Salute

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மனம் மிகவும் கனக்கிறது
தேவையற்ற வீணான இறப்புகள்
பொறுப்பில்லாத நிர்வாகம்

குறைவான வாகனங்களில்
அதிகப்படியான வீரர்களை
ஏற்றிச் செல்ல வேண்டிய
அவசியமென்ன?
அனைவர்க்கும் தேவையான
வண்டிகளை ஏற்பாடு
செய்திருக்கலாமே?

எதிரி எப்பொழுது எங்கிருந்து
வருவான்-னு தெரியாத சூழலில்
கொஞ்சம் அஜாக்கிரதைத்தனம்
எல்லாம் சேர்ந்து விலை மதிப்பில்லாத
45 உயிர்களை காவு வாங்கி விட்டது இன்னும் எத்தனை பேரோ?

இறந்த எத்தனை பேருக்கு பால்
மணம் மாறாத பிள்ளைகள்?
எத்தனை பேரின் குழந்தைகள்
இன்னமும் வெளியுலகைப்
பார்க்காமல் தாயின் வயிற்றுக்குள்?

இறந்த வீரர்களின் மனைவிகளின்
நிலை?
நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது
 
Last edited:

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
மனம் மிகவும் கனக்கிறது
தேவையற்ற வீணான இறப்புகள்
பொறுப்பில்லாத நிர்வாகம்
குறைவான வாகனங்களில்
அதிகப்படியான வீரர்களை
ஏற்றிச் செல்ல வேண்டிய
அவசியமென்ன?
அனைவர்க்கும் தேவையான
வண்டிகளை ஏற்பாடு
செய்திருக்கலாமே?

எதிரி எப்பொழுது எங்கிருந்து
வருவான்-னு தெரியாத சூழலில்
கொஞ்சம் அஜாக்கிரதைத்தனம்
எல்லாம் சேர்ந்து விலை மதிப்பில்லாத
40 உயிர்களை காவு வாங்கிவிட்டது

இறந்த எத்தனை பேருக்கு பால்
மணம் மாறாத பிள்ளைகள்?
எத்தனை பேரின் குழந்தைகள்
இன்னமும் வெளியுலகைப்
பார்க்காமல் தாயின் வயிற்றுக்குள்?

இறந்த வீர்ர்களின் மனைவிகளின்
நிலை?
நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது
வரலாற்றில் மறக்க முடியாத சோக நிகழ்ச்சி
 

Chitrasaraswathi

Well-Known Member
ஒவ்வொரு இந்தியனும் தங்கள் வாழ்க்கையுடன் அவர்களின் வாழ்க்கையை ஒப்பிட்டு பார்த்து அவர்களுக்கான நியாயத்தை செய்ய வேண்டும்
 

banumathi jayaraman

Well-Known Member
நடந்ததைக் கேட்டால் வரலாறு
காறித் துப்பும்
நாட்டைக் காக்கும் உன்னதமான
பணிக்கு வருபவர்களுக்குக்
கூட, பாதுகாப்பு கொடுக்க
வேண்டிய படுகேவலமான
நிலையில் நாம் இருக்கிறோம்

தூங்கும் பொழுது கூட
விழித்துக் கொண்டே இருக்கும்
எதிரி எங்கே?

உளவுத்துறை எச்சரிக்கை
செஞ்சும் கூட விழிப்புடன்
இருக்க வேண்டிய நேரத்தில்
கூட, எவனோ ஒருவனின்
உயிர்தானே-ங்கிற மெத்தனத்தில்
தூங்கிக் கொண்டிருக்கும்
நம்ம நிர்வாகம் எங்கே?

1000 வீரர்கள் போக வேண்டிய
சமயத்துல, வண்டியில, இடிச்சுப்
பிடிச்சு அந்த இடத்தில ஒன்றரை
மடங்கு அதிகமான வீரர்களை
ஏன் அழைத்து செல்ல வேண்டும்?

கொஞ்சம் பேர் அப்புறமாக
பொறுத்திருந்து சென்றிருக்கலாமே?
அந்த வீரர்களை அவசரப்படுத்தி
வரவழைத்து அவர்களுக்கு
சாவைப் பரிசளித்தது யாரூ?

இங்கே பிரச்சனையில்லாத
சாதாரண ஊர்களில் கூட
சாலையை பிரிக்கும்
டிவைடர்-ங்கிற சாதனம்
பெரிதாக இருக்கும் பொழுது
விவகாரமான வில்லங்கமான
அந்த காஷ்மீர் பூமியில்
டிவைடர் பெரிய அளவில்
இருந்திருக்க வேண்டும்

விளையாட்டுப் பொருள்களை
கொண்டு போறாங்க-ங்கிற
சப்பைக்கட்டுக்கள் இல்லாமல்
எதிரி வந்த வாகனத்தை
சரியான முறையில் பரிசோதனை
செய்திருந்தால், 350 கிலோ
எடையுள்ள ஆர் டி எக்ஸ்
வெடிமருந்தை முன்னாலேயே
கண்டுபிடித்திருக்கலாம்

இப்படி பல லாம்கள் இருந்தாலும்
போன 45 உயிர்கள் போனவைதானே?
இன்னும் எத்தனையோ?
ஊருக்கு போய் சேர்ந்துட்டேன்-ங்கிற
வேலைக்கு/பணியிடத்துக்கு
வந்து சேர்ந்துட்டேன்-ங்கிற
தகவல்/விவரத்தைக் கூட
மனைவி, மக்களுக்கு சொல்லும்
அவகாசத்தைக் கூட, நம்
வீரர்களுக்கு எதிரிகள்
கொடுக்கவில்லையே?
 
