Nininaivae needhanadi-31

Discussion in 'Geethanjali's Ninaivae Neethaanadi' started by Geethanjali, Apr 24, 2017.sponsored 1. banumathi jayaraman

  banumathi jayaraman Well-Known Member

  Messages:
  8,728
  Likes Received:
  30,388
  Trophy Points:
  113
  என்னருமை இனியத்தோழி கீதாஞ்சலி டியருக்கு,
  எனது மனமார்ந்த, இதயபூர்வமான அன்னையர் தின
  நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்
   
  Geethanjali likes this.
 2. murugesanlaxmi

  murugesanlaxmi Well-Known Member

  Messages:
  2,816
  Likes Received:
  13,635
  Trophy Points:
  113
  சகோதரி கீதாஞ்சலி அவர்களுக்கு,
  தங்களின் பல மாதங்களுக்கு முன் வந்த நினைவே நீதானடி நாவல் பற்றி சில வரிகள். நல்ல அருமையான பக்கா கமர்ஷியல் நாவல் சகோதரி. ஒரு நல்ல கமர்ஷியல் படம் பார்த்த திருப்தி வந்தது இந்த நாவல் படிக்கும்போது.
  பொதுவாக நாவலாசிரியரை ஏன் படைப்பாளி என்கிறர்கள் என்பது இந்த நாவல் படிக்கும்போது தெரிந்தது சகோதரி. நல்ல கலகலப்பாக சென்ற நாவலை ஒரு மூன்று பதிவுகளில் கண்ணீர் விட வைத்து பின் ஒருவித எதிர்பார்ப்பை துண்டி, நிமிர செய்து ஒரு கமர்ஷியல் முடிவுடன் நாவலை முடித்தீர்கள் சகோதரி. அருமை.
  இதயத்தால் இணைந்த இருவர், சூழ்நிலையால் உடல் கலந்து, விதியால் பிரிந்து இறையால் இணைகிறர்கள்.
  என்ற கருவை கொண்டு அழகாக கட்டிடம் கட்டி இருக்கிறீர் சகோதரி. இந்த நாவலில் எனக்கு பிடித்த பல அம்சங்கள்:-
  1.எய்ட்ஸ் நோயாளிகளுக்கு அன்பு தேவை,அவர்களை ஓதுக்காதீர் என்று கூறியிருப்பது.
  2.அம்னிஷியாவின் விளக்கம்
  3.தீயவர்களால் தீண்டிய குட்டி ப்ரியாவுக்கு சொல்லும் கருத்து அனைவருக்கும் பொருத்தும்.

  4.திருநங்கைகளின் சமுக சேவை, மறுவாழ்வு பேசியது அருமை
  5.குறிப்பாக உரையாடல் அருமை.{ சீதை போல் மனைவி கிடைத்தால் ராமனை விட உயர்வாக பாதுகாப்பேன், எத்தனை எதிராளி வந்தாலும் திறமை, உழைப்பு, நம்பிக்கை இருக்கும் ஒருவரை ஒன்றும் செய்யமுடியாது. பெண்ணுக்கு ஆணைவிட மனவலிமை அதிகம். விடாமுயற்சி, கடினஉழைப்பு இருந்தால் முதல் இடம் தேடி ஓடதேவையில்லை, தானே வரும்.}
  6.அதேபோல் கலகலப்பான உரையாடலும் சூப்பர். {எழிலின் மனம் தென்றலை பார்த்து புயலானது. பிள்ளையின் லவ் கேட்டு அம்மா லவ் பன்னுங்க சார் என துண்டுவது, ஹீரோ ஹீரோயின் காதல் உரையாடல் என பல பல}

  1. சீமந்தம் போது நடக்கும் வளையல் அணிவிப்பு, முதுநீர் குத்துதல் விளக்கம் அருமை சகோதரி.
  8.இறுதியாக ஹீரோவின் வாயிலாக இக்கால காதலருக்கு சொல்லும் அறிவுரை அருமை சகோதரி.
  9.சிறிது காஷ்மீர் பிரச்சனை கோடி காட்டியது.
  1௦.கடனை பற்றியும், கட்டிடம் கட்டும் போது கவனிக்கும் வேலையை பற்றி கூறியது அருமை.
  இந்தநாவலில் முறையாக ஹீரோ – ஹீரோயின் எழிலன்{வினய் ஆதித்யா} – தென்றல்{தென்றலரசி}, பத்மநாபன் – சாந்தினி{என் ரமணி அம்மாவின் மிக பிடித்தநாவல்}, நரசிம்மன்- லட்சுமி, அசோக் – சங்கீதா, பிரணவ் – மணிமேகலை, நீலவேணி – ஆதித்யா, ஆகாஷ் – ப்ரியதர்ஷினி, ராணிஅம்மா, லட்சுமிஅம்மா, குழந்தைகள் எழிலரசி,கார்த்திகையன், Dr.அசோக்குமார் வில்லன் தன்ராஜ் என்று உள்ளார்கள்.
  இந்த நாவலின் கருத்தாக கருதுவது, திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணைவன் என்று.
  இறுதியாக எப்போதும் இறுக்கமாக இருக்கும் தன் தந்தையை பார்த்து ஹீரோ ஹிட்லர் என்பார். உண்மையில் பாசத்தை உள்ளுக்குள் வைத்துயிருக்கும் தந்தைகளுக்காக இந்த சின்ன கவிதையுடன் முடிகிறேன்

