P12 Sangeetha Swarangal

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
“எனக்கு கஷ்ட்டம்ன்னா என்னன்னே தெரியாது. அப்படி வளர்த்திட்டு, ஒரு நாள் திடிர்ன்னு ஹார்ட் அட்டாக்ல, எங்களை தவிக்க விட்டுட்டு போயிட்டார்.”
“அதுவரை எனக்கு வெளி உலகமே என்னன்னு தெரியாது. நான் தனியா எங்கையும் போனதே இல்லை.” அதை சொல்லும்போதே அவள் கண்கள் கண்ணீரை சிந்திவிட, அரவிந்தன் எழுந்து அவள் அருகில் அமர்ந்து, ஆறுதலாக அவள் தோள் மீது கைபோட்டுக் கொண்டான்.
“யாரையும் எங்க அப்பா மனசு நோக பேசினதே இல்லை. எல்லோருக்கும் அவ்வளவு நல்லது பண்ணி இருக்கார். ஆனா எங்க அப்பாவை ஏன் கடவுள் அவ்வளவு சீக்கிரம் எடுத்தார், எனக்கு புரியவே இல்லை. ரொம்ப நல்லவங்களாவும் இருக்க கூடாதோ என்னவோ?”
“அவர் இருக்கும் போதே, எனக்கு வரன் பார்த்திட்டு இருந்தாங்க. எங்க அப்பா இருந்திருந்தா, எனக்கு எப்பவோ கல்யாணம் பண்ணி இருப்பார். அப்பா இல்லாம கல்யாணம் பண்ணிக்கவும் பிடிக்கலை. அப்புறம் அம்மாவை தனியா விடவும் மனசு இல்லை. அதனாலதான் கல்யாணத்தை தள்ளி போட்டுட்டே வந்தேன்.
“நீங்க பாவனாவை பார்த்திக்கிறது, எனக்கு எங்க அப்பாவைதான் நினைவு படுத்துச்சு. எங்க அப்பாவும் உங்களைப் போலத்தான், வேண்டாம்ன்னு சொல்றது கூட மனசு நோகாமத்தான் சொல்வார். அதனால்தான் உங்களை ரொம்ப பிடிச்சது. நானே வந்து உங்ககிட்ட கல்யாணத்துக்கு கேட்டேன்.”


******************************************************************************************************************

“போதும் என்னைப் பத்தி பேசினது, நீங்க உங்களைப் பத்தி சொல்லுங்க.” என்றதும், மாலினியைப் பற்றி கேட்கிறாளோ என நினைத்து விட்டான்.
“உங்க சின்ன வயசுப் பத்தி சொல்லுங்க. நீங்க அப்பவும் இப்படித்தான் அமைதியா?”
அவள் கேட்டதில் தன் சிறு வயது வாழ்க்கைக்கு சென்றவன், முகத்தில் புன்னகை பெரிதாக விரிய... அவள் முகம் பார்ப்பது போல்... மீண்டும் எதிரில் அமர்ந்தான்.
“எங்க ஊர் கிராமம். அப்பா விவசாயி...எங்களுக்கு ஒரு முப்பது ஏக்கர் இருக்கு. ஆனா அது மொத்தமா வாங்கினது இல்லை. எங்க அப்பா குருவி சேர்கிற மாதிரி பணத்தை சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமா வாங்கி போட்டது.”
“ஊருக்கே சோறு போடுற விவசாயி கையில காசு இருக்குமா... எங்க அப்பாவோட நிலைமையும் அப்படித்தான். நான் படிச்சது எல்லாம் கவர்ன்மென்ட் ஸ்கூல், காலேஜ் தான்.”
“எங்க அப்பா நான் பத்தாவது படிக்கும் போதே சொல்லிட்டார். எனக்கு விவசாயத்தை தவிர வேற எதுவும் தெரியாது. நான் இருக்கிற வரை இதைப் பண்றேன். ஆனா உனக்கு இது சரிபட்டு வராது. நீ நல்லா படிச்சிக்கோ... படிப்புதான் உன்னை காப்பாத்தும்ன்னு.”
“ஆடம்பரமா வாழத்தான் பணம் இல்லையே தவிர. மத்தபடி நாங்க சந்தோஷமாதான் இருந்தோம். எங்க ஊர் சூப்பரா இருக்கும் தெரியுமா.. அதுவும் எனக்கு பெரியப்பா, சித்தப்பா பசங்க எல்லாம் நிறைய பேர். நாங்க எல்லாம் சேர்ந்தா, எப்பவும் ஒரே ஆட்டம் தான்.”
“போர் அடிச்சா கிணத்துல குளிக்க போய்டுவோம். மழை பெஞ்சு ஆத்துல தண்ணி வந்தா... அங்கயும் போய் ஆட்டம் போடுவோம், மீன் பிடிப்போம்.”
வீட்டுப் பறவை திலோ, அவளுக்கு அரவிந்தன் சொல்வதை கேட்க ஆச்சர்யமாக இருந்தது.


****************************************************************************************************************

“இவ்வளவு பேரா? நான் எப்ப அவங்களை எல்லாம் பார்ப்பேன்?” திலோ ஆர்வமாக கேட்க, “உனக்கு நாலு நாள் லீவ் சேர்ந்து வரும் போது சொல்லு போகலாம். ஊருக்கு போயிட்டு நாலு நாள் கூட இருக்கலைனா நல்லா இருக்காது. அதுவும் எல்லார் வீட்டுக்கும் வேற கூப்பிடுவாங்க.”
“லீவ் வேணா போட்டுக்கலாம் அரவிந்த்.” என திலோ சொன்னதிலேயே அவள் ஊருக்கு வர விரும்புகிறாள் என அரவிந்தன் புரிந்து கொண்டான்.
“சரி எனக்கு எப்ப லீவ் போட முடியும்ன்னு பார்த்து சொல்றேன்.”
“ம்ம் சரி அம்மாவையும் கூட கூடிட்டு போகலாமா?”
“கண்டிப்பா... ஊர்ல விருந்து எல்லாம் இருக்கு. அவங்களும் வரணும் தானே.”

இருவரும் பேசிப் பேசி நேரத்தை பார்த்தால்... விடியற்காலை மூன்று மணி ஆகி இருந்தது.
 

Joher

Well-Known Member
Tks ரம்யா......

விடிய விடிய சொல்லித்தருவேன் தானே......
:unsure::unsure:

திலோ அரவிந்த் பிடித்த காரணம் சொல்லியாச்சு......
டாக்டர் சொன்னது epi ல......

கிராம வாழ்க்கை எப்போதும் அலுக்காது......
Pleasant memories always.......
ஒரு வாரமாவது வேணும் enjoy பண்ண......

Epi சீக்கிரமே குடுத்துடுங்க ரம்யா.....

ஊருக்கே சோறு போடுற விவசாயி கையில காசு இருக்குமா........
Absolutely true......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top