P6 Uppuk Kattru

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
Hi Friends

Epi tomorrow


“என்ன சமையல் இவ்வளவு வாசனையா இருக்கு.” ரேணு கேட்க,
“கருவாட்டு குழம்பு...” என்றவள், “சாப்பிடுறீங்களா?” என தயங்கி கேட்க...
“சாப்பிடுறேனே...” என்ற பதில் உடனே வந்தது.
“நீங்க எங்க வீட்ல எல்லாம் சாப்பிட மாட்டீங்கன்னு நினைச்சு தான் கேட்கலை... தப்பா நினைச்சுக்காதீங்க.”
“ஏன் உங்க வீட்ல சாப்பிடுறதுக்கு என்ன? வீடு பெரிசா சின்னதா எல்லாம் பிரச்சனை இல்லை... சுத்தமா இருக்கணும். நீ இந்த சின்ன வீட்டை கூட எவ்வளவு சுத்தமா வச்சிருக்க.” ரேணு சொல்ல.. வெளியே இருந்து அவர்கள் பேசுவதைக் கேட்டு கொண்டிருந்த மரியதாஸ்.
“நான் போய் இலை வாங்கிட்டு வரேன்.” என்றவர் எழுந்து கடைக்கு சென்றார்.
வரும் போது அவர் முட்டையும் வாங்கி வர... ஆம்லட் போட்ட ரோஜா... ரேணுவுக்கு இலையில் உணவை பரிமாறினாள்.
“நான் கருவாட்டு குழம்பு சாப்பிட்டதே இல்லை. இப்பத்தான் முதல் தடவை சாப்பிடுறேன். செம சூப்பரா இருக்கு.” என்றவள் ரசித்து சாப்பிட... ரோஜா புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
“நீயும் சாப்பிடு...” என்றதும் ரோஜாவும் அவளுடன் உட்கார்ந்து சாப்பிட்டாள்.
“மழை வர மாதிரி இருக்கு இல்ல... வர்றியா அப்படியே சர்ச் வரி நடந்திட்டு வரலாம்.” என ரேணு கேட்க, ரோஜா மரியதாசிடம் சொல்லிவிட்டு ரேணுவுடன் சென்றாள்.
இருவரும் பேசியபடி சர்ச்சுக்கு வர... அங்கே வெளியே அருள் தன் நண்பர்களுடன் அரட்டையில் இருந்தான்.
“நான் வரும் போதே அருள் இங்க இருக்கிறதைப் பார்த்தேன். அதுதான் உன்கிட்ட இங்க போகலாம்ன்னு சொன்னேன்.” என்றவள், அருளையும் அவன் நண்பர்களையும் நோக்கி செல்ல... ரோஜா அவளை பின் தொடர்ந்தாள்.

**********************************************************************************************************************

“அருள் உங்க வீடியோ யூ ட்யூப்ல போட்டது... எவ்வளவு பேரு பார்த்து இருக்காங்க பாருங்க. இப்படியே போனா சீக்கிரம் உங்களுக்கு இதுல இருந்து வேற நல்ல வருமானம் வரும். இன்னும் கடலுக்கு போகும்போது எடுத்த வீடியோ எல்லாம் கொடுங்க போடலாம்.” என்று ரேணு ஆவலாக சொல்ல... அருள் கைப்பேசியில் அவர்கள் போட்ட வீடியோவுக்கு வந்த கருத்துக்களை பார்த்துக் கொண்டு இருந்தான்.
“இது என்னது?” ரோஜா கேட்க...
ரேணு தாங்கள் மீன் பிடிக்க செல்லும் போது எடுத்த வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றியது பற்றி சொன்னவன், அந்த வீடியோவை ரோஜாவுக்கு காட்டினான்.
ரேணு அருளுக்கு எப்படி அதை பதிவேற்றம் செய்ய வேண்டும் என காண்பிக்க... அருளும் புரிந்து கொண்டான். பத்தாவது வரை படித்து இருக்கிறான்... அதுவும் இன்றைய காலகட்டத்தில் கைபேசியின் வழியாக எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறார்கள்.... கைப்பேசி என்பது வசதிக்கு என்ற காலம் போய், இன்று அது இல்லாமல் ஒருவரும் இல்லை. அருளும் அதற்கு விதிவிலக்கல்ல... கடலுக்கு செல்லாத நாட்களில் பெரும்பாலும் கைபேசியோடு தான் அவன் நேரம் கழியும்.
சிறிது நேரம் இருந்துவிட்டு ரோஜா கிளம்ப.... “ரோஜா அடுத்த தடவை வரும் போது ஸ்டெல்லாவையும் கூடிட்டு வா.” என்றான் ஜோசப். அதை வைத்து எல்லோரும் அவனை கிண்டல் செய்ய... ஜோசப் அசடு வழிய... ரோஜா சிரித்துக் கொண்டே சென்றாள்.

