P22 Uppuk Kattru

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
Hi Friends

Naan dp vachchathaiye maranthu poyitten. summa bore adikuthennu cell nondittu irukkum pothu panna velai.
ennadaa precap ku ivvavlu comments vanthirukku parththaa, story ku varalai dp ku vanthirukkunnu appuram thaan theriyum. anyway many thanks.

Naalaikku update kodukka mudiyumaa theriyalai... sunday I'm busy. Otherwise I will give final update along with epilogue on Monday. athuvarai daily precap kodukiren.

*******************************************************************************************************************

“நான் இப்பவும் சொல்றேன், இந்தக் காதல் மேல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏன்னா நான் பார்த்த காதல் எல்லாம் அப்படித்தான் இருந்தது.” என்ற பவித்ரா மேலும் தொடர்ந்தாள்.
“உருகி உருகி லவ் பன்னுவாங்க, அப்புறம் ஈஸியா பிரேக் அப்ன்னு சொல்வாங்க.”
“இவ்வளவு நாள் எங்கிருந்தோ கஷ்ட்டபட்டுட்டு, இப்ப எல்லாம் சரியாகிற நேரத்தில, நீ உனக்காக ஒரு பெண் அங்க இருக்கான்னு சொல்லும் போது, கோபம் தான் வந்தது.”
“எனக்கு தெரியும், நம்ம வீட்ல ஒத்துக்க மாட்டாங்கன்னு. அதனால தான் நான் வேண்டாம்ன்னு சொன்னேன்.”
“ஆனா நீ இவ்வளவு தீவிரமா ரோஜாவை கல்யாணமா பண்ணுவேன்னு நான் எதிர்பார்க்கலை...”
“நம்ம வீட்டிலே உன்னை சேர்க்க மாட்டாங்களோ... நீ அங்கயே இருந்திடுவியோன்னு பயம், அதுதான் ரோஜா மேல கோபப்பட காரணம்.”
“நான் பயந்த மாதிரிதான் ஆச்சு. நீ அங்கயே இருந்திட்ட. இதுக்கு மேல சரி வராதுன்னு தான் எல்லார்கிட்டயும் சண்டை போட்டேன். ரோஜாகிட்டையும் கோபமா பேசினேன்.”


***************************************************************************************************************

“நான் ஒத்து வரலைனா, நீங்க அடுத்து ரோஜாவை தேடி போவீங்கன்னு தெரியும். அதனாலதான் நான் உங்களுக்கு நேரமே கொடுக்கலை....”
அண்ணன் சொன்னதற்கு பொய்யாக கூட இல்லை என பவித்ரா மறுக்கவில்லை. கண்டிப்பா ரோஜாகிட்ட பேசி இருப்பேன் என்றாள்.
“நீ அவகிட்ட சண்டை எல்லாம் போட வேண்டாம். எங்க அண்ணன் நல்லா இருக்கணும், நீ விலகிக்கோ சொன்னாலே... அவ விலகி போயிருப்பா... ஏன்னா அவளுக்கு என்னோட சந்தோஷம் தான் முக்கியம். ஆனா அதுக்கு பிறகு நாங்க ரெண்டு பேருமே நடைபிணமா தான் இருந்திருப்போம். வேற வாழ்க்கை எல்லாம் தேடி இருக்க மாட்டோம்.”
“நீ நினைக்கிற மாதிரி, பருவ கோளாறுல வரலை எங்க காதல். ரோஜாவை பார்த்து பிடிச்சு போய் பொண்ணு கேட்டேன். அவங்க அப்பா பொண்ணு கொடுக்கலை... ஏன் தெரியுமா? அவர் தன் பையனை கடல்ல தான் இழந்தார். அதனால கடலுக்கு போறவனுக்கு பொண்ணு கொடுக்க மாட்டேன்னு சொன்னார்.”
“ஆனா அதுக்கு பிறகு தான் ரோஜா என்னைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு தீவிரமா இருந்தா... அவங்க அப்பா மட்டும் பிடிவாதம் பிடிக்கலைனா... எங்களுக்கு எப்பவோ கல்யாணம் ஆகி இருக்கும்.”
“அப்ப என்ன செஞ்சிருப்ப நீ? ரோஜாவை டைவர்ஸ் பண்ணிட்டு வான்னு சொல்லி இருப்பியா?”
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice precap

அருள் ஓட கேள்விக்கு பதில் சொல்லு பவித்ரா...

முன்னாடி DP ல இருந்த போட்டோவ விட இந்த போட்டோல இன்னும் சூப்பர்ரா இருக்கீங்க...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top