை தான் சமாதானப்படுத்த முடியவில்லை. அழுது கரைந்து விட்டான். அவனை பிரிந்து அவளால் எப்படி இருக்க முடியாதோ அது போல் தான் அவனும். ஒருநிமிடம் கூட அவளை பிரிந்து இருக்கவே மாட்டான். அவன் அழுத அழுகையில் மனம் கரைய தன் பயணத்தை நிறுத்த முயன்ற பாலாவை மீரா தான் வற்புறுத்தி அனுப்பிவிட்டிருந்தாள்.

அதை நினைத்து பார்த்தவள் தோழியின் வீட்டிற்கு போய் முதல் வேலையாய் ஹர்ஷுவிற்கு அழைத்து பேச வேண்டும் என எண்ணிக் கொண்டாள். இப்போதும் அழைக்கலாம் தான்... இரவு முழுவதும் போனை நொண்டிக் கொண்டே வந்ததில் அதன் பேட்டரி காலியாகி செயலிழந்திருந்தது.

“பாலா” சந்தோச மிகுதியில் தோழியை பார்த்து உற்சாக கூவலிட்ட படி ஓடிவந்து கட்டிக் கொண்டாள் ஆர்த்தி.

நினைவு வலை அறுபட “ஆரு” பதிலுக்கு தானும் அவளை கட்டிக் கொண்ட பாலா “கல்யாண வேலை எப்பிடி போகுது... அம்மா அப்பால்லாம் எப்பிடி இருக்காங்க...” பொதுவாய் விசாரிக்க, அதற்கு விடைகூறி சிரித்தவள் தோழியை காரில் ஏற்றிக்கொண்டு சலசலத்தபடி வர புன்சிரிப்புடன் காரில் சாய்ந்து அமர்ந்து அவள் பேசுவதை கேட்டுக் கொண்டாள் பாலா.

ஊட்டியின் கொண்டையூசி வளைவுகளில் லாவகமாய் சென்ற காரினுள் அமர்ந்தபடி வேடிக்கை பார்த்த பாலாவிற்கு இது புது அனுபவமாகவே தோன்றியது. இடைப்பட்ட இத்தனை வருடங்களில் படிப்பு வேலை என அதன் பின்னே ஓடிக் கொண்டிருந்ததில் வெளியில் செல்லவோ ஊர் சுற்றவோ நேரமில்லாது போய்விட்டது.

அவள் எடுக்கும் கேஸின் பின்னால் ஓடவே அவளுக்கு நேரம் பத்தாது இதில் எங்கே அவள் ஊர் சுற்றப்போவது.

ஆர்த்தியின் வீட்டின் முன் வண்டி நிற்க அதிலிருந்து இறங்கியவள் மகளின் வரவிற்காய் பதட்டத்துடன் வாயிலில் காத்திருந்த ஆர்த்தியின் அன்னையை ஓடிச்சென்று கட்டிக் கொண்டாள்.

ஆர்த்தி சென்னையில் கல்லூரியில் சேர்ந்த போது அடிக்கடி மகளை பார்க்க அங்கு வரும் பஞ்சவர்ணமும் மாணிக்கமும் அவளுக்கு இன்னொரு அம்மா அப்பா தான் என்பதால் அவர்களுடன் இலகுவாய் ஒட்டிக் கொள்வாள்.

“பஞ்சு என்ன இப்பிடி இளைச்சு போய்ட்ட... வேளாவேளைக்கு சாப்பிட மாட்டியா... பாரு இடுப்பு சதை கூட அரைக்கிலோ கொறஞ்சு போய்டிச்சு... இந்த ஆரு என்ன பண்றா உன்னை கவனிக்கிறத விட்டிட்டு” அவரை வம்பிழுத்த படி தன் லக்கேஜை வெளியில் எடுத்துக் கொண்டிருந்த தோழியின் அருகில் சென்று அதை தான் இறக்கி வைத்தவள் அவளின் காதை பிடித்து திருகியபடி அவளை தள்ளிக்கொண்டு வந்தாள்.

“கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணு வெள்ளையும் சொள்ளையுமா இருந்தா மட்டும் போதாது ஒல்லியாவும் இருக்கணும்... நீ தின்னு தின்னு மாமூடை இப்பிடி உடம்ப வளர்த்து வச்சிருக்க... உன்னை கவனிக்க வேண்டியதால பஞ்சு எப்பிடி இளைச்சு போய்ட்டா... உன்னை பெத்த அம்மாவை இப்படித்தான் கொடுமை பண்ணுவியா... உன்னை பெத்தத தவிர அவங்க வேற என்ன பாவம் பண்ணாங்க...” வேலைப்பளு குறைந்ததில் இலகுவான மனதுடன் அவர்கள் இருவரையும் சீண்டி சிரிக்க வைத்தவள் தனக்காக ஒதுக்கப்பட்ட அறையினுள் நுழைந்து கொண்டாள்.
 

shamla

Writers Team
Tamil Novel Writer
பாலாவின் கலகலப்பான பேச்சில் மகளின் திருமண வேளையில் பதட்டமாய் இருந்த பஞ்சவர்ணம் வாய்விட்டு சிரிக்க பாலாவின் பேச்சினை கேட்டுக் கொண்டு உள்ளே நுழைந்த மாணிக்கத்தின் முகத்திலும் சிரிப்பின் சாயல். காலங்கள் மாறினாலும் ஆளின் இயல்பான குணம் அவளுள் தான் ஒளிந்திருந்தது. வெளியுலகில் தன்னை கம்பீரமாய் காட்டிக் கொண்டவள் மனதளவில் இப்போதும் பதின் வயது குழந்தை தான்.

அறைக்குள் நுழைந்து முதல் வேலையாய் மொபைலை சார்ஜ் ஏற்றியவள் அண்ணிக்கு அழைத்தாள்.

அழைப்பை ஏற்ற மீரா அவள் குசலம் விசாரிக்க அவளோ “ஸ்டாப் ஸ்டாப்... அண்ணி முதல்ல ஹர்ஷுகிட்ட கொடுங்க...” என்க,

அதை கேட்டு சிரித்தபடி மகனிடம் செல்போனை கொடுத்த மீரா வெளியில் இருந்து கணவன் அழைக்கும் சத்தத்தில் வெளியேறி விட்டாள்.

“ஹர்ஷு கண்ணா எப்பிடி இருக்கீங்க.... காலைல என்ன சாப்டீங்க... மம்மி புவ்வா கொடுத்தாங்களா... எங்க பேபி சமத்தா சாப்பிட்டீங்களா...” கேள்விக்கணைகளை தொடுத்துக் கொண்டு செல்ல மறுமுனையில் இருந்து அவளின் கேள்வி ஒன்றிற்கும் பதில் வரவில்லை.

“என் செல்லக்குட்டிக்கு என்மேல கோபமா... அப்போ நான் போனை வைக்கட்டுமா...” அழுவது போல் அழுகுரலில் கேட்க, அதற்கு மேல் அவளிடம் பேசாமல் இருக்கமுடியவில்லை அந்த சின்ன சிட்டுக்கு..

“அழாத ஹெனி... நான் பேசுதேன்...” இன்னமும் மழலை மாறாத குரலில் கூறிச்சிரிக்க, அதை கேட்டு அலைபேசியின் வழியாலே தன் பாசமான முத்தத்தை அனுப்பி வைத்தாள்.

“உன் ஹெனி முத்தா கொடுத்தால்ல அப்போ நீங்களும் முத்தா கொடுக்கணும்ல... எங்க முத்தா கொடுங்க பார்க்கலாம்...” என சிறு குழந்தையாய் மாறி கெஞ்ச,

அதை கேட்டு தன் குட்டி இதழ்களை செல்போனில் ஒற்றி எடுத்த “உம்மா...” கொடுத்தான் ஹர்ஷு.

