Naan ini Nee - Epilogue contest- ritu@keerthi

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
திருமணத்திற்க்கு பின்னான தீபனின் வாழ்க்கை இன்னும் இன்னும் அவனை பக்குவப்படுத்தியது.. அவனின் தொழில் விரிவாக்கம், சக்கரவர்த்தியின் அரசியல் பக்கபலமான வேலைகள், உஷாவிற்கான நேரங்கள், (மிதுனின் இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டி இருந்தது ). இவை அனைத்தும் ராகாவின் துணை கொண்டே அந்த காதல் மன்னன் இயங்கினான்.


நாள் ஒரு சண்டை, பொழுதொரு காதல் என்றே சில மாதம் சென்றது.. ராகாவின் வரவு உஷாவிற்க்கு சிறிது உற்சாகத்தை தந்தபோதிலும் மிதுனை எண்ணியபோதெல்லாம் ஒரு வெற்றிடதை உணர்ந்தார்.. அதை நிறப்புவதற்கெனவே உதித்தான் தீரன்(DeeRan) சக்கரவர்த்தி. தீரனுடன் உஷாவின் பொழுதுகள் அழகாக மாறியது.. மிதுனின் உடல் நலத்திலும் முன்னேற்றம் கண்டிருந்தது..


4 வருடங்களுக்கு பிறகு…. இன்று..
அந்த மருத்துவமனையே பரபரப்பாக காணப்பட்டது.. மத்திய மந்திரியின் மகன் கோமாவில் இருந்து மீண்டு முழு பரிசோதனைக்காக அனுமதிக்க பட்டிருப்பதால் அந்த பரபரப்பு.. வெளியில் பத்திரிக்கை அன்பர்களிடம் பொறுமையாக பதில் அளித்துக் கொண்டு இருந்தது வேறு யாரும் அல்ல தீபன் தான்.

பத்திரிக்கை அன்பர் ஒருவர், “ சார் கடைசி கேள்வி , மிதுன் சார் நல்லா இருக்கருன்னு சொன்னீங்க, அவர் திரும்பவும் அரசியலுக்கு வருவாரா இல்ல என்ன பண்ணுவாரு?...
தீபன், ” அதை அவன் தான் தீர்மானிப்பான். இதுல நாங்க சொல்ல ஒன்னுமே இல்ல” . இது பொதுமக்கள் வந்து போற இடம் சோ ப்ளீஸ் என்று கரம் குவித்து விடைபெற்றான்..

அனைத்து செக்கப்புகளும் முடிந்து ஒரு புது மனிதனாகவே மிதுன் வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தான். கோமாவின் போது அனைவரின் பேச்சுக்களும் அவனிடத்தில் ஒரு நல்ல மாற்றதை உருவாக்கி இருந்தது..

சக்கரவர்த்தியின் வீட்டு ஹால்..
வீட்டு உறுப்பினர்கள் மட்டும் குழுமி இருந்தனர்.. சக்கரவர்த்தி தான் ஆரம்பித்தார்..

“சொல்லு மிதுன், எல்லாரும் கேக்கராங்க, உன் முடிவ சொல்லு, உன்ன என்னோட அரசியல் வாரிசா அறிவிச்சிடலாமா??? இன்னும் ஆறு மாசத்துல அடுத்த எலக்சன் டேட் அனௌன்ஸ் பண்ணிடுவாங்க.. அதுக்குள்ள நாம ப்ரிபேர் ஆகனும்”..

சற்று யோசித்து, “சரி பா.. அஃபிஷியலா அன்னௌன்ஸ் பண்ணிடுங்க.. நான் அரசியலுக்கு வர ரெடி.. நாலு வருஷமா நான் இழந்ததை மீட்டு எடுக்கனும் பா ”.. “நீங்களும் எங்கூட இருங்க பா” என்றான்..

“இல்ல மிதுன், இவ்வளவு நாள், நான் ரொம்ப ஓடிட்டேன், உஷாவை பத்தி நான் யோசிக்கவே இல்ல, இனி உன் கல்யாணம் முடிச்சிட்டு ஃபுல் டைம் என் ரிடைர்மென்ட் தான். மீதி லைஃப பொண்டாட்டியோட எப்படி போக்கனும்னு தீபன் கிட்ட தான் ஐடியா கேட்கனும்” என்றதும் அங்கே சின்னதொரு சிரிப்பலை..

“நான் கூட உனக்கு போட்டியா வரல டா” எனக்கூறி வறுந்தினார்.. இதைக் கூறியதும் அங்கு சற்றே கனத்த மௌனம்..

மிதுன், “ரீயலி சாரி பா.. உங்க எல்லரையும் நான் ரொம்பவே கஸ்டபடுத்திடேன். நான் எவ்வளவு தான் ஃபர்ன்ட் சப்போர்ட் குடுத்தாலும், அப்பா தீப்ஸ் தான் எல்லா வேலைக்கும் முன்நிறுத்தினார். ஒரு போட்டி மனப்பான்மையொடவே வளந்ததால , நான் அப்போ முக்கியம் இல்லயானு தான் நான் யோசிச்சேன்.. அந்த கோவம் தான் என்ன எனனேன்னவோ செய்ய வெச்சிடுச்சி.. ஒன்னு நான், இல்ல அவன் இருக்கனும்னு என்னேன்னவோ தப்பு பண்ணிட்டேன். எல்லாருக்கும் ரொம்ப சாரி” என மன்னிப்பை வேண்டினான்..

தீபன் தான் முதலில் சுதாரித்தான்.., “சரி விடுடா அண்ணா... அடுத்த முதல் வேல உன் கல்யாண்ம் தான்.. இந்த வீட்ல ஃபங்க்ஷன் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு” எனவும் மீண்டும் உற்சாகம் திரும்பியது..
ஏனோ ராகாவினால் மட்டும் மிதுனை மன்னிக்க இயலவில்லை.. அவனிடம், பட்டும் படாமல் இருந்து கொண்டாள்.

உஷா," சொல்லு மிதுன், உனக்கு எப்படி பொண்ணு வேணும், நானே பார்க்கவா இல்ல" என நிறுத்தவும் , "உங்க இஷ்டம் மா" என்று விட்டு விட்டான்..

உஷாவிற்க்கு மிகுந்த மகிழ்ச்சி.. சக்கரவர்த்தி, எவ்வளவு ஆறுதல் அளித்தபோதும் தன் குற்ற உணர்ச்சியால் வருந்தினார்.. இதன் மூலமாவது அவனுக்கு நல்லது செய்துவிட வேண்டும் என்றே விரும்பினார்.. அதற்கான பணியிலும் இறங்கினார்..

மிதுனின் அரசியல் ப்ரவேசம் மிகுந்த பிரம்மாண்டமாக ஏற்பாடாகி இருந்தது.. அதையும் தீபனே முன்னிருந்து செய்வித்தான்..

நிகழ்ச்சியின் இடையில் அழைப்பு வரவே, தீபன் வெளியே சென்றான். ஒரு அதிர்ந்த தோற்றத்துடன் உள்ளே வந்தான்..
ராகா அவன் தோற்றத்தைக் கண்டு, “ என்ன ஆச்சு தீப்ஸ்”??
தீபன், “ நாகாவைத் தூக்கிடாங்களாம்”
ராகா சற்றே பரபரப்புடன், “யாரோட வேலையா இருக்கும் தீப்ஸ்” எனவும் அவன் பார்வை மேடையை நோக்கியது.. மிதுனின் முகத்தில் ஒரு வெற்றிக் குறி..!!!!


தீபன்: இன்னும் என்னடா வேணும் உனக்கு??

மிதுன்: அப்பவே என்ன கொன்னுட சொன்னேன்ல செஞ்சியா??

விதி: வெய்ட் அன்ட் வாட்ச்!!!!!

aagaa ithu different approach a irukkeeeeeeeee

my wishes for u:love::love:
 

Joher

Well-Known Member
:love::love::love:


தீபன்: இன்னும் என்னடா வேணும் உனக்கு??
மிதுன்: அப்பவே என்ன கொன்னுட சொன்னேன்ல செஞ்சியா??
விதி: வெய்ட் அன்ட் வாட்ச்!!!!! :p:p:p

அடடா என்ன ஒரு வில்லத்தனம் :D:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top