Ramya Rajan's Kannaana Kanney P1

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
Hi Friends,

Intha maamiyaar marumgal kathaiyaa eluthi enake bore adichchiduchchu... So different story, different location. eppadi varumnnu enakume theriyalai....

நியூ ஜெர்சி நகரம் உறங்கும் நேரம், ஆனால் சாலையில் இன்னும் ஆட்களின் நடமாட்டம் இருக்க, வாகனங்களும் போய் வந்து கொண்டிருந்தது.
யார் இருக்கிறார்கள் இல்லை என எந்த கவலையும் இல்லாமல், குளிருக்கு இதமாக தலை முதல் தொடை வரை மறைக்கும்படியான கருப்பு நிற உள்ளன் ஜாக்கெட் அணிந்து, விரித்து விட்டிருந்த கூந்தள் துள்ள, நடந்து வந்தவளின் முகம் மட்டும், மேகத்திற்குள் இருந்து எட்டி பார்க்கும் நிலவு போல இருந்தது.
அவள் நியதி, பேருக்கு ஏற்றார்போல கட்டுப்பாடும், ஒழுக்க சிந்தனைகளும் உடையவள். பார்பதற்கு எளிதாக தெரிந்தாலும், பழக எளிதானவள் அல்ல.
குளிர் நிலவு என அருகில் செல்ல நினைத்தால்... சுடும் நிலவு என புரியவைப்பாள். எதிலும் ஒரு வரையறை கொண்டவள், உணவு விஷயத்தில் மட்டும் எந்த வரையறையும் வைத்துக் கொள்வது இல்லை.


***************************************************************************************************************

தன் பெயரை அவர்கள் வேறு விதமாக உச்சரிப்பதில், எப்போதும் போல இன்றும் தன் கோழி குண்டு கண்களை குறும்பாக உருட்டினாள்.
“மை நேம் இஸ் நியதி.” என்றவள், “இட்ஸ் ஓகே... கேன் ஐ கெட் சம்திங் டு ஈட்...” என புன்னகைக்க,
அவள் வந்ததைப் பார்த்ததுமே, அவள் விரும்பி உண்ணும் சேண்ட்விச்சும், சாக்லேட் டிரிங்கும் கொண்டு வந்து ஜேன் வைக்க,
“தேங்க் யூ...” என்றவள், அங்கிருந்த மேஜையில் உட்கார்ந்து சாப்பிட, உணவகத்தை சுத்தபடுத்தும் வேலையை ஜேன்னும் அவர் மனைவியும் செய்தனர்.
அவர்கள் வேலையை முடிக்கும் வரை பொறுமையாக உண்டவள், அவர்கள் கடை மூடி கிளம்பும் போதுதான் அவளும் அவர்களிடம் விடைபெற்றாள்.


******************************************************************************************************************

அன்று இரவும் வழக்கம் போல அலுவலகத்தில் இருந்து தாமதமாக கிளம்பியவள், ரயிலில் இருந்து இறங்கி மெதுவாக நடந்து சென்றாள்.
ஏனோ இன்று யாரோ தன்னை தொடர்வது போல, எதுவோ அவள் முதுகுகை துளைப்பது போல உணர்ந்தவள், சட்டென்று திரும்பி பார்த்தாள்.
இவள் பார்க்கும்போது சாலையில் தூரத்தில் ஒருவன் திரும்பி நின்று போன் பேசிக் கொண்டு இருந்தான்.


உடை மாற்றி டிவி போட்டுக் கொண்டு அமர்ந்தவள், கொஞ்ச நேரம் டிவி பார்த்தாள். அலுவலகத்தில் எட்டு மணிக்கு சாப்பிட்டது, இப்போது எதாவது சாப்பிட்டால் தான் உறக்கம் வரும் என நினைத்தவள், எழுந்து சென்று சூடான சாக்லேட் பானம் கலந்து எடுத்து வந்து டிவி பார்த்தபடி அருந்தினாள்.

******************************************************************************************************************
 

Joher

Well-Known Member
Tks Ramya......

நியதி...... பேருக்கேற்றாற்போல கட்டுப்பாடு சாப்பாட்டை தவிர......
சுடும் நிலவு...... இதை தான் நான் தேடுறேன்.......

மாமியார் போராடிச்சுதுன்னு மாமியார் இல்லாத ஊருக்கு போய்ட்டீங்களா?????

Follow பண்ணுறது யார்?
கிட்ட வந்தால் சுட்டுடுவாளா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top