அந்த ஈரமுத்தத்தை தன் கன்னத்திலே உணர்ந்தது போல் தாய்மை பெருக்குடன் மகிழ்ந்து போனாள் அவள்.

“சரி.. பேபி மோர்னிங் என்ன சாப்டீங்க...”

“நான் நெதைய ஷாக்கி சாப்ட்டேன் ஹெனி...” குலுக்கிச் சிரித்தது அந்த குட்டி வாண்டு.

அதை கேட்டு தானும் சிரித்தவள் “நிறைய ஷாக்கி சாப்பிட கூடாது கண்ணா... இனிமே கொஞ்சம் தான் சாப்டனும்... என்ன ஓகேவா... ஷாக்கி கொடுத்த அம்மாக்கு ரெண்டு பஞ்ச் கொடுங்க.. போங்க....” என விரட்ட,

“அத்தோ ஹெனி... மம்மி ஷாக்கி தரல்ல... மாமு தான் மம்மி தெதியாம ஷாக்கி கொடுத்தா...” ரகசியம் போல் யாருக்கும் கேட்கா வண்ணம் மெல்லிய குரலில் கூற,

அதை கேட்டு முதலில் புரியாது விழித்தவள் பின்பு புரிந்ததற்கு அடையாளமாய் அவள் இதழ்கள் சன்ன புன்னகை சிந்தியது.

“அப்போ மாமுக்கு ரெண்டு பஞ்ச் கொடுங்க...” குறும்புக் குரலில் கூற, அதை கேட்டு “ம்ம்...” தலையாட்டிய வாண்டு தன் அருகில் செல்போனை ஸ்பீக்கர் மோடில் போட்டு ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த ஆர்யனின் மார்பில் இரண்டு குத்து குத்தி குலுங்கி சிரித்தான்.

அத்தனை நேரம் மௌனமாய் அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தவன் அக்காள் மகன் மார்பில் குத்தியதும் “பேபி... மாமு இனிமே ஷாக்கி வர தரமாட்டேன்...” என சிறுகுழந்தை போல் முறுக்கிக் கொள்ள,

அதில் எங்கே மாமன் ஷாக்கி வாங்கி தராமல் இருந்துவிடுவானோ என பயந்து சட்டென அவன் மடியில் ஏறிக் கொண்டவன் அவன் முகத்தில் தன் அச்சாரத்தை பதித்தான். ஈர இதழ்கள் முகத்தில் பட அதில் அருவருப்படையாமல் அதை பொக்கிஷமாய் சேமித்துக் கொண்டவன் சின்னவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்..

அதற்குள் ஆதி மகனை அழைக்க வர தந்தையை கண்டதும் உற்சாகம் கரைபுரண்டு ஓட தந்தையின் தோளில் ஒய்யாரமாய் சாய்ந்து கொண்ட ஹார்ஷித் அத்தையை மறந்தவனாய் தந்தையுடன் கீழிறங்கி சென்று விட்டான்.

ஹர்ஷித் சென்றதும் ஒரு நொடி தயங்கிய ஆர்யன் செல்போனை காதில் வைத்துக் கொண்டான்.

“எப்பிடி இருக்க ஹனி...” பல நாட்களின் பின்னான உரையாடல். ஒருவித தயக்கத்துடன் கேட்டான்.

அதில் மறுபக்கம் அமைதி காத்தது. இருந்தும் சுதாகரித்துக் கொண்டு “நான் நல்லா இருக்கேன் நீங்க...” என்றாள் சம்பிரதாயமாய்.

“ம்... ஐயம் குட்... அங்க ரொம்ப கூல் கிளைமேட்னு கேள்விப்பட்டேன் ஒன்னும் ப்ரோப்லேம் இல்லையே...” கேட்கலாமா வேண்டாமா என பல முறை யோசித்திருப்பான் போலும் என அவன் தயக்கத்துடனான கேள்வியிலே அதை புரிந்து கொண்டாள் பாலா.

