PROMO - நீ என் காதலியானால் 14

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
#1
நீ என் காதலியானால் 14

ஒரு எட்டு மணி ஆகும்போது அலரை எழுப்ப…கடினப்பட்டு கண்களைப் பிரித்தெடுத்தவளுக்கு இவன் கண்ணுக்கு இதமாய் கிளம்பி இருப்பதைப் பார்க்கவும் ஒரு ரசிக்கும் புன்னகை இதழில் வந்து ஒட்டிக்கொள்ள..

“எங்க கிளம்பிட்டீங்க….காலையில…?” என்று கேட்க

“ஈசிஆர் போகனும்ல அலர்…” என்று அதிரன் சொல்லவும்

“சரி….போயிட்டு வாங்க…” என்றவள் மீண்டும் திரும்பி படுத்து கொள்ள..அதிரனுக்கு கோபம் வேண்டுமென்றே செய்கிறாளோ என…

--------------------------------------------------------------------------------

“டேய்…அங்க பாரு…” என்று ப்ரபு அதிரனின் கையை சுரண்ட…

“என்னடா…?” என்றபடி அதிரன் ப்ரபு காட்டிய திசையில் பார்க்க…அர்த்தமன் வந்து கொண்டிருந்தான்.

அதிரன் எதிர்ப்பார்க்கவே இல்லை..அவன் வருவான் என..ஆனாலும் மனதில் கோபம் குறையவில்லை.அதற்குள் செல்வா,கிரண் இருவரும் வந்துவிட,

ஸ்வாதி தான் ,” ஹாய்..ஏசி…என்ன வரமாட்டேன்னு சொன்னீங்கன்னு ப்ரபு ரொம்ப புலம்பினார்….கரெக்டா வந்துட்டீங்களே….” என்று பேச…அவளோடு பேசினாலும் அர்த்தமனின் பார்வை அதிரனையும் ப்ரபுவையும் வட்டமிட..அதையெல்லாம் அலர் பார்த்து கொண்டிருந்தாள்.

------------------------------------------------------------------------

அலருக்கே அர்த்தமனின் பார்வை ஒரு சங்கடத்தை தர,அதிரனிடம் மெதுவாக,

“ஏன்…அவன்கிட்ட பேச மாட்டேங்கிறீங்க…நீங்க கூப்பிட்டு தானே வந்தான்…” என்று சொல்ல

“அவனை ரொம்ப எதிர்ப்பார்த்த போல….நான் அவனை வராதன்னு சொல்லிட்டேன்…..” என்று அதிரன் அர்த்தமன் மீதுள்ள கோபத்தில் சொல்ல

“அவனை நான் எதிர்ப்பார்த்தப்ப எல்லாம் அவன் வரலிங்க…அதனால் இப்ப எதிர்ப்பார்க்கல….” என்று அலர் சொல்ல அதில் வருத்தம் என்பதை விட வலி என்பது மிகுதியாக இருந்தது.


------------------------------------------------------------------------------

வேண்டுமேன்றே அலர் பேசவில்லை....வார்த்தைகள் எப்படியோ வந்து விழுந்துவிட்டன..

அவள் பேச்சைக் கேட்ட அதிரனுக்கு சுருக்கென்று இருக்க....அவனும் யோசிக்கவில்லை....அவனாவது கொஞ்சம் நிதானித்திருக்கலாம்.

தவறிய நிதானம் தானே கோபமாகிறது.

அவள் பேச்சைக் கேட்ட அடுத்த நொடி அவள் கன்னத்தில் அறைந்திருந்தான் அதிரன்.
will post epi tmr....as the last epi went so long I stopped...post ur guesses:love::love::love::love::love::love:
friendssss
thankssssss a lotttt
t:love::love::love::love::love::love:
 
#4
யோவ் அதிரன் வக்கீலு
ஆனாலும் உமக்கு கை
ரொம்பவும் நீளம்தான்
அதென்ன ஆன்னா ஊன்னா
பொஞ்சாதி மேல நீயி கை
வைக்கிறது?

