Potato side dishes for Chapathi

Advertisement

Sundaramuma

Well-Known Member
உருளை கிழங்கு..3.. ...வேக வைச்சு தோல் உரிச்சு மசிச்சு வைச்சுக்கோங்க .....

ஒரு கப் தேங்காய் + ஒரு டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை + 4 பல் பூண்டு மிக்ஸில்-ல போட்டு நல்லா அரைக்கணும் .....

பெரிய வெங்காயம் or சின்ன வெங்காயம் ----- ஒரு கப் (cut in small)
பச்சை மிளகாய் -- 4 (நீள வாட்டமா கட் பண்ணனும் )

பாத்திரத்துல எண்ணெய் ஊற்றி கடுகு, ஜீரா(cumin ) கறிவேப்பில்லை , 3 clove , ஒரு இன்ச் பட்டை .....வெங்காயம் பச்சைமிளகாய் போட்டு நல்லா வதக்கனும்..... பிறகு அரைச்சு வைச்சதை ஒரு ஸ்பூன் தனியா தூள் சேர்த்து போட்டு .....தண்ணீர் ஒரு மூணு டம்ளர் ஊற்றி கொதிக்க விடணும் ....மஞ்சள் தூள் சேர்க்கணும் + உப்பு......நல்லா வாசனை வரும் போது மசித்து வைத்த உருளை கிழங்கு போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கணும்.....சேலம் ரெஸிபி ........
 

Sundaramuma

Well-Known Member
உருளை கிழங்கு..3.. ...வேக வைச்சு தோல் உரிச்சு மசிச்சு வைச்சுக்கோங்க .....

பெரிய வெங்காயம் --2
தக்காளி -- 1
clove -3
மிளகாய் போடி--1 ஸ்பூன்
மஞ்சள் தூள்
உப்பு

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி.... கடுகு ,ஜீரா ,கறிவேப்பிலை உடன் மேல சொன்ன அனைத்தும் போட்டு நல்லா வதக்கனும்......பிறகு தண்ணீர் ஊற்றனும் ...நல்லா கொதிக்கும் போது மசித்து வைத்த உருளை கிழங்கு போடணும் ....கெட்டியா இருந்தா நல்லா இருக்காது ...சாம்பார் போல இருக்கணும் .....கோவை ரெஸிபி .... கொஞ்சம் வெல்லம் சேர்ப்பாங்க.....
 

Sundaramuma

Well-Known Member
கொத்துக்கறி ....1/2 கிலோ
உருளைக்கிழங்கு கட் பண்ணினது ---- 1 கப்
பெரிய ஒர் சின்ன வெங்காயம் --- 1 கப்
டொமட்டோ .....1 (optional)
இஞ்சி பூண்டு விழுது --- பெரிய நெல்லி அளவு

அரைப்பதற்கு .................
தேங்காய் ---1 கப்
கிலோவே, பட்டை ---- as you wish
கொத்தமல்லி --- 1 ஸ்பூன்
வரமிளகாய் --- 6

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு ,ஜீரா , கறிவேப்பிலை ,வெங்காயம் எல்லாம் போட்டு தாளிக்கவும் ....பிறகு இஞ்சி பூண்டு விழுது கொத்துக்கறி போட்டு வதக்கவும் ...... பச்சை வாடை போன பிறகு அரைத்து வைத்ததை ஊற்றி கொதிக்க விவும் .....கொஞ்சம் கெட்டியான பிறகு கடைசியாக உருளை கிழங்கு சேர்க்கவும் .....மிதமான தீயில் வைத்து மூடி வைக்கவும் ......கறிமசாலா பவுடர் இரண்டு ஸ்பூன் போட்டால் இன்னும் டேஸ்ட்-டா இருக்கும் ......
 

Joher

Well-Known Member
Ithu 3 la yaethu nallarukum
கண்டிப்பா கொத்து கறி.....

மற்ற recipeயில் தேங்காய் அரைத்து சேர்ப்பதர்க்கு பதிலா தேங்காய் பால் சேர்த்தால் இன்னும் taste ஆக இருக்கும்....
 

Joher

Well-Known Member
உமா nice recepies....
என்ன ஊர் ஊரா recipe போடுறீங்க.....

நான் தாளிச்சுட்டு பச்சை பட்டாணி வெங்காயம் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி அப்புறம் தண்ணீர் சேர்த்து cut பண்ணின உருளை போட்டு ரெண்டு விசில் வந்ததும் இறக்கி தேங்காய் பால் விட்டு சிக்கன் மசாலா home made கரிவேப்பிலை கொத்தமல்லி புதினா போட்டு கொஞ்சம் கொதிக்க விட்டு இறக்குவேன்....

Sometimes கொதிக்கும் போது egg உடைச்சி ஊற்றி கிளராமல் அப்படியே மூடி போட்டு சிம்மில் 5 min விட்டு இறக்குவேன்.....

Potato க்கு பதிலா வேகவைத்த முட்டை போட்டால் egg gravy ரெடி.....
 

Nachu

Well-Known Member
இதை இதை தான் எதிர்பார்த்தேன்

ரொம்ப நல்லா இருக்குது எல்லாமே உமா கா.
Thanks for sharing the receipes Uma ka and jo ka.
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அப்போ சப்பாத்தியை போட்டிற வேண்டியது தான்... சூப்பர் ஜி சூப்பர் ஜி... இன்னும் கொஞ்சம் ரெசிபிஸ் எல்லாம் இறக்குமதி செய்ங்க... குட்டீஸ்க்கு ஈசியா செஞ்சு கொடுத்து அனுப்புறா போல...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top