Raasitha's Ninmel Kaadhalaagi Nindren P34

Advertisement

Raasitha

Writers Team
Tamil Novel Writer
கதிரவனின் வார்த்தைகளைக் கிரகிக்க அனைவரும் திடுக்கிடலுடன் அவனைப் பார்க்க, விழியின் கண்களிலோ முதல் முறையாக வலி தோன்றியது. அதைக் கண்டுகொண்ட கதிரவன், முகத்தை வேறுபுறமாகத் திரும்பியபடி, "சொல்றேன்ல...உன்னோட துனிமையெல்லாம் எடுத்து வச்சுக்கோ" என மீண்டும் சொல்ல, விழியோ தந்தைக்கும் கணவனுக்கும் இடையே தடுமாறித்தான் போனாள்.

இதற்கிடையில் விஷயம் காட்டுத்தீயாகப் பரவியிருக்க, பாண்டியும் சக்கரையும் அடித்துப் பிடித்து வந்தனர். அவர்களுக்கும் விழியின் நிலைமை வருத்தத்தைத் தந்தது.

"என்னங்க..." என ஏதோ கூறவர, கை அமர்த்திப் போதும் என்பதாய் தடுத்தவன், "சொன்னா புரியாதா..போ உன்னோட ட்ரெஸ்ஸ எடுத்து வை. அப்படியே எனக்கும்..." எனக் கூற, அவன் கூறியதில் மற்றவர்கள் குழப்பத்துடன் பார்க்க, பாண்டியோ, "வீட்டைவிட்டு தொரத்தப்படுறவங்க தானே பொட்டிய கட்டணும். இங்க என்ன துரத்தி விடறவனும் பொட்டிய கட்ட சொல்றான்? புதுத் தினுசா இருக்கே" எனக் குழம்ப, விழியின் கண்கள் புரியாமல் கதிரவனைப் பார்க்க, இப்போது கந்தசாமி பேசினார்.
----------------------------------------------------------------------------------------------------------------------

"பொண்ணு இப்படிச் சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிக்கிட்டா எல்லாருக்கும் கோபம் வரது சகஜம் தான். அது தான் நியாயமும் கூட. ஆனா அதுக்காக..." எனக் கதிரவன் தொடங்க, கந்தசாமியோ, "பொண்ணு சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டானு எனக்குக் கோபமில்லை. தாலி கட்டுனவருக்கே சொல்லாம தாலி கட்டிக்கிட்டாளேன்னு தான் வருத்தம்" என நிதானமாகச் சொல்ல, கதிரவனுள் அப்படியொரு அதிர்ச்சி....

"அப்படினா...உங்களுக்கு ?" எனக் கேட்க, அவரோ, "ஆமா...எனக்கு தெரியும்....ஆனா எனக்குப் புரியாதது, கட்டினவனுக்கும் பிடிக்காம பெத்தவங்களுக்கும் தெரியாம ஏன் இப்படிச் செய்யணும் ? ஏன் செஞ்சான்னு காரணம் தெரிஞ்சாலும் அத வச்சு என்ன செய்ய முடியும்னு நினைக்கிறீங்க ? உங்ககிட்ட மறைக்க என்ன இருக்கு ? கோபத்தையும் மீறின பயம் எனக்கு இருக்கு...

பொய்ல வாழக்கை ஆரம்பிக்குமா ?" என முகம் வேதனையில் கசங்க கூறியவரை ஆச்சர்யமாகப் பார்த்தான்.

------------------------------------------------------------------------------------------------------------------------
நின்ற இடத்திலிருந்தே கந்தசாமி மச்சக்காளையிடம், "என்னதான் எனக்கு என்னோட மகளுக்கும் கசப்பு இருந்தாலும், அவளோட வாழ்க்கையை எப்படி வாழுறானு மூணா மனுஷன் சொல்லி நான் நம்பமாட்டேன்.

அதுமட்டுமில்ல, பிடிச்சாலும் பிடிக்காட்டியும் பொம்பள பிள்ளையோட மறவாத குலைய கூடாதுனு நினைக்கிறவரு என்னோட மாப்பிள்ளை.

எம் பொன்னும் மரியாதை இல்லாத இடத்துல அவ இருக்க வாய்ப்பே இல்ல. அடுத்தமுறை பொருந்துறது போல ஜோடிக்கக் கத்துக்கோங்க...." எனச் சொல்ல, லிங்கம் பாரிஜாதத்தைப் பார்த்த பார்வையில் தலையைக் கவிழ்ந்தபடி செல்ல, மச்சக்காளையும் பின்னோடு சென்றார். போவதற்கு முன்னால் சாந்தினியை ஒரு முறை ஏக்கமாகப் பார்க்க, அவளோ சட்டென்று முகத்தை வேறு புறம் திருப்பிக்கொள்ள, அந்த நிமிடம் மச்சக்காளைக்கும் பாரிஜாதத்திற்கும் ரண வேதனையைத் தந்தது... இனியாவது பணத்தை விட உறவுகளை முக்கியமென்று அவர்கள் உணர்ந்துகொள்வார்களா என்பதைக் காலம் தான் தீர்மானிக்கும்.

------------------------------------------------------------------------------------------------------------------------
விழியினுள் அப்படியொரு அழுகை. இதுவரை அவள் அழுதே பார்த்திராத அனைவரும் அவளது அழுகையைக் கண்டு பதறி போயினர். ஏன் பெற்றவர்கள் ஆகினும் ஒரு வயதிற்கு மேல் அவர்கள் முன்னிலையில் கூட விழி அழுததே இல்லை.

தேவியே அவள் இப்படிக் கத்தி அழுது பார்த்ததே இல்லை...என்னவோ ஏதோவென்று அவளருகில் வர, அவளோ, "பாப்பா...என்ன ஆச்சு சொல்லு..." எனப் படபடப்பாகக் கேட்க, "நிஜமாவே என்ன மன்னிச்சுடீங்களா பா ? " எனத் தேம்பலுடனே கேட்க
 

Riy

Writers Team
Tamil Novel Writer
கதிரு நா சொன்ன மாதிரியே ஆகிடுச்சு.... ஹா...ஹா..

அப்படி போடுங்க கந்தசாமி... உங்க பொண்ண பத்தி தெரியாதா அவனுங்க சொன்னா நம்பி வந்திடுவீங்களா..விழிய இப்படி வளர்த்த நீங்க தப்பா எப்படி யோசிப்பீங்க...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top