Promo 3 - இதய கூட்டில் அவள்

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
“அக்கா...”

“வெற்றி சொல்லு எப்படி இருக்க?”

“நல்லா இருக்கேன். நீ அத்தான் பசங்க எல்லாம் சவுக்கியமா?”

“நல்லா இருக்கோம். அப்புறம் ஆதிரை அருண் எல்லாம் எப்படி இருக்காங்க?”

“ம்ம்.. நல்லா இருக்காங்க. அம்மாவை கேட்கலை?”

“அம்மா தான் என்கிட்டே தினமும் பேசுறாங்களே?”

“பொங்கலுக்கு நம்ம வீட்டுக்கு வரலாமே அக்கா?”

“இல்லைடா உங்க அத்தான் ரொம்ப பிஸி. பசங்களுக்கும் கிளாஸ் இருக்கு.”

“அம்மாவை அங்க ரெண்டு நாள் அனுப்பவா?”

“ஏன் கேட்டுட்டு இருக்க அனுப்பி வை.”

“பொங்கல் முடிஞ்சு தோட்டத்தில வேலை இல்லை. ஆளுங்களும் வேலைக்கு வர மாட்டாங்க. அதுதான் எங்காவது சுத்தி பார்க்க போகலாம்னு நினைச்சேன். அம்மா இங்க தனியா இருக்க யோசிப்பாங்க.”

“ஆமாம் நீங்களும் இந்த நேரம் போனாத்தான் உண்டு. நானே அம்மாவை பொங்கலுக்கு வாங்கன்னு கூப்பிடுறேன்.”
***********************************************************************************************************

“அடப்பாவி, எங்க அம்மா சமையல் உனக்கு பிடிக்கலையா?” என வெற்றி சிரிக்க, மகனும் சேர்ந்து சிரித்தான்.

“கோபமா ஆதி.” என வெற்றி மனைவியின் முகம் பார்க்க,

“எதுக்கு உங்க அம்மா சொன்னதுக்கா... அது எனக்கு பழகி போச்சு. நான் இதுக்கெல்லாம் டென்ஷன் ஆனேன் அப்புறம் இந்த வீட்ல நான் இருக்கவே முடியாது.” என்றாள்.

வெற்றி சிறிது நேரம் அமைதியாக இருந்தவன், “நேத்து நைட்டும் நீ தூங்க லேட் ஆச்சு. இன்னைக்கு பகல்லையும் நீ ரெஸ்ட் எடுக்கலை. நான் இப்ப சாப்பிட்டதே வயிறு நிறைய இருக்கு. நைட் வெளிய ரெண்டு இட்லி மட்டும் சாப்பிட்டுகிறேன். நீ எனக்காக காத்திருக்காம, சீக்கிரம் சாப்பிட்டு அருணோட படுத்துக்கோ.”

“சரி... ஆனா நீங்க சாப்பிடணும்.”

“கண்டிப்பா...” என்றவன், மனைவி மகனிடம் விடைபெற்று மில்லுக்கு சென்றான்.

*****************************************************************************************************************

“மூனார் போறோமா எப்போ?”

“உன் வீட்டுக்காரர் சொல்லலை...”

“இல்லையே... அவர் என்னைக்கு சொல்லி இருக்கார், இன்னைக்கு சொல்ல. இவகிட்ட எல்லாம் சொல்லனுமான்னு அலட்சியம் வேற என்ன?” என வனிதா பொரிய தொடங்க....

“அது எப்படி சொல்லாம இருப்பாங்க. இனிதான் சொல்வாரா இருக்கும். நேத்து அவங்க பேசும்போது நானும் தோட்டத்தில இருந்தேன். அதுதான் எனக்கு தெரியும். நான் சுடிதார் தான் எடுத்துக்கிறேன். அதோட குளிர் வேற இருக்கும் மறக்காம ஸ்வெட்டர் எடுத்து வச்சுக்கோ. அதை சொல்லத்தான் போன் பண்ணேன் வச்சிடுறேன்.”

தான் ஆர்வக்கோளாறில் சொன்னது கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனையை உருவாக்கி விடுமோ என ஆதிரைக்கு கொஞ்சம் பயமாகவே இருந்தது. அவள் பயம் உண்மையானது.

***************************************************************************************************************

“என்கிட்டே வர விருப்பமா, போகலாம்ன்னு எல்லாம் கேட்கலை.. எல்லாம் முடிவு பண்ணிட்டு தகவல் மட்டும் சொல்றீங்க. ஆதிரை முடிவு பண்ணா போதும். நான் முடிவு பண்ண வேண்டாம்.”

“மூனார் போகலாம்னு சொன்னது நானோ ஆதிரையோ இல்லை. வெற்றிதான் போகலாம்னு சொன்னான். அப்போ ஆதிரை அங்க இருந்ததுனால அவளுக்கு தெரியும். நான் வேலையில உன்கிட்ட சொல்ல மறந்திட்டேன் இதுதான் விஷயம்.”

“நான் நம்பிட்டேன்.” என வனிதா முறைத்தபடி சொல்ல..

“நீ நம்பு நம்பாம போ... எனக்கு ஒன்னும் இல்லை.” என்றான் விக்ரம் அலட்சியமாக.
 

Joher

Well-Known Member
:love::love::love:

ஆதிரைக்கு எதிரா மாமியார் மட்டுமில்லை வனிதாவும் இருக்கிறா போல.......
தெரிந்ததை சொன்னாலும் குற்றம்.......
சொல்லலைனாலும் குற்றம்......

அக்கா ஓகே சொல்லிட்டாங்க....... மாமியார் விஷயம் தெரியும் போது என்ன சொல்லப்போறாங்களோ???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top