P3 Sangeetha Swarangal

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
Hi ramya!
Iam a biggest fan of u, நான் இந்த sitela padika வந்ததே நீங்க இங்க ஏழதறீங்க அதனாலதான் நான் உங்களுக்கு புதுசு, but நீங்க எனக்கு ரொம்ப close through ur novels, so அதனாலதான் அப்படி சொல்லிட்டேன், i am really very sorry if it make u feel hurt, நான் இனிமே unga கதை சுதந்தரத்துல, interfere ஆக maten. As a frienda தான் அப்படி solliten பா.

Ok Pa thank you for your understanding :)
 

banumathi jayaraman

Well-Known Member
Hi friends :)

கொஞ்சம் பேசலாம் இன்னைக்கு. நான் இங்க சில பேர் பத்தி சொல்றேன், எல்லோரையும் சொல்லலை.

கதையில எதாவது குறை இருக்கா சொல்லுங்க. நானும் அது தப்புன்னு உணர்ந்தா திருத்திக்கிறேன். அதை விட்டு, இந்தக் கதை எழுதுங்க, அந்தக் கதை மாதிரி எழுதுகன்னு சொல்றது எல்லாம் அதிகம். நீங்க சொல்ற மாதிரி எழுதினா, நான் எப்பவும் ஒரே கதையை வேற வேற டைட்டில்ல தான் கொடுக்கணும்.

நான் என்ன எழுதணும்னு எனக்குதான் தோணனும். அப்பத்தான் அது சரியா வரும்.

இங்க ஆயிர கணக்கான பேர் கதை எழுதுறாங்க. இதுல நாம தனியா தெரியணும்னா வித்தியாசமா எழுதணும், நமக்குன்னு ஒரு தனித் தன்மை இருக்கணும், அப்பத்தான் இங்க நிலைச்சு நிக்க முடியும்.

என்னோட கதை பிடிக்கலையா படிக்காதீங்க. நான் யாரையும் வற்புறுத்த மாட்டேன். அதை மாதிரி என்னையும் போர்ஸ் பண்ணாதீங்க. எனக்கு அது பிடிக்காது.

யாரையும் புண் படுத்த சொல்லலை... சில நேரம் நான் அப்படி பீல் பண்றேன்.

ஓகே இப்ப கதைக்கு வருவோம்.


Here comes the precap for Sangeetha Swarangal 3

வைதேகியின் அருகில் வந்து படுத்த திலோத்தமா, உறங்கும் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தாள். தான் திருமணம் செய்யாதது அவருக்கு நிறைய மன வருத்தம் என்று புரிந்தது.

தனக்குப் பிறகு மகள் எப்படி இருப்பாள் என்ற கவலை வைதேகிக்கு தான் இருந்தது. ஆனால் திலோத்தமா அந்த மாதிரி கற்பனை கூடச் செய்து பார்த்தது இல்லை. அம்மா இப்படியே எப்போதும் இருப்பார் என்பது போலத்தான் இருந்தாள்.

இன்று அவருக்கு உடம்பு முடியாமல் போனதும் கொஞ்சம் ஆடித்தான் போய் விட்டாள். அரவிந்தன் மட்டும் இல்லையென்றால் மிகவும் பயந்து போய் இருப்பாள்.

படிக்கும் காலத்தில் இருந்தே நிறைய வரன்கள் வந்தது. ஏன் இப்போது கூட வருகிறது. ஆனால் திலோத்தமாக்கு ஒரு பிடித்தம் என்பது எந்த வரனிடமும் தோன்றவில்லை.
**************************************************************
இன்று முகிலன் அர்ச்சனா வேறு வருவதாகச் சொல்லி இருக்கிறார்கள். அவர்கள் வருவதற்குள், திலோத்தமா கிளம்பி விட்டால் நன்றாக இருக்கும், இல்லையென்றால் அர்ச்சனாவின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாது.
அவன் யோசனையில் இருக்கும் போதே திலோத்தமாவும் பாவனாவும் வெளியே வந்தனர்.


“சரி நான் கிளம்புறேன்.” என எதற்கு வந்தோம் என்பதையே மறந்துவிட்டுத் திலோத்தமா கிளம்ப, அரவிந்தன் அவளை ஒருமாதிரி பார்த்தான்.

பிறகே அவன் பார்வையை உணர்ந்து, “அம்மாவோட ரிப்போர்ட்.” என்றாள்.

“உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும், எல்லாமே நார்மலா இருக்கு. ஒன்னும் பிரச்சனை இல்லை.” என்றான்.

“தேங்க்ஸ்...” என்றவள் வாயிலை நோக்கி நடக்க, “மாமா...” எனக் கத்திக் கொண்டு முதலில் புவன் ஓடி வர... பின்னே முகிலனும் அர்ச்சனாவும் வந்தனர்.
**************************************************************
“அவங்க வீட்டுக்கு விருந்தாளி வந்திட்டாங்க மா... இவ்வளவு நேரம் அவங்களோடதான் பேசிட்டு இருந்தேன்.” என்றவள், அவர்கள் யார் என விவரம் சொல்லியபடி சாப்பிட்டு முடித்தாள்.


வைதேகிக்கு தன் பெண்ணைப் பார்த்து ஆச்சர்யம் தான். அவள் இது போல எல்லாம் யாரு வீட்டுக்கும் செல்பவள் இல்லை. மகளை ஆராய்ச்சியாகப் பார்க்க ஆரம்பித்தார்.




 

Chitrasaraswathi

Well-Known Member
ஹாய் ரம்யா இந்த தடவை நான் உங்களை கோபப்படுத்தவில்லை என்று நினைக்கிறேன். இந்தக் கதை கரு என்னை ஈர்த்துள்ளது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top