Neela Mani's Mazhaiyadikkum Un Pechu- 14

Neela mani

Writers Team
Tamil Novel Writer
#1
ஹலோ பிரெண்ட்ஸ்! இந்த கதைக்கு நீங்க தரும் ஆதரவு பாத்து எனக்கு ரொம்ப சந்தோசம். இந்த கதையை எழுதுவதற்கு முன்னால நான் கொஞ்சம் தயங்கினேன். இதுல சோகமான நிகழ்வுகள் இருக்கு. ரொமான்ஸ் ரொம்ப கம்மி. இப்படிப்பட்ட கதைக்கு ஆதரவு இருக்குமா என்று ஒரு சந்தேகம்.

ஆனா நீங்க என் சந்தேகத்தை பொய்யாகிட்டீங்க. கிட்டத்தட்ட 3000 பேர் படிப்பதில் எனக்கு அவ்வளவு சந்தோசம்.:love::love::love::love:

இந்த கதை என் மாமா (அம்மாவோட பெரியப்பா மகன்) வீட்டில் நடந்த உண்மை சம்பவம். கிட்டத்தட்ட நாற்பது வருஷத்துக்கு முன்ன நடந்தது. அதை இப்ப அம்மா சொன்ன போது எனக்கு இது தான் தோணிச்சு.

நேத்து வரைக்கும் அக்காவோட கணவர் என்று நினைச்சு பழகிட்டு இன்னிக்கி அவரை கணவரா அந்த அக்கா எப்படி ஏத்துக்கிட்டாங்க? என்ன தான் மச்சினி வெச்சு நிறைய கேலி வந்தாலும் அந்த உறவும் புனிதமான உறவல்லவா?

பிரசவத்தில் அக்கா இறக்க தங்கையை அந்த குழந்தைக்காக திருமணம் செய்து வைப்பது நிறைய இடத்தில நடக்கறது தான். இருந்தாலும் இங்க அன்றே மனைவி இறக்க கொஞ்ச நாளிலேயே மச்சினியை மணக்கும் அந்த ஆணின் மனநிலை எப்படி இதை ஏற்கும்?

இந்த யோசனை தான் என்னை இந்த கதை எழுத தூண்டியது. இதுல நீங்க வேற தணிகாவுக்கு தெய்வா மேல தான் கண்ணா என்று கேட்கவும் நான் கலங்கி விட்டேன்..என்னடா இது? கதையோட ட்ராக்கே மாறுதே அப்படினு ஒரே கவலை. நாம சரியா கதையை சொல்லையோ என்று டென்ஷனாயிட்டேன்.

இந்த விளக்கத்தை கொடுக்கணும் என்று ஒவ்வொரு எபி போடும் போதும் நினைப்பேன். கதையின் முடிச்சுகளை உடைக்க கூடாது என்று தான் சொல்லாமல் விட்டேன்.

இனி தணிகாவும் தெய்வாவும் எப்படி இணைந்தார்கள் என்று அடுத்த அத்தியாயத்தில் இருந்து பாப்போம்.

(பின்குறிப்பு: எங்க மாமி ரொம்ப சாது. பரிமளம் மாதிரி கிடையாது. இந்த நிகழ்வை தவிர மீதி எல்லாம் என் கற்பனையே. அப்புறம்…. அவங்க ரெண்டு பேரும் நல்லாயிருக்காங்க. பேரன் பேத்தியெல்லாம் பொறந்துடுச்சு. இப்ப ஹாப்பியா?:giggle::giggle::giggle:)

Mazhaiyadikum Un Pechu-14
 
Last edited:

Joher

Well-Known Member
#2
Tks நீலா......

தெய்வா பெரியப்பா முடிவும்
தணிகா தாத்தா பதிலும்
அதற்கு கொடுத்த விளக்கமும் சூப்பர்......

புதுசா ஒரு பொண்ணு பார்த்தால் வரும் பெண்ணின் எதிர்பார்ப்பை தணிகாவால் நிறைவேற்றமுடியாது......
எந்த அளவுக்கு புரிஞ்சுப்பாள்னும் தெரியாது......
பிரச்சினை தான் அதிகமாகும்......

தெய்வா என்றால் தணிகாவை பழையபடி மாற்ற முடியும்......
ஏற்கனவே தெரிந்ததால் அவனோட நடவடிக்கைகளை புரிந்துகொள்வாள்......
சீக்கிரமே மாற்றம் வரும்.....

இப்போ தணிகா கட்டாயத்தின் பேரில் தான் கட்டிக்குவானா???
 
Last edited:
#5
தணிகாவைப் பற்றி நான்தான்
ஆரம்பத்தில் சந்தேகப்பட்டேன்,
நீலா டியர்

தணிகைவேலனின் பேச்சு,
செயல்களைப் பார்த்து
இவனுக்கு காஞ்சனாவைப்
பிடிக்கலையோ?
தெய்வானையைத்தான்
பிடிச்சிருக்கோ?ன்னு நான்தான்
முதலில் நினைத்தேன்
அப்புறம்தான் அது வழமையாக
சும்மா மச்சினியைக் கேலி
செய்வதுன்னு புரிந்ததுப்பா

வசந்தி, தாமரை போலத்தான் தெய்வாவையும் தணிகா
நினைத்திருக்கிறான்

காஞ்சு பேபியை தணிகா
இஷ்டப்பட்டுத்தான் மேரேஜ்
செய்திருக்கிறான்
முதல் இரவு நடக்குமுன்னமே
காஞ்சனா இறந்தது துரதிர்ஷ்டவசமானதுதான்
 
Last edited:

Neela mani

Writers Team
Tamil Novel Writer
#7
அன்பு தோழிகளே! போன எபிக்கு உங்க கமெண்ட்ஸ் பாத்து என்ன சொல்றதுன்னே தெரியல. உங்க வருத்தத்தில் இறந்த என் அக்காவோட ஆன்மா கண்டிப்பா சாந்தி அடைந்திருக்கும். உங்க கமெண்ட்ஸ்க்கு என்ன பதில் போடுவது என்று தெரியாமல் அப்படியே விட்டு விட்டேன். ஒரு பக்கம் அக்காவை நினச்சு வருத்தம். இன்னொரு பக்கம் எனக்கு அந்த சோகத்தை உங்களிடம் எழுத்தால் கடத்த முடிகிறதா என்று ஒரு ஆறுதல். என்னோடு உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்ட சகோதரிகள் அனைவர்க்கும் என் அன்பு.:love::love::love:
 
Last edited:

Advertisement

New Episodes