Saveetha Murugesan's Viswakarma 41

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
விஸ்வா சூப்பர் நல்லா செம செம கில்லாடியாயிட்டான் போலவே
இரண்டு நொண்ணன்கள்கிட்டேயும் ஏகப்பட்ட டாக்குமெண்ட்ஸ் எழுதி வாங்கியிருப்பானோ?

அப்போ ரத்தினவேலுவுக்கு செம ஆப்பு காத்திருக்குன்னு சொல்லுங்க
அதுக்குத்தான் இங்கே எப்போ வர்றேன்னு விஜய்யிடம் இவன் கேட்டானா?

அதெல்லாம் சரி
எழுதி வாங்கும் எல்லா சொத்தையும் அமுதனுக்கே ஏன் விஸ்வா கொடுக்கணும்?
இவனுக்கு பாதி வைச்சுக்கலாமே
குமரனுக்கு இவனும் பேரன்தானே

ஆனால் பூரா சொத்தையும் அமுதனுக்கு கொடுத்தால் ரத்தினவேல் சும்மாயிருப்பானா?
இன்னொரு அப்பா இல்லாத விஸ்வா உருவாகணுமா விஸ்வகர்மா ஸார்வாள்?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
நெனச்சது போலவே சரவணன், கார்த்திக் ரெண்டு பேரும் விஸ்வா எப்படி வீடு வாங்கினான்,பணம் எப்படி வந்ததுன்னு வேவு பார்க்கத்தான் வந்திருக்காங்க:mad::mad::mad:.

விஸ்வா ரெண்டு பேரோட வீக்னஸ் தெரிஞ்சுட்டு அவங்களுக்கு செக் வச்சுட்டான்(y)(y)(y) சொத்து சொத்துன்னு அலைஞ்சவங்களுக்கு பாடம் கத்து கொடுக்க நினைக்கறது சரிதான்:giggle::giggle:.

கடனுக்கு பதிலா அண்ணனுங்க கையெழுத்து போட்டுக்கொடுத்த சொத்து பத்திரத்தை மாற்றி எழுதி அதை அமுதனுக்கு கொடுக்கப்போறான் விஷ்வா சூப்பர்:D:D:D.

சொத்து கையை விட்டு போனது தெரிஞ்சா தாத்தா நிலமை:D:D.ரத்தினவேலு கொலை செய்ய தயங்காதவன்,அவனுக்கு உண்மை தெரியும் போது என்ன செய்வானோo_Oo_Oo_O.

விஷ்வா சாதாரணமா சொல்லும் வார்த்தை ,காஞ்சனாக்கு குத்தி காட்டறது போல தெரியுது:(:(. தெரிஞ்சே தான் செஞ்சே,நான் மித்ரன் இல்லை விஷ்வான்னு தெரிஞ்சே தானே செஞ்சே:p:p:p.
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

ஐயோ பேசி பேசி கொல்றானே.........
மாஸ்டர் பிளான் செம........
உன்கிட்டேயே சிக்கிட்டாங்களே.......

ரம்யா சௌமியா சொன்னாலும் சண்டை வந்திருக்கும்...... உடனே உங்க அயித்தை அங்கயற்கண்ணி வந்து பொண்ணுங்களுக்கு அட்வைஸ் சொல்லியிருக்கும்.......
நாட்டில் பல வீடுகளில் நடப்பது தான்.........
சொன்னாலும் சண்டை வரும்........
அட்ஜஸ்ட் பண்ணி போங்கன்னு அம்மாவே அட்வைஸ் கொடுப்பாங்க.......
ஏதோ பண்ணட்டும்....... கேட்டு என்னவாக போகுதுன்னு கூட இருக்கலாம்.......
இப்போ அளவுக்கு மீறி போக பொண்டாட்டிங்க சொல்றது காதில் விழுந்திருக்கலாம்......

ஆண்களின் ஒரு தந்திரம்....... கேள்வி கேட்டால் ரொம்ப கோபப்பட்டுடனும்.......
பொண்டாட்டி கப் சிப் னு வாயை மூடிட்டு போய்டுவா.......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top