Poorani's கரைய துடித்திடும் மனசு 1

Advertisement

Midhun

Writers Team
Tamil Novel Writer
எல்லோருக்கும் வணக்கம் ப்ரண்ட்ஸ்....:):)

சொன்ன மாதிரியே முதல் பதிவோட வந்துட்டேன்...உங்களின் அன்பான ,அழகான வரவேற்பிற்கு மிக மிக நன்றி...

பதிவுகளுக்கும் உங்களின் தொடர் ஆதரவு கிட்டும் என்ற நம்பிக்கையுடன் முதல் பதிவு.....



அத்தியாயம் - 1:

'என்னடா சுசி...உனக்கு எதுக்கு இப்போ இவ்ளோ கோவம்...' என எதுவும் செய்யாததை போல மென்மையாய் கேட்ட தந்தையின் புறம் முகத்தை திருப்பாமல் அப்படியே அமர்ந்திருந்தாள் சுசி என்னும் சுசிலா...

மகளின் கோவத்தை கண்டு,ஒரு பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவர்,அவளை சுற்றிக்கொண்டு, அவளின் முன் சென்று நின்றார்...

திருப்புவேனா..??,உங்களை பார்ப்பேனா..?? என அமர்ந்திருந்த சுசியின் உள்ளத்தில் இருக்கும் கோவத்தின் அளவை நன்கு அறிந்து தான் இருக்கிறார்...

மகள் தன் முகத்தை கூட காணாது அமர்ந்திருக்க ,அவரின் முகமும் சட்டென்று கூம்பிப்போனது... அவர் பாவமாய் தன் மனையாளை நோக்க,அவரோ 'ம்ஹூம்...' என்பதாய் மறுப்பாய் தலையசைத்தவர், இவரை முறைக்க துவங்கி இருந்தார்...

'அப்பா மேல கோவமா...???' என கேட்ட தந்தையை கொலைவெறியுடன் நோக்கின சுசியின் கண்கள்...

"மூஞ்சைப் பாரு...பஞ்சுமிட்டாய் கணக்கா, பாவமா வச்சு இருக்குறதை..இவரை வச்சி இந்த அம்மா எதுவா இருந்தாலும் சாதிச்சிடுது...." என மனதிற்குள் சிடுசிடுத்தவள் திரும்பி அன்னையை நோக்கினாள்...

அவரும் இவளைத்தான் அழுத்தமாய் பார்த்தபடி இருந்தார்....

'சரியான அழுத்தம் இந்த அம்மா....' என மனதிற்குள் குமுறியவளின் பார்வை இப்போது தந்தையின் மேல்...

'என்னப்பா...'என்றாள் சின்ன குரலில்..தந்தையை வருந்த வைக்கிறோமோ என குற்றவுணர்வு இப்போது மனதில்...

'ஒண்ணுமில்ல டா... ' என்றவரின் கரங்கள் அவளின் தலையை வருட...வருடிய கரங்களை தன் கரங்களால் பற்றிக்கொண்டவள் 'நீங்க எதை நினைச்சும் கவலைப்பட வேண்டாம் பா...நிம்மதியா இருங்க...'என்க...

அவளையே ஒரு நிமிடம் இமைக்காமல் பார்த்தவர் ,பின் 'நீ நிம்மதியா இருந்தா தான் ,நான் நிம்மதியா இருக்க முடியும் டா...'

'அதேபோல உன் சந்தோஷத்தை மீறின சந்தோஷம் ,எனக்கு என்னைக்குமே இல்லடா...நான் வேணும்ன்னா அம்மா கிட்ட பேசி பார்க்கவா...???...' என்ற தந்தையை தாவி அணைத்துக்கொண்டவள் 'ஐ வில் மிஸ் யூ பா....ஐ வில் மிஸ் யூ சோசோசோசோ மச்....' என கூறியப்படி அழுகையில் கதறத் துவங்க....