“இல்ல.. நத்திங் டு வொர்ரி...” என்றவள் “உங்க பிசினஸ் எப்பிடி போகுது... எல்லாம் ஓகேவா...” அவளுக்குமே அடுத்த என்ன பேசுவது என்று புரியாததால் மனதில் தோன்றியதை கேட்டு விட்டாள்.

“யா... கொயிங் வெல்... அட்வகேட் மதுபாலா எடுத்து நடத்தின எந்த கேஸ் தோத்து போயிருக்கு...” சாதாரணமாய் உரைத்தாலும் அதில் பெருமையே நிரம்பி வழிந்தது.

அதை கேட்டு சங்கட புன்னகை பூத்தவள் “அப்பிடியெல்லாம் இல்ல... உங்க பக்கம் சாட்சி எல்லாம் பக்காவா இருந்தது சோ தீர்ப்பு உங்களுக்கு சாதகமா வந்திச்சு அவ்ளோ தான்... இதில நான் பண்ணது உங்களுக்கு சார்பா வாதடினது மட்டும் தான்..” தன்னடக்கத்துட கூறினாள்.

ஆர்யன் புதிதாக ஆரம்பித்த வியாபாரத்தில் சில குடைஞ்சல்காரர்கள் சிக்கல் வர அது கோர்ட் வரைக்கும் இழுத்தடித்துக் கொண்டு போகவே அவள் தான் அதற்கு சார்பாய் வாதாடி அதை மீட்டுக்கொடுத்தாள்.

அதை நினைவில் வைத்து தான் அவன் அப்படி கூறியது. அதற்கு மேல் என்ன பேசுவது என தெரியாததால் முதலில் சிறிது தயங்கியவள் “உங்க காதலி என்ன பண்றாங்க....” என்று கேட்டே விட்டாள்.

சில நாட்களாக மனதினை அரித்துக் கொண்டிருந்த கேள்வி. கேட்டதும் தான் ஓரளவுக்கு ஆறுதலாய் இருப்பது போல் இருந்தது.

அதை கேட்டு அதிர்ந்தவனுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. அப்படி ஒருத்தி இருந்தாலாவது சொல்லிவிடலாம். அவனுக்குத்தான் அப்படி ஒருத்தியே இல்லையே. அவனின் உண்மையான முதல் காதல் அவள் தானே. இப்போது அப்படியொரு காதலி... என எண்ணும் சடுதியில் தோன்றி மறைந்தது அவள் முகம்.

ஆறு வருடங்களுக்கு முன் கண்ணீர் கரையுடன் தன் முகம் பார்த்தவளின் முகம் தான் மின்னி மறைந்தது. அதில் திடுக்கிட்டு போனவனுக்கு தன் மனதின் எண்ணத்தினை புரிந்து கொள்ளமுடியவில்லை.

ஆனால் அவன் இதழ்களோ அந்த வார்த்தையை உச்சரித்தது அவனையும் அறியாது...

“எனக்காக காத்திட்டு இருப்பா...”


*****


ரீலியன்ஸ் மல்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிடல்.. புகழ்பெற்ற மருத்துவமனை.. நம்பிக்கை என்ற வார்த்தைக்கு பெயர் பெற்ற மருத்துவமனை.

அந்த மருத்துவமனையின் ஐசியூயினுள் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்தாள் ஒரு இளம் வயது பெண். அவளால் அந்த வலியினை தாங்கிக்கொள்ள முடியவில்லை. திருமணமாகி இரண்டு வருடங்களின் பின் உண்டான கரு. அதனால் பல்லைகடித்து வலியை பொறுத்துக்கொண்டாள்.

மருத்துவர்கள் சிறிது பதட்டத்துடனே இருந்தனர். அப்போது அந்த அறைக்குள் நுழைந்தாள் அவள். அவளை பார்த்ததும் தான் அவர்களுக்கு போன உயிர் வந்தது போல இருந்தது. அந்த பெண்ணின் அருகில் சென்று அவளை பரிசோதித்தவள் குழந்தை சில நொடிகளில் வெளிவந்துவிடும் எனும் நிலையில் அவளின் கைகளை ஆறுதலாய் பற்றிக் கொண்டாள்.