  அம்மாவின் அன்பு தோசை மாதிரி
  அப்பாவின் அன்பு தோசைக்கல் மாதிரி
  தோசையின் ருசிதெரியும்
  தோசை கல்லின் தியாகம் தெரியாது!

  அன்புடன் V.முருகேசன்
   
 3. Geethanjali

  Geethanjali Well-Known Member

  Messages:
  2,497
  Likes Received:
  4,931
  Trophy Points:
  113
  ஆஹா!! எத்தனை அழகான, அருமையான, ஆழமான விமர்சனம் அண்ணா.... மிக நுணுக்கமாய் ரசித்துப் படித்திருக்கிறீர்கள்...

  தங்களின் வேலைப் பளுவிற்கு இடையில் எங்கள் கதைகளை படித்து, அதற்கு மிக அற்புதமாக தங்களின் கருத்துகளையும் பதிவதற்காக தங்களுக்குத் தலைவணங்குகிறேன் அண்ணா...

  என்னதான் நீங்கள் நிறைகள் மட்டுமே எடுத்துக் கூறினாலும் என் கதைகளில் சில குறைகளும் இருக்கிறது அண்ணா...

  ஆன்லைனில் எழுதிய முதல் கதை அண்ணா... அப்போது ஒரு ஆன்லைனில் ஒரு நட்புக்கள் கூட கிடையாது!
  கருத்துக்களை கதையில் அள்ளிக் கொட்டிவிட்டேன் சிலர் தெறித்து ஓடியே விட்டார்கள் தெரியுமா?! ஹாஹா

  அதிலும் என் கதைகளில் சினிமா எபெக்ட் வந்துவிடுகிறது! பள்ளிப் பருவத்தில் புத்தகங்கள் படித்ததோடு சரி அதன் பிறகு படிக்கும் அளவிற்கு வாழ்வியல் சூழ்நிலை இல்லை! இதோ பல வருடத்திற்குப் பின் இப்போதுதான் மீண்டும் கொஞ்சம் கொஞ்சம் படிக்கிறேன்! அதிலும் சிறுவயதில் படித்தது போல் படிப்பதற்கு உடல்நிலை இடம் கொடுக்கவில்லை!

  அதிகம் வீட்டுத் தொலைக்காட்சியில் கண்டு களிப்பது சினிமாப் படங்களே... அதன் தாக்கம் இன்னும் மாறவில்லை! இப்போது சில வருடமாக படம் பார்ப்பதும் குறைந்துவிட்டதுதான்!

  ஆனாலும் அதன் தாக்கம் சற்று என் நாவலில் பிரதிபலிக்கிறது என்றுதான் நினைக்கிறேன்! மாற்றிக் கொள்ளவும் முயல்கிறேன் ஆனாலும்...
  [​IMG]

  தங்கள் விமர்சனம் என் எழுத்தை மேலும் மெருகூட்டும் என்று நம்புகிறேன்... மிக்க மிக்க நன்றிங்க அண்ணா...
   

  Attached Files:

  murugesanlaxmi likes this.
 4. murugesanlaxmi

  murugesanlaxmi Well-Known Member

  Messages:
  2,816
  Likes Received:
  13,635
  Trophy Points:
  113
  உங்கள் கருத்தை நானும் வரவேற்கிறேன். எனக்கு தெரிந்து இந்த கதையில் குறைகள் அவ்வளவு இல்லை சகோதரி.எதுவும் பெரிதாக தெரியவில்லை. இன்று சினிமா நம் சிந்ததையில் ஊறி விட்டது சகோதரி. அதனால் சினிமா போல் இருப்பதும் குறையில்லை சகோதரி. கருத்து இருப்பது அவசியம் தான். அதுதான் மனதில் தாக்கம் ஏற்படுத்தும்.
   
  Last edited: Aug 1, 2017
  Geethanjali likes this.
 5. Geethanjali

  Geethanjali Well-Known Member

  Messages:
  2,497
  Likes Received:
  4,931
  Trophy Points:
  113

  நன்றி நன்றிங்க அண்ணா....
   
  murugesanlaxmi likes this.

Share This Page