Saveetha Murugesan's Viswakarma - Intro

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
புதிய கதைக்கு என்னோட வாழ்த்துக்கள்!
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன்வாசல் வந்தாடும்!
இளந் தென்றல் உன்மீது பண்பாடும்!
 

Hema Guru

Well-Known Member
வந்துட்டேன்யா வந்துட்டேன்

திரும்ப வந்துட்டேன் ரொம்ப இடைவெளிக்கு பிறகு...

புதுக்கதை ஒண்ணு தொடங்கலாம்ன்னு, திட்டாதீங்க மக்களே நீ இன்னும் பழசே முடிக்கலை அதுக்குள்ளே புதுசான்னு...

பழைய கதை சிறு பூக்களின் தீவே இன்னும் சில பதிவுகளில் முடிந்துவிடும், ஆசையை காத்துல தூதுவிட்டு அடுத்து பதிவுகள் போடுவேன்,

ஒரு கதை முடிந்ததும் தான் இந்த கதையோட பதிவுகள் தொடங்கும், கவலைப்படாதீங்க...

டைட்டில் சொல்லிட்டு போயிடலாம்ன்னு தான் வந்தேன், அப்படியே கொஞ்சம் கதையில இருந்து சில காட்சிகளும் ஓகேவா...

நாயகன் : விஸ்வகர்மா
நாயகி : காஞ்சனமாலா
தலைப்பு : விஸ்வகர்மா

சில காட்சிகள்
--------------------


“இவருக்கு கோபம் அதிகம் வரும், இவர் வளர வளர தான் உங்க குடும்பத்துல முன்னேற்றமே ஏற்படும்... இந்த குழந்தை தேவசிற்பி விஸ்வகர்மாவோட அம்சம்...”

“உங்க குடும்பத்துல ஏழு தலைமுறைக்கு பிறகு அதே அம்சத்துல பிறக்கறது இவரா தான் இருக்கும். இவர் செய்யற தொழில்ல அவ்வளவு சுத்தமிருக்கும், நேர்த்தியிருக்கும், இவருக்கு கைத்தொழில் நல்லா வரும், அது மூலமா தான் இப்போ இருக்கற இந்த சின்ன கடையை நீங்க பெரிசாக்குவீங்க...”

“அப்போ இவனோட குடும்ப வாழ்க்கை??”

“நான் இப்போ அதுக்கு தான் வர்றேன்... ரொம்பவும் சிக்கலானது இவரோட வாழ்க்கை, தன்னைச்சுற்றி என்ன நடந்தது நடக்குதுன்னே தெரியாமலே இவரை சுத்தி பின்னப்படுற வலையில இவர் விழுவாரு”

“இவருக்கு இருப்பத்தியெட்டு வயசுல திருமணம் நடந்தா தான் உண்டு. அந்த காலம் தள்ளிப்போனா இவருக்கு திருமணமே நடக்காது”

“இன்னொரு முக்கியமான விஷயம் இவருக்கு திருமணம் நடந்துச்சுன்னா நீங்களும் உங்க முன்னோர்களும் இதுவரை செஞ்ச முன்வினை எல்லாம் உங்களுக்கு எதிர்வினையாகி உங்களோட கர்மபலனை நீங்க எல்லாருமே அனுபவிப்பீங்க”

“தப்பு செஞ்ச எல்லாருமே கர்மபலனை அனுபவிச்சு தான் ஆகணும்... யார் செஞ்ச புண்ணியமோ உங்களோட தீவினை எல்லாம் நீங்க இறந்த பிறகு தான் அனுபவிச்சீங்க...”

“இவரோட கல்யாணம் அது எல்லாத்தையும் தகர்க்கும்... நீங்க உயிரோட இருக்கும் போதே செஞ்ச பாவத்துக்கான பலனை அனுப்பவிப்பீங்க...”

“அய்யா நாங்க எந்த பாவமும்...” என்று அவர் இழுக்க “எல்லாம் எனக்கு தெரியும்... நீங்க சொல்லி நான் தெரிஞ்சுக்க வேண்டியது இல்லை...”

“கடைசியா ஒரு விஷயம் நல்லா கேட்டுக்கோங்க, இது வரைக்கும் நீங்க எல்லாருமே அனுபவிக்கற இந்த சொத்தும் கூட உங்களைவிட்டு போகும்...”

“என்ன சொல்றீங்க அய்யா??”

“இது தான் இந்த குழந்தையோட ஜாதகப்பலன், இவன் சந்தோசமா இருந்தா மட்டுமே உங்க குடும்பம் நல்லா இருக்கும், இதுக்கு மேல சொல்ல எதுவும் இல்லை...”
Semma kick start
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top