வேலைக்கு சேர்ந்த இந்த ஒன்றரை வருடங்களில் பல கேஸ்களை பார்த்திருந்த அனுபவம் அவளை பெரிதும் மெருகேற்றி இருந்தது.

“பயப்படாதீங்க... காம்... மூச்சை இழுத்து விடுங்க... புஷ் பண்ணுங்க... அப்பிடித்தான்... பயப்படாதீங்க....” வலியில் துடித்தவளை ஆறுதல்படுத்தி குழந்தையை வெளியில் எடுத்து விட்டாள்.

குழந்தை வெளியில் வந்ததும் வலி பொறுத்துக் கொண்டவளின் கண்கள் அதற்கு மேல் திராணியின்றி மெதுவாய் மூடிக் கொள்ள மயக்கத்திற்கு சென்றுவிட்டாள்.
 

shamla

Writers Team
Tamil Novel Writer
அந்த பெண்ணை பரிசோதித்து பார்த்து “நார்மல் வார்டுக்கு மாத்திடுங்க...” என்றுரைத்தப்டி ஐசியூயினுள் இருந்து வெளியேறினாள் ஷிகாயா.

தோழிகளால் செல்லமாய் ஷிக்கு.. ஷிகா என அழைக்கப்படும் ஷிகாயா இப்போது பேர்பெற்ற மகப்பேறு மருத்துவர்.

இவள் வருகைக்காக வராண்டாவில் காத்திருந்த அந்த பெண்ணின் கணவனை பார்த்தவள் அவன் முகத்தில் இருந்த தவிப்பையும் துடிப்பையும் பார்த்து அவனருகில் சென்றாள்.

“மிஸ்டர் ஹாரிஸ்... உங்க ரெண்டு குழந்தைங்களும் சேப்... பட் கொஞ்ச நாளைக்கு கவனமா பார்த்துக்கோங்க....” என்க,

“டாக்டர் ரெண்டா,...” அவன் இழுக்க,

“உங்க மனைவியையும் சேர்த்து சொன்னேன்....”

“ஓஹ்...” நிம்மதி பெருமூச்சுடன் “தேங்க்ஸ் டாக்டர்...” நட்புடன் கூறியவன் “பார்க்கலாமா..” தயக்கத்துடன் இழுக்க,

“நார்மல் வார்டுக்கு ஷிப்ட் பண்ணிடுவாங்க அப்போ போய் பாருங்க... நர்ஸ் குழந்தையை கொண்டு வருவாங்க....” என்றபடி கம்பீர நடையுடன் தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

தன் இருக்கையில் வந்து அமர்ந்தவள் அதில் கண்மூடி சாய்ந்து கொண்டாள். அந்த பெண்ணின் கதறலும் அவள் கணவனின் தவிப்பையும் பார்த்தவளுக்கு மனதினுள் ஏக்கமாய் இருந்தது.

தனக்காக அவனும் இப்படி துடிப்பானா என அலைபாய்ந்த மனதை கட்டும்படுத்தும் வழி தெரியாது எதற்கோ பயந்து இன்னும் இறுக்கமாய் கண்களை மூடிக் கொண்டவளின் விழியோரத்தில் இருந்து ஒற்றை துளியாய் கண்ணீர் சிதறியது.

கிட்டத்தட்ட ஏழு வருடக்காதல். நிறைவேறுமா என்று கூட தெரியாமல் மனதினுள் பொத்தி வைத்த காதல். இதோ இந்த நொடி கூட அவன் தன்னை தேடி வரமாட்டானா என ஏங்கிக் கொண்டு தான் இருக்கின்றாள். வருவானா அந்த நம்பிக்கை தான் நாளுக்குநாள் குறைந்து கொண்டே செல்கின்றது.

