P22 எந்தன் காதல் நீதானே

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
மறுநாள் அதிகாலையே வெண்ணிலா எழுந்துகொள்ள, அவள் எழும் போதே ஜெய்யும் எழுந்து விட்டான்.

“இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தான.” என்ற கணவனின் கேள்வி காதில் விழாதது போல அவளது வேலைகளைப் பார்த்தவள், குளித்துவிட்டு கீழே சென்றுவிட்டாள்.

சிறிது நேரம் சென்று ஜெய் சென்றபோது, “ரெண்டு அத்தையும் கூடிட்டு போங்க மாமா. நானும் அகல்யாவும் பார்த்துக்கிறோம்.” என வெண்ணிலா சொல்லிக் கொண்டிருந்தாள்.

ஜெயராமன் யோசனையில் இருக்க, கணவன் வுவருவதைப் பார்த்ததும் வெண்ணிலா, அவனை நீயே சொல்லு என பார்வையாலையே மிரட்ட, “அவதான் சொல்றாளே நீங்க எல்லாம் கிளம்புங்க. நான் சாயங்காலம் சீக்கிரம் வந்து பார்த்துகிறேன்.” என்றான்.

“நீங்க என்ன பார்ப்பீங்க. நீங்க வந்து சமைப்பீங்களா?” என வெண்ணிலா வேண்டுமென்றே கேட்க,

“கொழுப்பு டி உனக்கு. கொஞ்சம் விட்டா வாய் வங்காள விரிகுடா வரைக்கும் நீளும் போல.... உனக்கு நான் சமைக்க வேற செய்யணுமா? வேணா ஹோட்டல்ல வாங்கித் தரேன்.” என்றான் ஜெய்.

“சரிமா நீயும் கிளம்பு. இன்னைக்கு உங்க வீட்டுக்கும் போய் பத்திரிகை வச்சிட்டு வந்திடுவோம்.” என ஜெயராமன் காமாட்சியைப் பார்த்து சொல்ல, அவர் மகிழ்ச்சியுடன் கிளம்ப சென்றார்.

காமாட்சிக்கு எப்போதுமே நன்றாக உடை அணிந்து கொண்டு வெளியே செல்வது விருப்பம். அது தெரிந்து தான் வெண்ணிலாவும் போக சொன்னாள். அவளுக்கே தெரியும் போது அமுதாவுக்கு தெரியாதா?

இவர்கள் எல்லோரும் பேசிக்கொண்டிருக்க, “வெண்ணிலா, நான் மீன் குழம்பு வச்சிட்டேன். நீ சாதம் மட்டும் வச்சிடு. அகல்யா நீ வீட்டு வேலையை பார்த்திட்டு போன் பேசு.” என்றபடி அமுதா வந்தார்.

“நீங்க ஏன் அத்தை பண்ணீங்க நான் பண்ண மாட்டேனா.”

“நான் குழம்பு வச்சிட்டா உனக்கு ஈசியா இருக்குமேன்னு பார்த்தேன்.”

“சரிங்க அத்தை நீங்க போய் கிளம்புங்க.” என்றவள்,

“பார்த்தியா இவ்வளவு எளிதா தீர்க்கிற விசயத்தை நீ பேசி பிரச்சனை ஆக்கி விட்டாய்.” என்ற குற்றச்சாட்டு இருந்தது. ஜெய்கும் அது புரிய, நல்லா இருந்தா சரிதான் என நினைத்தபடி மாடிக்கு சென்றான்.

************************************************************************************************

“உண்மைய சொன்னா நான் வெண்ணிலாவை கல்யாணம் பண்ணிட்டு கஷ்டம்தான் படுத்துறேன். என் மேல இருக்க தப்பை மறைக்க நான் மத்தவங்களை கத்துறேன்.”

“உனக்கே தெரியுதே டா... அப்புறம் சரி பண்ண என்ன?”

“வெண்ணிலா என்கிட்டே இருந்து வேற எதையும் எதிர்பார்க்கலை. நான் அவளோட இருக்கணும் அதுதான் எதிர்பார்க்கிறா. ஆனா நானோ வேலைன்னு ஓடிட்டு இருக்கேன்.”

“உனக்கு தெரியும் இல்ல எங்க கல்யாணம் எப்படி நடந்ததுன்னு. கரணோட கல்யாணம் நின்ன போது கூட வெண்ணிலாவை எனக்கு கொடுக்க அவங்க வீட்ல நினைக்கலை டா... காரணம் வசதி தான்.”

“அவங்க முன்னாடி நல்லா வந்து காட்டனும் டா... அதுதான் எனக்கு.”

“நீ நினைக்கிறது சரிதான். ஆனா நீ நினைக்கறதை அடையறதுக்காக நீ எதை அடகு வைக்கிற தெரியுமா? உங்க ரெண்டு பேர் சந்தோஷத்தையும்.”

“நிறைய பேர் பண்ற தப்பு என்ன தெரியுமா? முதல்ல சம்பாதிச்சிட்டு அப்புறம் அனுபவிக்கலாம்னு நினைக்கிறது தான். ஆனா வாழ்க்கை நமக்காக காத்திட்டு இருக்காது.”

“இழந்த தருணம் இழந்தது தான். பின்னாடி ஏங்கிறதுல எந்த பயனும் இல்லை. நீயும் அந்த வரிசையில சேரப் போறியா?”

