Naan Ini Nee - Precap 19

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
#1
“சேட் அப்பா சொன்னதை கேட்டீங்க தானே... பின்ன என்ன இவ்வளோ யோசனை..” என்று மிதுன் சொல்ல,

“அதுக்கில்ல பேட்டா... ஆனா..” என்று சேட் யோசிக்க,

“எல்லாமே தப்பா பண்ணது நீங்கதானே சேட்...” என்று மிதுன் சொல்லும்போதே, பல்ராம் சேட்டிற்கு உள்ளே நடுக்கம் தொடங்கியது.

“அதெல்லாம் இல்ல பேட்டா.. இப்படியாகும் நானே நினைக்கல..” என்று கைகள் பிசைய...

“நினைச்சிருக்கணும்...” என்றான் மிதுன் அழுத்தம் திருத்தமாய்..

--------------------------------

“என்ன ஷர்மா.. வெற்றிகரமா உனக்கு டைவர்ஸ் பண்ணி வச்சுட்டோம்.. இப்போ சந்தோசமா??” என்று தீபன் சிரிக்க,

“வேணாம் தீபன்.. இதெல்லாம் ரொம்ப தப்பு.. நீ என்னை பழி வாங்கனும்னா என்னை எதுவேணா செய்.. ஆனா என்னோட பேமிலி வச்சு விளையாடாத..” என்று ஷர்மா, வாயில் இருந்து ரத்தம் வழிய சொல்ல,

“எது எது.. பேமிலியா.. அப்படியொரு செண்டிமெண்ட் எல்லாம் இருக்காடா உனக்கு..??!!” என்றவன், “இவ்வளோ பேசுறவன்.. நீ என் பேமிலி பத்தி யோசிச்சு கூட இருந்திருக்கக் கூடாதுடா..” என,

“தொழில்னு வந்துட்டா ஆயிரம் இருக்கும்..” என்ற ஷர்மாவிற்கு மனது ஆறவேயில்லை..

பின்னே அவனின் மனைவி கையெழுத்து போட்டுக்கொடுத்த பத்திரம் அவனின் கண் முன்னே இருக்க, தர்மா அடித்த அடியில் ஷர்மாவும் கையெழுத்து போட்டிருந்தான் அதில். இனி அவனுக்கோ அவன் மனைவிக்கோ இல்லை பிள்ளைக்கோ எந்த சம்பந்தமும் இல்லை. ஷர்மாவின் மோத குடும்பமும் இனி தீபனின் பார்வையில் தான் இருக்கும்.

“அதேதான்.. தொழில்னு வந்துட்டா ஆயிரம் இருக்கும்.. ஆனா எனக்கு எங்கப்பா.. அவரோட பேர்.. அவரோட மரியாதை.. அவரோட பதவி இதெல்லாம் தொழில் இல்லடா.. வாழ்க்கை.. புரிஞ்சதா...” என்று தீபன் கத்தியவன்,

“எங்க வாழ்கையை அழிக்க நினைச்ச, சிம்பிள் நான் உன்னை ஒண்ணுமில்லாம பண்ணிட்டேன்.. உயிர் மட்டும் மிச்சம் அவ்வளோதான்...” என
-----------------------------------------“டெல் மீ தீப்ஸ்.. என்னை வாட்ச் பண்ண என் ஆபிஸ்ல நீ ஆள் வச்சிருக்கியா??!!” அடிக்குரலில் கத்தினாள் அனுராகா..

“ஹேய்.. மை டியர் டைட்டன்.. ஏன் இவ்வளோ டென்சன்..” என்று தீபன் கூலாக கேட்க,

“ஜஸ்ட் ஸ்டாப் இட்...” என்று அதற்கும் மேலாய் கத்திவிட்டாள்.

ஏன் இப்படி செய்கிறாள் என்று தீபன் புரியாது பார்க்க, “என்ன நினைச்சிட்டு இருக்க நீ.. அப்கோர்ஸ் நமக்கு நடுவில ஒரு ரிலேஷன்ஷிப் இருக்கு.. அதுக்காக.. நீ எதுவும் செய்யலாம்னு இஷ்டம் இல்லை..” என்றவள்,

“யாரா இருந்தாலும் சரி.. பட் நீயே அவங்களை இதெல்லாம் ஸ்டாப் பண்ண சொல்லிடு.. நான் பைண்ட் அவுட் பண்ணா.. உன்னையும் சேர்த்து என்ன செய்வேன் தெரியாது..” என,

“என்னடி செய்வ??!!” என்றான் தெனாவெட்டாக..-----------------------------------------

நீரஜாவிற்கு ஏக கோபம் அனுராகாவின் மீது..

அனுராகாவும் அவளின் கோபத்தின் காரணம் சரியானதே என்பதை உணர்ந்து அமைதியாய் இருக்க, நீரஜாவோ “இதெல்ல்லாம் உனக்கு தேவையா...??!!” என்று திரும்பவும் அதே கேள்வியை கேட்க, அனுராகா பதில் சொன்னாள் இல்லை.

“டெல் மீ அனு.. இதெல்லாம் உனக்கு தேவையா??!! எவ்வளோ ஜாலியா.. ஹேப்பியா இருந்த நீ.. இப்போ ஏன் இவ்வளோ டென்சன்.. இவ்வளோ ரெஸ்ட்லஸ்னஸ்.. தின்க் பண்ணு... இப்படியொரு ரிலேஷன்ஷிப் தேவையா..” என்று நீரஜா கேட்க,

“ம்ம்ச் நீரு..” என்றாள் அனுராகா..

இத்தனை நேரத்திற்கும் சேர்த்து இப்போது தான் வாய் திறந்தாள் அனுராகா.. ஆனால் நீரஜாவிற்கோ அவளின் மௌனம் உடைந்ததே பெரிதாய் தெரிந்தது.

 
Joher

Well-Known Member
#3
:cool:

ரவுடி ராகா...... ஏனம்மா இந்த கோபம்??????

உனக்கு BP ஏத்துறதே அவன் வேலை போல.......
நீரு கிட்ட என்ன சொல்ல போற........
I L Him.........தீப்ஸ் விடமுடியாதுன்னா?????:cool::cool::cool:
 
Last edited:

தரணி

Well-Known Member
#7
சேட் ஷர்மா ரெண்டு பேரும் என்ன தான் பிரோப்ளேம் பண்ணிங்க.... ராகா திரும்ப சண்டையா.....
 
Advertisement

New Episodes