PRECAP: தச்சனின் திருமகள் - 16

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
ஹாய் டியர்ஸ்...

எழுதிட்டே இருக்கேன்... நாளை/நாளை மறுநாள் கண்டிப்பா யூடி உண்டு. அதுக்கு முன்னாடி ஒரு பெரிய ப்ரீகேப் @banumathi jayaraman :love::love::love:

***

குளிரூட்டப்பட்ட உணவு அறை இதமாய் இருக்க நேரே சென்று கைகழுவி விட்டு, எதிரெதிரே அமரும்படி இருந்த இருக்கையை விடுத்து நால்வர் அமரும் இருக்கையில் குந்தவையை சுவரோரம் இருந்த நாற்காலியில் அமரவைத்து அதை ஒட்டியே மற்றொரு நாற்காலியை இழுத்துப்போட்டு அவள் தோள் உரசும்படி அமர்ந்தான் தச்சன்.

‘இதெல்லாம் சரியாப் பண்ணுவான்.’ என்று மீண்டும் குந்தவையின் மனம் நொடித்தது.

“உனக்கு என்ன சாப்பாடு வேணுமோ சொல்லிக்கோ அப்புறம் அதுக்கும் சண்டை பிடிப்ப…” என்று அவள் புறம் திரும்பாமலேயே அவன் சொல்ல, இதழுக்குள் எதுவோ முணுமுணுத்தவள் உணவக ஊழியர் வரவும் தனக்கு தேவையானதை ஆர்டர் செய்தாள்.

தச்சனும் தனக்கு தேவையானதை சொல்லிவிட்டு மெளனம் காக்க, குந்தவை பார்வையை சுற்றும் விரட்டினாள். அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலர் அமர்ந்து உண்டுகொண்டிருக்க வேடிக்கை பார்க்க கூட அங்கொன்றுமில்லை. உடன் இருப்பவனும் அமைதி காக்க அலுப்பு தட்டி நாற்காலியில் நெளிய ஆரம்பித்தாள். பையை நோண்டினாள். எது செய்தாலும் பொழுது நகரமாட்டேன் என்று அடம்பிடிப்பது போலத் தோன்ற, பையிலிருந்து அலைபேசியை எடுத்து ஸ்க்ரீன் லாக்கை எடுக்கும் முன்னர் அதை பிடுங்கினான் தச்சன்.

“எல்லாத்துக்கும் ரூல்ஸ் பேசுவ... போன் யூஸ் பண்ணிட்டு கைகழுவாம அப்படியே சாப்பிடக்கூடாதுனு தெரியாதா?” என்று முறைக்க,

“அதெல்லாம் எனக்குத் தெரியும்… நான் சாப்பிடுறத்துக்கு முன்னாடி திரும்ப அலம்பிப்பேன்.” என்றாள் அவளும் வேண்டுமென்றே…

இருவருமே பேச்சைத் துவங்க இதையொரு சாக்காய் பயன்படுத்திக் கொண்டணரேத் தவிர இரண்டு பேருமே மேல் சொன்னதை பின்பற்றுபவர்கள் இல்லை. அது இருவருக்குமே மற்றவர் உடல்மொழியிலிருந்து புலப்பட்டது. அதே நேரம் ஆர்டர் செய்த உணவுகளும் வந்துவிட கவனம் அதில் சென்றது.

“முதல் முறை இதுமாதிரி நாம வெளியே வந்து சாப்பிடுறோம்!” என்றான் தச்சன் இடையே. ம் மட்டும் கொட்டியவள் கவனம் உணவிலேயே பதிந்திருக்க தன் முழங்கையால் அவளை இடித்தான் தச்சன்.

“முன்ன பின்ன சாப்பாட்டையே பார்த்திராத மாதிரி இப்படி முக்குற?”

“சாப்பிட தானே கூட்டிட்டு வந்த?”

“அதுக்காக அதை மட்டுமேவா செய்வ? கொஞ்சமாச்சும் பக்கத்தில் இருக்கிறவனை பாருடி…”

“என்னால சும்மா ஒண்ணுமில்லாம எல்லாம் யாரையும் பார்க்க முடியாது…” அவனை குத்திக்காட்டும் நோக்கில் அவள் எதுவோ சொல்ல அதை அவனுக்கு ஏற்றமாதிரி மாற்றிக்கொண்டான் தச்சன்.

“நான் சும்மா இல்லடி… டிரஸ் போட்டுதான் இருக்கேன்…” என்று கேலியாய் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கிசுகிசுக்க, நறநறவென பல்லை கடித்து முறைப்புடன் தச்சன் புறம் திரும்பினாள் குந்தவை.

“உன் புத்தி மட்டும் ஏன் இப்படி யோசிக்குதோ தெரியல…”

“உன்னால அப்படி யோசிக்க முடியலைன்னா எல்லோரும் அப்படியே இருப்பாங்களா என்ன?” என்று தச்சன் பரிகாசம் செய்ய எரிச்சல் மெல்ல அவளை சூழ்ந்தது.