Last edited:

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
நடந்ததைக் கேட்டால் வரலாறு
காறித் துப்பும்
நாட்டைக் காக்கும் உன்னதமான
பணிக்கு வருபவர்களுக்குக் கூட
பாதுகாப்பு கொடுக்க வேண்டிய
படுகேவலமான நிலையில்
நாம் இருக்கிறோம்

தூங்கும் பொழுது கூட விழித்துக்
கொண்டே இருக்கும் எதிரி எங்கே?
உளவுத்துறை எச்சரிக்கை செஞ்சும் கூட
விழிப்புடன் இருக்க வேண்டிய நேரத்தில்
கூட எவனோ ஒருவனின் உயிர்தானேங்கிற
மெத்தனத்தில் தூங்கிக் கொண்டிருக்கும்
நம்ம நிர்வாகம் எங்கே?

1000 வீரர்கள் போக வேண்டிய இடத்தில
ஒன்றரை மடங்கு அதிகமான வீரர்களை
ஏன் அழைத்து செல்ல வேண்டும்?
கொஞ்சம் பேர் அப்புறமாக சென்றிருக்கலாமே?

இங்கே பிரச்சனையில்லாத சாதாரண
ஊர்களில் கூட சாலையை பிரிக்கும்
டிவைடர்-ங்கிற சாதனம் பெரிதாக
இருக்கும் பொழுது விவகாரமான
அந்த காஷ்மீர் பூமியில் டிவைடர்
பெரிய அளவில் இருந்திருக்க
வேண்டும்

விளையாட்டுப் பொருள்களை
கொண்டு போறாங்கங்கிற
சப்பைக்கட்டுக்கள் இல்லாமல்
எதிரி வந்த வாகனத்தை சரியாக
பரிசோதனை செய்திருந்தால்
350 கிலோ எடையுள்ள ஆர் டி எக்ஸ்
வெடிமருந்தை முன்னாலேயே
கண்டுபிடித்திருக்கலாம்

இப்படி பல லாம்கள் இருந்தாலும்
போன 45 உயிர்கள் போனவைதானே?
இன்னும் எத்தனையோ?
ஊருக்கு போய் சேர்ந்துட்டேன்-ங்கிற
வேலைக்கு/பணியிடத்துக்கு
வந்து சேர்ந்துட்டேன்-ங்கிற தகவல்
விவரத்தைக் கூட மனைவி மக்களுக்கு
சொல்லும் அவகாசத்தைக் கூட, நம்
வீரர்களுக்கு எதிரி கொடுக்கவில்லையே?
அவர்கள் குடும்பத்தின் கண்ணீருக்கு நாடு பதில் சொல்லுமா?
 

banumathi jayaraman

Well-Known Member
எவனோ எங்கேயோ எப்படியோ
போகட்டும்
நாமும் நம் குடும்பமும் நம் மகன்,
மகள்கள் பேரன் பேத்திகள்
அவங்களுக்கு அடுத்து வர்ற
வாரிசுகள் எல்லோரும் நல்லா
இருக்கணுமுன்னு இன்னும்
பத்து தலைமுறைக்கு
சொத்து சேர்க்காமல்,
இங்கே சேர்த்தது போதாமல்,
வெளிநாட்டில் ஸ்விஸ்
வங்கியில் ஆயிரக்கணக்கான
கோடிகளில் சொத்து சேர்க்கும்
மனிதர்கள்,
ஒரு பாவமும்
அறியாத இறந்த மாவீரர்களையும்
தன்னைப் போல சக மனிதனாக
எண்ண வேண்டும்


சாதி, மதம், மொழி, இனம்,
கட்சி பாகுபாடின்றி நாம்
அனைவரும் ஒன்று சேர்ந்து
தீவிரவாதத்தை எதிர்த்து
இம்மாதிரி இனி ஒரு இழப்பு
ஏற்படாமல் தடுக்க வேண்டும்
அப்போத்தான் உண்மையான
ஜெய் ஹிந்த்

இன்னொரு சுபாஷ் சந்திர
போஸ், எப்போ வருவார்?
இழிநிலையிலிருக்கும் நம்முடைய
தாய்த் திருநாட்டைக் காப்பாற்ற
என்ற ஏக்கத்துடன், குற்றுயிராய்
கிடக்கும் நம் பாரத மாதாவைக்
காப்பாற்ற யாரு வருவாரோங்கிற
கவலையுடன்,
ஜெய் ஹிந்த்
 
Last edited:

Joher

Well-Known Member
So sad.......... Because of our inability in Security even after alert.........

சமீப காலங்களில் இது ஒரு தொடர்கதை ஆகிவிட்டது.......
பார்க்கும் போதே கண்ணீர் வருது........

நாட்டை பாதுகாக்கும் வீரர்களுக்கு பாதுகாப்பில்லை..........
What a pity........

Crying_Face_Emoji_grande.png
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top