********************************************************************************************************************

அன்று கிறிஸ்துமஸ் தினம் அவரவருக்கு முடிந்த விலையில் எளிமையாகவோ அல்லது சற்று பகட்டாகவோ உடை அணிந்து அதிகாலை வழிபாடுக்கு தேவாலையம் சென்றனர்.
தேவாலையம் அலங்கார விளக்குகள் மற்றும் தோரணங்களால் ஜொலிக்க... இருந்த மக்கள் கூட்டதிற்கு இடம் போதாமல் வெளியேவும் நிறைய பேர் நின்று பிரத்தனை செய்தனர்.
பிரத்தனை முடிந்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ள... மரூன் வண்ண புவியில் ஜொலித்த ரோஜாவின் விழிகள் அருளை தேடி அலைந்தது. அவள் வரும் போது வழியில் நின்று விழி எடுக்காமல் பார்த்து ரசித்தவனை இப்போது காணவில்லை.
“அப்பா நன் என் பிரண்ட்ஸ் கூட பேசிட்டு அப்புறம் வீட்டுக்கு வரேன்.”
“சரி மா சீக்கிரம் வந்திடு... கடை கூட்டமா இருக்கும். நான் போய் கறி வாங்கிட்டு வீட்டுக்கு போறேன்.” என மரியதாஸ் செல்ல...
அவர்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் அன்று காலை ஆட்டுக் கறி குழம்பும், தோசையும் செய்வது வாடிக்கை.
மரியதாஸ் சென்றதும் ரோஜா அருளை தேடி சென்றாள். அவன் உச்சி பாறையில் உட்கார்ந்து புலர்ந்தும் புலராத காலைப் பொழுதை பார்த்துக் கொண்டிருந்தான். அப்படி அங்கே என்ன பார்கிறான் என நினைத்தவள், அவன் அருகே சென்றாள்.
கதிரவன் இப்போது தான் ஆரஞ்சு வர்ண பந்தாய் மேலே எழும்பிக் கொண்டிருக்க.... அதை பார்ப்பதே கண் கொள்ளாக் காட்சியாக இருக்க... அவன் அருகே பாறையில் நெருங்கி உட்கார்ந்தாள்.
அருளிடம் அப்போதும் சிறு சலனமும் இல்லை. அப்போது தான் அவன் பார்வை தான் அங்கே இருக்கிறதே தவிர... மனம் வேறு எதோ யோசித்துக் கொண்டிருக்கிறது என அவளுக்கு புரிந்தது.
 

banumathi jayaraman

Well-Known Member
ரேணு சூப்பர்
நான் நினைத்த மாதிரியே அருள் ரோஜா காதலுக்கு ஹெல்ப் பண்ணுறாள்

அருள் பாவம்
பெற்றோரின் நினைவு இவனை வாட்டுகிறதோ?
கிறிஸ்துமஸிற்கு மறுநாள் வந்த அந்த மோசமான சுனாமியை யாராலும் மறக்க முடியாது, ரம்யா டியர்
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

கருவாட்டு குழம்பு ஆம்லெட் :love:
எங்க வீட்டிலும் இது தான் combo......

Mobile 1 2 வயசு குழந்தையே use பண்ணுது நம்மை விட சூப்பரா .......

ரேணு நல்லா ஐடியா பண்ணுறா மீட் பண்ணுறதுக்கு......
அருள் சுனாமி நினைவுக்குள் போய்ட்டானா???
ரோஜா என்ன பண்ண போறா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top