P21 எந்தன் காதல் நீதானே

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
அகல்யா வீட்டினர் சம்மதம் சொன்னதும், புகழ் வீட்டினர் நேரம் எடுத்துக்கொள்ளவே இல்லை. மறுவாரமே பெண் பார்க்க வந்தனர்.

அகல்யாவை வெண்ணிலா தன் அறையில் வைத்து அலங்காரம் செய்தாள். அதோடு தன்னுடைய நகைகளை வேறு அணிவித்திருக்க, அந்நேரம் அறைக்கு வந்த ஜெய்யிடம் எப்படி இருக்கிறது என காட்டி பெருமையாக கேட்க,

ஏற இறங்க தங்கையைப் பார்த்தவன், “நல்லாத்தான் இருக்கு. ஆனா உன்னுடைய நகையை கழட்டிட்டு, அகல்யாவோடதையே போடு.” என்றவன், தங்கையின் நகைகளையும் கொண்டு வந்திருந்தான். அடகில் இருந்த நகையையும் மீட்டு இருந்தான். வெண்ணிலாவுக்கு கோபம் வந்துவிட்டது.

“சும்மா அலங்காரத்திற்கு தான, யார் நகையா இருந்தா என்ன?” அவள் சொல்ல,

“அது நமக்கு தெரியும், வர்றவங்களுக்கு தெரியுமா? அவங்க எதாவது நினைச்சுக்க போறாங்க.” என,

“சில பேர் கவரிங்க் கூட போடுவாங்க. அதுக்காக கவரிங்க் நகையை போட்டா அனுப்புவாங்க.” என, ஜெய் அதையெல்லாம் காதிலேயே வாங்கவில்லை. அண்ணன் சொல்லிவிட்டால் அகல்யாவுக்குத்தான் வேத வாக்காயிற்றே, அவள் வெண்ணிலாவின் நகைகளை கழட்ட துவங்கி இருந்தாள்.

“ரொம்ப அநியாயம் பண்றீங்க நீங்க.” என வெண்ணிலா வெளிப்படையாக மனக்குமுறலை கொட்டத்தான் செய்தாள்.

அகல்யா, “அக்கா தானே போட்டுக்க கூடாது. நான் போட்டுக்கிறேன்.” என ராதிகா போட்டுக் கொண்டாள்.

“ராதிகா அணிந்து கொண்டு அழகாக இருக்கிறதா?” என கேட்க,

“நல்லாத்தான் இருக்கு. ஆனா அகல்யாவுக்கு மேல நீ இவ்வளவு நகை போட்டுட்டு நின்னா நல்லவா இருக்கும்.” என வெண்ணிலா சொல்ல, ஆமாம் அதுவும் சரிதான் என ராதிகா பெரிய ஆரத்தை கழட்ட, “நெக்லஸ் போட்டுக்கோ.” என்றவள், மற்ற நகைகளை வாங்கி பத்திரபடுத்தினாள்.

வெண்ணிலா ஏற்கனவே விழாவுக்கு ஏற்றது போல அதிகமாகவும் இல்லாமல், குறைவாகவும் தெரியாமல், பான்சி பட்டும் அதற்கு பொருத்தமான நகைகளும் அணிந்து இருந்தாள்.

***************************************************************************************************

அகல்யாவின் திருமணத்தை முன்னிட்டு வெண்ணிலாவின் வளைகாப்பு ஒன்பது மாத்தத்தில் வைத்துக்கொள்ளலாம் என முடிவானது.

திருமணத்திற்கு இன்னும் ஐந்து மாதங்களே இருக்க, கல்யாண வேலையில் எல்லோரும் மும்முரமாக இருந்தனர். யஸ்வந்த் அவன் பங்கு பணத்தை லோன் போட்டுத்தான் கொண்டு வந்து கொடுத்திருந்தான். ஜெய் இன்னும் பணத்திற்கு ஏற்பாடு செய்யவில்லை.

வெண்ணிலா கணவனிடம் மீண்டும் சொல்லிப் பார்த்தாள்.

“என்னோட நகையில கொஞ்சம் வச்சு அகல்யாவுக்கு இப்ப செய்வோம். நீங்க பிறகு என்னோடதை திருப்பிக் கொடுங்க. நாம சொல்லாம யாருக்கும் தெரியாது, நாம யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்.” எனக் கூட சொல்லிப் பார்த்தாள். ஜெய் கேட்க வேண்டும் அல்லவா.

*************************************************************************************************

“பெரியப்பா தோட்டத்தை மட்டும் தான் பார்க்கிறாங்க. ஆனா எங்க அப்பா கடையும் பார்த்திட்டு தோட்டத்திற்கும் போறாங்க. அதிகமா வேலை செய்றது எங்க அப்பாதான். ஆனா எங்கப்பாவுக்கு அவரோட உழைப்புக்கு ஏற்ற வருமானம் வருதா? இல்லையே... எங்க அப்பாத்தான் இந்தக் குடும்பத்திலேயே இளிச்சவாயன்.” என்ற ரீதியில் அவள் பேச,

“உனக்குத் தெரியாம உளறக் கூடாது. குற்றம் சொல்றதுக்கு முன்னாடி நல்லா தெரிஞ்சிட்டு பேசு.” என்றான் ஜெய்.

