P19 எந்தன் காதல் நீதானே

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
அன்று மாலையே மகேஸ்வரி திரும்ப வேண்டும் என்பதால், காலையே கிளம்பி வந்திருந்தனர். ஞாயிற்றுக் கிழமை என்பதால் எல்லோரும் வீட்டில் தான் இருந்தனர். ஆனால் ஜெய் மட்டும் இல்லை. தெரிந்த கதை தானே என வெண்ணிலா மனதில் நினைத்துக் கொண்டாலும், வெளியே காட்டிக்கொள்ளாமல் மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

வெண்ணிலாவை பார்க்க அன்று விமலாவும் தன் பிள்ளைகளோடு வந்திருந்தார்.

மதிய உணவு தடபுடலாக சமைத்திருந்தனர். எல்லோரும் உணவு உண்ண அமரும் நேரம் ஜெய்யும் வந்துவிட்டான்.

“வாங்க அத்தை.” என்றவன், “கார்ல வரும் போது எதுவும் பிரச்சனை இல்லையே?” என மனைவியையும் நலம் விசாரிக்க,

“ம்ம்... இல்லை.” என அவள் சொல்ல, அவன் சாதாரணமாக பேசவும் வெண்ணிலாவுக்கு ஒரே குழப்பம். நம்ம மேல கோபம் இல்லையா, நாமதான் தேவையில்லாம பயந்திட்டு இருந்தோமா என நினைத்தவள், அவளும் அதன்பிறகே இயல்பாக இருந்தாள்.

உணவு மேஜையில் எல்லோரும் உட்கார முடியாது என ஹாலில் உட்கார பந்திப் பாய் விரித்து, வாழை இலையில் உணவு பரிமாறினர்.

வெண்ணிலா பரிமாற செல்ல, கீழே குனிந்து பரிமாற சிரமமாக இருக்கும் என அமுதா அவளை வேண்டாம் என்றுவிட... அவளும் கணவன் அருகில் அமர்ந்து கொண்டாள்.

காமாட்சியும் அகல்யாவும் எல்லோருக்கும் பரிமாறிவிட்டு, அவர்களும் மற்றவர்களோடு சேர்ந்து உண்ண அமர்ந்தனர்.

“எவ்வளவு நாளாச்சு இப்படி எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டு. அம்மா இருக்கும் போது இப்படி சாப்பிட்டது.” என மகேஸ்வரி சொல்ல,

“ஆமாம் அதுக்கு பிறகு நீ எங்க வந்து நம்ம வீட்ல தங்கின.” என்ற விமலா, “இப்பவும் உன் மகளை இங்க செஞ்சிருக்கிறதுனால வந்திருக்க... இல்லைனா உன் வீட்டு ஆளுங்க விடுவாங்களா என்ன?” என்றார்.

***********************************************************************************************

“அதெல்லாம் இப்ப விட முடியாது. நாங்களே ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்குத்தான் சேர்ந்திருக்கோம். என்னை அத்தை வீட்டுக்கு போக விடலை இல்லை. நாங்க பேசிட்டு தான் நீ பேசணும்.” என ராதிகா வெண்ணிலாவை பிடித்து வைத்துக்கொள்ள,

ஜெய் அவளை முறைத்தபடி வெண்ணிலாவை அங்கிருந்து அழைத்துக் கொண்டு சென்றான். தனியாக வந்ததும், “நீ அகல்யாகிட்ட புகழை கல்யாணம் பண்ணிக்க இஷ்டமான்னு கேளு.” என,

இப்போவா என்பது போல வெண்ணிலா பார்க்க,

“ஆமாம் இப்பத்தான். நான் வீட்ல பேசணும்.” என்றதும், வெண்ணிலா அகல்யாவிடம் எதோ கேட்பது போல தனியாக அழைத்து சென்றவள், ஜெய் சொன்னதை சொல்லி அவள் சம்மதம் கேட்க,

“அண்ணன் எது செஞ்சாலும் என் நல்லதுக்குதான் இருக்கும்.”

“இந்த பாசமலர் கதை எல்லாம் வேண்டாம். உங்க அண்ணன் அவர் விருப்பத்துக்குதான் கல்யாணம் பண்ணார். அதை நினைவுல வை. உனக்கு பிடிச்சிருக்கா இல்லையா அதுதான் கேள்வி.”

“எனக்கு பிடிச்சிருக்கு.” என அகல்யா சொல்ல, வெண்ணிலா அவளை நிஜம் தானா என்பதுப் போலப் பார்க்க,

“உண்மையாவே பிடிச்சிருக்கு.” என அகல்யா சிரித்தபடி சொல்ல, பிறகே வெண்ணிலா அங்கிருந்து சென்றாள்.