அறைக்கதவு தட்டப்படும் ஓசையில் நாசுக்காய் கண்களை துடைத்துக் கொண்டவள் “எஸ் கம் இன்” குரல் கொடுக்க அவள் அறையினுள் நுழைந்தாள் பவி. அவளின் தோழி. குழந்தைநல மருத்துவர். இதே மருத்துவமனையில் தான் அவளும் பணிபுரிகின்றாள்.

“ஷிகா... கான்டீன் போலாமா...” என்றபடி அங்கிருந்த இருக்கையில் அமர,

“அதுக்குள்ள பேஷண்ட்ஸ் பார்த்திட்டியா பவி...” சந்தேகமாய் தோழியை பார்த்து கேள்வியெழுப்பினாள்.

“ரஞ்சித் பார்த்திட்டு இருக்கார்... நான் சீக்கிரம் போகனும் இப்போ நீ வரபோரீயா இல்லையா...” படபடப்பாய் பொரிய, அவள் பேச்சு அவளின் பள்ளிக்காலத்தை நினைவு படுத்தியது. அதுவும் அவளின் உயிர்த்தோழிகள் பாலா.. ஷாஷி அவர்களை நினைத்ததும் அவளையும் அறியாமல் இதழ்களில் புன்னகை ஒட்டிக் கொண்டது.

“எதுக்குடி இப்போ தனியா சிரிக்கிற... எதுவும் பிரச்சினை இல்லையே...”

“இப்போ எதுக்கு ஓவர் சீன் க்ரியேட் பண்ற என்ன சொல்லணுமோ நேரடியா சொல்லு...” அவளின் அழுகுணி ஆட்டத்தை கண்டுபிடித்தவளாய் ஷிகா கடுப்புடன் கூற,

அதில் அசடு வழிந்தவள் “எப்பிடி டி கண்டுபிடிச்ச...” சோகமாய் கேட்டு வைத்தாள்.

“அதான் உன் மூஞ்சியிலே எழுதி ஒட்டியிருக்கே சொல்லு...”

“இல்லடி...”

“ஒன்னுயில்லையா அப்போ போ..”

“ப்ளீஸ்டி சொல்றத முழுசா கேட்டுத்தொலை... அதுக்கப்றம் நீ எவ்ளோ கடுப்படிச்சாலும் நான் கேட்டு தொலைக்கிறேன்...”

“ம்ம்” அவள் சொல்வதை கேட்கும் விதமாய் அவள் முகத்தை உற்று நோக்கினாள். அதில் அவளை முறைத்து வைத்த பவி ‘இவளை’ பல்லை கடித்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.

“விக்கிக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்காம்... அவன் பேரண்டஸோட உன் வீட்டுக்கு வர தயாரா இருக்கான்... நல்லா படிச்சிருக்கான்... உன்னை ரொம்ப விரும்புறான்.. முக்கியமா அவனும் உன்னை மாதிரியே டாக்டர்... அதுவும் பேமஸ் நியூரோலோஜிஸ்ட்... இதுக்கு மேலயும் நீ என்ன எதிர்பார்க்கிற...” காட்டத்துடன் கேட்டாள்.

அதை கேட்டு விரக்தி புன்னகை சிந்தியது அவள் இதழ்கள். இதற்கு மேலும் அவள் எதிர்பார்ப்பது இந்த விக்ரமிடத்தில் எதுவுமில்லை அவள் எதிர்பார்ப்பது வேறு ஒருவனிடத்தில் அல்லவா... ஆர்யன்... அவளுள் காதலை தோற்றுவித்தவன். காதல் என்ற உணர்வை உணர வைத்தவன். அவனிடம் தானே அவள் எதிர்பார்க்கின்றாள். அவன் காதலை. ஆனால் கிடைக்குமா என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது. கிடைக்க வேண்டும் என காதல் மனம் ஏங்கியது.

‘கண்டிப்பா உங்க காதல் எனக்கே எனக்கானதா கிடைக்கும்... இப்போ கூட நான் உங்களுக்காகத்தான் காத்திருக்கேன்... எப்போ என்னை தேடி வருவீங்க...’ வேதனையுடன் எண்ணிக் கொண்டது அவள் உள்ளம்.


