P10 எந்தன் காதல் நீதானே

Advertisement

Ramya Rajan

Well-Known Member
பொள்ளாச்சியில் வேளாண் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி பணியில் தான் ஜெய் ஆனந்தனுக்கு வேலை. மண்ணை ஆராய்ந்து அதில் என்ன சத்து இருக்கிறது, அதில் என்ன விதைத்தால்... விளையும் என மண்ணை ஆராய்ந்து கண்டுபிடிப்பது தான் அவன் வேலை.

இடம் இருக்கிறது என எல்லா இடத்திலேயும் நினைத்ததை விதைத்து விட முடியாது. மண்ணின் தன்மைக்கு ஏற்பே விளைச்சல் இருக்கும். அதனால் மண்ணை பற்றி தெரிந்து விதைத்தால் தான் நல்ல விளைச்சல் கிடைக்கும்.

காலை பத்து மணியில் இருந்து மாலை ஐந்து மணி வரையே அங்கே அவனுக்கு வேலை. சனி மற்றும் ஞாயிறு விடுமுறை. அரசாங்க பணியில் இருக்கிறோம். அது மட்டும் போதும் என்று ஜெய் நினைக்கவில்லை. மண்ணை பற்றி நன்றாக தெரிந்தவன் என்பதால்... பொள்ளாச்சியை சுற்றி இருக்கும் பெரிய பண்ணை வீடுகளுக்கு அவர்கள் விருப்பத்தின் பேரில் தோட்டம் அமைப்பது கொடுப்பான்.

விதவிதமான பூ செடிகள். காய்கறிகள் பழ மரங்கள் என மண்ணின் தன்மைக்கு ஏற்ப ஆட்களை கொண்டு தோட்டம் அமைத்து கொடுப்பான். ஒருவருக்கு செய்ய ஆரம்பித்து, அதை பார்த்து மற்றவர் அவர்கள் நண்பர் என இப்போது அவனுக்கு நிறைய வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.

தோட்டம் அமைத்துக் கொடுப்பது மட்டும் அல்ல. அதை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தன்னுடைய ஆட்களை வைத்து தேவையான உரங்கள் வைத்து பராமரித்தும் கொடுப்பான். தேவைப் பாட்டால் அவனே நேரில் சென்றும் மேற்பார்வையிடுவான்.

அவன் இந்த வேலை செய்வது ஜெயராமனுக்கு அவ்வளவு விருப்பம் இல்லை. நம்ம தோட்டத்திலேயே வேலை இருக்கிறது என்பார். ஆனால் புதிதாக எதாவது முயற்சி செய்ய ஜெயராமனும் சரி, சந்திரனும் சரி ரொம்பவும் யோசிப்பார்கள். இன்னும் அந்தக் காலத்திலேயே இருப்பார்கள். இந்த காலத்திற்கு ஏற்ப செய்வோம் என்றால் கேட்கமாட்டார்கள். இவர்களோடு தன்னால் மல்லுக்கட்ட முடியாது என்றுதான் ஜெய், அவனுக்கான ஒரு தனிப் பாதையை அமைத்துக் கொண்டான்.

*****************************************************************************************************

சகோதரிகள் இருவரும்பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்த வெண்ணிலாவுக்கு, “ஆமாம் பெரிய காதல் மன்னன் ரேஞ்சுக்கு பில்ட் அப் கொடுத்திருப்பான் போல... ஆனா இப்ப ஒன்னையும் காணோம்.” என மனதிற்குள் சலித்துக் கொண்டாலும், கணவனை நினைத்து மனம் மென்மையாகவே செய்தது.

அதன் பலனாக அன்று அவளாகவே சென்று ஜெய்யிடம் பேசினாள்.

“என்ன கோபம் போச்சா?” என அவன் சிரிக்க...

