Naan Ini Nee - Precap 25

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ஒரு பெண்... அதுவும் வெகு குறுகிய காலமே பழகிய ஒருத்தியாள் தன் மகன் இப்படி மாறிப்போவானா??!!

இந்த கேள்வி அவருள்..

அவன் அத்தனை பலவீனமானவனா??? இல்லை அவள் அத்தனை வசீகரியா??!!
அனுராகாவை இரண்டொரு முறை பார்த்திருக்கிறார் தானே.. ஆனால் கவனித்துப் பார்க்கவில்லை. உஷா சொல்கையில் கூட, இதெல்லாம் பெண்கள் விஷயம் என்று இருந்துவிட்டார்.


ஆனால் இப்போது தீபனின் நிலைக் கண்டு, அனுராகாவை பார்க்கவேண்டும் என்று தோன்றியது சக்ரவர்த்திக்கு.

தீபனுக்குமே மனதில் இப்போது ஒரு குற்றவுணர்வு, அப்பா எப்படியானதொரு பொறுப்பை தன்னிடம் விட்டிருக்க, தானோ என்ன செய்துகொண்டு இருக்கிறோம் என்று.

உஷாவோ “என்னங்க நீங்க இப்படி அமைதியா இருக்கீங்க..” என,

“ம்ம் நம்ம போய் அந்த பொண்ண பார்த்துட்டு வரலாம்..” என்று சக்ரவர்த்தி சொல்ல,

“அப்பா...” என்றான் தீபன் அதிர்ந்து..
-------------------------------------------------------

லோகேஸ்வரனோடு, தாரா பேசுவதையே நிறுத்தியிருக்க, அனுராகா கண் விழித்துப் பார்த்ததோடு சரி, அம்மாவோடும் சரி அப்பாவோடும் சரி யாரினோடும் பேசிடவில்லை.
அதிலும் அவள் கண் விழிக்கவே இரண்டு நாட்கள் ஆகிட, தாரா ஆடித்தான் போனார்.


லோகேஸ்வரனுக்கும் மகள் இப்படி கிடப்பது கண்டு கஷ்டமாய் இருந்தாலும் இன்னமும்கூட அவர் மனதில் தன் முடிவு சரியென்றும், அனுராகாவின் முடிவு தவறென்றும் தான் இருந்தது..

உடலில் ஆங்காங்கே சிராய்ப்புகள், சில இடங்களில் அழுத்தமான கீறல்கள், இது போக அவளின் மன அழுத்தம்.. உள்ளே சென்றிருந்த மது, எல்லாம்.. எல்லாம் சேர்த்து அவளை அத்தனை சீக்கிரம் எழுந்து அமரச் செய்திடவில்லை.

இரண்டாவது நாள் காலையில் கண்களைத் திறந்தாள். ஆனால் யாரோடும் பேசவில்லை.. அப்பா அம்மாவினைக் கண்டவள் மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள்.

------------------------------------

மற்ற நேரமாய் இருந்தால், இதெல்லாம் தூசி என்று தட்டிவிட்டு சென்றிருப்பான், அவன் மனதோ அனுராகாவின் விசயத்தில் சிக்கித் தவிக்க, மற்றது பற்றி சிந்திக்க அவனால் போதிய கவனம் செலுத்த முடியவில்லை..

அதேநேரம் காதர் அழைத்து, நேரில் பார்த்து பேசவேண்டும் என்றுசொல்ல,

“காதர் அண்ணா.. நீங்க என்னை நேரா பார்க்க வரவேணாம்.. வீட்ல சும்மா எல்லாரையும் பார்க்க வர்றதுபோல வாங்க..” என,

“அய்யா இருக்காருங்களா??” என்றார் அவர்..

“ம்ம் இருக்கார்..”

“அப்போ சரி.. மிதுன் தம்பி??!!”

“எஸ்.. அண்ணனும் இங்கதான் இருக்கான்..” என,

“சரிங்க தம்பி.. நீங்களே ஒரு நேரம் சொல்லுங்க வர்றேன்.. ஆனா எனக்கென்னவோ உங்களுக்கு எதிரா நடந்துக்கிறவன் உங்க வீட்டுக்குள்ள தான் இருக்கான்னு தோணுது.. இல்லன்னா அந்த சேட்டுக்கு இவ்வளோ தைரியம் வராது..” என,

“ம்ம் இது எனக்கு எப்போவோ தோணிடுச்சு.. அப்புறம் இது எனக்கான எதிராளி அவ்வளோதான்.. அப்பாவையோ இல்லை அண்ணனையும் யாரும் எதுவும் செஞ்சிட போறதில்லை..” என்றும்சொல்ல,

------------------------------------------


அனுராகா, இப்படி சக்ரவர்த்தியே நேரில் வந்து நிற்ப்பார் என்று எதிர்பார்க்கவில்லை.. உஷாவின் முகத்தினில் அப்பட்டமாய் கோபம் தெரிய, தீபனோ அவள் தன்னைக் காண மாட்டாளா என்றுதான் பார்த்து நின்றிருந்தான்.

தாரா, லோகேஸ்வரன் எல்லாம் அங்கேதான் இருந்தனர்.

சூழ்நிலை மொத்தமும் சக்ரவர்த்தி கையில் எடுத்துக்கொள்ள, “என்னம்மா நீ.. முதல்லையே ஒரு வார்த்தை சொல்றதுக்கு என்ன??” என,

‘இவர் என்ன சொல்ல சொல்கிறார்..’ என்று அனுராகாப் பார்க்க,

“அதுப்பா...” என்று தீபன் சொல்ல வர,

“டேய் டேய்.. நீ எதுவும் பேசக்கூடாது.. வாய் மூடிட்டு நில்லு.. இந்த பொண்ண பார்க்கத்தான் கூட்டிட்டு வந்தேன்.. நீ பேசணும்னு கூட்டிட்டு வரலை..” என,
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top