“ப்ச்… இப்போ என்ன தான் வேணும் உனக்கு?”

“அதை நான் கேட்கணும். சண்டை போட்டீயே அதுக்கு அப்புறம் ஒரு போன், மெசேஜ் ஏதாவது செஞ்சியா? நான் பேசிடுவேன்னு ஒருநாள் முழுசும் போனை ஆப் பண்ணி தானே வச்சிருந்த?” என்று அவனே குத்திக்காட்ட, அவளுக்கு காரணம் கிடைக்காமலா இருக்கும்!

“மறுநாளே நான் போன் ஆன் பண்ணிட்டேன் ஆனால் அதன்பிறகு ஒருமுறை கூட நீயும் என்னை கூப்பிடல... ஒருநாள் எடுக்கலை உடனே நீயும் இவள் எப்படியோ போகட்டும்னு விட்டுட்ட தானே? சண்டை போட்ட அன்னைக்கு கூட உன்னை சாப்பிடச் சொல்லி நான் மெசேஜ் போட்டேன்.” என்று காரணம் தேடிபிடித்து வம்பிழுத்தாள் குந்தவை.

“நீதான் சண்டையை ஆரம்பிச்ச அப்போ நீதான் சமாதானம் பேசணும். நானே எப்போதும் சமாதானம் பேசணும்னு நினைக்க கூடாது.”

“என்னது ஆரம்பிச்சேனா? நீ பண்ண காரியத்துக்கு வேற எப்படி ரியாக்ட் பண்ண முடியும்? மறுபடி மறுபடி அதை நியாபகப்படுத்தாத எனக்கு வெறியாகுது…”

“ரொம்ப பண்றடி நீ…”

“என்ன பண்ணிட்டேன் நானு? என்கிட்டேயே தைரியமா பொண்ணுகளை சைட் அடிச்சேன்னு சொல்லுவ… லோ ஹிப் பத்தி எங்கிருந்தோ தெரிஞ்சிக்கிட்டு வந்து நான் அப்படி கட்டலைன்னு என் முகத்துக்கு நேராவே குறைபடிப்ப… அதை கேட்டுட்டு என் பிராணநாதரே ரொம்ப நல்ல காரியம் பண்ணி இருக்கீங்கன்னு பாராட்டனுமாக்கும்? இனி ஒருதரம் எவ மேலாவது உன் கண்ணு போச்சு முழியை நொண்டி எடுத்துருவேன் பார்த்துக்கோ…” கட்டளைகள் உரிமையாய், அதிகாரமாய் பிறப்பிக்கப்ட, உதட்டை சுழித்தான் தச்சன். உணவுகள் இவர்களின் பஞ்சாயத்துக்கு இடையில் காய்ந்து போயிருந்தது. பிணக்கிலும் சூழ்நிலை உணர்ந்து இவர்களின் குரல்கள் மெலிதாகவே வெளிவர, மானம் தப்பித்தது.

“நோண்டி எடுத்த பிறகு எங்கடி பார்க்குறது… ஆனாலும் தம்மாந்துண்டு இடுப்புக்கு நீ இம்புட்டு இம்சை செய்யக் கூடாது குந்தவை. அதுவும் வேணுமே நான் தேடித் தேடிப் போய் பார்த்த மாதிரி பேசுற… உன்கிட்ட தான் அதைத் தேடுனேன் மத்தவங்களை முகத்தோட நிறுத்திப்பேன்… மீ ஜென்டில் மேன்…”

“கொழுப்பு அதிகம்டா உனக்கு. எனக்கு பத்திக்கிட்டு வருது… ரோட்டுல போற எவனாது ஒழுக்கம் கெட்டு பார்த்தாலே அவ்வளவு கோபம் வரும்… ஆனால் எனக்கு வாக்கப்படவன் நீ அது மாதிரி இருந்தா… ஸ்… செம்ம காண்டாகுது…” என்று விரல்களை மடித்து பற்களை கடித்தாள் குந்தவை.

“அமைதி அமைதி அமைதியோ அமைதி குந்தவை தேவியாரே… நீங்க ரொம்பபப ஒழுக்கசீலியா இருக்கிறதாலத் தான் இவ்வளவு பிரச்சனையும்.”

