Ramadan 2020- Prophet Dawood- Day 23

Advertisement

fathima.ar

Well-Known Member
மன்னர் தாலூத்தின் மறைவிற்குப் பின்னர் தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முழு இராஜ்ஜியத்திற்கும் அதிபதியாகி, இஸ்ரவேலர்களின் தலைவரானார்கள்.
இந்த சமயத்தில்தான் அல்லாஹ் தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்களை தனது நபியாக பிரகடனப்படுத்தினான். பனீ இஸ்ரவேலர்களில் ஒரே சமயத்தில் யாரும் அரசராகவும், நபியாகவும் இருந்ததில்லை. தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அரசராகி 40வருடங்களுக்குப் பின் தான் நபிப்பட்டம் கிடைத்தது என்றும், இது கி.மு.990ஆம் ஆண்டில் நிகழ்ந்தது என்றும் குறிப்பில் காணப்படுகிறது.
அன்னாருக்கு ஜபூர் என்ற வேதத்தையும் கொடுத்தான். இதில் 150அத்தியாயங்கள் இருந்தன. அவற்றில் 50அத்தியாயங்களில் புக்துநஸர் பற்றியும், பாபில் நகர மக்களைப் பற்றியும், 50அத்தியாயங்களில் ரூம், ஈரான் நாட்டு மக்களைப் பற்றியும், மீதமுள்ள 50அத்தியாங்களில் பொதுவான அறிவுரைகள் பற்றியும் கூறப்பட்டிருந்தன. ஹலால் ஹராம் பற்றி குறிப்பிடப்படவில்லை. பெரும்பாலான வசனங்கள் தியானத்தைப் பற்றியும், அவனது புகழைப் பற்றியும் இருந்தன. இந்த வேதத்தை 72வகையான இராகத்தில் ஓத அல்லாஹ் தாவூது நபிக்கு கற்றுக் கொடுத்திருந்தான். அவர்கள் தங்கள் இனிமையான குரலைக் கொண்டு ஓதினால் அதனைக் கேட்கும் மனித இனம்,பறவை இனம் எல்லோரும் மெய்மறந்து விடுவர். அந்த இனிய குரல் நெடுந்தூரம் வரை கேட்கும் சக்தியை அல்லாஹ் அளித்திருந்தான்.
இதனைக் கண்டு பொறாமை கொண்ட இப்லீஸ் இசைக்கருவிகளை தயாரித்து அதன்மூலம் எழும் சப்தத்தால் மக்களை கவர்ந்திழுக்க ஆரம்பித்தான்.
ஹழ்ரத் தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்கள்; எப்போதும் இறைதியாத்திலேயே மூழ்கியவர்களாக இருந்தார்கள். ஒருநாள்விட்டு ஒருநாள் நோன்பு பிடிக்கக் கூடியவர்களாகவும்> இரவு நேரங்களில் அதிகநேரம் விழித்திருந்து வணங்கக் கூடியவர்களாகவும் இருந்தார்கள்.
இரவு நேரங்களில் மாறு வேடம் பூண்டு மக்களின் குறையறிய நகர்வலம் வருவார்கள். ஏதேனும் குறை கண்டால் உடனே அதனை நிவர்த்தி செய்து வந்தார்கள். அல்லாஹ் அவர்களுக்கு இரும்பை மெழுகுபோல் ஆக்கும் சக்தியைக் கொடுத்திருந்தான். படைவீரர்கள் அணியும் கவசங்களை செய்து அதனை விற்று அதிலிருந்து வரும் வருவாயைக் கொண்டு தங்கள் குடும்பச் செலவை பார்த்துக் கொண்டார்கள். அரச கஜானாவிலிருந்து எதையும் அவர்கள் தமது சொந்தத்திற்காக செலவு செய்யவில்லை.
ஹழ்ரத் தாவூது அலைஹிஸ்ஸாம் அவர்களுக்கு ஒரு அற்புதமான சங்கிலியை அல்லாஹ் வழங்கியிருந்தான். இதன் ஒரு முனை வானத்தை நோக்கியும் மறுமுனை தாவூது நபி அவர்களின் அரண்மனைக்குள்ளும் தொங்கிக் கொண்டிருந்தது. நோயுற்றவர்கள் இதனைத் தொட்டால் அவர்கள் நோய் நிவர்த்தியாகிவிடும். சில சதிகாரர்கள் செய்த சதியின் காரணமாக அல்லாஹ் அந்தச் சங்கிலியை மறையச் செய்து விட்டான்.
தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் வாழ்ந்து வந்த ஊரியா என்பவரின் பத்தஷாயஃ அழகெல்லாம் திரண்ட பெரும் அழகி. இவரின் பெயர் நஸாயிஹ் என்றும் இவரின் தந்தையின் பெயர் ஷாபாஹ் என்றும் கூறப்படுகிறது.
