P8 சாரல் மழையே

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
#1
“கீர்த்திக் கல்யாணம் முடியுற வரை ராஜேஷ் வீட்ல இருக்கியா?”


“ஏன் உங்க கூடக் கூடிட்டு போக முடியாதா? வீட்ல எதுவும் சொல்வாங்களா?”


“அப்படி எல்லாம் எதுவும் இல்லை. உன்னை இப்பக் கூடிட்டு போனாலும் சந்தோஷமாதான் வரவேற்பாங்க. ஆனா நாம கல்யாணம் செஞ்ச பிறகு போனா... உறவுகளுக்கு மத்தியில இன்னும் மரியாதையா இருக்கும்.”


“உனக்குத் தெரியும் கீர்த்தி எங்க குடும்பத்தைப் பற்றி. நான்தான் மூத்தவன், நானே கல்யாணம் பண்ணாம நடுராத்திரி ஒரு பெண்ணோட போய் நின்னு, நாளைக்கு நானே என் தங்கை தம்பிகளுக்குத் தவறான உதாரணமா ஆகிடக் கூடாது. உனக்குப் புரியுது தானே நான் சொல்றது.”


“நாம கல்யாணம் பண்ணிக்க எவ்வளவு நாள் ஆகும்?”


“அப்படியெல்லாம் உன்னை ரொம்ப நாள் தவிக்க விட்டுட மாட்டேன். நாளைக்கு வீட்ல பேசுறேன். ஒரு வாரத்துக்குள்ள கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி பார்த்துக்கலாம்.”


கீர்த்தி ஒருவாறு ஒத்துக்கொள்ள... மனமே இல்லாமல்தான் தர்மா அவளை ராஜேஷின் வீட்டில் விட்டுச் சென்றான்.


காலை எழுந்ததும் முதல் வேலையாக வீட்டில் பெரியவர்களிடம் முன்தினம் நடந்ததைச் சொல்ல.... “எல்லோரையும் அழைச்சுக் கல்யாணம் பண்ண ஒரு மாதமாவது வேண்டாமா? எங்களுக்கு உன் கல்யாணத்தை விமர்சையா செஞ்சு பார்க்கனும்ன்னு ஆசை இருக்காதா? உன் அப்பா இருந்திருந்தா அப்படித்தானே செய்வார்.” என்றார் ஜமுனா.


“அம்மா, நான் யாரைக் கல்யாணம் பண்ணி இருந்தாலும், என்னோட கல்யாணம் எளிமையாத்தான் நடந்திருக்கும். எனக்கு ஆடம்பரத்துக்காக வெட்டியா காசு செலவு பண்றதுல உடன்பாடு இல்லை. அந்தப் பணத்தை தேவையான நாலு பேருக்கு செலவு பண்ணா, அதுல ஒரு அர்த்தம் இருக்கும்.”


“அப்ப எப்படித்தான் உன் கல்யாணத்தைப் பண்ணப் போற? அதையும் நீயே சொல்லு.”


“நம்ம வீட்டு ஆளுங்களே அதிகம். அதோட ரொம்பத் தெரிஞ்சவங்களை மட்டும் அழைச்சு, கோவில்ல கல்யாணத்தை வச்சுக்கலாம்.” என அவன் பெரியவர்களைப் பார்க்க...


“கோவில்ல கல்யாணம் நடக்கவும் குடுப்பினை வேணும். இங்க சென்னையில வேண்டாம். நம்ம ஊர் பெருமாள் கோவில்ல வைப்போம். நம்ம வீடே பெரிசா இருக்கு. உன் கல்யாணமாவது சொந்த ஊர்ல நடக்கட்டும்.” என்றார் நாயகி.
***********************************************************************************************

மாலை ஆறு மணிப்போல நாயகியும் ஜமுனாவும் பூ, பழங்கள், இனிப்புகள் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்தனர். சற்று நேரத்தில் தர்மாவும் வந்துவிட... வீடே களைகட்டியது. ராஜேஷ் வெளியே இருந்து உணவு வரவழைத்தான். எல்லோரும் சேர்ந்து இரவு உணவு உண்டனர்.

கிளம்புவதற்கு முன் நாயகி கீர்த்தியை உட்கார வைத்து, திருமணதிற்குச் செய்திருந்த ஏற்பாடு பற்றியெல்லாம் சொல்லி விட்டார்.


