P5 இதயக் கூட்டில் அவள்

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
Hi Friends

Thank you all for the birthday wishes. I feel blessed to have many wonderful friends.

Here comes the precap for next update.

விக்ரம் இரவு வெகு நேரம் கழித்துதான் வந்திருந்தான். அதனால் காலையில் எழுந்து கொள்ளவும் நேரம் ஆகி இருக்க, வனிதா முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள். சுஜி எதாவது கேட்டாலும் கோபப்பட்டாள். மனைவியின் எரிச்சல் எதனால் என விக்ரம் அறியாதவன் அல்ல...அவள் மனதில் இருக்கும் ஆசைகள் புரியாமலும் இல்லை.

நேத்து ஏன் சண்டை போட்டோம் என இப்போது தோன்றியது. இதே மனநிலையில் ஊர் திரும்பினால், இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும் என்றும் தெரியும். வனிதா இதையே மனதில் வைத்து தன்னை வதைப்பாள் என நினைத்தான்.

“சுஜி நீ முதல்ல ரெடி ஆகு. அருணோட விளையாடலாம்.” என விக்ரம் சொல்ல.. வனிதா மகளை கிளப்பினாள்.

விக்ரம் அவளை அழைத்துக் கொண்டு வெற்றியின் அறைக்கு சென்று விட்டு வந்தான். இரவு சீக்கிரமே உண்டதால் ஆதிரை பசிக்கிறது என்றதால்... அவர்கள் உணவு அருந்த கிளம்பிக் கொண்டு இருந்தனர்.

********************************************************************************************************

“நீ என்ன குழம்பு பண்ணி இருக்க. ஆதி இந்தக் குழம்பு நல்லா பண்ணுவா... அவ சமைக்கிறது உங்க அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும்.”

“உங்க மருமகள் உசத்தி தான் போதுமா... இதை அவகிட்ட சொல்லி இருக்கீங்களா?”

“இப்ப நான் சொன்னதுக்கு நீ கோவிச்சியா? சாதாரணமா எடுத்துக்கிற. இதே உன் தம்பி பொண்டாட்டியா இருந்தா உடனே முகத்தை தூக்கி வச்சிப்பா.”

“நீங்க எனக்கு அம்மா, அதே அவளுக்கு மாமியார். எனக்குமே எங்க மாமியார் இப்படி குறை சொன்னா கோபம் வரும்தான். அதோட அவ நல்லாத்தானே சமைக்கிறா.”

“நீ உன் தம்பி பொண்டாட்டியை விட்டுக் கொடுக்க மாட்டியே.”

“அப்படியில்லை மா... எனக்கிருக்கிறது ஒரு தம்பி. அவனையும் பகைச்சிக்க சொல்றீங்களா? அதுவும் ஆதிரை பட்டு பட்டுன்னு பேசுவாளே தவி,ர மனசுல ஒன்னும் வச்சுக்க மாட்டா.”

**************************************************************************************************************

“சின்ன கிளாஸ் தானே மா படிக்கிறா, ஒருநாள் போகலைனா ஒன்னும் இல்லை.”

“அந்தப் பையன் மட்டும் சின்ன பையன் இல்லையா... அம்மா பொறுப்பா இருந்தா, பிள்ளைகளும் பொறுப்பா இருக்கும். இங்க எங்க? அம்மாகாரியே படுத்து ஒன்பது மணி வரை தூங்கினா... பொண்ணும் அவளை மாதிரிதான் இருக்கும்.”

“மகனையும் ஸ்கூலுக்கு அனுப்பிட்டு ஆதிரை கோவிலுக்கு வந்திருந்தா...”

“ஏன் மா இன்னைக்குத்தானே ஊர்ல இருந்து வந்தேன்னு கேட்டா...”

“அத்தை இல்லை... அவங்க இருந்தா அவங்க வந்திருப்பாங்க. பூஜைக்கு வீட்ல இருந்து யாராரவது வரணும் இல்லை. அதுதான் நான் வந்தேன்ன்னு சொல்றா.”

“பொண்ணுன்னா இப்படி பொறுப்பா இருக்கணும். நம்ம வீட்லயும் இருக்காளே...”

“நீ ஏன் இதெல்லாம் இவன்கிட்ட சொல்ற... இவனுக்கு நல்ல புத்தி இருந்திருந்தா, நம்ம வீட்டுக்கு வர வேண்டிய மகாலட்சுமிய.. அவன் ப்ரண்ட்டுக்கு கட்டி வச்சிருப்பானா...ஒழுங்கா வீட்ல சொன்னதைக் கேட்டிருந்தா, நம்ம வீடும் லட்சுமி கடாட்சமா இருந்திருக்கும்.” என விக்ரமின் அப்பா மூர்த்தி பிடித்துக்கொள்ள,

“அப்பா, எனக்கு கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆகியும், நீங்க இந்தப் பேச்சை விட மாட்டீங்களா பா... ஆதிரை வெற்றியோட பொண்டாட்டி. வெற்றிக்கோ ஆதிரைக்கோ இந்த விஷயம் தெரியாது. வெற்றி எப்பவும் இந்தப் பேச்சை எல்லாம் விரும்பமாட்டான். இனியொரு முறை இந்த விஷயத்தை பேசாதீங்க.” என சொல்லிவிட்டு விக்ரம் உள்ளே சென்றான்.
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:
Happy Birthday ரம்யா.........

மருமகள் நல்லா சமைப்பா......... ஆனால் சொல்லமாட்டாங்க அவங்க கிட்ட :p:p:p பொண்ணு செமையா கேள்வி கேக்குறா வெற்றி அம்மாவை........

வனிதா ஏற்கெனவே வெற்றி-ஆதிரை tune-க்கு வீட்டுக்காரன் ஆடுறான்னு நினைக்கிறா....... இதில் தனக்கு வந்த பொண்ணை நண்பனுக்கு விட்டுக்கொடுத்திருக்கான்னு தெரிந்தால் அவ்ளோ தான்........
வெற்றிக்கு காதலோ ஆதிரை மேல்???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top