P15 எந்தன் காதல் நீதானே

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
“வீட்டுக்கு போகும் போது பதினொன்னு ஆகிடும். உன்னை வீட்ல விட்டுட்டு உடனே கிளம்பனும்.” என ஜெய் சொன்னதும், அதுவரை மனதில் இருந்த குளுமை மறைந்து, மனதில் வெப்பம் உண்டானது.

“எங்கப் போகப் போறீங்க?” என அவள் கடுப்பாக,

“வேலை இருக்குன்னு சொன்னேன் இல்ல...” என்றான்.

“ஞாயிற்றுக் கிழமை கூட என்ன வேலையோ?” என வெண்ணிலா முனங்க... ஜெய் வண்டியை நிறுத்தி இருந்தான்.

“என்ன சொன்ன?” என அவன் கேட்க, வண்டியில் இருந்து வெண்ணிலா இறங்கி நின்றவள் அவன் முகம் பார்க்காமல் வேறு எங்கோ பார்க்க, “இப்ப உனக்கு என்ன டி பிரச்சனை?” அவன் கேட்க,

“இதுக்கு நான் எங்க வீட்லயே இருந்திருக்கலாம்.” என்றாள்.

“இன்னைக்கு ஞாயிற்றுக் கிழமை தான இன்னைக்கு கூட வீட்ல இருக்க மாட்டீங்களா?”

“வீட்ல தான் அத்தனை பேர் இருக்காங்க இல்ல... நானும் வீட்ல இருந்து என்ன பண்றது?”

“அதெல்லாம் எனக்கு தெரியாது. ஒன்னு நீங்களும் வீட்ல இருக்கணும்... இல்லை என்னையும் உங்களோட கூடிட்டு போங்க.”

ஜெய் அவளைப் பார்க்க, அவள் உடல் மொழியில் இருந்தே அவள் பிடிவாதத்தை அறிந்தவன், “சரி வா...” என, எங்கே என வெண்ணிலா சந்தேகமாக பார்க்க,

“என்னோட தான் கூடிட்டு போறேன் வா...” என்றதும், வெண்ணிலா பைக்கில் ஏற, ஜெய் வண்டியை திருப்பினான்.

“பார்க்க ரொம்ப அமைதியா இருக்க... ஆனா செம பிடிவாதம். நினைத்ததை சாதிக்கிற.” என ஜெய் வண்டியின் கண்ணாடியில் அவளைப் பார்த்து முறைத்தபடி சொல்ல, அது தெரிந்தாலும், வெண்ணிலா வேடிக்கை பார்ப்பது போல நடித்தாள்.

*********************************************************************************************

ஜெய் வேலைக்கு சென்ற பிறகுதான் வெண்ணிலா அவர்கள் அறைக்கு வந்து துவைக்க வேண்டிய துணிகளை துவைத்து உலர்த்துவாள். அன்றும் அது போல துணிகளை துவைத்து உலர்த்திக் கொண்டிருக்க... கைப்பேசி அழைத்தது.

அலுவலகத்திற்கு சென்ற பிறகு முக்கியமான விஷயம் இருந்தாலே ஒழிய ஜெய் அழைக்க மாட்டான். ஒருவேளை அம்மாவோ என நினைத்து வெண்ணிலா வந்து பார்க்க, தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு.

வெளிநாட்டு அழைப்பு என புரிந்தது. தனக்கு யார் அழைக்க போகிறார்கள்? எடுப்போமா வேண்டாமா என யோசித்துக் கொண்டே எடுத்து பேசினாள்.

“ஹலோ...”

“ஹாய் வெண்ணிலா நான் கரண் பேசுறேன்.” என்றதும், முதலில் கரண் யார் என நியபகத்திலேயே இல்லை. அவள் யோசிக்கும் போதே... எப்படி இருக்க வெண்ணிலா என அவன் திரும்ப கேட்டது தான் நினைவுக்கு வந்தது.

“ஹான் கரண் அத்தான் நீங்களா?” என்றாள்.

“நான் ரொம்ப நாளா போன் பண்ணனும் நினைச்சேன். பாட்டி சொன்னங்க நீ உங்க அம்மா வீட்ல இருக்கிறதா? அதுதான் போன் பண்ணேன்.”

“ஓ... ஆனா நான் இப்போ இங்க வந்துட்டேன்.” என்றாள்.

“அப்படியா? சரி சொல்லு எப்படி இருக்க?”

“நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?”

“நான் நல்லா இருக்கேன். என்னை விடு... சாரி வெண்ணிலா, என்னால தான உனக்கு அவசரமா உன் மாமா மகனை கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க.”

“நான் வேற நல்ல இடம் பார்ப்பாங்க நினைச்சேன். இப்படி உன்னைக் கொண்டு போய் அங்க கொடுப்பாங்க நினைக்கலை.” என கரண் பேசிக் கொண்டே செல்ல....அவன் பேச்சில் வெண்ணிலாவுக்கு கோபமாக வர... அந்த நேரம் பார்த்து ஜெய் வந்துவிட்டான்.

கரண் பேச்சை கேட்டு ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்தவள், அந்த நேரம் கணவனும் வந்து நின்றதும், இன்னும் அதிர்ந்து போனாள்.
 

Joher

Well-Known Member
:love::love::love:

அடேய் உன்னை யாருடா போன் பண்ண சொன்னது.........
ஏற்கெனவே ரெண்டு பேரும் கும்மியடிக்கிறாங்க.......
நீ உள்ளதையும் கெடுத்துடுவா போல........
பாட்டிகும் பேரனுக்கும் இந்த புள்ளை வாழ்க்கையை கெடுக்கிறதே தொழில் போல.....

இவன் வேற வந்துட்டானே...... சும்மாவே குதிப்பான்.......
இப்போ சலங்கை கட்டிவிட்டாச்சு......
தாம் தூம்னு குதிப்பானே.......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பத்த வைச்சுட்டியே பரட்டை
ஏண்டா ஓடிப் போன கரண் நாயி
வெண்ணிலாவுக்கு நீ பரிதாபப்படுறியா?
அந்த சூனியக் கிழவியின் பேச்சுக்கு பயந்த மாதிரி இவனுக்கு நீ பயந்துடாமல் நல்லா கொடுத்து காட்டு, வெண்ணிலா
அச்சோ ஜெய் நிலாவை தப்பா நினைச்சுடுவானோ?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice Precap

அதான் கல்யாணம் வேண்டாம்னு அமெரிக்காவுக்கு ஓடினேயே... ஒடுனவன் ஒடுனதாவே இருக்க வேண்டியது தானே.. இப்ப எதுக்கு அவளுக்கு போன் பண்ணி என்னமோ ரொம்ப பரிதாப படுற...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top