“உண்மையை சொன்னதும் உனக்கு கோபம் வருதா? எப்பவுமே நீதான் புத்திசாலின்னு நினைக்காத. உனக்கு மட்டும் தான் பேச தெரியுமா என்ன? நான் கேட்டா நீ தாங்க மாட்ட.” என ராதிகா பேச, பேச்சு திசை திரும்புவதை உணர்ந்த வெண்ணிலா, “இப்படித்தான் உங்க அண்ணாகிட்ட பேசுவியா?” என கேட்க,

“எங்க அண்ணன் நான் பேசுவேன். நீ ஏன் நடுவுல வர?” என்றாள் வெண்ணிலாவையும் எடுத்தெறிந்து.

“என் முன்னாடி அவரை பேசாத. என் முன்னாடி பேசினா நான் கேட்பேன்.” என வெண்ணிலாவும் திருப்பிக் கொடுக்க,

“நான் பேசிக்கிறோம் நீ நடுவுல வராத.” என கணவனும் சொல்ல, அதை கேட்டு ராதிகா வெண்ணிலாவை நக்கல் பார்வைப் பார்க்க, கோபத்தில் வெண்ணிலா அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டாள்.

நிஜமாகவே அவளுக்கு மனம் விட்டுப் போய் விட்டது. பணமாகவோ பொருளாகவோ தான் அவள் உதவியை அவன் ஏற்பது இல்லையென்றால்.. அவனுக்கு சார்பாக பேசவும் அவளுக்கு உரிமை இல்லையா? என மனதிற்குள் பெரும் கோபமே எழுந்தது. ஆனால் அகல்யா கல்யாணத்தை முன்னிட்டு எதையும் காட்டிக்கொள்ளாமல் இருந்தாள்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
Superb Precap,
ரம்யாராஜன் டியர்

ஜெய் சொல்வது நியாயம்தானே
அகல்யாவுக்கு வெண்ணிலாவின் நகையைப் போட்டு அவள் பிறந்த வீட்டில் ஜெய்யை கேவலமா பேசணுமா?
ராதிகா ஏன் தேவையில்லாமல் பேசி பிரச்சனை பண்ணுறாள்?
அடி காமாட்சி
பொண்ணுக்கு என்னத்தைடி சொல்லிக் கொடுத்தே?
அப்பாதான் ஜாஸ்தி வேலை செய்யுறார்
பெரியப்பா கம்மியா செய்யுறார்ன்னா அதுக்கு என்ன பண்ணணும், ராதிகா?
ஜெய்யிடம் ஏதாவது உறண்டை இழுக்குறதே வெந்நீர்நிலாவின் வேலையா போச்சு
அண்ணன் தங்கச்சி தகராறுக்குள்ளே நீ ஏன் போறே, நிலா?
ராதிகாவுக்கு ஜெய்யே நல்லா கொடுத்து கட்டுவான்
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

இந்த ராதிகா என்ன இப்படி எல்லாம் பேசுறா.......
அம்மா செஞ்ச தப்பு தெரியவே இல்லை......
கூட்டு குடும்பனா எல்லோரும் கணக்கு பார்த்து வேலை செய்யமுடியுமா???
சின்னவங்களை கொஞ்சம் ஓடி ஆடி வேலை செய்ய விடுவாங்க பெரியவங்க......
முடியலைன்னா கூட்டு குடும்பத்தில் இருக்கக்கூடாது......
சலசலப்பு அடங்குற மாதிரி இல்லை........
ஜெயராமன் தம்பியை தனியா விடுறது நல்லது......
சந்திரன் பொண்டாட்டி பிள்ளைங்க பட்டு தான் தெளிவாங்க.....

இவளால ஜெய் வெண்ணிலாக்கு வேற பிரச்னை....
யுவராஜுக்கு வேற பொண்ணு பார்க்க வேண்டியது தான்.....
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமை ரம்யா:love::love::love:.ராதிகா பேசறது எதுவும் சரியில்லையே,காமாட்சியோட பொண்ணுன்னு நிரூபிக்கிறா:mad::mad::mad:.

இவளோட அப்பா தான் கஷ்டப்படறது போல பேசறதும்,அண்ணன்,அண்ணி என மரியாதை இல்லாமல் எடுத்தெறிஞ்சு பேசறதும் சரியில்லையே:mad::mad::mad:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
யுவராஜுக்கு ராதிகா சரிப்பட மாட்டாள் போலவே
நாளை பின்னே வெண்ணிலாவுக்கு ஒண்ணும்
சீர் செய்ய விட மாட்டாள்
பெரிய அண்ணனுக்கு பொண்ணு கொடுத்து
சின்ன அண்ணனின் பொண்ணை மகனுக்கு எடுக்கலாமுன்னு நினைத்தால் மகேஸ்வரி அந்த நினைப்பை மாற்றிக் கொள்ளத்தான் வேணும்
மகனை தனிக்குடித்தனம் போக சொன்னதுக்கு ஜெயராமன் தம்பி சந்திரனை தனியா போக சொல்லலாம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top