“நான் ஒன்னும் கோபமா இல்லை. நீங்கதான் கோபமா இருந்திட்டு வீட்ல கூட இருக்காம சுத்திட்டு இருக்கீங்க.” என்றாள் மனதை மறையாமல்.

“ஏய் உன் மேல கோபத்தில எல்லாம் போகலை...” என்றவன், தன் மனைவிக்கு எல்லாம் தெரிய வேண்டும் என்று, நகை அடகு வைத்ததில் இருந்து, அவன் தனியாக செய்யும் தோட்டம் அமைக்கும் பணி வரை எல்லாம் சொன்னான்.

கணவனுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில், “இது தானா... என்கிட்டே தான் அவ்வளவு நகை இருக்கே. நான் அகல்யாவுக்கு கொடுக்கிறேன்.” என்றாள் வெண்ணிலா உடனே.

“ஹே... அதெல்லாம் வேண்டாம்.” என ஜெய் மறுக்க...

“ஏன்? நான் கொடுக்க கூடாதா?” என அவள் உரிமையாக கேட்க,

“நீ கேட்டதே சந்தோசம். ஆனா உன் நகையை வாங்கி நாங்க எப்படி அகல்யாவுக்கு போட முடியும். அதோட இந்த விஷயம் உன் வீட்ல தெரிஞ்சது. அவங்க எங்களை மதிப்பாங்களா? சும்மாவே மதிக்க மாட்டாங்க. அதனால இந்த மாதிரி எல்லாம் தயவு செய்து பேசாத.” என்றான்.

*****************************************************************************************************

லேசாகத்தான் நனைந்து இருந்தான். அதனால் இரவு உணவை முடித்துக் கொண்டே அறைக்கு செல்லலாம் என கீழேயே இருந்து விட்டான்.

இரவு உணவு முடிந்து வெண்ணிலா மேலே அறைக்கு சென்றிருக்க... மற்றவர்களும் படுக்க சென்றிருந்தனர். ஜெய் டிவியில் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்தவன், டிவியை அனைத்து விட்டு அவனும் எழுந்தான்.

“தோட்டம் போடுறது எல்லாம் அப்புறம். முதல்ல கல்யாணம் கட்டி வந்த பெண்ணை கவனிக்க சொல்லு. அந்தப் பொண்ணு இன்னைக்கு வீட்டுக்கும் வாசலுக்கும் இவனை காணாது நூறு தடவையாவது நடந்திருக்கும். பொண்டாட்டி மனசு புரியலை... இவனெல்லாம் என்ன விரும்பி கல்யாணம் பண்ணான்.” என ஜெயராமன் மனைவியிடம் சொல்வதைப் போல மகனுக்கு சொல்லிவிட்டு செல்ல...

“நாம வாழுற லட்சணம் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கு போல...” என நினைத்தபடி ஜெய் அறைக்கு சென்றான். இருந்தாலும் மனைவி தன்னை தேடினாள் என்பது ஆர்வத்தை உற்பத்தி செய்திருக்க... மனைவியை காணும் ஆவலில் இரண்டிரண்டு படிகளாக தாண்டி ஏறி சென்றான்.
 

Joher

Well-Known Member
:love::love::love:

அந்த முதல் பாரா மல்லுக்கட்டு எல்லா விவசாயி வீட்டிலும் தான்......
பிள்ளைகள் வேகத்திற்கு அப்பாக்கள் ஈடு கொடுக்க மாட்டாங்க.......
So பிள்ளைங்க என் வழி தனி வழி னு போயிடுறாங்க...... அப்பாக்கள் புலம்புறாங்க......

கையில் கிடைக்கும்வரை காதல் மன்னன் போல....... இப்போ தோட்டம் போடுறதெல்லாம் அப்புறம் னு அப்பா சொல்ற அளவுக்கு சொதப்பல் மன்னன் ஆகிட்டான்.......
தேடுறது வரை விவரமா சொல்லிட்டாரே.......
வெண்ணிலா ஒத்துழைப்பாளா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top