“மதுரை தான் எங்க சொந்த ஊர். உங்க கல்யாணம் அங்கதான் நடக்கப் போகுது. நாம ஒரு வாரம் முன்னாடியே அங்க போயிடுவோம். அங்க போய்க் கல்யாணத்துக்குத் தேவையான புடவைகள், நகைகள் எல்லாம் வாங்கிக்கலாம். தர்மா இங்க வேலையெல்லாம் முடிச்சிட்டு, இங்க இருக்கிறவங்களை அழைச்சிட்டு கல்யாணத்துக்கு முன்னாடி வரட்டும்.” என்றவர், “சரி தானே கீர்த்தி. எங்களோட வர்றது உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே.” என்றதும்,


“இல்லை பாட்டி. நான் உங்களோட வரேன்.” என்றவள், “அம்மாவே தேவையான டிரஸ், நகை எல்லாம் கொடுத்திருக்காங்க.” என...


“அவங்க கொடுத்தது இருக்கட்டும். கல்யாணப் புடவை, நகை எல்லாம் நாங்களும் வாங்கணும். உங்க அம்மா கொடுத்ததும் இதையும் கலந்து போட்டுக்கோ....ஒன்னும் பிரச்சனை இல்லை.”


“இன்னும் ஐந்து நாள்ல கிளம்பனும் தயாரா இருந்துக்கோ.” என்றவர், விடைபெற்று செல்ல... அன்று எல்லோரும் இருந்ததால் தர்மாவால் கீர்த்தியுடன் தனியாகப் பேச முடியவில்லை. வீட்டிற்குச் சென்று அழைப்பதாகச் சொல்லிவிட்டுச் சென்றான்.

***************************************************************************************************
“அப்ப உங்க பெரியம்மாவை அழைச்சிட்டுப் பத்திரிகை வைக்க, சொந்தகாரங்க வீட்டுக்கு நீ போயிட்டு வா...தாத்தாவுக்கு மதுரை வரை கார்ல உட்கார்ந்திட்டு போக முடியாது. ப்ளைட்ல டிக்கெட் போட்டு மதுரையில விட்டுட்டு, அப்படியே ரெண்டு நாள் அங்க இருந்து, அங்க பத்திரிகை வைக்கிறவங்களுக்கு எல்லாம் பத்திரிகை வச்சிட்டு வா.”


“ம்ம்... சரி இதெல்லாம் பண்றேன்.” என விஷாலும் ஒத்துக்கொண்டான்.


இருவருக்குமே இதற்கு முன்பிருந்தே பிரச்சனைதான். லவ் பிரேக் அப் என விஷால் குடித்துவிட்டு, டிப்ரஷன் என பேர் பண்ணி கொண்டிருக்க.... தர்மா ஒருநாள் வைத்து வாங்கி விட்டான்.

“வேண்டாம்ன்னு சொல்லிட்டு போன பொண்ணு முன்னாடி நல்லா வாழ்ந்து காட்டனும். குடிச்சிட்டு சுத்தினா எல்லாம் சரியாகிடுமா.... குடிச்சிட்டு சுத்த உனக்கு ஒரு சாக்கு. மேல படிக்கலைனா நம்ம கம்பனிக்கு வா.”

“படிச்சு முடிச்சதும் வேலை பார்க்கனும்னு சட்டமா என்ன? நான் எனக்குத் தோணும் போதுதான் வருவேன்.” என விஷாலும் முரண்டு பிடித்துக் கொண்டிருந்தான். ஆனால் இப்போது அண்ணனின் திருமணத்திற்கு உதவுவதாக ஒத்துக் கொண்டான்.


“ரெண்டு பேரும் அக்னி நட்சத்திரம் கார்த்திக், பிரபு மாதிரி முறைச்சிட்டு நின்னாலும், அவங்களுக்கு ஒண்ணுன்னா சேர்ந்துப்பாங்க கவனிச்சியா?” எனச் சூரியா வசீயின் காதைக் கடிக்க.... அதை வசீயும் ஆமோதிக்க.... இருவரும் கேலியாகச் சிரித்தனர்.

************************************************************************************************

அருணாவின் மாமனார் மாமியாருக்கு மட்டும் இல்லை, சந்ருவின் சகோதரர்களுக்கும் தர்மா மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் உண்டு.