ஹாலில் மற்றவர்களுடன் அமர்ந்திருந்த ஜெய் வெண்ணிலா வருவதைப் பார்த்து அவளை ஆவலாக நோக்க, சம்மதம் என்பதாக வெண்ணிலா தலையசைக்க, ஜெய் அப்போதே வீட்டில் சொல்லிவிட்டான்.

*****************************************************************************************

அவன் சொன்ன தொனியே, அவன் சம்மதம் கேட்கவில்லை. தகவல் தான் சொல்கிறேன் என்பதுப் போல இருக்க.. ஜெயராமனுக்கு கடுப்பாக இருந்தது.

“நீ எங்ககிட்ட சம்மதம் கேட்கிறியா? இல்லை தகவல் சொல்றியா?”

“நீங்க எப்படி நினைக்கிறீங்களோ அப்படி” என ஜெய் தோளைக் குலுக்க,

இவன் அடங்கமாட்டான் என நினைத்த வெண்ணிலா,

“அவர் சொல்ற இடம் நல்ல இடம் தானே மாமா. அதோட புகழ் அண்ணாவை நம்ம எல்லோருக்கும் தெரியும். வெளிய எங்கையோ செய்றதுக்கு இது பரவாயில்லை இல்லையா?” என வெண்ணிலா கணவன் சார்பாக பேச,

“நல்ல இடம்தான் இல்லைன்னு சொல்லலை மா.. ஆனா அவங்க நம்மை விட வசதி. அவங்க எதிர்ப்பார்க்களைனாலும், நாம அவங்க அளவுக்கு செய்யணும்.”

“அதுகென்ன நானும் செய்யலாம்.” என ஜெய் சொல்ல,

“அகல்யாவுக்கு செய்யுற அளவு ராதிகாவுக்கும் செய்யணும்.பொதுவுல இருந்து அவ்வளவு செய்ய முடியாது. அவ்வளவு வருமானமும் இல்லை.”

“நீங்க செய்யுறது செய்யுங்க. மிச்சத்தை நான் செய்யுறேன். யஸ்வந்தும் வேலைக்கு போறான்.”

“அதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன். ஒரே வீட்ல இருந்து ஒரு பெண்ணுக்கு அதிகமாகவும், இன்னொரு பெண்ணுக்கு கம்மியாவும் செய்யுறது நியாயம் இல்லை.”

“யாரு ராதிகாவுக்கு கம்மியா செய்யலாம்னு சொன்னது? அவளுக்கும் செய்யலாம் பா... அதுக்கு இன்னும் முன்னு வருஷம் இருக்கு. அதுக்குள்ள சேர்த்திடலாம்.” என்றான் ஜெய்.

“இன்னைக்கு பேசுவீங்க டா... ஆனா உங்க குடும்பம் பெரிசானா, உங்களுக்கு அந்த செலவே பெரிசா தெரியும். எதுக்கு அதெல்லாம், நாங்க எங்களுக்கு ஏத்த இடத்தில செஞ்சிட்டு போறோம்.”

“அதுதானே நான் ஒன்னு சொல்லி நீங்க கேட்டுட்டாத்தான் அதிசயமே. பிள்ளைகளையும் கொஞ்சம் நம்புங்கப்பா. எப்பவும் இப்படியே இருக்க மாட்டோம். நாமும் முன்னேறுவோம்.”

ஜெயராமன் மறுப்பாகவே தலையசைக்க, “இவர் தானும் வாழ மாட்டார். மத்தவங்களையும் வாழ விட மாட்டார்.” என ஜெய் ஆவேசமாக தொடங்க,

“ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க? மாமாவுக்கு விருப்பம் இல்லைனா விடுங்க.” என்றாள் வெண்ணிலா.
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice Precap

அதான் ஜெய் ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி செய்யலாம்னு சொல்றான்ல, அப்புறமும் இந்த ஜெயராமனுக்கு என்ன பிடிவாதம்.. நல்ல, தெரிஞ்ச இடம் ஒத்துகிட்டா என்னவாம்???

ராதிகாவுக்கு இன்னும் மூணு வருஷம் வரை டைம் வேற இருக்கு... அதுக்குள்ள சேர்த்திட மாட்டாங்களா???
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அய்யோ உன் சோலியை பார்த்துட்டு போ அப்பா தானா எங்கே பார்த்தாலும் :p:p:p
தன்னாலும் தெரியாது சொன்னாலும் புரியாது.......
எடுத்தும் செய்யணும் பொறுப்பும் கொடுக்க மாட்டோம்.....

அடுத்த மாப்பிள்ளை உன் மச்சான் தான் :p:p:p
சோ இவ்ளோ தாண்டா வேணும்னா கட்டு இல்லைனா வெளியே பார்க்கிறோம்னு சொல்லிடலாம்.......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top