request to writers and readers

Advertisement

surthi

Well-Known Member
சாரி பிரெண்ட்ஸ் உங்க எல்லாரையும் காக்க வைத்ததற்காக என்னை மன்னிக்கவும் .இப்பவும் நான் கதை யூடியோடு வரவில்லை ஆனால் கதைக்கு உங்களிடம் உதவி கேட்டு வந்துள்ளேன் . ஃப்ரெண்ட்ஸ் எனக்கு உதவி செய்வீர்களா ப்ளீஸ்

எதற்காக உங்களிடம் உதவி கேட்கிறேன் என்றால் கதையை எழுதுவதில் எனக்கு ஒரு குழப்பம் அது என்னவென்றால் இந்த கதையை முதலில் நான் ஆரம்பத்தில் சீக்கிரம் முடிந்து விடும் என்ற எண்ணத்தில் தான் எழுதினேன் ஆனால் அப்போதே இக்கதை நாற்பது முதல் நாற்பத்தி ஐந்து அத்தியாயங்கள் வரை செல்ல வாய்ப்பிருந்தது

அதாவது ரிஷியை சுற்றி நடப்பவற்றை அவன் உணர்ந்து கண்டுபிடித்து அவன் காதலியோடு சேர்வது தான் கதை

ஆனால் இப்போது எனக்கு இந்த கதையின் தொடர்ச்சியாக இரண்டு கிளை கதைகள் உதித்திருக்கிறது இதுவரை நான் கொடுத்த யூடியை படித்தவர்கள் வசந்தம் -6 யையும் படித்திருப்பீர்கள் அந்த அத்தியாயத்தில் பாடல் வடிவாக இரண்டு இருக்கும் அதில் ஒன்று சித்தர் ரிஷியிடம் கூறுவது போலவும் இன்னொன்று சித்தர் க்ரிஷ்யிடம் கூறுவது போலவும் இருக்கும் அதில் ரிஷியிடம் கூறுவது போல வரும் பாடலில் ரிஷியின் தந்தை மரணம் சதியால் நடந்ததாக கூறியிருப்பேன்

அடுத்தது ரிஷியின் முன்ஜென்மம் பற்றியும் சிறிது வந்திருக்கும்

நான் முதலில் இப்படி யோசிக்கவில்லை இப்போது தான் யோசித்தேன் ( இது கொஞ்சம் நிறையவே ஓவரா தெரியலாம் ஆன என் மனதில் பட்டது அதை அப்படியே கேட்கிறேன் பிறகு உங்கள் விருப்பம் தவறு என்றாலும் நேரடியாக கூறிவிடுங்கள் நான் மாற்றிக் கொள்ள என்னால் முடிந்த வரை முயற்சி செய்கிறேன் என்னடா இவன் கண்டிப்பா மாற்றிக் கொள்கிறேன் சொல்லாம முயற்சி செய்யலாம் சொல்லறனு உங்க எல்லோருக்கும் தோன்றும் ஆனால் என்னை எது இருந்தாலும் செய்து முடித்த பின்னர் தான் செய்து முடித்ததை சொல்வேன் ஏன்னென்றால் மாற்றம் ஒன்றே மாறாதது இதை நான் முழுமையாக உணர்ந்ததாலும் நம்புவதாலும் )

1.ரிஷியின் முன்ஜென்மம் பற்றி மட்டும் தனியாக கொடுப்பது ஆனால் கதையின் பெயர் வேறாக அதன் தொடர்ச்சி தான் (அஎதோவ)(AETV)இந்த கதை என இரண்டு பாகமாக மட்டுமே இருக்கும் (அல்லது)


2. இதே தலைப்பில் ரிஷியின் தந்தையின் மரணம் பற்றிய மூடிச்சை மட்மல்லாது அவரின் காதல் வாழ்க்கை பற்றியதாகவும் இருக்கும் ஆனால் அது 60-70 அத்தியாயங்கள் போகலாம் ப்ளஸ் காயத்ரியின் வாழ்க்கை பற்றியும் (அல்லது)

