Pavism 2-596

Advertisement

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
596
1f31c.svg

தானாக தட்டுப்பட்டது தவிர நிலா பார்க்க என்று போய் நிலா பார்த்து நாளாயிற்று’
img_20190517_183256.jpg

இது நிலவை பாக்குறப்ப தானாவே மனசுல உதிக்கிற கவிதை வண்ணதாசன் சார் எழுதியது…

ஆனா நேத்து நிலாவை பார்த்தப்ப மனசு என்ன தோணுச்சு தெரியுமா:unsure:

lydian nadaswaram லிடியன் நாதஸ்வரம் இந்த பையனை பற்றி தெரியாதவர்களுக்காக…. நாதஸ்வரம் ஒரு பியானோ கலைஞன் ஏ ஆர் ரகுமான் மியூசிக் ஸ்கூல்ல படிக்கிறார்…a child prodigy….world’s best நிகழ்ச்சியில் the best ஆ தேர்ந்தெடுக்கப்பட்டவர்


லிடியனின் ஆசை என்ன தெரியுமா ஒரு நாள் போய் நிலாவுல பியானோ வாசிக்கனுமாம்…


ஆசையே துன்பத்திற்கு காரணம் ….
உன் தகுதிக்கு மீறிய ஆசை படாத இப்படியெல்லாம் சொல்லி வளர்க்கப்பட்ட ஒரு சமூகத்தில் அழகான ஒரு ஆசை இந்த பையனுக்கு

முரண்பாடான விஷயம் என்னன்னா ஆசையை துறக்க சொன்ன புத்தரோடு பிறந்தநாள் இன்னைக்கு புத்த பூர்ணிமா …அதெல்லாம் வேண்டாம் என்பதும்‌ வேண்டுவதே category…:p

ஆசைதானேங்க பட்டுட்டு போட்டுமே ஆசைக்கு அளவே கிடையாது….
ஆசை பொதுவா தப்பே கிடையாது அது எது மேல… வருது என்றத பொருத்தது…அப்போ தான் அது தப்பா சரியானு சொல்ல முடியும்….
download.png

அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் அது தப்பு…
காற்றின் மொழி படத்தில் ஜோ குடும்பம் கற்பனையிலேயே ஒரு கார் கம்பெனி வச்சிருக்க மாதிரி பேசிப்பாங்க ….எனக்கு ரொம்ப பிடிச்ச சீன் ….such a positive vibes…..:love::love::love:
images-1-1.jpeg


நினைவுகள் மட்டும் நினைக்கிறப்ப எல்லாம் சந்தோஷம் தருவது இல்லங்க…

ஆசை கூட தான்.:love:
இப்படி ஆனா எப்படி இருக்கும்..???
நம்ம ஆசைப்பட்ட மாதிரி நடந்தா எப்படி இருக்கும் என நினைக்க இப்பவே ஒரு சின்ன சந்தோஷம் கொடுக்கிறது ஆசை…

லிடியன் ஆசையை பார்க்கறப்ப எனக்குமே it is motivating….:giggle:
images-3-1.jpeg

ஆகாச நிலவு கொஞ்சம் ஆசையை ஊட்டிவிட்டுடுச்சு…..:love::D
ஒரு திருக்குறள் உண்டு…..


கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது’


:geek:
தோளில் வில்லைச் சார்த்திக்கொண்டு நாணை இழுத்து அம்பு எய்வது கடினமான பணியன்று;முயல் பிடிக்கமுடியாத விலங்குமன்று;உன் வீரத்தைக் குறைத்து மதிப்பிட இடமளிக்காதே!.கையிலே வேல் ஏந்திச் செல்;யானையைத் தேடு;யானை வரும் இலக்கு நோக்கி வேலெறி;கனத்த வேலை எறிந்து யானையை வீழ்த்தமுயலும்போது ஒருவேளையானை தப்பிப் போய்விட்டாலும் தாழ்வில்லை; இந்த அம்பினால்தான் முயலைப் பிடித்தேன் என்று கூறுவதைக் காட்டிலும் இந்த வேல்கொண்டுதான் யானையைத் தாக்கினேன்;யானை தப்பி ஒடிவிட்டது என்று கூறுவது உனக்குப் பெருமை சேர்க்கும்


;):cool:
ஏதோ ஒன்றை நினைக்கனும் என்று முடிவு பண்ணியாச்சு why should we do small
images-1.png

‘THINK BIG’:cool::love:
ஆமா அது என்ன 596
?
?
?
?
?
?
?
?
?
?
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்:love::love::love:


பிரியங்களுடன்
:coffee:
பவித்ரா நாராயணன்
 

Tharav

Well-Known Member
Very nice dear . Aasayum kanavukalum than nammai uyirpudan vaikkum.
Aasai patrathu asaya karpanni pakkarathu, aasaya niravera mudinthavarai try panravarai thappu kidayathu. Aasai niraivera aduthavangala kastapaduthma irukkavarai aasai nallathu
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
குறள் 596 :love:

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.

நினைப்பது எல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கட்டும். அவ்வுயர்வான எண்ணம் ஒருவேளை வேறு காரணங்களால் நிறைவேறாது போனாலும், பெரியோர் நம்மைப் பாராட்டுவர். ஆகவே, அது நிறைவேறியதாகவே கருதப்படும்.

so dream bigger achieve bigger :love::love:(y)(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top