ஒருநாள் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனை நோக்கி நீ என்ன காரணத்திற்காக எனக்கு முன்புள்ள நபிமார்களுக்கு உன் அருட்பேற்றினை வழங்கினாய்? என்று வினா, ‘ நான் அவர்களைப் பற்பல சோதனைகளால் சோதித்தேன். அவற்றையெல்லாம் அவர்கள் வென்று நின்றார்கள். அதன்காரணமாகத்தான் நான் அவர்கள் மீது என் அருள்மாரியைச் சொரிந்தேன். என்று பதிலிறுத்தான். அதுகேட்டதும் தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்களும் தமக்கும் அத்தகு சோதனைகளை இறக்கி வைக்குமாறும் தாம் அவற்றைப் பொறுமையுடன் ஏற்று இறைவனின் பேரருளுக்கு பாத்திரமானவனாக விரும்புவதாகவும் கூறினர்.
அதற்கு இறைவன் ‘மகிழ்ச்சிக்குப் பதிலாக சோதனையையா விரும்புகிறீர்கள். நல்லது. நீர் எச்சரிக்கையுடன் இரும். இன்ன நாளில் உமக்குச் சோதனை வந்து சேரும் என்று கூறினான்.
ரஜப் மாதம் 27ஆம் தேதி புதன் கிழமை அன்று தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் திருமறையை ஓதிக் கொண்டிருக்கும்போது பொன்னிறத்துப் பறவை ஒன்று உள்ளே நுழைந்தது. அதனுடைய அழகைப் பார்த்து வியந்த அவர்கள்> தம்முடைய சின்னஞ்சிறு மகனுக்கு விளையாட கொடுக்க எண்ணி அதனை பிடிக்க முயன்றபோது அது பறந்து சென்றது. அது எங்கே செல்கிறது என்பதை அறிய உப்பரிகை மீது ஏறி நின்ற அவர்கள் சற்று தொலைவில் உள்ள வீட்டில் குளித்துக் கொண்டிருந்த ஓர் பெண்ணின் மீது அவர்கள் பார்வை விழுந்தது. கீழே இறங்கி வந்த அவர்கள் அந்தப்புரத்தை அணுகி வேலையாட்களை அனுப்பி அவளைப் பற்றி விசாரித்து வரச் சொன்னார்கள். அவள் ஊரியா என்பவரின் மனைவி என்று தெரியவந்தது.
உடனே தாவூது நபி ஊரியாவை அழைத்து அவர் தம் மனைவியை மணவிடுதலை செய்து விடுமாறும், தாம் அவளை மணந்து கொள்ள விரும்புவதாகவும் சொன்னார்கள். அதனை அவர் ஏற்றுக் கொண்டார். அதனை பத்தஷாயஃ அறிந்ததும் தாவூது அலைஹிஸ்ஸலாம் மூலம் தமக்குப் பிறக்கும் குழந்தைக்கே அரியணை வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்கு இணங்கி அவரை அவர்கள் மணம் முடித்துக் கொண்டனர். அவர்களுக்குப் பிறந்த மகன்தான் ஹழரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.
ஊரியாவின் அடக்கவிடம் ஜோர்டானில் உள்ள அம்மானில் இருக்கிறது.
அந்த வழக்காளிகளின் செய்தி உமக்கு வந்ததா? அவர்கள் (தாவூது இறைவணக்கத்திற்காக அமர்ந்திருந்த) மிஹ்ராபின் சவரைத்தாண்டி – 38:22
தாவூதிடம் நுழைந்த போது அவர் அவர்களைக் கண்டு திடுக்குற்றார் அப்போது அவர்கள் கூறினார்கள் ‘பயப்படாதீர்! நாங்களிருவரும்வழக்காளிகள் எங்களில் ஒருவர் மற்றவர் மீது அநீதம் செய்திருக்கிறார் எங்களிருவருக்கிடையில் நீதத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக! (அதில்) தவறிழைத்து விடாதீர்! எங்களைச் செவ்வையான பாதைக்கு நேர்வழி காட்டுவீராக!’ 38:23
(அவர்களில் ஒருவர் கூறினார்) ‘நிச்சயமாக இவர் என்னுடைய சகோதரர் இவரிடம் தொண்ணூற்றொன்பது ஆடுகள் இருக்கின்றன்ஆனால் என்னிடம் ஒரே ஓர் ஆடுதான் இருக்கிறது அவர் அதனையும் தனக்குக் கொடுத்துவிட வேண்டுமெச் சொல்லிஇ வாதத்தில் என்னைமிகைத்து விட்டார்.’ 38:24
(அதற்கு தாவூது) ‘உமமுடைய ஆட்டை அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படிக் கேட்டது கொண்டு நிச்யசமாக அவர்உம்மீது அநியாயம் செய்து விட்டார் நிச்சயமாகக் கூட்டாளிகளில் பெரும்பாலோர் – அவர்களில் சிலர் சிலரை மோசம் செய்து விடுகின்றனர்ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்பவர்களைத் தவிர் இத்தகையவர் சிலரே’ என்று கூறினார் இதற்குள் ‘நிச்சயமாக நாமே அவரைச் சோதித்து விட்டோம்’ என்று தாவூது எண்ணித் தம்முடைய இறைவனிடம் மன்னிப்பு கோரிக் குனிந்து விழுந்தவராக இறைவனை நோக்கினார். 38:25
ஆகவே, நாம் அவருக்கு அ(க் குற்றத்)தை மன்னத்தோம் அன்றியும், நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் நெருங்கிய (அந்தஸ்)தும், அழகிய இருப்பிடமும் உண்டு.
