P4 Uppuk Kattru

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
Hi Friends, Epi I will give in the evening.

“நான் தான் ஆரம்பத்திலேயே அருளுக்கு உன்னை கொடுக்க மாட்டேன்னு சொன்னேன் இல்ல... அப்புறம் நீங்க ரெண்டு பேரும் என் இப்படி பண்றீங்க?”
“அவங்களுக்கு என்ன பா குறை?”
“குறைன்னு நான் சொன்னேனா? உங்க அண்ணனை இந்த கடல்ல தான் பரி கொடுத்தேன். இதே மாதிரி அருளுக்கும் எதாவது ஆனா அப்புறம் உன்னோட நிலைமை.”
“உங்க அண்ணிக்கு வந்த நிலை உனக்கும் வரணுமா... உன்னை அந்த நிலையில என்னால பார்க்க முடியாது.” என்றவர், வெளியே திண்ணையில் சென்று உட்கார்ந்து கொள்ள.. அவர் மறக்க விரும்பிய சம்பவம் அவர் மனக் கண் முன் அலைமோதியது.
மரியதாசிற்கு இரண்டு பிள்ளைகள். ஆண் ஒன்று, பெண் ஒன்று. வரும் வருமானம் பெரிதாக இல்லை என்றாலும், அந்த சின்னக் குடும்பம் சந்தோஷமாகவே இருந்தது.
திடிரென்று ஏற்பட உடல்நலக் குறைவால் மரியதாசின் மனைவி இறந்து விட... வீட்டை பார்த்துக் கொள்ளவும், ரோஜாவுக்கு துணை என்றும் நினைத்து, இருபத்திரண்டு வயதேயான மகன் ஸ்டீபனுக்கு மரியதாஸ் திருமணம் செய்து வைத்தார்.


***********************************************************************************************************************

இலங்கையின் ரோந்து படகிற்கு அவர்கள் மீனவர்கள் என தெரியாமல் இல்லை. ஆனாலும் தங்கள் வீரத்தை காண்பிக்க... மீனவர்களின் உயிர் தானே, போனால் போகிறது என்று இவர்கள் படகை நோக்கி சுட ஆரம்பித்தனர். அதில் குண்டடி பட்டு ஸ்டீபன் இறந்து போனான்.
அவனை தீவிரவாதி என முத்திரை குத்த முயன்ற இலங்கை அரசுடன் போராடி, அவனை மீனவன் என நிருப்பித்துக், அவன் உடலை கொண்டு வர... மீனவர்கள் அனைவரும் சேர்ந்து போராடினார்கள். அதில் அருளும் ஒருவன்.
நிர்மலாவின் பெற்றோர் அவளை தங்களுடன் அழைத்துக் கொண்டு சென்று விட்டனர். மறுவருடம் வேறு ஒருவனுக்கு திருமணமும் செய்து கொடுத்து விட்டனர்.
திருமணதிற்கு மரியதாசும், ரோஜாவும் சென்று இருந்தனர். நிர்மலாவுக்கு அந்த திருமணத்தில் விருப்பமே இல்லை. பெற்றோரின் வற்புறுத்தலுக்காக சம்மதித்து இருந்தாள். இவர்களை பார்த்ததும் இறந்து போன ஸ்டீபனை நினைத்து, அப்படி ஒரு அழுகை அழுதாள்.
என்னையும் உங்களோடு அழைத்து போங்கள். இந்தத் திருமணம் வேண்டாம் என அவள் கதறியது இப்போதும் மரியதாஸின் மனதை கசக்கி பிழிவதாய் உணர்கிறார்.
ஒரு மாதம் என்றாலும், ஸ்டீபனும் நிர்மலாவும் வாழ்ந்த வாழ்க்கை அப்படி, திடிரென்று அது கலைக்கப்பட்டு மீண்டும் இன்னொருவரை திருமணம் செய்து வாழ்வதென்பது, அவ்வளவு எளிதான விஷயம் அல்ல... அந்த பெண் மனம் பட்ட பாடு இவருக்கு நன்றாகவே புரிந்தது.
 

banumathi jayaraman

Well-Known Member
மரியதாஸின் பயமும் கவலையும் நியாயமானதே
பெண் மனதை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்
மீனவர்களின் வாழ்க்கை கொஞ்சம் சிக்கலானதுதான்ப்பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top