Ramadan 2020- Prophet Ilyas- day 28

Advertisement

fathima.ar

Well-Known Member
ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித சமுதாயத்தை நேரான பாதையில் கொண்டு செல்ல அல்லாஹ் அவனது தூதர்கள் மூலம் ஓர் இறை கொள்கையை எத்தி வைத்தான்..

ஆதம் நபியில இருந்த நபிகள் வரலாறும் வாழ்ந்த முறையும் பார்த்துட்டு வந்தோம்‌.

குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள நபிமார்களின் எண்ணிக்கை 25

நபி துல்கிஃப்ல்

அதில் நபி துல்கிஃப்ல் இவரை பற்றி அதிகம் குறிப்பிட படவில்லை

இன்னும்: இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிஃப்லையும் (நபியே! நீர் நினைவு கூர்வீராக); அவர்கள் யாவரும் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவர்களே!


இன்னும் (நபியே!) நினைவு கூர்வீராக; இஸ்மாயீலையும், அல்யஸவுவையும், துல்கிஃப்லையும் - (இவர்கள்) எல்லோரும் நல்லோர்களில் உள்ளவராகவே இருந்தனர்
surah sad 38:48

நபி அல்யஸவு

இவர்களும் ஒரு இறைதூதர் தான் இவரை பற்றியும் அதிக தகவல்கள் குறிப்பிட படவில்லை... 38:28.. surah sad..

இன்னும் இஸ்மாயீல், அல்யஸஉ, யூனுஸ், லூத் - இவர்கள் யாவரையும் உலகத்திலுள்ள அனைவரிலும் மேன்மையாக்கினோம். Surah Al Anaam 6:86..

நபி இல்யாஸ்.

நபி இல்யாஸ் அவர்கள் நபி ஹாரூன் அவர்களின் வழித்தோன்றல் ஆவார்கள் அன்றைய ஷாம்(சிரியா) நாட்டு மக்களுக்கு நபியாக அனுப்பப்பட்டார்

இவரது சமூக மக்கள் சிலை வழிபாட்டில் ஈடுபட்டு இருந்தார்கள் குறிப்பாக ப‌அலு' என்று அழைக்கப்படக்கூடிய சிலையை தீவிரமாக வணங்கி கொண்டிருந்தார்கள்..

இவர்களை சீர்திருத்துவதற்காக நபி இல்யாஸ் அலைவஸல்லம் அரும்பாடுபட்டார்கள் என்றாலும் அம்மக்கள் அவரை நம்பிக்கை கொள்ளாது புறக்கணித்தனர்..


37:123. மேலும், நிச்சயமாக இல்யாஸும் முர்ஸல்(களில் - தூதராக அனுப்பப்பட்டவர்)களில் ஒருவர் தாம்.

அவர் தம் சமூகத்தவரிடம்: “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று (போதித்துச்) சொல்லியதை (நினைவு கூர்வீராக).

“நீங்கள் படைப்பவர்களில் மிகச் சிறப்பானவனை விட்டு விட்டு “பஃலு” (எனும் சிலையை) வணங்குகிறீர்களா?

“அல்லாஹ்தான் - உங்களுடைய இறைவனும், உங்களுடைய முன் சென்ற மூதாதையர்களின் இறைவனும் ஆவான்.”

ஆனால் அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆகையால், அவர்கள் (மறுமையில் இறைவன் முன்னே தண்டனைக்காக) நிச்சயமாக கொண்டு வரப்படுவார்கள்.


மேலும், நாம் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்:

“ஸலாமுன் அலா இல்யாஸீன்” இல்யாஸீன் மீது ஸலாமுண்டாவதாக.


இவ்வாறே நன்மை செய்வோருக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுக்கிறோம்.
அல் குர்ஆன் 37: 123-131



இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் - இவர்கள் யாவரும் (நேர் வழிசார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே
Surah Al Anaam verse 85
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
இன்று பதிவு ரத்தின சுருக்கமாக உள்ளது.

நன்றி ஃபாத்திமா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top