Ramya Rajan's Pani Sinthum Sooriyan final 1

Advertisement

fathima.ar

Well-Known Member
ஒரு தப்பு ஒரு துரோகம்
எவ்வளவு பெரிய குடும்பமா இருந்தாலும்..
அவங்க என்னப்பா பெரிய பணக்காரங்க அப்படின்னு வெளி பார்வைக்கு தெரிஞ்சாலும்
குடும்பம்ங்கிற அமைப்பு சீர் கெடும் போது அடுத்த தலைமுறையை பாதிக்கும்..

பெரிய குடும்பத்தை அழகா கொண்டுவந்துட்டிங்க
ஸ்வர்ணாம்மா மாற்றம் பாராட்டுக்குரியது..

அபர்ணா best ஹீரோயின்..
சுகன்யா பெஸ்ட் மாம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சபாஷ், ஸ்வர்ணாம்பிகை
நீயென்ன என்னை வேண்டாமுன்னு
சொல்லி எவள் பின்னாடியோ
போறது?
நானே உன்னை வேண்டாமுன்னு
சொல்லுறேன்னு பிரகாஷ்ஷை
ஸ்வர்ணா, தூக்கி எறிந்தது
மிகவும் அருமையான செயல்
பொண்டாட்டி, பிள்ளைகள்
இருக்கும் பொழுது இன்னொரு
பெண்ணைப் பார்க்கும், சில
ஆண் ஜென்மங்களுக்கு
சரியான செருப்படிப்பா,
ரம்யா டியர்

பிரகாஷ், நீலிமா இருவருக்கும்
காலங்கடந்த ஞானோதயம்
வந்து என்ன பிரயோஜனம்?
உப்பைத் தின்னவன் தண்ணி
குடிச்சுத்தான் ஆகணும்ப்பா

இந்தக் கதையைப் படித்து
சில குடும்பங்கள், வேண்டாம்
ஒரு ஆணாவது திருந்தி
ஒரு குடும்பமாவது நேரானால்
எனக்கு ரொம்பவே சந்தோஷம்,
ரம்யா ராஜன் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அந்தக் "கண்டுகொண்டேன்
காதலை" ஹீரோயின் சுமித்ராவை
விட இந்த "பனி சிந்தும் சூரியனே"
ஹீரோயின் அபர்ணா,
ரொம்பவும் அருமையான
மருமகளாக இருக்கிறாளே?

மற்றவர்களைப் போல
நீலிமாவை வைத்து நானும்
முதலில் அபர்ணாவைப்
பார்த்து ஸ்வர்ணாவுக்கு
இவளால் என்னல்லாம்
பிரச்சனை வருமோன்னு
நானும் பயந்தேன்

ஆனால், ஸ்வர்ணா பார்த்த
பிரவீணா கொண்டு வந்த
அந்த சுஷ்மிதாவா?
சொரைக்காயா?
அவளை விட தான் ஒரு நல்ல
மருமகள்
ஒரு நல்ல குடும்ப இஸ்திரீ
ஒரு சிறந்த குடும்ப
குத்துவிளக்கு-ன்னு அபர்ணா
எல்லோருக்கும் நிரூபித்து
விட்டாள்

நூலைப் போல சேலை
தாயைப் போல பெண்-னு
நிரூபித்து இவளைப் பார்த்து
பயந்த அகிலாண்டேஸ்வரி
பாட்டியிடமே நல்ல பெயர்
வாங்கி விட்டாள், அபர்ணா
சுகன்யாவின் வளர்ப்பு
வீண் போகவில்லை

நல்லதொரு அருமையான
நாவலைத் தந்ததற்கு
உங்களுக்கு என்னுடைய
மனமார்ந்த வாழ்த்துக்கள்,
ரம்யா ராஜன் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top