(இப்படி கொடுக்க எனக்கு நிறைய தயக்கம் காரணம் இப்போதே கதையை நான் எப்படி கொடுத்திருக்கிறேன் என்று தெரியவில்லை கருத்துக்களை கூறியவர்கள் எல்லோரும் நன்றாக இருப்பதாக தான் கூறுகின்றனர் ஆனால் நான் திரும்ப நிதானமாக இதுவரை கொடுத்த யூடிக்களை மூன்று நான்கு வாசிக்க வாசிக்க தான் என்னிடம் உள்ள தவறுகள் என் கண்ணில் பட்டது அதோடு ரிஷியின் கதையே இனி வரப்போகும் பிளாஷ்பேக்கில் தான் உள்ளது (2.வது ) படி நான் கதை கொடுக்க வேண்டும் என்றால் அதுபோக ஒரு பிளாஷ்பேக்கோ அல்லது அந்த பிளாஷ்பேக்கிலேயே இன்னொரு பிளாஷ்பேக்காகவோ தான் தர வேண்டியதாக இருக்கும் அப்படி கொடுத்தால் அது ரொம்ப ஜவ்வு மாதிரி இழுத்துக் கொண்டே போகும். அப்படி கொடுக்கும் போது அதை வாசிப்பவர்களுக்கு இக்கதை வெறுத்து கூட போகலாம் ஏன் இதுவரை நான் எழுதியதில் கூட நிறைய குறைகள் இருந்ததை நான் இப்போது தான் பார்த்தேன் அதை சரி செய்ய முயற்சித்திருக்கிறேன் அது எவ்வளவு சரி அதை வாசகர்களாகியவர்கள் தான் எனக்கு சரி எது தவறு எது எவற்றை நான் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை சுட்டிக் காட்ட வேண்டும் இது என் தாழ்மையான வேண்டுகோள் இது எனது முதல் கதை அதாவது முதன் முதலில் தவழும் குழந்தையின் நிலை தான் எனக்கு அதனால் தான் என் சக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களாகிய உங்களிடம் உதவி கேட்கிறேன் நீங்கள் தான் என்னை வழிநடத்த வேண்டும் )


3 இந்த இரண்டையும் கலந்து மூன்று முதல் நான்கு பாகங்களாக இக்கதையை எழுதவா எப்படி கதையை இதற்கு மேல் கொண்டு செல்ல வேண்டும் என்பதை என் சக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் ஆகிய நீங்கள் தான் கூற வேண்டும் ஏனென்றால்
உங்களின் எதிர்பார்ப்பு எப்படியிருக்கும் என்று எனக்கு தெரியாது ஒவ்வொருவருடைய எதிர்பார்ப்பும் வேறு வேறு மாதிரியாக இருக்கும் அதனால் முடிவை உங்களிடமே ஓப்படைக்கிறேன்

இதை படிப்பவர்கள் அனைவரும் இதற்கான தங்களின் கருத்துக்களை suggestions என்ற திரியில் பதிவிடுங்கள்.

நன்றி


இப்படிக்கு ஸ்ருதி...
 

banumathi jayaraman

Well-Known Member
ஓகே and எனக்கு ஒரு நாள்
டைம் வேண்டும்
என்னுடைய கருத்தை
நாளைக்கு சொல்கிறேன்,
ஸ்ருதி டியர்
 
Last edited:

surthi

Well-Known Member
ஹாய் பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் பா என்னடா இவ இவ்வளவு நாள் வராமா இருந்துட்டு மன்னிப்பு கேட்பா அப்படின்னு பாத்தா நன்றி சொல்லறானு தான நினைக்கிறேங்க நான் தேங்க்ஸ் சொன்னது இவ்வளவு பொறுமையா இருந்ததுக்கு .

நிறைய பேர் மனசுக்குள்ள என்ன வறுத்து எடுத்திருப்பீங்க இன்னும் கொஞ்சம் பேர் அப்பாடா தொல்லை ஒழிஞ்சுது அப்படின்னு நினைச்சுருப்பீங்க

மனசுல வறுத்தவங்களுக்கு ஒரு ஃப்ரீ அட்வைஸ் இனிமே வறுக்கருத மனசுக்குள்ள செய்யாதீங்க கருத்து திரில சொல்லிவிட்டு போங்க
அடுத்தது தொல்லை ஒழிஞ்சுதுனு நினைச்சவங்களுக்கு இதோ வந்துட்டேன்

வாசிப்பவர்கள்(வா)- யூடியோடயா???????????.,.....

:giggle::giggle::giggle::giggle::giggle::giggle::giggle::giggle: இல்ல

(வா) - அப்புறம் எதுக்கு இந்த பக்கம் வந்த:mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad:இதில ஃப்ரீ அட்வைஸ் வேற எங்களுக்கு அட்வைஸ் பண்ணறியே நீ சொன்ன சொல்ல காப்பாத்தரியா

சாரி.......

