REQUEST FOR ONE MAN

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
என்னுடைய இனிய அருமைத்
தோழர் தோழிகளே
இன்று எனக்கு மனசே
சரியில்லைப்பா

நாமக்கல் மாநகரத்திலுள்ள
புகழ்பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர்
பெருமான் திருக்கோவிலில்
நடந்த ஒரு சம்பவம் என்னை
மிகவும் உலுக்கி விட்டதுப்பா
நாமக்கல் நகரத்தில் ஒரே
தெருவில் எம்பெருமான்
ஸ்ரீ ஆஞ்சநேயர் எம்பெருமான்
ஸ்ரீ நரசிம்மப் பெருமாள்
இரண்டு திருக்கோயில்களும்
எதிரெதிரே உள்ளன
ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ நரசிம்மப்
பெருமாள் சன்னதியைப்
பார்த்தவாறு அவரை சேவிப்பது
போல இரண்டு கரங்களையும்
கூப்பியவாறு இருப்பார்

எம்பெருமான் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு
திருக்கைகளில் மூன்று மாலைகளை
அணிவித்து விட்டு திரும்பிய ஒரு
அர்ச்சகர் பிடிமானம் இல்லாமல்
வழுக்கி கீழே விழுந்து விட்டார்
விழுந்த வேகத்தில் மண்டை
உடைந்து விட்டதாக
சொல்லப்படுகிறது
சேலம் நகரில் தனியார்
மருத்துவமனையில் அந்த
அர்ச்சகர் உயிருக்கு போராடிக்
கொண்டிருக்கிறார்ப்பா

இறைவனுக்கு சேவை செய்யும்
அந்த புனித மனிதரின் உயிர்
பிழைக்க வேண்டுமென்று
நாம் அனைவரும் அவரவர்
இடத்திலிருந்து பிரார்த்திருப்போம்,
இனியத் தோழர், தோழிகளே
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எனக்கு வாட்ஸ் அப்பில் வந்த
இந்த செய்தியை, காணொளி
காட்சியை இங்கே பதிவிறக்கம்
செய்ய எனக்குத் தெரியாததால்
மல்லிகா மணிவண்ணன்
டியருக்கும் இன்னொரு
தோழிக்கும் நான் அனுப்பினேன்
பதட்டத்தில் அவர் பெயர்
நினைவுக்கு வரவில்லை
இந்த இரு தோழிகளும் அதை
இங்கே பதிவிறக்கம் செய்ய
இயலுமாப்பா?
கூட்டுப் பிரார்த்தனைக்கு
நிச்சயம் பலன் இருக்கும்
கொஞ்ச வயதுள்ள அந்த
அர்ச்சகர் உயிர் பிழைக்க
நாம் இறைவனை வேண்டுவோம்,
இனியத் தோழர், தோழிகளே
 
Last edited:

karthaka

Member
ஆமா பானுமா...நானும் பார்த்தேன்....கோவிலில் இதுபோல நடந்தது....ஜீரணிக்க முடியவில்லை...எப்பவும் நடப்பதுதான்...ஆனால் இம்முறை தவறிவிட்டது...ஆனால் அனுமந்தரின் கணக்கை நாம் அறிய இயலாதே...நம்மால் இயண்றது பிரார்திக்கதான் முடியும்...அதற்குமேல் அவர் விட்ட வழி...
 

Indusivadas

Well-Known Member
வணக்கம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அர்ச்சகர் திரு.ராஜன் (எ) வெங்கடேன்' ஆஞ்சநேயர் அபிஷேகத்தின் போது கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு ஆபத்தான நிலையில் சேலம் நியூரோ பவுண்டேஷன் ல் சேர்க்கப்பட்டுள்ளார் நிறைய ரத்தம் தேவைப்படுகிறது ரத்தம் கொடுக்க விரும்புவோர் நாகராஜன் 94433 93100 கிருஷ்ணமூர்த்தி 94426 32527 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் மிக மிக அவசரம் எந்த குருப்பாக இருந்தாலும் சரி. தொடர்பு கொண்டு ஆதரவு தாரீர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top