அன்னிக்கு அப்படித்தான்
அலர் புள்ளைய அடிச்சே
யாரோ வந்து நிறுத்துடான்னு
சொன்னாங்க
அது யாருன்னு இன்னும்
எங்கள் மாண்புமிகு ஆத்தர்ஜி
எங்களுக்கு சொல்லவில்லை

இப்போ வேற மங்கையை நீயி
கன்னத்துல அறைஞ்சிருக்கே
உன்னோட மனசுல என்னதான்
நீயி நெனைச்சுக்கிட்டிருக்கே,
அதிரன் அமுதவாணன் ஸார்?
 
Last edited:

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
#7
யோவ் அதிரன் வக்கீலு
ஆனாலும் உமக்கு கை
ரொம்பவும் நீளம்தான்
அதென்ன ஆன்னா ஊன்னா
பொஞ்சாதி மேல நீயி கை
வைக்கிறது?

அன்னிக்கு அப்படித்தான்
அலர் புள்ளைய அடிச்சே
யாரோ வந்து நிறுத்துடான்னு
சொன்னாங்க
அது யாருன்னு இன்னும்
எங்கள் மாண்புமிகு ஆத்தர்ஜி
எங்களுக்கு சொல்லவில்லை

இப்போ வேற மங்கையை நீயி
கன்னத்துல அறைஞ்சிருக்கே
உன்னோட மனசுல என்னதான்
நீயி நெனைச்சுக்கிட்டிருக்கே,
அதிரன் அமுதவாணன் ஸார்?

அந்த எபியோட தொடர்ச்சி தான் இது..மொத்தமாவே ஒரே அடி தான் பானுமா...பழைய எபில 13 த்ல உங்கட்ட ஒரு டவுட் கேட்டிருக்கிறேன்..பாருங்க ப்ளீஸ்
 
pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
#8
மள்ளல் அப்படின்னா strength...நான் பலம் மனதின் மள்ளல்..மனதின் பலம்..மனோபலம் அப்படினு வர மாதிரி சொல்லியிருக்கேன்..

நாலாயிர திவ்விய பிரபந்தம்ல கள்ள விழும் மலர்...இந்த பாட்டு கிடைச்சா சொல்லுங்க யாராச்சும்..அந்த பாசுரத்துல மள்ளல் வருது....நான் note பண்ணி வைச்சிருந்தேன்...இப்ப எங்கன்னு தெரில.

கட்ட மண்ணு மள்ளல் கொட்டிபண்ணு மைவர் - இது திருப்புகழ்ல்ல வருது..

@banumathi jayaraman பானுமா...help me with the meaning.


@தரணி அக்கா...நீங்க சொன்ன மாதிரி மல்லல் - அழகு...பொலிவு...செல்வம்..

பார்த்தேன்...மல்லல் என்றால் வளம்...சேர சோழர் பாண்டியர் ஆண்ட வளமான இடம் மல்லல்..ஆனால் சோழ நாடு பெருவளமை உடையது என்பதால் தான் அங்குள்ள மன்னன் பெயர் கிள்ளி வளவன்..அப்படி எல்லாம் வருதாம்..

மல்லல் மாமலை அக நானூறு...
மல்லல் வளனே - தொல்காப்பியம்.

-source : wikipedia

மல்லன்..- மாமல்லன் வளமான உடற்கட்டு உடையவன் என்பதால் தான் நரசிம்ம வர்மனை மாமல்லன்னு சொல்றோம்.இந்த நரசிம்ம வர்மன் தான் சிவகாமி சபதம் பார்த்திபன் கனவுல எல்லாம் வரவர்.இவரால் தான் மாமல்லபுரம் என்று அழைக்கப்படுகிறது..
(source : -----தமிழக வரலாறு,பார்த்திபன் கனவு,சிவகாமி சபதம்)

next மம்மல் - இப்படி ஒன்னு இருக்கு....மம்மல் என்றால் dusk...evening twilight

காலையில update செய்ற அவசரத்துல இதை போட நேரமில்லை...

thanksssssssssssssssssssssssssss soooooooooooooooooo much alllllllllllll...:love::love::love::love::love::love::love:because of your reciprocation only i am able to come quickly with the next update..Stay tuned..
 
Advertisement

Sponsored