(வா) - ஆ ஊ னா இத ஒன்ன சொல்லிட வேண்டியது சரி சரி வந்தது தான் வந்துட்ட என்ன விஷயமா வந்த சீக்கிரம் சொல்லிட்டு கிளம்பு கிளம்பு நாங்க அடுத்த வேலையை பாக்க போகனும்


நான் வந்ததது தேங்க்ஸ்...

(வா) - என்ன தேங்க்ஸ் சொல்லத்தான் வந்தியா இதுக்கு நீ வராமலே இருந்தீருக்கலாம்


பொறுமை பொறுமை சகோதர சகோதரிகளே மற்றும் நண்பர்களே


(வா) - எல்லாம் சரிதான் சீக்கிரம் விஷயத்த சொல்லு


சரி

அதாகப்பட்டது சில பல சொந்த பிரச்சினைகள் காரணமாக என்னால தொடர்ந்து நான் சொன்ன படி யூடி கொடுக்க முடியாம போயிடுச்சு ஆனால் அத பொருட் படுத்தாம இருந்த என் வாசகர்களுக்கு என் மிக பெரிய நன்றி

ஏற்கனவே நான் படிச்சுட்டு இருக்கிறது உங்களுக்கு தெரியும் நினைக்கறேன் இப்போ அதோட சேர்த்து பண நெருக்கடியும் வந்ததால வேலைக்கு போக வேண்டிய கட்டாயம் அதுக்காக கடன் கிடன் லெவலுக்கு கற்பனை பண்ணிராதீங்க அந்த அளவுக்கு போய்ட கூடாது இல்ல அதோட எங்க வீட்டுல எப்பவுமே கடன் என்ற வார்த்தையே வர கூடாது அப்படின்னு ஒரு சட்டமே உண்டு அது எங்க வீட்டுக்கு மட்டும் தான்

அதானால திருப்பியும் என்னோட எல்லா அட்டவணையும் மாற்ற. பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது அதுல கதைய தொடர்ந்து எழுத என்னால நேரம் ஒதுக்க முடியலை இப்போ தான் கதை எழுதறவங்களோட கஷ்டம் புரியுது முன்னெல்லாம் நானே கதைய நடுல கேப் விட்டு எழுதினா அப்படி எழுதறவங்க மேல் கோப. பட்டிருக்கேன் ஆனா இப்போ யோசிக்கும் போது ஒரு குற்ற உணர்ச்சியா இருக்கு அதோட என்னவிட எத்தனையோ பேருக்கு எத்தனையோ விதமான கஷ்டம் அதெல்லாம் தாண்டி நல்ல நல்ல படைப்ப. பொழுதுபோக்கு அம்சமாகவும். சமுக சிந்தனைய தூண்டற மாதிரியும் நாட்டு நடப்பு , அவலங்களை எடுத்து. காட்டுவதாக எழுதறதும் ரொம்ப சந்தோஷமா இருக்கு அவங்க எல்லாருக்காகவும் என்னால இப்போதைக்கு முடிஞ்சது கடவுள் கிட்ட பிராத்தனை பண்ணறது தான்


என் சுமை கூடி விட்டதால் என்னால முன்னால சொன்ன மாதிரி யூடி. தர முடியாது மன்னிக்கவும் அதோட இன்னொன்னையும் புரிந்து கிட்டேன் முந்திரி கொட்டை தனமும் கூடாதுன்னு ஏன்னா கதைய மூனு பார்ட்டா கொடுக்கிறதா சொல்லி இருந்தேன் இல்லையா இப்போ அதுல முன்ஜென்ம பார்ட்ட கொடுக்க முடியாது சாரி சாரி ஆனா அத தனி கதையா கொடுக்கலாம் என்று நினைச்சு இருக்கேன் ஆனா கடவுள் என்ன வைச்சுருக்கார்ன்னு தெரியலை அதனால அது நடக்கும் போது பாத்துக்கலாம்கறது என்னுடைய எண்ணம்


இனி கதைய ரிஷியோடது ப்ளஸ் ரகுராம் வர்மாவோடது மட்டும் தான் இரண்டே பார்ட்டா முடிச்சுடறேன்

முதல கொடுத்த மாதிரி இனி ஞாயித்து கிழமை மட்டும் தான் கம்பல்சரி யூடி அதோட இந்த கதைய டிசம்பர் கடைசிகுள்ள முடிக்க முடியாது அதானல கொஞ்சம் பொறுமையாக காத்திருங்கள்


சாரி சாரி சாரி சாரி ...........



(வா) - சப்பா இப்பவே கண்ண கட்டுதே இந்த கதை ஒழுங்கா எழுதி முடிப்பயா???????.....

தெரியலை


அடிங்க ...............
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top