“நீ சொல்றது புரியுது. ஆனா என்ன பண்றது?”

“நீயே ஏன் டா எல்லாத்தையும் பண்ணும்ன்னு நினைக்கிற? வேலையை மேற்பார்வையிட ஒரு ஆளைப் போடு. நீயும் நடுவுல நடுவுல போய் பார்த்துக்கோ.”

“அதை நானும் யோசிக்காம இல்லை. நான் பரம்பரை பரம்பரையா இந்த தொழில் பண்ணலை. கொஞ்சம் வேலை சரியில்லைனாலும் வேற ஆள்கிட்ட போயிடுவாங்க.”

நண்பனின் வாதம் புகழுக்கும் புரிந்தது.

***********************************************************************************************

வெண்ணிலாவுக்கு அப்போது ஒன்றும் களைப்பாக இல்லை. ஆனால் கணவன் சொல்லவும் மற்றவர்களும் சேர்ந்துகொள்ள, வேறுவழியில்லாமல் தான் கிளம்பினாள். அவளோடு கற்பகமும் வருவதாக சொன்னார்.

இவர்கள் மூவர் மட்டும் வீட்டிற்கு செல்ல, வெண்ணிலா அவர்களுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து விட்டு கீழே இருந்த அறையிலேயே உடைமாற்றிவிட்டு வந்தாள்.


யுவராஜ் வெளியில் நின்று போன் பேச, உட்கார்ந்த இடத்தில் இருந்தே வீட்டை ஆராய்ந்த கற்பகம், “உண்மையிலேயே உன் நாத்தனாருக்கு என்பது சவரன் போட்டீங்களா?” என கேட்க, பிறகு பொய்யா சொல்வார்கள் என்பது போல வெண்ணிலா முறைத்துப் பார்க்க,

“அவ்வளவு பணம் இங்க இருக்கா என்ன? உன் நகை நீ போட்டிருக்கிறது போக மிச்சம் எங்க?” என்றார் சந்தேகமாக, வேறு யாரும் வந்து இவர் பேசியதை கேட்டால் என்ன ஆகும் என்ற அச்சத்தில் அவசரமாக வாயிலைப் பார்த்தவள், “பாட்டி, உங்களுக்கு ஏன் இப்படியெல்லாம் தோணுது. என் நகையை வாங்கி அகல்யாவுக்கு போடுவாங்களா? நானே கொடுத்தாலும் இந்த வீட்ல யாரும் வாங்க மாட்டாங்க.” என,

“நீ கொடுக்கிறேன்னு சொன்னியா?” என கற்பகம் சரியாக படிக்க, வெண்ணிலா வெலவெலத்துப் போனாள்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
Superb Precap,
ரம்யாராஜன் டியர்

அகல்யா கல்யாணம் நடந்து முடிந்து விட்டதா?
கல்யாணத்துக்கு வந்துட்டுத்தான் கற்பகம் கிழவி இவ்வளவு பேச்சு பேசுதா?
இப்போவாவது இந்த முட்டாள் வெண்ணிலாவுக்கு புருஷன் ஜெய் சொன்னது புரியுமா?

இந்த சூனியக்கார கிழவி இன்னுமா சாகாமல் உயிரோடு இருக்கு?
இவளோடு வெண்ணிலாவைக் கோர்த்து விட்டுட்டு எல்லோரும் எங்கே போனார்கள்?

புகழ் சரியாய்த்தான் சொன்னான்
கற்பகம் மாதிரி கிழவிக்காகவெல்லாம் பணம் சேர்க்க அதன் பின்னாடி போய் வாழ்க்கையை அனுபவிக்காமல் இருக்கக் கூடாது, ஜெய் தம்பி
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

இதான் ஆளுக்கொரு வேலையை செஞ்சா டக்குனு முடியும்........
வேலை செஞ்ச அலுப்பும் இருக்காது........

டேய் டேய் இதை அடுத்தவன் கிட்ட தண்டோரா போடுற நீ வெண்ணிலா கிட்ட சொல்லணும்........ அவ தான் உன் கூட வாழப்போறவ......
புகழ் சொல்றது சரிதான்......... பொண்டாட்டியே சரினு உன் கூட வாழும்போது அடுத்தவர்களுக்காக உன் சந்தோசத்தை அடகுவைக்கணுமா???

கிழவிக்கு இன்னுமா கொரோனா வரலை :mad::mad::mad:
இதெல்லாம் இருந்து எந்த சாதிக்கப்போகுது......
எப்போ பாரு அங்கே என்ன இருக்கு னு கேட்டுட்டு.......
இல்லைனா ஏன் பொண்ணை குடுத்தீங்க???
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமை ரம்யா:love::love::love:.அல்யாவுக்கு எவ்வளவு போட்டா இதுக்கென்ன:mad::mad:.அவங்க வீட்லேயே உட்கார்ந்துட்டு போட்டிருக்கது போக மிச்சம் நகை எங்கேன்னு கேட்குது:mad::mad:.

ஜெய், வெண்ணிலா கிட்ட நகை,பணமா எதுவும் வாங்காதது ஏன்னு,அவளுக்கு இப்போ புரியுமா :unsure::unsure:.வந்த இடத்துலே என்ன வம்பிழுத்துட்டு போகுமோo_Oo_O.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top