P15 Uppuk Kattru

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
Will come with the epi tomorrow.


“நீங்க இங்க வந்தா, நான் திரும்பி போக விட மாட்டேன். பரவாயில்லையா....”
“ரோஜா...”
“உங்களால இங்க இருக்க முடியாது இல்ல... அப்ப நான் சொல்றது கேளுங்க. உங்க கடமையை முடிசிட்டு வாங்க. நான் எங்கையும் போக மாட்டேன். இங்க தான் இருப்பேன்.”
“சரி நான் அப்பவே வரேன். ஆனா அதுக்கு அப்புறம் இங்க திரும்ப வர்றதுனாலும், இல்லை அங்கயே இருக்கிறதுனாலும், நாம சேர்ந்துதான் இருக்கோம்... சரியா...”
“உங்க வீட்ல ஒத்துப்பாங்களா?”
“அதை பத்தி உனக்கு என்ன? நான் சொன்னதுக்கு பதிலை சொல்லு?”
“சரி... நீங்க சொல்றபடி தான்.”
“ம்ம்... நீ தனியா இருக்க வேணாம். நான் வர்ற வரை ஸ்டெல்லா வீட்ல இரு.”
“பகல்ல நான் இங்க இருந்துக்கிறேன். நைட் வேணா அங்கப் போறேன்.”


“நான் ஜோசப்க்கு பணம் அனுப்புறேன். யாரார் செலவு செஞ்சாங்களோ, நீ அவங்களுக்கு எல்லாம் திருப்பிக் கொடுத்திடு. மிச்சத்தை உன் செலவுக்கு வச்சுக்கோ.”
“சரி...”
“எப்ப எதுனாலும் எனக்கு போன் பண்ணு.” என்றவன், “நீ பண்ண மாட்ட டி... உன் அப்பா செத்ததே சொல்லாதவ தான நீ.... ஆத்திரமா வருது, வை போன்னை.” என வைத்துவிட்டான்.
அதுவரை இருந்த வைராக்கியம் எல்லாம் அருள் போன்னை வைத்த நொடி, ரோஜாவிடம் காணாமல் போய் இருந்தது. தன் தந்தையை நினைத்து, அவர் எப்போதும் படுக்கும் திண்ணையில் உட்கார்ந்து வெகு நேரம் அழுதாள்.
ஸ்டெல்லாவும் அவள் அம்மாவும் சத்தம் கேட்டு வந்தாலும், அவளை தடுக்கவில்லை... அழுதால் தான் அவள் மனதில் இருக்கும் பாரம் குறையும் என உள்ளேயே இருந்தனர்.

***********************************************************************************************************************

இருவரும் சேர்ந்து வருவதைப் பார்த்ததும், கலை நிம்மதியானார்.
“என்ன திரும்ப வந்துட்ட கோபம் போச்சா?” பவித்ரா கேட்க,
“உங்க அண்ணன் கெஞ்சி கேட்டார்.” என ரேஷ்மா வேண்டுமென்றே சொல்ல...
“நான் உன் மிரட்டுளுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன். பாட்டிக்காக வந்தேன், இனியொரு தரம் இப்படி பண்ணன்னு வை, எப்படியும் போன்னு விட்டுடுவேன்.” என்றவன், தங்கள் வீட்டுக்கு செல்ல...
“அண்ணா சாப்பிட்டு போ...” என்ற பவித்ரா கத்துவதை பொருட்படுத்தாமல் சென்றான்.
“நீ ஆனாலும் அண்ணனை ரொம்ப டென்ஷன் பண்ற.” என பவித்ரா ரேஷ்மாவின் அருகே வந்து உட்கார.
“யாரோ இறந்து போனதுக்கு உங்க அண்ணன் ஏன் இத்தனை நாளா இப்படி இருக்கணும். நம்ம எல்லாரையும் விட உங்க அண்ணனுக்கு அவங்க எல்லோரும் முக்கியமா....”
“உன் அண்ணன் திரும்ப அங்க போனார்ன்னு வை... அப்புறம் உன் அண்ணன் உனக்கு இல்லை. நான் அவ்வளவுதான் சொல்லுவேன். உன் அண்ணன் உனக்கு வேணுமுன்னு நினைச்சா, நீதான் உங்க அண்ணன் அங்க போகாம பார்த்துக்கணும்.”
“உங்க அண்ணன் திரும்ப அந்த குப்பத்துக்கு போனா பரவயில்லைனா... எனக்கு ஒன்னும் இல்லை.” என்ற ரேஷ்மா, “நான் சாப்பிட போறேன்.” என எழுந்து சென்றுவிட... பவித்ரா யோசிக்க ஆரம்பித்தாள்.
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அவளை அழவைக்கத்தான் வை போனை சொன்னியா அருள்?
கடமை முடிந்ததும் சேர்ந்திருப்போம் அது எங்கே என்றாலும் (y)(y)(y)
இது போதும்.......

அடேய் வில்லி ரேஷ்மா........ அப்படியே ஓடிடு........ இல்லைனா செவளையை பெயர்த்திடுவான் அருள்...... அவன் ஏன்மா உன்கிட்ட கெஞ்சுறான்........

இந்த பவி அண்ணனை விட வில்லியை ரொம்ப நம்புறாளே அவள் குழப்பிவிடுறானு தெரியாமல்......
கல்யாணம் வரை பேசாமல் இரு பவி.....
இல்லைனா இப்போவே அண்ணன் உனக்கு இல்லாமல் போயிடுவான்........
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நான் நினைச்ச மாதிரிதான் அருள் ரோஜாவிடம் சொல்லுறான்

அடிப்பாவி இந்த ரேஷ்மா
வேணுமுன்னே குட்டையைக்
குழப்புகிறாள்
அருளை எங்கே கூட்டிட்டுப்
போனாள்?
இவளின் பேச்சைக் கேட்டு
ரோஜாவைப் பார்க்க விடாமல்
அண்ணனை பவித்ரா தடுக்கப்
போகிறாளா?
மாதவனுக்கு இப்படி ஒரு தங்கச்சி
அப்பனின் சீத்தல் குணம் அப்படியே
பொண்ணுக்கும் இருக்கு
ஒழுங்கா புருஷன் பேச்சை மட்டும்
கேளு, பவித்ரா
அருள் என்ன செய்யப்போறான்?
ரோஜாவா? தங்கச்சியா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top