அணைத்திருந்த அந்த அன்பு தந்தைக்கும் கண்களில் கண்ணீரின் சங்கமம்...

தூர நின்று அவர்களுக்குள் நடந்த உரையாடலை கவனித்து கொண்டு இருந்த தேவகிக்கும் கண் கலங்க துவங்கிவிட்டது...

'இந்த வாண்டுக்கு அப்பா மேல தான் எவ்ளோ பாசம்....நான் னா மட்டும் தான் மேடத்துக்கு வேப்பங்காயாய் கசக்கும்...அப்பா அப்படின்னா வெல்லமா இனிக்கும்'என எண்ணியவர் ,கண்களை துடைத்துக்கொண்டு இருவரையும் நெருங்கினார்....

அவருக்கு யார் சொல்வது பெண் பிள்ளைகளுக்கு அப்பா எப்போதும் கரைந்துருகும் வெல்லக்கட்டி தான் என...

இதில் ஒரு சிலருக்கு வேண்டுமானால் மாற்று கருத்து இருக்கலாம்....மற்றப்படி தொண்ணூறு சதவீதம் சுசீலாவின் கட்சி தான்....

' போதும் ரெண்டு பேரும் போட்ற சீன்...உங்க சீனை எல்லாம் கண் கொண்டு பார்க்க முடியல...' என நொடித்துக்கொண்டு நக்கல் செய்ய...

'உங்களை யாரும் பார்க்க சொல்லி கெஞ்சல... நீங்க போய் உங்க வேலையை பாருங்க...' என சிடுசிடுத்தாள் மகள்..

'உனக்கு வாய் கொழுப்பு ரொம்ப கூடிப்போச்சு.... என்னோட மாமியார் கிட்ட போய் இந்த வாயை காட்டு,அப்படியே கம்பியை காய வச்சு ,வாய் பழுக்க சூடு போட்றாங்களா...???,இல்லையான்னு மட்டும் பாரு...' என்றார் கோபத்துடன்...

'அப்பா பாருங்க பா,இந்த அம்மாவை' என மூக்கை உறிஞ்சியப்படி அப்பாவிடம் முறையிட....

'தேவா.... கொஞ்சம் அமைதியா இரு,இங்க யாரு சின்ன பொண்ணுன்னே தெரியல, அவளுக்கு சரி சமமா நீயும் சண்டை போடணுமா..??,சின்ன பிள்ளைக்கிட்ட வம்புக்கு வரிஞ்சி கட்டிட்டு நிக்கிற...' என லேசாய் கடிந்து கொண்டார் அன்பு..

'ம்ஹூம்... சின்ன பிள்ளையா இவ, படிச்சு முடிச்சு ரெண்டு பட்டம் வாங்கியாச்சு...??,உங்கம்மா கிட்ட சொல்லுங்களேன் ,என் பொண்ணு இன்னும் சின்ன கை குழந்தை, அவளை என்னோடவே வச்சு தொட்டில்ல தாலாட்டு பாடுறேன்னு...' என நொடித்துக் கொள்ள...

'ச்ச்சு... கொஞ்சம் சும்மா இருடி, எப்போ பாரு புள்ளையை வஞ்சிக்கிட்டு...' என கடிந்தவரை கோபத்துடன் நோக்கினார் தேவகி..

எப்பொழுதும் அன்புக்கு சுசிலா மீது கொள்ளை பாசம்...அதுவும் ஒற்றை மகள் வேறு...

கை குழந்தையாய் இருந்தது முதல்,இப்போது கல்லூரி முடிந்து இரு பட்டங்களுக்கு சொந்தக்காரியாக இருந்தாலும் எப்போதும் உள்ளங்கையில் வைத்தே தாங்கி பழகியவர்...

ஆனால் அவரின் அம்மா அங்கயற்கண்ணியின் பேச்சுக்கு என்ன..?? பார்வைக்கு கூட மறு பார்வை பார்த்திராதவர்...அம்மாவின் கட்டுப்பட்டி தனம் என்றும் அன்பு விரும்பியது இல்லை...

