Naan Ini Nee - Precap 35

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
அவனின் செயல்கள் எல்லாம் தெரியவரவும் முதலில் கோபம் வந்ததுதான் ஆனாலும் அரசியலில் அப்பா மகன் என்பது எல்லாம் இல்லை என்று நன்கு தெரிந்தவர் ஆகையால் “பேசிக்கலாம்..” என்றுதான் காதரிடம் கூட கூறியிருந்தார்.

இப்போதோ..

அனைவரின் முன்னமும் அவர்.. மற்றவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டு.

‘அமைச்சர் வாழ்க...’ என்ற கோசங்கள் கேட்டுக்கொண்டு தான் இருந்தது..

தீபன் வந்ததுமே செய்தது முதலில் காதரை அழைத்து “தொகுதி இப்போ வேற மாதிரி திருவிழா பார்க்கணும்... சின்ன பசங்க இதுல இறங்க வேணாம்.. தனி தனியா க்ரூப் ரெடி பண்ணுங்க காதர்ணா.. எங்க எங்க போராட்டம் செய்யணுமோ செய்யட்டும். முக்கியமா லேடீஸ்.. அப்பாவோட பேர்.. அப்பாவோட புகழ்.. தொகுதி சார்ந்த நலத் திட்டங்கள் எல்லாமே வெளிய பேச விடுங்க..

அப்புறம் தொகுதில முக்கியமா ஒரு பத்து ஆட்டோவாது எரியணும்.. யாரோடதுன்னு கேட்டு பணம் கொடுத்திடுங்க.. எதிர்க்கட்சி சதின்னு ஒரு நூறு பேராவாது கோசம் போட்டு ஊர்வலம் போகணும்.. இதுக்கு மேல என்னென்ன செய்யணுமோ செய்ங்க இது முதல் நாள்... ரெண்டே நாள்ல மொத்தமும் அடங்கணும்.. எலெக்சனுக்கு முதல் நாள் கண்ட்ரோல் மாறிடும்.. சோ அதுக்குள்ள எல்லாம் எல்லாமே முடியனும்...” என்று சொல்லியிருந்தான்..



---------------------------------------------

வரும் செய்திகள் எல்லாம் அனுராகாவும் கவனித்துக்கொண்டு தான் இருந்தாள். முதலில் இப்படி என்றதுமே வீட்டிற்கு வந்ததும் அவள் லோகேஸ்வரனிடம் கேட்டது “இதுல நீங்க பண்ணது எதுவும் இருக்கா..?” என்று..

“அனு...!!” என்று அவர் திகைக்க,

“நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க..” என,

“நோ.. எனக்கு இதுல என்ன ப்ராபிட் இருக்கப் போகுது.. ஐ டின்ட் டூ எனிதிங்..” என்று லோகேஸ்வரன் அலட்சியமாய் சொல்ல,

அனுராகாவின் முக பாவனையே ‘நீயெல்லாம் என்ன மனிதன்...’ என்று சொல்லாமல் சொல்லியது.

“உனக்கும் தீபனுக்கும் பேசி முடிச்சிருக்கும் போது, இதெல்லாம் ஏன் அவர் செய்யப் போறார்..” என்று தாரா சொல்ல,

“யாரைக் கேட்டு பேசினீங்க??!!” என்றாள் பட்டென்று.

-----------------------------------

“ஏய்... நீ இப்போ இதெல்லாம் நிறுத்தல.. மொத்தமா உன்னை நான் நிறுத்த வேண்டியது இருக்கும் மிதுன்..” என்று தீபன் கோபத்தில் அடிக்குரலில் சீர,

“உன்னால என்ன செய்ய முடியுமோ செஞ்சிக்கோ தீபன்..” என்றான் இலகுவாய்..

“ஏன்டா... ஏன்டா உனக்கு இப்படி போச்சு.. எனக்கு இது வேணும்னு நீ கேட்டிருந்தா அப்பாவே எல்லாம் செஞ்சிருப்பாரே டா.. இல்லை என்கிட்டே சொல்லியிருந்தா நான் விலகி நின்னிருப்பேனே..” என்று தீபன் அப்போதும் இறங்கி வந்து பேச,

“நீ எனக்கு பிச்சை போடவேண்டிய அவசியம் இல்லடா..” என்றான் மிதுன் அப்போதும் தெனாவெட்டாக.

பொறுத்து பொறுத்து பார்த்த தீபன், “முடிவா சொல்றேன்.. இதெல்லாம் ஸ்டாப் பண்ணு..” என,

“நோ வே...” என்று மிதுன் சொல்ல,

“உன் கை நீ கட் பண்ண.. பட் உன் கழுத்துல எந்த காயமும் இல்லை போலவே.. ம்ம்ம் அப்போ உயிர் பிச்சை வேணுமா வேணாமா மிதுன்??” என்ற தீபனின் பார்வை மிதுனின் கழுத்தில் நின்றது..
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
என்னா ஸ்பீடு? என்னா ஐடியா?
எலெக்ஷனுக்கு இரண்டு நாள் முன்னாடி எல்லாத்தையும் முடிக்கணுமாமே
தீபன் சக்ரவர்த்தியா கொக்கா?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அச்சோ அரசியல் அம்பலமாகுதே அண்ணன் தம்பி சண்டையில்......
சரயு அரசியல் பிரகாசமா தெரியுது போல உங்களுக்கு........

மக்களை ஏமாற்றி தான் அரசியல்.......
ஏமாறுறவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான்......

அவனுக்கு கையை தான் கட் பண்ணமுடிந்தது........
தம்பி கழுதையே கட் பண்ணுறேன்னு சொல்றானே.....
இன்னும் என்னெல்லாம் பண்ணுவானுகளோ சக்கரவர்த்தி புள்ளைங்க....

ராகா உனக்கென்னமா ஆச்சு???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top