Naan Ini Nee - Precap 34

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
உணவினை மேஜையில் வைத்தவன், ரெஸ்ட் ரூம் கதவினைத் திறந்துவிட்டு, உள்ளே ஒருமுறை பரிசோதித்து பின் வர, மிதுன் உள்ளே போகவும், வெளிவாக்கில் கதவினை சாத்தி நின்றான்.

ஆம் தாழிடுவது எல்லாம் இல்லை. வெளியே இவர்களில் கதவினை சாத்திப் பிடித்து மட்டும் நிற்பர். உள்பக்கம் சாத்திக்கொண்டு அவன் ஏதேனும் செய்தால் ??!!

உள்பக்கம் அவன் கதவு சாத்த முயன்றால், இனி எப்போதும் ரெஸ்ட் ரூம் கதவுகள் திறந்து விடப்பட மாட்டாது என்று முன்னமே சொல்லியிருந்தனர்.

ஆனால் இப்போதோ இருபது நிமிடங்கள் கழிந்தும் கூட மிதுன் உள்ளிருந்து வெளி வரவில்லை. அறையில் இருந்த இந்த இரண்டு பாதுகாவலர்களும் ஒருமுறை யோசித்து, குரல் கொடுத்துப் பார்க்க, சத்தமே இல்லை.

பின் யோசிக்காது, கதவினை திறந்து பார்க்க, மிதுன் சக்ரவர்த்தியோ கையில் கண்ணாடி வைத்து கீறி ரத்தம் வழிய சரிந்து கிடந்திருந்தான்.

------------------------------------------------

இரண்டு மிகப் பெரிய மரங்களுக்கு இடையில் இருந்த மர வீட்டினில், அந்நள்ளிரவு வேலையில், சிறய லாந்தர் வெளிச்சம் மட்டுமே இருக்க, காற்றோ சில்லென்று வீசிக்கொண்டு இருக்க, காற்றில் மிதந்து வரும் பல மலர் வாசமும், இரவு நேர பூச்சிகளின் ரீங்காரமும், இவனை அனைத்தையும் தாண்டி அவர்களின் காதல் பரிபாசைகளே அங்கே பெரும் ஒலியாய் இருந்தது, பேரானந்தமாய் இருந்தது.

முத்தங்கள் எத்தனை.. அதன் வகை தான் எத்தனை.. எண்ணும் எண்ணமுண்டா??!!

தீபன் கூட கேட்டான் “உன்ன ரத்தக் காட்டேரின்னு நினைச்சேன்.. ஆனா இப்படியொரு ராட்சசி ஆகிட்டயே..” என்று..

சொன்னவன் கரங்களும் அப்போது சும்மாயில்லை, அவன் கரத்தினுள் இருந்தவளும் “ யூ மேட் மீ டு பீகேவ் லைக் திஸ்..” என,

“லவ் யூ ராகா...” என்றான் அவனின் அந்த ப்ரத்தியேக, அவளின் மச்ச முத்தத்தில்..

---------------------------------------------------

தீபனும் அனுராகாவும் அவசர அவசரமாய் கிளம்பும் நிலை.. இப்படியாகும் என்று அவர்கள் இருவருமே நினைக்கவில்லை. தாரா வரவும், அனுராகாவை எப்படியும் அவரோடு சமாதானம் செய்து அனுப்பிட தீபன் நினைத்திருக்க, நடந்ததோ முற்றிலும் வேறு.

கடைசி நேரத்தில் இப்படி எதுவும் நடந்திடும் என்றுதான், அனுராகாவை முன்னே அவளின் அம்மாவோடு அனுப்பிவிட்டு, தீபனும் அவனின் அப்பாவிடம் சென்று பேச வேண்டும் என்று இருக்க, இப்படி அவசரகதியில் கிளம்பும் நிலை.

ஆனால் தீபன் சக்ரவர்த்தி முகத்தினில் தெரியும் அவசரம் கூட அனுராகா முகத்தினில் இல்லை..

“ராகா.. பீ சேஃப்... எது நடந்தாலும், நீ எதுவும் மூவ் பண்ணனும்னு யோசிக்கக் கூட கூடாது. எல்லாத்தையும் விட எனக்கு நீ முக்கியம்..” என,

“கிளம்பு தீப்ஸ்.. பார்த்துக்கலாம்..” என்றாள் அனுராகா.

அவள் மனதினில் ஏதோ ஒரு உறுத்தல்.. அனைத்தையும் தாண்டி தீபன் சக்ரவர்த்திக்கு எதுவும் ஆகப் போகிறது என்று.
 

Joher

Well-Known Member
:love::love::love:

இன்பத்துக்கு பின்னால் துன்பம் எப்போதும் இந்த தீபனுக்கு......
அதை சரி பண்ணுங்க......

மிதுன் காலி பண்ணிட்டீங்களா???
தீபனுக்கு என்ன அவசரம்???
இவ்ளோ யோசிக்கிறேன் கூடவே கூட்டிட்டு போய்டலாமே???
லோகேஷ் game தானா இதுவும்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top