“அதனால உன்னை மாதிரி இருக்கச் சொல்றியா?” சீற்றமாய் வந்த அவளது குரலில் சற்று பம்மியவன்,

“இல்லையே… அதாவது என்னை மாதிரியும் நீ இருக்கலாம் தப்பில்லை… நானும் தப்பா நினைக்க மாட்டேன்னு சொல்ல வந்தேன்…”

“கேவலமா இருக்கு உன்னோட ஐடியா…”

“தெரியுதுல்ல… முடிஞ்ச நிகழ்வுகளை மாற்ற நினைக்குறது இயலாத காரியம். அதை பிடிச்சிகிட்டு நீ சண்டை போடுறது அதைவிட மடத்தனம். இதுக்கு மேல என்ன செய்யணும்னு நீயே முடிவு பண்ணிக்கோ.” என்றவன் இதோடு முடிந்தது என்று உணவில் மீண்டும் கவனம் செலுத்தினான்.

~~~~

விரைவாய் நெருங்கிய வானதி, “என்னாச்சு?” என்று கேட்டது தான் தாமதம், தச்சனை தாங்கிப் பிடித்திருந்தவன் முகம் அதிருப்தியை வெளிபடுத்தியது.

“என்னங்க உங்க புருஷன் பொண்டாட்டி பிரச்சனை எல்லாம் வீட்டோட முடிச்சிக்க மாட்டீங்களா? இப்படி வெளில விட்டு… இவரு குடிச்சிட்டு வண்டி ஓட்டிகிட்டே என் லாரி மேல மோதப்பார்த்தாரு… நான் சுதாரிக்காம இருந்திருந்தா உங்க சொந்த பிரச்சனையால நான் உள்ள போயிருப்பேன். லாரில விழுந்தாலே லாரி டிரைவர் தான் போதையில் வண்டியை மேல ஏத்திடான்னு சுலபமா பழியை என் மேல போட்டு உள்ள தள்ளிடுவாங்க… ஆனால் குடிச்சிட்டு என் வண்டியில விழுந்தது என்னவோ இவன் தான்… அதை யாரும் கண்டுக்க மாட்டாங்க… சண்டை எப்போ வேணும்னாலும் போட்டுக்கலாம் ஆனால் உசுரு போனா திரும்ப வராது… இனியாவது உங்க பிரச்சனையை வீட்டோடு முடிச்சிகோங்க… இவன் வேற என்ன கேட்டாலும் என் பொண்டாட்டி திட்டிட்டானு சின்ன பிள்ளை ரைம்ஸ் மாதிரி திரும்பத் திரும்ப சொலிட்டே இருக்கான்…” என்று இறுதியில் சிரித்தே விட்டான் அவன்.

“அட… ஆமானுங்க… என் பொண்டாட்டி டிட்டிட்டா…” என்று இடையில் தச்சன் திடுமென உளறினான்.

“நீங்க திட்டிடீங்கனு புலம்புனாலும் வீட்டு அட்ரஸ் சரியா சொலிட்டாரு… இல்லைனா ரோட்டிலேயே விட்டுட்டு போயிருப்பேன்… இன்னும் என்னங்க வேடிக்கை பார்க்குறீங்க? அழகான பிள்ளைங்க இருக்காங்க… வாழப் போறது ஒரே ஒரு முறை தான் அதில் எதுக்கு வீண் வீம்பு, வறட்டு கவுரவம் பார்த்துகிட்டு... இனியாவது சண்டை போடாம மகிழ்ச்சியா வாழ்க்கையை மாத்திக்கோங்க…” என்றவன் தச்சனின் மீதிருந்த தன் பிடியை விலக்கி வானதியை நோக்கி தச்சனைத் தள்ள, பிடி தளர்ந்ததும் தடுமாறி விழப்பார்த்தான் தச்சன்.

புதிதாய் வந்தவன் அவளுக்கு பேச வாய்ப்பு கொடுக்காமல் பேசிய பேச்சிலேயே அரண்டு பேச்சு வரமால் பதறி நின்றிருந்தவள், தச்சனின் மீதிருந்த பிடி தளர்ந்ததும் எங்கே தன் மீது விழுந்து விடுவானோ என்ற பயத்தில் இரண்டடி பின்னெடுத்த வானதி, ‘குந்தவை’ என்று அலறலாய் தங்கையை அழைத்தாள்.

அதற்குள் தச்சனை தாங்கிப் பிடித்திருந்த அந்த லாரி ஓட்டுனர், வானதியை வித்தியாசமாய் பார்த்து நின்றான்.
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice

மறுபடியும் சண்டையா??? இதுல தச்சன் குடிச்சிட்டு வண்டி வேற ஓட்டிட்டு போய்யிருக்கானா??? அந்த லாரி டிரைவர் தான் தச்சனோட சகோதரனா???
 
Last edited:

RajiChele

Well-Known Member
Adada tirumba unoru sandaya??? Mothala pota sandaike inum samthanam akala!!! Account la sanda kanaku kudite pokuthu!!!

Yaru akka intha puthu character lorry driver??? Ethum connection irukumo??? :unsure::unsure::unsure:
 

Shahana

Well-Known Member
Nice teaser SivaPriya sis :love::love::love:

தச்சனும் அவனோட பிரதரும் ட்வின்ஸா...:unsure::unsure:
இப்போ குடிச்சிட்டு வந்தது தச்சனா இல்ல அவன் அண்ணனா...:unsure::unsure::unsure:o_Oo_Oo_O

Eagerly waiting for your update SivaPriya sis:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top