இருந்தும் அதனை அன்னையிடம் இன்று வரை வெளிக்காட்டியதும் இல்லை எனலாம்...

அன்பு தனது கல்லூரியை முடித்திருந்த சமயம்,எங்கும் வேலைக்கு செல்லாமல் தாய் தந்தையுடனே இருந்து விவசாயம் பார்த்தபடியே அரசு பணிக்கு முயற்சி செய்ய , முதல் மூன்று முறை தோல்வி அடைந்தவர் ,நான்காவது முறை வெற்றி வாகை சூடி அன்னையிடமும் , தந்தையிடமும் சொல்ல....

முதலில் எதுவும் சொல்லாமல் அமைதியாய் இருந்தவர்கள் , பின் ஒப்புக்கொண்டு வேலைக்கு செல்ல அனுமதித்தனர்...

அதுவே எந்த கடவுள் புண்ணியம் என்று இன்று வரை அவர் யோசித்துக்கொண்டு தான் இருக்கிறார்...

முதலில் அரசு பள்ளி ஆசிரியராய் இருந்து இப்போது உடுமலைப்பேட்டையில் உள்ள ஒரு அரசு பள்ளியின் தலைமை ஆசிரியராய் பதவி வகித்து வருகிறார்...

மனைவி தேவகி குடும்பத்தலைவி..
சுசிலாவும் தந்தையை பின்பற்றி இளங்கலை மற்றும் முதுகலை படிப்பை விலங்கியலில் முடித்தவள் அடுத்து பி.எட் படிப்பதற்காக விண்ணப்பித்துவிட்டு காத்திருக்க...


ஊருக்கு வரும்படி வந்த தனது பாட்டியின் அழைப்பை நிராகரிக்க முடியாமல் விழி பிதுங்கினாள்...

இது தான் தக்க சமயம் என்று தேவகியும் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் தன்னை பொள்ளாச்சிக்கு மூட்டை கட்டும் அன்னையை கண்டு கடுங்கோவம் அவளுக்கு....

ஊடே தந்தையும் ஒன்று சொல்லாமல் ஒத்து ஊதிவிட்டு ,இப்போது தன்னை சமாதானம் செய்ய பேசுவது எல்லாம் ஒரு புறம் கஷ்டமாக இருந்தாலும்,மறு புறம் ஒரு நிம்மதி உணர்வை கொடுத்தது எனலாம்...

பாட்டியின் ஊருக்கு சென்றது இல்லை என்றெல்லாம் இல்லை, விஷேஷ நாட்களில், திருவிழா நாட்களில் தாய் தந்தையுடன் சென்று இரண்டு மூன்று நாட்கள் கூட தங்கி இருக்கிறாள்....

ஆனால் அப்போது எல்லாம் தாயுடனோ, தந்தையுடனோ அவளது நேரங்கள் கழியும்...சிறிது நேரம் பாட்டி அங்கையற்கண்ணியுடனும் பேசி கொண்டு இருந்திருக்கிறாள்....

இப்போது தான் மட்டும் தனித்து அங்கு சென்று எப்படி இருப்பது என்ற எண்ணமே அவளுக்கு கலக்கத்தை கொடுத்தது....


-மனம் கரையும்...
 

Midhun

Writers Team
Tamil Novel Writer
ப்ரண்ட்ஸ் என்னோட முதல் முயற்சி...

தவழும் குழந்தை என நான்....

எந்த ஒரு நிறை குறை இருப்பினும் ,தவறாமல் குறிப்பிடவும் ....

அதுவே என் எழுத்தை மேலும் மெருக்கேற்றவும், என் தவறை திருத்திக்கொள்ளவும் மிகவும் உதவும்....

என்றும் அன்புடன்
பூரணி மிதுன்.....
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "கரையத்
துடிக்கும் மனசு"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
பூரணி மிதுன் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top