P8 Sangeetha Swarangal

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
#1
திலோ சென்றதும் அரவிந்தன் கிளம்பி அர்ச்சனா வீட்டிற்கு சென்றான். அன்று வித்யா பேசிய தினத்தில் கோபித்துக் கொண்டு வந்தவள், அதன் பிறகு எத்தனையோ முறை அரவிந்தன் கைபேசியில் அழைத்தும் எடுக்கவில்லை.
இன்று அரவிந்தன் நேரிலேயே வந்து நிற்கவும், அவனை ஒழுங்காகவே வரவேற்றாள். அரவிந்தன் முகிலனோடு ஹாலில் உட்கார்ந்து பேச... அரவிந்தன் வந்திருப்பதால்... தோசைக்கு ஏற்கனவே இருந்த தேங்காய் சட்னியோடு, கார சட்னி செய்தாள்.
அரவிந்தனும் முகிலனும் உண்டு முடிக்க, அர்ச்சனா அவளுக்கு நின்று தோசை ஊற்றிக் கொண்டு இருந்தாள். ஏற்கனவே அவள் மாமியார் சாப்பிட்டு படுத்து இருந்தார்.
சமையல் அறைக்கு சென்ற அரவிந்தன், “நீ சாப்பிடு, நான் தோசை ஊத்துறேன்.” என அடுத்த தோசை அவன் ஊற்றினான்.
நண்பர்கள் பேச இடம் கொடுத்து, முகிலன் தன் மடிக்கணினியோடு ஹாலில் அமர்ந்தான்.
“அப்புறம் வேற எதுவும் பொண்ணு பார்த்தியா?” அரவிந்தன் வேண்டும் என்றே கேட்க,
“எதுக்கு உன் தங்கச்சிகிட்ட திட்டு வாங்கவா... அவகிட்ட ஒன்னு சொல்லிடு, திலோத்தமா கிட்ட நான் பேசுறதுக்கு முன்னாடியே அவளுக்கு உன்னை பிடிச்சிருந்தது. சொல்லப் போனா, அவதான் முதல்ல ஆரம்பிச்சா. எதோ நான் பார்த்த பொண்ணுன்னு நினைச்சிக்க வேண்டாம்.”
“அப்படியா? எப்படி உன்கிட்ட சொன்னா சொல்லு.” என்றான்.
“ஏன்? நீதான் அவ வேண்டாம்ன்னு சொல்லிட்ட இல்ல... சொல்ல முடியாது போ.”
“நீ சொல்றது வச்சு எதாவது முடிவு பண்ணலாம்ன்னு நினைச்சேன். சரி சொல்லலைனா விடு.” என்றான் பாவமாக.
அங்கே ஏற்கனவே திலோவிடம் திருமணதிற்கு சரி என்று சொல்லிவிட்டு வந்ததை சொல்லாமல், ஏனோ இனிதான் முடிவு எடுக்க போவது போல சொல்ல, பாவம் ! அதை அந்த அர்ச்சனா அப்பாவியும் நம்பி, உடனே மகிழ்ந்து போய்.... அன்று அவளும் திலோவும் பேசிய அனைத்தையும் சொல்லிவிட்டாள்.


பெண் பார்த்த அன்று அரவிந்தன் அவளைப் பார்த்தது, அதன்பிறகு அவன் அவளைப் பார்க்கவே இல்லை. இடையில் ஒரு மாதம் தான். இருந்தாலும், அவன் கண்ணிலேயே படவில்லை. இத்தனைக்கும் இருவரும் ஒரே குடியிருப்பில் தான் இருக்கிறார்கள்.
அரவிந்தனே பொறுக்க முடியாமல் திலோத்தமாவுக்கு போன் செய்து விட்டான்.
“என்ன பண்ற நீ? வேலைக்கு போறியா இல்லையா? பார்க்கவே முடியலை.”
“போறேன் அரவிந்த், கல்யாணத்துக்கு நாலுநாள் முன்னாடிதான் லீவ் போடுறேன். கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு வாரம் போட்டிருக்கேன்.”
“காலேஜ் முடிஞ்சு வரும் போது கூட கண்ணுல பட மாட்டேங்கிற.”
“தேடினீங்களா என்ன?” திலோத்தமா கேட்டதும் உஷாராகி விட்டான்.
“பார்க்கலையேன்னு கேட்டேன்.” என்றான் மழுப்பலாக.
“காலேஜ் முடிஞ்சு அப்படியே ஷாப்பிங் போயிடுறோம். அதுதான் வீட்டுக்கு வர லேட் ஆகுது.”
“சரி வச்சிடட்டுமா?”
“இப்ப வீட்லையா இருக்கீங்க?”
“ஆமாம்.” என்றவன் வைத்து விட்டான்.
கல்யாணம் பேசுறதுக்கு முன்னாடி மட்டும் வர தெரிஞ்சிது ,இப்ப இந்தப் பக்கம் திரும்பி கூட பார்க்கிறது இல்லை என நொந்து கொண்டான்.
அங்கே திலோவோ, “பார்க்கணும், பேசணும்ன்னா வாயைத் திறந்து சொல்ல வேண்டியது தான... ஒன்னும் சொல்றது இல்லை. எல்லாத்தையும் மனசுலேயே வச்சிக்கிறது, நாமே கண்டு பிடிக்கணும்.” என தனக்குள் புலம்பியவள்,
“அம்மா, நான் போய் அரவிந்த் பார்த்திட்டு வரட்டா.” என்றாள்.
 
#4
அடேய், அரவிந்தா?
பயங்கரமான கேடிடா, நீயி
அர்ச்சனாவிடம் எப்படி போட்டு
வாங்குறான் பாருங்கப்பா
இந்த ஜம்பம்லாம் திலோவிடம்
செல்லுபடியாகுமா, Mr.அரவிந்தன்?

ஓ, பெண் பார்த்து கல்யாணமும்
ஃபிக்ஸ் ஆகிடுச்சா?
சூப்பர், சூப்பர் ரம்யா டியர்

''உன்னைக் கண் தேடுதே
ஹெக்
உறங்காமலே என் உள்ளம்
நாடுதே''-ன்னு பாடிடு,
அரவிந்தா

மணாளனைக் காண வைதேகியம்மா
சம்மதம் கொடுப்பாங்களா?
இல்லை, நோ சொல்லுவாங்களா?
கண்ணாலம் ஆவப்போவுது
அப்பாலிக்கா உன்னோட ஆள
டாவடிச்சு கண்டுக்கோ-ன்னு
சொல்லிடுவாங்களா, ரம்யா டியர்?
 
Last edited:

Joher

Well-Known Member
#6
Tks Ramya.....

என்னடா ரெண்டு பேரும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுறீங்க......

Neuro டாக்டர் காதலில் விழுந்துட்டார்......
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது.....

பெண் பார்க்கும் படலம் வேறயா????
கேசரி சாப்பிடவா இருக்குமோ?????

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
இங்கு நீயொரு பாதி நானொரு பாதி......
ரெண்டு பாதியும் Meet பண்ண அம்மா peemission குடுப்பாங்களா?????
 
Last edited:

New Episodes