*****


“ஹாய் எவ்ரி படி
விஷ் யூ ஹேப்பி நியு இயர்
இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
காலேஜு டீன் ஏஜு் பெண்கள்
எல்லோருக்கும் என் மீது கண்கள்
இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
வாலிபத்தில் மன்மதன்
லீலைகளில் மன்னவன்
ராத்திரியில் சந்திரன்
ரசிகைகளின் இந்திரன்
நான் ஆடும் ஆட்டம் பாருங்கள்
நிகர் ஏது் கூறுங்கள்
நான் பாடும் பாட்டை கேளுங்கள்
கைத்தாளம் போடுங்கள்”



விலையுயர்ந்த கார். அதில் அமர்ந்திருந்த மூவர். ஒலித்துக் கொண்டிருந்த பாடல். அதற்கேற்ப ஆடிய உடல். வாயில் அரைபட்டுக் கொண்டிருந்த ஸ்நாக்ஸ். ஆட்டமும் பாட்டமுமாய் மூவரும் உற்சாகமான மனநிலையில் காரில் அமர்ந்திருந்தனர். முகத்தில் ஆனந்த தாண்டவம்.. காணாததை கண்ட ஆர்பரிப்பு. சொல்ல முடியா உணர்வது. அப்படியொரு பெயரறியா உணர்வுக்குவியலில் தான் அவர்கள் மூவரும் சிக்கி இருந்தனர்.

“கேப்டன்”

“ஆன்...”

“அடுத்த ட்ரிப் எல்லாம் இந்த மாதிரி சின்ன சின்ன வண்டில வரக்கூடாது...”

“ம்ம்ம்”

“அடுத்த தடவ வரும்போது பி.எம்.டபுள்யூல தான் வரணும்...” ஒலித்த கொண்டிருந்த பாடலுக்கேற்ப உடல் தாளம் போட சிரிப்புடன் கூறினான் கணேஷ்.

“அப்படீங்கற...”

அட்டகாச சிரிப்புடன் அதை ஆமோதித்து தலையசைத்த கேப்டன் “முதல்ல லைசென்ஸ் வாங்குவோம் அப்றோம் விதவிதமா காரு... காரு ட்ரைவிங் சீட்டில சாரு... சாரு பக்கத்தில் உக்கார்ந்து பாரு...” பாவனையுடன் கையசைத்து கூற, அத கேட்டு அவர் முதுகில் தட்டினான் ஷக்தி. அத்தனை நேரம் பாடலுக்கேற்ப ஆடிக் கொண்டிருந்தவன்.

“கேப்டன்... ஓட்றவங்களுக்கு தான் லைசென்ஸு... உங்களுக்கு எதுக்கு அதெல்லாம்” என கலகலத்து சிரித்தான்.

அதை கேட்டு நமுட்டு சிரிப்பு சிரித்த கேப்டன் “ஒகே ஒகே ஒகே... ஹா ஹா ஹா....” வெடித்துச் சிரிக்க மற்ற இருவருக்கும் கூட வெடித்துக் கொண்டு கிளம்பியது சிரிப்பு.

சிரித்து முடித்து மூச்சு வாங்கியபடி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவர்களின் முகத்தில் மர்மப்புன்னகை பூத்தது. மூவரின் பார்வையும் ஒருசேர தாங்கள் அமர்ந்திருந்த காரினை சுமந்து செல்லும் லாரி ட்ரக்கினை பார்த்தது. இதழ்க்கடையில் சிரிப்பு தவழ்ந்தது.


“சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னை காணவே
கனவுகள் பொங்குது எதிலே அள்ள
வலிகளும் சேர்ந்தது உள்ள கெள்ள
சுகங்களும் கூடுது உன்னை தேடியே
உன்னை உன்னை தாண்டி செல்ல
கொஞ்ச காலம் கொஞ்ச தூரம்
கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ
உன்னை உன்னை தேடி தானே
இந்த ஏக்கம் எந்த பாதை இந்த
பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ”


சிதறும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top