தப்ஸீர் மதாரிக்கில் காணப்படுகிறது: ஹழ்ரத் தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் பனீ இஸ்ரவேலர்களுக்கு வெள்ளிக்கிழமையை வணங்கக் கூடிய தினமாக ஆக்கப்பட்டிருந்தது. ஆனால். பனீ இஸ்ரவேலர்கள் வெள்ளிக்கிழமையை விட்டு விட்டு சனிக்கிழமையைத் தங்கள் வணக்கத்தினமாக மாற்றிக் கொண்டனர். சனிக்கிழமைகளில் மீன் பிடிப்பதையும், உலக சம்பந்தமான காரியங்களில் ஈடுபடுவதையும் அல்லாஹ் அவர்களுக்கு தடுத்திருந்தான். அதனையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை.
ஈலா நகரத்தில் வாழ்ந்த பனீ இஸ்ரவேலர்களை அல்லாஹ் அவர்களை சோதிக்க விரும்பி மீன் பிடிக்கத் தடை செய்யப்பட்ட சனிக்கிழமையன்று கடலில் அதிக மீன்களைத் தண்ணீர் மட்டத்திற்கு மேல் தலை தூக்கி வரச் செய்தான். இதனைக் கண்ட பனீ இஸ்ரவேலர்கள் பேராசைபட்டு கடற்கரையையொட்டி ஒரு தண்ணீர் தடாகத்தைக் கட்டி சனிக்கிழமையன்று அந்தமீன்களையெல்லாம் அந்த தடாகத்தில் விழச் செய்து ஞாயிற்றுக் கிழமை காலையில் அந்த மீன்களை பிடித்து விற்பனை செய்து வந்தனர்.
பனீ இஸ்ரவேலர்களில் அல்லாஹ்விற்கு மாறு செய்வதில் கொஞ்சம்கூட பயப்படாதவர்களான ஒரு வகையினரும் இத்தகைய குற்றங்களை கண்டிக்கக் கூடியவர்களும் அல்லாஹ்வின் தண்டனையை எச்சரிக்கை செய்யக் கூடியவர்களானவர்களும் எதிலும் சம்பந்தப்படாமல் தான் உண்டு தன்வேலையுண்டு என்று இருந்தவர்களுமான மூன்று வகையினர் இருந்தனர்.
ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமை மீன் பிடிக்க முதலாம் வகையை சார்ந்தவர்கள் வராது போகவே அவர்களை பார்க்க சென்ற மற்றப் பிரிவினர் அவர்களில் வயதானவர்களை பன்றிகளாகவும்> வாலிபர்களை குரங்குகளாகவும் மாறியிருக்க கண்டனர். இவ்வாறு இவர்கள் மூன்று தினங்கள் இருந்து இறந்தனர். இது சுமார் 70000பேர்கள் என்று சரித்திரம் கூறுகிறது.
தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்தான் பைத்துல் முகத்தஸ் நகரை நிர்மாணித்து அங்கு இறைவனைத் தொழும் பள்ளியின் நிர்மாண வேலைகளையும் துவக்கியவர்கள் ஆவார்கள். பள்ளிக் கட்டக் கட்ட அது நான்கு முறை கீழே வீழ்ந்தது. அப்பொழுது இறைவன்> ‘நீர் இரத்தம் சிந்தினீர். எனவே இரத்தம் சிந்தாத உம் வழித் தோன்றலால் அதனை நான் எழுப்புவேன்’ என்றான். அப்பேறு அன்னாரின் மகனார் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கிடைத்தது.
தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பல மக்கள் இருந்தனர். ஆனால் பத்தஷாயஃவிற்குப் பிறந்த சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மட்டும் சிறு வயது முதல் கல்வி கேள்விகளில் அபாரத் திறமை கொண்டிருந்தார்கள். அரண்மனையிலேயே அவர்கள் ஹழ்ரத் தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஆலோசனைக் கூறுபவர்களாக இருந்தார்கள். பல்வேறு சிக்கலான பிரச்சனைகளை சுமுகமாக தீர்த்து வைத்திருக்கிறார்கள்.

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top