சகோதரியின் குடும்பத்திற்கு மட்டும் இல்லாமல், அவளின் மாமனார் மாமியாருக்கும் பட்டு வேஷ்டி, பட்டு புடவை எடுத்திருந்தான். அதையும் கொடுத்து, அதோடு திருமண அழைப்பிதழை இனிப்பு, பழங்களோடு வெள்ளி தாம்பாளத்தில் வைத்து, முறையாகத் திருமணத்திற்கு அழைத்தனர். பின்னர், தடபுடலாக ஏற்பாடு செய்திருந்த காலை உணவை அருந்தினர்.


சந்துரு இதையெல்லாம் கடுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். இதுதான் அவனுக்குப் பிடிக்காது. இவனை இந்தத் தாங்கு தாங்கும் அளவுக்கு, இவன் என்ன பெரிய ஆளா என்ற எண்ணம்.


சந்துரு மிகவும் சோம்பேறி. ஏற்கனவே பிள்ளைபேறு தள்ளி போனதில் அருணா துவண்டிருந்தாள். அதோடு வீட்டு வேலையை முடித்துவிட்டு அவர்கள் கம்பனிக்கும் சென்று பார்த்துக் கொள்வாள். சந்த்ரு எதோ விருந்தினன் போலத் தான் கம்பனிக்கு செல்வான். மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்தால் உறங்கிவிட்டு மாலைதான் செல்வான். அதோடு அருணா மருத்துவமனை செல்லும்போதும் உடன் செல்ல மாட்டான். தனியாகக் காரில் அனுப்பி வைப்பான்.
சில நாட்கள் பொறுமை காத்த தர்மா, ஒருநாள் அருணாவின் மாமனாரை அழைத்துக் கடுமையாகப் பேசிவிட்டான்.
 
#2
:D :p :D
Superb Precap,
ரம்யாராஜன் டியர்

அத்த சோம்பேறியா இருந்துக்கிட்டு குடிகார சந்துருவுக்கு தர்மா மேலே ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி?
நல்லவனை திறமையானவனை எல்லோரும் கொண்டாடத்தான் செய்வாங்க
அதுக்கு பொறாமைப்பட்டால் எப்படி இல்லை எப்படி துருப்பிடிச்ச சசசசசந்துரு?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
#3
அருமையான pc ரம்யா:love::love::love:.கல்யாணம் பண்ணாம ஒரு பொண்ணோட நடுராத்திரியில போய் நின்னு,நானே என் தம்பி,தங்கைக்கு தவறான உதாரணமா இருக்ககூடாது என தர்மா சரியா சொன்னான்(y)(y)(y).

அடக்கடவுளே...அருணா வீட்டு வேலையை முடிச்சுட்டு,கம்பெனியும் பார்த்துக்கனுமா:oops::oops:.
திங்கறம்,தூங்கறதுமா இருக்கற சோம்பேறி சந்துரு:whistle::whistle:,,சுறுசுறுப்பா இருக்கற தர்மாவை பார்த்து பொறாமைல பொங்கறானா:sneaky::sneaky::sneaky:.
 
Last edited:

Joher

Well-Known Member
#6
:love::love::love:

அடப்பாவி சந்துரு & சூர்யா.......
இவனுங்களுக்கு ஏன் இவ்ளோ கடுப்பு........
நேரம் கணக்கு பார்க்காமல் வீட்டுக்கு உழைக்கும் பிள்ளையை எல்லோரும் தலைக்கு மேல தான் வச்சுப்பாங்க......
பொறுப்பு னா என்னனு கேட்கிறவங்களுக்கு தான் பொறாமை அதிகமா இருக்கும்...... வீணாப்போன நீங்களும் அதை செய்யாமல் அவனை பார்த்து ஏன் பொறாமைப்படணும்???

கீர்த்திக்கு கல்யாணம் முடியும் வரை பதட்டம் தான்......
தர்மா இருக்க உனக்கேன் கவலை???
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#9
தின்னுட்டு, தூங்கிட்டு சோம்பேறியா திரியுற சந்துரு, சுறு சுறுப்பா தன் வீட்டு வேலையை மட்டும் பார்க்காம... சோஷியல் சர்விஸும் பண்ணுற தர்மாவை பார்த்து பொறாமை படுறான்.... இதை எங்க போய் சொல்ல....
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes