Sinthiya Muththangal 17

Joher

Well-Known Member
#2
:love::love::love:

தங்களோட ஆசைக்காக சுகத்துக்காக illegal கல்யாணம் பண்ணுறவங்க தங்களோட பிள்ளைகளை நினைக்கிறதேயில்லை........
பிள்ளைகளை நினைக்கும் வயதில் எல்லாமே கைமீறி போயிடுது......

இப்போ க்ரிஷ் ஒரு suicide attempt பண்ணியாச்சு.......
இன்னும் என்ன பண்ணப்போறான்???
ஆறுதலுக்கு யார் இருந்தாலும் சின்ன பையன் அவனுக்கு புரிந்துகொள்ளும் பக்குவம் இருக்காதே......
இப்போ பரமேஸ்வர் ஹாப்பி???

இன்னும் வேணியை துரத்துவேன் பிள்ளைகளுக்காகனு சொல்றானே.......
அவளும் அது மாதிரி ஒரு பிள்ளை தானே.....
போடா போடா நீ சொன்னதும் அவ செய்துட்டு தான் அடுத்த வேலை பார்ப்பா......
 




Last edited:
#7
அச்சோ அந்த சின்னப் பையனுக்கு
இப்படி ஒரு தற்கொலை எண்ணம்
ஏன் வந்தது?
எப்படி வந்தது, விஜி டியர்?

இல்லீகல் சைல்டுன்னு யாராவது
பையனை தப்பாப் பேசினாங்களோ?

அடுத்தவளோட புருஷனைக்
காதலிச்சு கல்யாணம் செய்தவள்
சந்துருவுக்கு தான் இரண்டாவது
மனைவின்னு ஊருக்கு
இல்லாட்டியும் பிள்ளைகளிடம்
ஜெய்சக்தி சொல்லியிருக்கணும்

நல்லா இருந்த கண்ணுக்கு பவர்
கிளாஸ் போட வேண்டியதாயிடுச்சே
அது கூட பரவாயில்லை
இப்போ கிரீஷ் உயிர் தப்பிச்சுட்டான்
இனி அடுத்த தடவை என்ன ஆகுமோ
தெரியலையே
இப்படி பீதியைக் கிளப்பி
விடுறீங்களே, விஜி டியர்

பாவம்ப்பா சின்னப் பையன்
இந்த இரண்டு குழந்தைகளைப்
பார்க்கிறதை விட ஜெய்சக்தி என்ன
வேலை செய்து வெட்டி முறிக்கிறாள்?

ஆணவம் பிடிச்ச அந்த பரமுக்
கிழவன் என்ன செய்கிறான்?

இன்னமும் கிருஷ்ணவேணியை
துரத்துவதிலேயே அப்பனும்
பிள்ளையும் நினைக்கிறாங்களே
தவிர தங்கள் குழந்தைகளைப்
பார்த்துக்கணும்ங்கிற புத்தி
இல்லையே
இதெல்லாம் எங்கே போய் முடியுமோ?

ஹ்ம்ம்.........மாதா பிதா செஞ்சது
மக்களைத் தாக்கும்ன்னு சும்மாவா
சொன்னாங்க?

நிலையற்ற அழகு பணம் தன்னிடம்
இருக்குங்கிற திமிரில் இளமையில்
ஜெய்சக்தி செய்தது அவள் மகனைக்
காவு வாங்கிடுச்சோ?

ஏற்கனவே பையன்களுக்கு வாரிசு
இல்லை
இப்போ இருக்கும் ஒரே பேரனும்
தற்கொலை செய்து இறந்து
போனால் யாருக்காக கிழவன்
இவ்வளவு சொத்து சேர்க்க
வேண்டும்?
பரமேஸ்வரன் சிந்திப்பானா?

ஸாரி புனிதா மாதிரி அப்பாவியை
புனிதமானவளை கண்டபடி பேசிய
ஒரு பணத்திமிர் பிடித்த கிழவனுக்கு
என்னால் மரியாதை கொடுக்க
முடியலே, விஜயலக்ஷ்மி டியர்
 




Last edited:

Advertisement

New Episodes